விக்டோரியா துறைமுகம்

விக்டோரியா துறைமுகம் (Victoria Harbor) ஹொங்கொங்கில், ஹொங்கொங் தீவுக்கும் கவுலூன் தீபகற்ப நிலப்பரப்புக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு இயற்கைத் துறைமுகமாகும்.

இந்த விக்டோரியா துறைமுகம் தென்சீனாவின் தெற்கு கடல் பரப்பான, தென்சீனக்கடலில் அமைந்துள்ளது. இது ஹொங்கொங் பிரித்தானியர் கைப்பற்றி குடியேற்றநாடாக பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து, ஹொங்கொங்கின் முதன்மை கடல்சார் வணிக மையமாக மாறத்தொடங்கியது. ஹொங்கொங்கின் பிரதான பொருளாதார வளர்ச்சிக்கு இந்த துறைமுகம் இன்றும் ஒரு முக்கிய காரணியாகும்.

விக்டோரியா துறைமுகம்
விக்டோரியா துறைமுகம்
விக்டோரியா சிகரத்தில் இருந்து விக்டோரியா துறைமுகத்தின் காட்சி
சீன எழுத்துமுறை 維多利亞港
விக்டோரியா துறைமுகம்
ஹொங்கொங் தீவு மற்றும் கவுலூன் பகுதிகளின் கரைகள் இரண்டு பக்கமும் தெரிய, நடுவே விக்டோரியா துறைமுகத்தின் கடல்பரப்பு

அத்துடன் இந்த துறைமுகம் என்னற்ற புனரமைப்புத் திட்டங்களுக்கு உள்ளகியுள்ளது. கடலை நிரப்பி மேற்கொள்ளப்பட்ட பல நகரமயமாக்கல் திட்டங்களினால், இந்த துறைமுகத்தின் கரையோரப் பகுதிகள் அகன்றதுடன், கடல்பரப்பு குறுகத்தொடங்கியது. தற்போதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல கடல் நிரப்பும் திட்டங்களினால் மேலும் மேலும் இத்துறைமுகத்தின் கடல்பரப்பு குறுகிக்கொண்டு போகிறது.

சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு

விக்டோரியா துறைமுகம் 
விக்டொரியா துறைமுகத்தின் கடல்பரப்புக் காட்சி

ஹொங்கொங் தீவில் இருந்து கவுலூன் பக்க காட்சியை காண்பதற்கும், கவுலூன் பக்கத்தில் இருந்து ஹொங்கொங் தீவை காண்பதற்கு என உலகெங்கும் இருந்து ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகள் கூடுவர். இவர்களின் அதிகமானோர் விக்டோரியா துறைமுகத்தின் ஊடே கடல் பயணத்தை மேற்கொண்டு, இந்த துறைமுகத்தின் அழகை இரசிக்க முற்படுவர். சுற்றுலா பயணிகளுக்கான பல சிறப்பு வள்ளச் சேவைகளும் உள்ளன. மிகவும் பணவசதியுள்ளோர், கடலின் நடுவே ஏழு நட்சத்திர வசதிக்கொண்டு கப்பல் சொகுசகங்களில் பொழுதைப் போக்குவோரும் உளர். அதனைத்தவிர பல மிதக்கும் கப்பல் உணவகங்கள், களியாட்டக் கூடலங்கள் போன்றனவும் இந்து துறைமுகத்தின் சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்த விக்டோரியா துறைமுகத்தை சூழ சுற்றுலா பயணிகளையும் கவரும் பலவிடயங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானவை நட்சத்திரங்களின் சாலை, ஒவ்வொரு நாளும் சரியாக 8:00 மணிக்கு இடம்பெறும் கதிரியக்க மின்னொளி வீச்சு, சிறப்பு நாட்களில் இடம்பெறும் வண்ண வான்வெடி முழக்கம் போன்றவைகளாகும். அத்துடன் பல அருங்காட்சியகங்களும் உள்ளன.

வரலாறு

விக்டோரியா துறைமுகம் 
1845களில் விக்டோரியா துறைமுகத்தின் வரைப்படம்
விக்டோரியா துறைமுகம் 
1905களில் பிரித்தானியா கப்பல் கலங்கள் விக்டோரியா துறைமுகத்தில் நங்கூரமிட்டு இருக்கும் காட்சி

இந்த விக்டோரியா துறைமுகம் ஒரு நீண்ட வரலாற்றினைக் கொண்டுள்ளது. 1841ம் ஆண்டில் ஹொங்கொங் பிரித்தானியர் வசம் வீழ்ந்ததைத் தொடர்ந்து இந்த துறைமுகம் படிப்படியான வளர்ச்சியை நோக்கிச்சென்றது. விமான போக்குவரத்து இல்லாத அக்காலகட்டத்தில், இந்த விக்டோரியா துறைமுகம் ஒரு இடைமாற்றத் துறைமுகமாகவும், நீண்ட நாட்கள் கடல்பயணத்தை மேற்கொள்வோருக்கான ஓய்வு இடமாகவும் இருந்துள்ளது.

வரலாற்றில் தமிழர்

ஹொங்கொங் தமிழர் வரலாற்றில், ஹொங்கொங் வந்த முதல் தமிழர் ஏ. கே. செட்டியார், யப்பான் செல்லும் கடல் வழிப்பயணத்தின் போது ஹொங்கொங்கில் ஒரு இடைமாற்றலாக தங்கிச்சென்றார் என்பதும், அதுவே ஹொங்கொங்கில் முதல் தமிழர் குறித்த பதிவாக இருப்பதும் ஒரு வரலாற்று செய்தியாகும்.

