வேங்கடசூரி சுவாமிகள்

வேங்கடசூரி சுவாமிகள் (1817-1889) ஒரு பன்மொழிப் புலவரவார்.

வாழ்க்கைக் குறிப்பு

தஞ்சை, அய்யம்பேட்டைக்கு அருகில் உள்ள இராமச்சந்திராபுரம் என்ற ஊரில், வைதீக புரோகிதத்தை தொழிலாக கொண்ட நாராயண சர்மா என்பவருக்கும், தாய் அரங்கநாயகி தேவி அம்மையாருக்கும் பிறந்தார்.

வேங்கடசூரி சுவாமியின் இயற்பெயர் சுப்புராமன். தமது 15ம் அகவையில் நரசிம்மமூர்த்தியின் உபாசகராகி கவி பாடும் திறன் பெற்றார். பின் வாலாசாப்பேட்டை வேங்கடரமண பாகவதரின் சீடராகி கர்நாடக சங்கீதம் மற்றும் ஹடயோகம் பயின்றார். சமசுகிருதம், தெலுங்கு, சௌராட்டிர மொழி மற்றும் தமிழ் முதலிய மொழிகளிலும், குலத்தொழிலான வைதீகம் மற்றும் புரோகிதத்திலும் புலமை பெற்றார்.

தமது 21வது அகவையில் இலக்குமிதேவி என்ற பெண்மணியை மணந்து இல்லறம் நடத்தினார். பரமக்குடியில் ஆறு ஆண்டுகள் வசித்த பின்னர் தஞ்சையில் 25 ஆண்டுகள் வசித்ததால் இவரை தஞ்சாவூர் அய்யான் என்று புகழ் பெற்றார்.

பிற்காலத்தில் மதுரை, தெற்குமாசி வீதியில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் தங்கி சௌராஷ்டிர மொழியை மேம்படுத்த பள்ளிக்கூடத்தை நடத்தினார். வேங்கடசூரி சுவாமிகள் இரண்டாம் முறை காசிக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு திரும்புகையில் யமுனை ஆற்றாங்கரையில் தமது 72ம் அகவையில் வைகுண்டப்பதவியை அடைந்தார்.

விருதுகள்

தஞ்சை மராத்திய அவையில் சமசுதான பண்டிதராக விளங்கிய வேங்கடாச்சாரியை தர்க்க வாதத்தில் வென்று தமது புலமையை நிலை நாட்டியதால் ‘வேங்கடசூரி’ என்ற பட்டத்தை பெற்று தஞ்சை மன்னரவைப் புலவரானார். ”சூரி” என்றால் மராத்திய மொழியில் ”வென்றவன்” என்றும், சமசுகிருத மொழியில் ”பெரும் புலவர்” என்று பொருள்படும். மேலும் தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலைய ஆராய்ச்சி உறுப்பினர் தகுதி மன்னரால் வழங்கப்பட்டு பெருமை பெற்றார்.

வாழ்நாள் சாதனைகள்

  • சௌராட்டிர மொழியில் இசை வடிவில் முழு இராமாயணத்தை பாடி உள்ளார். (இதனை சௌராட்டிர மொழி வளர்ச்சி குழுவினர் 1904ல் தெலுங்கு & தமிழ் மொழியில் வெளியிட்டனர்)
  • தியாகப்பிரம்மம் தியாகராசஜரின் தெலுங்கு மொழி]]யில் இயற்றிய நவுகா சரித்திரம் எனும் இசை நாடக நூலை சமசுகிருதத்த்ல் மொழி பெயர்த்துள்ளார்.
  • சௌராட்டிரமொழியை செம்மைப்படுத்தி புதிய பாட நூல்களை வெளியிட்டார்
  • இதிகாச, புராண உபந்யாசங்களில் தன்னிகரில்லாதவர்.

உசாத்துணைகள்

  • சௌராட்டிரர் வரலாறு, கே.ஆர்.சேதுராமன், 2008
  • சௌராட்டிர பிராமணர் சரித்திரம், கே.ஏ.அன்னாசாமி சாத்திரியார், 1914

வெளி இணைப்புகள்

Tags:

வேங்கடசூரி சுவாமிகள் வாழ்க்கைக் குறிப்புவேங்கடசூரி சுவாமிகள் விருதுகள்வேங்கடசூரி சுவாமிகள் வாழ்நாள் சாதனைகள்வேங்கடசூரி சுவாமிகள் உசாத்துணைகள்வேங்கடசூரி சுவாமிகள் வெளி இணைப்புகள்வேங்கடசூரி சுவாமிகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

காதல் (திரைப்படம்)பால கங்காதர திலகர்தமிழக வெற்றிக் கழகம்கிழவனும் கடலும்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)ஸ்ரீலீலாவெட்சித் திணைமதுரைபள்ளர்கம்பர்மாத்திரை (தமிழ் இலக்கணம்)சார்பெழுத்துஅக்கி அம்மைசெங்குந்தர்தேசிக விநாயகம் பிள்ளைபுற்றுநோய்திராவிட மொழிக் குடும்பம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்நவக்கிரகம்லால் சலாம் (2024 திரைப்படம்)கருட புராணம்காற்றுமண் பானைபரணி (இலக்கியம்)தன்னுடல் தாக்குநோய்கணியன் பூங்குன்றனார்செயற்கை நுண்ணறிவுநுரையீரல் அழற்சிதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்தாஜ் மகால்விநாயகர் அகவல்நம்ம வீட்டு பிள்ளைசொல்சிற்பி பாலசுப்ரமணியம்யாதவர்ஆத்திசூடிகருப்பைசூரைபௌத்தம்வீரமாமுனிவர்திருவள்ளுவர்கொங்கு வேளாளர்விடுதலை பகுதி 1ஜி. யு. போப்நெல்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கனடாநற்றிணைமலேசியாரோசுமேரிஇந்தியத் தேர்தல்கள் 2024பாளையத்து அம்மன்திருப்பூர் குமரன்ஏப்ரல் 27தொல். திருமாவளவன்திருமலை (திரைப்படம்)கவிதைதேனீமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்குறிஞ்சி (திணை)சிறுநீர்ப்பாதைத் தொற்றுதிரு. வி. கலியாணசுந்தரனார்யுகம்வைரமுத்துகோயம்புத்தூர்தமிழ்ப் புத்தாண்டுவெப்பம் குளிர் மழைபுறப்பொருள்சுரதாகண்ணாடி விரியன்கட்டுரைசென்னையில் போக்குவரத்துஇந்திய புவிசார் குறியீடுவில்லிபாரதம்கழுகுசித்த மருத்துவம்ஏலாதி🡆 More