விஷ்ணுராம் மேதி

விஷ்ணுராம் மேதி (Bishnuram Medhi, அசாமிய மொழி: বিষ্ণুৰাম মেধি, பிஷ்ணுராம் மேதி) (ஏப்ரல் 24, 1888–சனவரி 21, 1981) அசாமின் முதலமைச்சராக 1950 முதல் 1957 வரை பணியாற்றிய இந்திய அரசியல்வாதியும் விடுதலை இயக்க வீரரும் ஆவார்.

இவர் தமிழக ஆளுநராக சனவரி 1958 முதல் மே 1964 வரை பணியாற்றி உள்ளார்.

விஷ்ணுராம் மேதி

இளமை வாழ்க்கை

விஷ்ணுராம் மேதி குவஹாத்தி அருகிலுள்ள அயோ என்ற சிற்றூரில் சோனாராம், அலேகி என்ற பெற்றோருக்கு வறுமை மிகுந்த விவசாயக் குடும்பத்தில் ஏப்ரல் 24, 1888இல் பிறந்தார். குவகாத்தியில் உள்ள காட்டன் காலேசியேட்டு பள்ளியில் தமது மெட்றிகுலேசன் படிப்பை 1905இல் முடித்தார். பள்ளிப் படிப்பிற்குப் பின்னர் கொல்கத்தாவிலுள்ள மாகாணக் கல்லூரியில் பட்டப்படிப்பையும் பட்ட மேற்படிப்பை கரிம வேதியியலில் தாக்கா பல்கலைக்கழகத்திலிருந்தும் முடித்தார். பின்னர் சட்டப் படிப்பை மேற்கொண்டு 1914இல் வழக்குரைநர் அவையி்ல் உறுப்பினரானார்.

இந்திய விடுதலை இயக்கம்

விஷ்ணுராம் இந்திய தேசிய காங்கிரசில் 1920களில் இணைந்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். 1926இல் பாண்டுவில் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டு வரவேற்புக் குழுவில் இணைச் செயலாளராக பணியாற்றினார். 1930இல் அசாமிய மாநில காங்கிரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விடுதலைக்குப் பிந்தைய அரசியல்

1935இல் மாநில சுயாட்சி வழங்கப்பட்டபோது கோபிநாத் போர்டோலாய் அமைச்சரவையில் விஷ்ணுராம் அமைச்சராகப் பணியாற்றினார். 1950இல் அசாமின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 வரை இப்பதவியில் நீடித்தார். 1958 முதல் 1964 வரை சென்னை மாநில ஆளுநராக பணியாற்றினார்.

இறப்பு

விஷ்ணுராம் மேதி தமது 92ஆம் அகவையில் சனவரி 21, 1981இல் இயற்கை எய்தினார்.

நினைவு அஞ்சற்றலை

விஷ்ணுராம் மேதி நினைவாக இந்திய அஞ்சல் துறை 24.4. 1989 ல் அஞ்சற்றலை வெளியீடு செய்தது.

மேற்சான்றுகள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Tags:

விஷ்ணுராம் மேதி இளமை வாழ்க்கைவிஷ்ணுராம் மேதி இந்திய விடுதலை இயக்கம்விஷ்ணுராம் மேதி விடுதலைக்குப் பிந்தைய அரசியல்விஷ்ணுராம் மேதி இறப்புவிஷ்ணுராம் மேதி மேற்சான்றுகள்விஷ்ணுராம் மேதி உசாத்துணைவிஷ்ணுராம் மேதி வெளி இணைப்புகள்விஷ்ணுராம் மேதிஅசாமிய மொழிஅசாம்இந்தியாசென்னை மாநிலம்தமிழக ஆளுநர்களின் பட்டியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிஆ. ராசாடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்போயர்மஞ்சள் காமாலைஇராபர்ட்டு கால்டுவெல்மூவேந்தர்வடிவேலு (நடிகர்)எம். ஆர். ராதாஇசுலாமிய வரலாறுஇந்திரா காந்திதிரு. வி. கலியாணசுந்தரனார்கண்ணப்ப நாயனார்ஜெ. ஜெயலலிதாமக்காஹாலே பெர்ரிசேலம் மக்களவைத் தொகுதிசீவக சிந்தாமணிஇலவங்கப்பட்டைஐராவதேசுவரர் கோயில்மியா காலிஃபாகனிமொழி கருணாநிதிமதுரைக் காஞ்சிவிஜய் ஆண்டனிஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராலொள்ளு சபா சேசுஆசியாநேர்பாலீர்ப்பு பெண்ஹதீஸ்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019சூல்பை நீர்க்கட்டிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)நீதிக் கட்சிசுந்தரமூர்த்தி நாயனார்புலிபூட்டுபெருங்கடல்யுகம்இயற்கை வளம்நான் அவனில்லை (2007 திரைப்படம்)வேதம்கட்டுவிரியன்உன்னாலே உன்னாலேதேர்தல்மணிமேகலை (காப்பியம்)தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்அதிமதுரம்பதிற்றுப்பத்துஅணி இலக்கணம்பிலிருபின்ஆசாரக்கோவைஊரு விட்டு ஊரு வந்துமயில்பர்வத மலைஇந்திய ரூபாய்கீர்த்தி சுரேஷ்நோட்டா (இந்தியா)கிரிமியா தன்னாட்சிக் குடியரசுஇலங்கைமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்விவேகானந்தர்சிலம்பம்ஹர்திக் பாண்டியாநாயன்மார்கிறிஸ்தவச் சிலுவைதன்னுடல் தாக்குநோய்நியூயார்க்கு நகரம்போக்குவரத்துசிறுதானியம்திராவிட முன்னேற்றக் கழகம்ஓ. பன்னீர்செல்வம்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிகர்ணன் (மகாபாரதம்)மண்ணீரல்அளபெடைகொல்லி மலைமுல்லைப்பாட்டு🡆 More