டய்பிங் போராளிகள்

ஹொங்கொங் பிரித்தானியர் வசம் வீழ்ந்ததன் பின்னர், பிரித்தானியர் ஹொங்கொங் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு எதிராக டய்பிங் போராளிகள் எனும் போராளிகள் இந்த துறைமுகப் பகுதிகளில் வந்து பலத்தாக்குதல்களை தொடுத்துள்ளனர். 1854களில் ஹொங்கொங் வீதிகளில் ஆயுதங்களுடன் அணிவகுத்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவங்களும் உள்ளன. 1854, டிசம்பர் 21ம் திகதி ஹொங்கொங் காவல்துறையினர் கவுலூன் நகர் தாக்குதல் தொடர்பாக பல போராளிகளை கைதுச்செய்தனர். இந்த விக்டோரியா துறைமுகத்தில் பல கப்பல் கலங்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

துறைமுகப் பெயர் வழங்கள்

இந்த துறைமுகத்தின் பெயர் முன்னர் "ஹொங்கொங் துறைமுகம்" என்றே வழங்கப்பட்டது. அதன்பின்னர் ஐக்கிய இராச்சிய கூட்டிணைவின் பின்னர் இதற்கு "விக்டோரியா துறைமுகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

புவியியல்

விக்டோரியா துறைமுகம் 
விக்டோரியா துறைமுகத்தின் செயற்கைக்கோள் பார்வை

புவியியல் அடிப்படையில், 2004ம் ஆண்டு கணிப்பின் படி விக்டோரியா துறைமுகம் 41.88 கிலோ மிட்டர்களைக் (16.17 சதுர மீட்டர்கள்) கொண்டிருந்தது. இன்று இதன் பரப்பு கடலை நிரப்பி மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களினால் குறுகியுள்ளது.

சில தீவுகள் இந்த விக்டோரியா துறைமுகத்துடன் உள்ளடங்களாகவே உள்ளன. அவைகளாவன:

  • பசுமை தீவு
  • குட்டிப்பசுமை தீவு
  • கவுலூன் பாறை தீவு
  • சிங் யீ தீவு

விக்டோரியா துறைமுகத்தின் அருகாமையில் இருந்து பல தீவுகள் கடலை நிரப்பி மேற்கொள்ளப்படும் பாரிய புனரமைப்பு திட்டங்களினால், பெருநிலப்பரப்போடு இணைக்கப்பட்டவைகளும் பல உள்ளன. அவைகளாவன:

அகலப்பரப்பு காட்சி

ஹொங்கொங், சிம் சா சுயி, நட்சத்திரங்களின் சாலையில் இருந்து எடுக்கப்பட்ட விக்டோரியா துறைமுகத்தின் இரவுநேர அகலப்பரப்பு காட்சி 2009களில். எதிரே தெரிவது ஹொங்கொங் தீவு

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

விக்டோரியா துறைமுகம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Victoria Harbour
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

விக்டோரியா துறைமுகம் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குவிக்டோரியா துறைமுகம் வரலாறுவிக்டோரியா துறைமுகம் புவியியல்விக்டோரியா துறைமுகம் அகலப்பரப்பு காட்சிவிக்டோரியா துறைமுகம் இவற்றையும் பார்க்கவும்விக்டோரியா துறைமுகம் மேற்கோள்கள்விக்டோரியா துறைமுகம் வெளியிணைப்புகள்விக்டோரியா துறைமுகம்கவுலூன் தீபகற்பம்தென்சீனக்கடல்பிரித்தானியாஹொங்கொங்ஹொங்கொங் தீவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

அரிப்புத் தோலழற்சிவாட்சப்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்அகோரிகள்ஆசிரியர்ந. பிச்சமூர்த்திவானிலைகுருதிப்புனல் (திரைப்படம்)திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்மலக்குகள்சீர் (யாப்பிலக்கணம்)பிள்ளைத்தமிழ்தன்னுடல் தாக்குநோய்நுரையீரல்சுந்தர காண்டம்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிநஞ்சுக்கொடி தகர்வுதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிநவரத்தினங்கள்தமிழ் எண் கணித சோதிடம்அகத்தியர்ஹோலிபாரத ஸ்டேட் வங்கிஓ. பன்னீர்செல்வம்பிரேமலுதுரைமுருகன்காவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடுஇசைக்கருவிஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்தொல்காப்பியம்யூதர்களின் வரலாறுதமிழக வரலாறுசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்வெள்ளியங்கிரி மலைதொழுகை (இசுலாம்)மீனாட்சிசுந்தரம் பிள்ளைகள்ளுசூரியன்மு. கருணாநிதிஅரண்மனை (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்கம்பராமாயணம்பாண்டியர்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிதமிழக வெற்றிக் கழகம்நிலக்கடலைஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019சொல்லாட்சிக் கலைமணிமேகலை (காப்பியம்)கலாநிதி வீராசாமிஆய்த எழுத்து (திரைப்படம்)பாரிவல்லினம் மிகும் இடங்கள்நாயக்கர்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்கீழாநெல்லிவன்னியர்கன்னியாகுமரி மாவட்டம்முத்தரையர்செரால்டு கோட்சீபெரிய வியாழன்கலைகரிகால் சோழன்சிறுகதைபரதநாட்டியம்கேரளம்சித்திரைமக்களவை (இந்தியா)பங்களாதேசம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019பெண்களின் உரிமைகள்விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)தமிழர் நிலத்திணைகள்சுபாஷ் சந்திர போஸ்செக் மொழிதீரன் சின்னமலை🡆 More