இசுடுட்கார்ட்

இசுடுட்கார்ட் அல்லது ஸ்சுட்கார்ட் (IPA: ) என்னும் நகரம் டாய்ட்ச் நாட்டின் (ஜெர்மன் நாட்டின்) தென் புறத்தில் உள்ள பாடன் - வியூர்ட்டம்பெர்க் என்னும் மாநிலத்தின் தலைநகராகும்.

இது டாய்ட்ச் நாட்டின் 6 ஆவது மிகப்பெரிய நகரம். இந் நகரத்தின் மக்கள் தொகை 595,452, ஆனால் புறநகரப் பகுதிகளையும் சேர்த்துக்கொண்டால் மக்கள் தொகை 2.67 மில்லியன் ஆகும் (2007க்கான கணக்கெடுக்குப்படி ).

இசுடுட்கார்ட்
ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள காட்சி. இடப்புறம் புதிய கலை அருங்காட்சியகம். வலப்புறம் கோனிஸ்பௌ.
இசுடுட்கார்ட்
டாய்ட்ச் நாட்டில் ஸ்டுட்கார்ட் நகரம் அமைந்துள்ள இடம்
இசுடுட்கார்ட்
ஸ்டுட்கார்ட் நகரத்தின் படைச்சின்னம்

வரலாறு

ஸ்டுட்கார்ட் நகரம் ஏறத்தாழ கி.பி. 950 ஆண்டளவில் ஸ்வாபியா தற்கால தென் டாய்ட்ச் நாட்டுப்பகுதி) என்னும் பகுதியின் சிற்றரசராகிய லியூடோல்ஃவ் என்பவரால் நிறுவப்பட்டது. லியூடோல்ஃவ் ரோமானியப் பேரரசர் பெருமைமிகு ஆட்டோவின் மகன்களில் ஒருவர்.

கி.பி. 1300களில் ஸ்டுட்கார்ட் வியூர்ட்டம்பெர்க்கின் செல்வந்தப் பெருபுள்ளிகளின் வாழ்விடமாக இருந்தது. 1496 இல் இச் செல்வந்தர்கள் புனித ரோமானியப் பேரரசரால் சிற்றரசர்களாக மாற்றப்பட்டார்கள். இச் சிற்றரசர்கள், 1805 இல் அரசரானார்கள். இவ்வளர்ச்சியால் ஸ்டுட்கார்ட் அரசர் வாழ்விடமாக மாறியது.

தொழிற்சாலைகள்

ஈருந்து (மோட்டர் பைக்) மற்றும் நான்கு ஆழி (சக்கர)த் தானுந்தும் இங்குக் கண்டுபிடித்து தோற்றம் பெற்றதாகப் பெருமை கொள்ளும் நகரம். ஸ்டுட்கார்ட்டில் வாழ்ந்த காட்லீப் டைம்லர் மற்றும் கார்ல் பென்ஸ் ஆகிய இருவரும் தானுந்து வரலாற்றின் முன்னோடிகள். 1887 இல் காட்லீப் டைம்லரும் வில்ஹெல்ம் மேபாஃகும் தொடங்கிய டைம்லர் மோட்டொரன் கெசல்ஷாஃவ்ட் இப்பகுதியை தொழில்மயப்படுத்தியது. எனவே உலக அளவிலும் தானுந்தின் தொட்டில் என்று இப்பகுதி சிலரால் புகழப்படுகின்றது. மெர்சிடிஸ்-பென்ஸ், போர்ஷ், மேபாஃக் ஆகிய தானுந்து வகைகள் ஸ்டுட்கார்ட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஃவோல்க்ஸ்வாகன் பீட்டில் (வண்டு வடிவத்) தானுந்தின் முதல் வடிவமும் இங்குதான் உருவாக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டது.

ஸ்டுட்கார்ட் தற்பொழுது டாய்ட்ச் நாட்டின் மிக அதிக அடர்த்தியுள்ள அறிவியல், கல்வி, ஆய்வுக் கழகங்களும் நிறுவனங்களும் கொண்ட பகுதியாகும். டாய்ட்ச் நாட்டின் மொத்த ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான செலவுகளில் 11% இப்பகுதியில் செலவிடப்படுகின்றது. இது ஏறத்தாழ 4.3 பில்லியன் யூரோ மதிப்புடையதாகும்.

பிரபலங்கள்

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

இசுடுட்கார்ட் வரலாறுஇசுடுட்கார்ட் தொழிற்சாலைகள்இசுடுட்கார்ட் பிரபலங்கள்இசுடுட்கார்ட் மேலும் பார்க்கஇசுடுட்கார்ட் மேற்கோள்கள்இசுடுட்கார்ட்2007உதவி:IPAஜெர்மனிபாடன் - வியூர்ட்டம்பெர்க்மில்லியன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜெ. ஜெயலலிதாவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைவே. செந்தில்பாலாஜிராசாத்தி அம்மாள்சுடலை மாடன்பங்குனி உத்தரம்அல் அக்சா பள்ளிவாசல்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்ஜவகர்லால் நேருசீரடி சாயி பாபாதிருவிளையாடல் புராணம்வல்லினம் மிகும் இடங்கள்அ. கணேசமூர்த்திஹதீஸ்ஐக்கிய நாடுகள் அவைஎனை நோக்கி பாயும் தோட்டாதயாநிதி மாறன்புவிவெப்பச் சக்திடி. டி. வி. தினகரன்நற்கருணைஎயிட்சுஎம். கே. விஷ்ணு பிரசாத்திருவண்ணாமலைஇந்திய நாடாளுமன்றம்தாயுமானவர்சிந்துவெளி நாகரிகம்டார்வினியவாதம்மரபுச்சொற்கள்ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2விவேக் (நடிகர்)சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்நயினார் நாகேந்திரன்மங்கோலியாபோயர்தமிழக வரலாறுபூக்கள் பட்டியல்மாலைத்தீவுகள்நீலகிரி மாவட்டம்இந்தியக் குடியரசுத் தலைவர்பறையர்சேரர்பாக்கித்தான்அஜித் குமார்எம். ஆர். ராதாசினைப்பை நோய்க்குறிகோயம்புத்தூர்கே. மணிகண்டன்கல்லீரல்ஐரோப்பா2024 இந்தியப் பொதுத் தேர்தல்மாமல்லபுரம்மதராசபட்டினம் (திரைப்படம்)இந்திய உச்ச நீதிமன்றம்கேரளம்தமிழச்சி தங்கப்பாண்டியன்இராமர்கிறித்தோபர் கொலம்பசுதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்சிலப்பதிகாரம்அரக்கோணம் மக்களவைத் தொகுதிகாதல் (திரைப்படம்)நாட்டார் பாடல்சூல்பை நீர்க்கட்டிஎஸ். பி. பாலசுப்பிரமணியம்கருக்காலம்நோட்டா (இந்தியா)மு. க. ஸ்டாலின்பிரெஞ்சுப் புரட்சிபச்சைக்கிளி முத்துச்சரம்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)கரணம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்அகநானூறுபெண் தமிழ்ப் பெயர்கள்உரைநடை🡆 More