ஆங்கிலேய-பர்மியப் போர்கள்

ஆங்கிலேய-பர்மியப் போர்கள் (Anglo-Burmese Wars) தெற்காசியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியர், கோன்பவுங் வம்சத்தினர் ஆண்ட பர்மாவை கைப்பற்றும் நோக்கில், பர்மியர்களுக்கு எதிராக மூன்று போர்கள் மேற்கொண்டனர்.

இறுதியாக 1885ஆம் ஆண்டில் நடந்த மூன்றாம் பர்மியப் போரில், பர்மாவை ஆங்கிலேயர்கள் பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்துக் கொண்டனர் . அவை;

போர்களும் பர்மாவின் வீழ்ச்சியும்

முதல் ஆங்கிலேய-பர்மியப் போர் (1824 - 1826)

முதல் ஆங்கிலேய-பர்மியப் போர் (1824 - 1826) முடிவில், கிழக்கிந்திய கம்பெனியர் வெற்றி பெற்றதால், யாந்தபு ஒப்பந்தப் படி பர்மா தான் கைப்பற்றிய இந்தியப் பகுதிகளான, அசாம் மற்றும் மணிப்பூர் மற்றும் பர்மாவின் அரக்கான் மலைத்தொடர் பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனியருக்கு பர்மியர்கள் விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று.

இரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போர் (1852 - 1853)

யாந்தோபூ உடன்படிக்கையில் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய, கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரல் டல்ஹவுசி பிரபு 1852இல் கடற்படை அதிகாரி லம்பார்ட்டை பர்மாவிற்கு அனுப்பினார்.

1852-1853இல் நடந்த இரண்டாம் பர்மியப் போரில், ஆங்கிலேயர் கீழ் பர்மாவின் பெகு பிராந்தியத்தை கைப்பற்றினர். இப்போரின் விளைவால் பர்மிய அரச மாளிகையில் கலகம் விளைந்தது. பர்மிய அரசர் பாகன் மிங் (1846–1852) ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டு, அவரது மாற்றாந்தாயின் மகன் மிண்டன் மிங் (1853–1878) பர்மிய அரச பதவியில் அமர்த்தப்பட்டார்

மூன்றாம் ஆங்கிலேய-பர்மியப் போர் (1885 - 1886)

பர்மாவின் கோன்பவுங் வம்சப் பேரரசர் மிண்டன் மிங், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டைக் காத்துக் கொள்ளவும், நவீனப்படுத்தவும் முயற்சி செய்தார். தலைநகரை, ரங்கூனிலிருந்து புதிய நகரான மண்டலைக்கு மாற்றி, நாட்டை வலுப்படுத்தினார்.மிண்டன் மிங்கிற்கு பிறகு ஆட்சிக் கட்டிலில் ஏறிய திபா மிங் (1878–1885) காலத்தில், பர்மிய எல்லைப்புறங்களில் உண்டான கலவரங்களை அடக்க இயலாது போனது. மிண்டன் மிங் காலத்தில் ஆங்கிலேயருடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை திபா மிங் மீறியதால், பர்மா மீது 1885ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் போர் தொடுத்து முழு பர்மாவையும் பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்துக் கொண்டனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

ஆங்கிலேய-பர்மியப் போர்கள் போர்களும் பர்மாவின் வீழ்ச்சியும்ஆங்கிலேய-பர்மியப் போர்கள் இதனையும் காண்கஆங்கிலேய-பர்மியப் போர்கள் மேற்கோள்கள்ஆங்கிலேய-பர்மியப் போர்கள்இந்தியாவில் கம்பெனி ஆட்சிகோன்பவுங் வம்சம்தெற்காசியாபர்மாபிரித்தானியாவின் இந்தியப் பேரரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

இங்கிலாந்துகம்பராமாயணம்கருச்சிதைவுஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)வெள்ளியங்கிரி மலைஉத்தராடம் (பஞ்சாங்கம்)மாதவிடாய்சூல்பை நீர்க்கட்டிநாழிகைதொழிற்பெயர்முத்துலட்சுமி ரெட்டிகாயத்ரி மந்திரம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)திரிகடுகம்அகரவரிசைகண்ணாடி விரியன்வினைச்சொல்கிராம நத்தம் (நிலம்)அருந்ததியர்புனர்பூசம் (நட்சத்திரம்)மே நாள்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்முதுமொழிக்காஞ்சி (நூல்)ஆழ்வார்கள்மீனா (நடிகை)தினைஅனைத்துலக நாட்கள்மு. மேத்தாகட்டுவிரியன்சென்னை உயர் நீதிமன்றம்வாதுமைக் கொட்டைஇந்திய அரசியல் கட்சிகள்சவூதி அரேபியாநாயன்மார்அரிப்புத் தோலழற்சிதேசிக விநாயகம் பிள்ளைவெ. இராமலிங்கம் பிள்ளைசிலப்பதிகாரம்இயற்கைகமல்ஹாசன்சஞ்சு சாம்சன்முத்தொள்ளாயிரம்கட்டபொம்மன்வானிலைஇசைதாயுமானவர்பிரசாந்த்எல் நீனோ-தெற்கத்திய அலைவுதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)ஹர்திக் பாண்டியாகட்டுரைபுறப்பொருள்பிக் பாஸ் தமிழ்பொருநராற்றுப்படைஏப்ரல் 30நீலகேசிஇன்னா நாற்பதுமருதமலை முருகன் கோயில்கன்னியாகுமரி மாவட்டம்நெடுநல்வாடைதொலெமிதஞ்சைப் பெருவுடையார் கோயில்ஒத்துழையாமை இயக்கம்கரகாட்டக்காரன் (திரைப்படம்)வராகிமருது பாண்டியர்லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்குற்றியலுகரம்ரோகித் சர்மாபறையர்குண்டூர் காரம்உரிச்சொல்காந்தலூர்மாரியம்மன்மதுரை வீரன்தேவநேயப் பாவாணர்கண்டி மணிக்கூட்டுக் கோபுரம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)🡆 More