வாலிசு சிம்ப்சன்

வாலிசு ( Wallis ) வின்ட்சர் அரச குடும்பத்தின் உறுப்பினர் (பிறப்பு பெஸ்ஸி வாலிசு வார்ஃபீல்ட், பின்னர் வாலிசு சிம்ப்சன் ; ஜூன் 19, 1896 - ஏப்ரல் 24, 1986), ஓர் அமெரிக்க சமூகவாதியும் மற்றும் முன்னாள் மன்னர் எட்டாம் எட்வர்டின் மனைவியுமாவார்.

இவர்கள் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும், இவர் விவாகரத்து பெற்றவர் என்ற நிலையும் ஒரு அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தியது. அது எட்வர்டின் பதவி விலகலுக்கு வழிவகுத்தது.

வாலிசு சிம்ப்சன்
வின்ட்சர் அரச குடும்பத்தின் உன்னத உறுப்பினர்
வாலிசின் புகைப்படம்
பிறப்புபெஸ்ஸி வாலிசு வார்ஃபீல்ட்,
(1896-06-19)சூன் 19, 1896
புளூ ரிட்ஜ் சம்மிட், பென்சில்வேனியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இறப்புஏப்ரல் 24, 1986(1986-04-24) (அகவை 89)
பாரிஸ், பிரான்சு
புதைத்த இடம்ஆப்ரல் 29, 1986
விண்ட்சர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயம், இங்கிலாந்து
வாழ்க்கைத் துணைகள்
  • ஏர்ல் வின்பீல்டு ஸ்பென்சர்
  • எர்னெஸ்ட் ஆல்ட்ரிச் சிம்ப்சன்
  • எட்டாம் எட்வர்டு
மரபுவின்ட்சர்
தந்தைடிக்கிள் வாலிசு வார்ஃபீல்ட்
தாய்ஆலிசு மான்டக்

சொந்த வாழ்க்கை

வாலிசு பால்ட்டிமோர், மேரிலாந்தில் வளர்ந்தார். இவர் பிறந்த சிறிது காலத்திலேயே இவருடைய தந்தை இறந்துவிட்டார. இவரும் இவருடைய விதவைத் தாயும் அவர்களது குடும்பத்தின் செல்வந்த உறவினர்களால் ஆதரிக்கப்பட்டனர். ஐக்கிய அமெரிக்கக் கடற்படை அதிகாரி வின் ஸ்பென்சருடன் நடந்த இவரது முதல் திருமணம், இறுதியில் விவாகரத்தில் முடிந்தது. 1931 ஆம் ஆண்டில், எர்னஸ்ட் சிம்ப்சனுடனான இவரது இரண்டாவது திருமணத்தின் போது, இவர் வேல்சு இளவரசராக இருந்த எட்வர்டை சந்தித்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய இராச்சியத்தின் மன்னராக எட்வர்ட் பதவியேற்ற பிறகு, வாலிசு எட்வர்டை மணக்க எர்னஸ்டை விவாகரத்து செய்தார்.

இரண்டு உயிருள்ள முன்னாள் கணவர்களைக் கொண்ட ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் மன்னரின் விருப்பம் ஐக்கிய இராச்சியத்தின் மேலாட்சி அரசு முறை களில் அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தியது. இறுதியில் டிசம்பர் 1936 இல் மன்னர் "தான் விரும்பும் பெண்ணை" திருமணம் செய்து கொள்ள முடிந்தது. அதன் பிறகு இவர் முறையாக அரச குடும்பத்தின் உன்னதப் பெண்ணாக அழைக்கப்பட்டார். ஆனால் தனது கணவரின் பட்டப் பெயரான " மாண்புமிகு " என்பதை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

சர்ச்சைகள்

இரண்டாம் உலகப் போருக்கு முன்னும், பின்னும், அதற்குப் பின்னரும், வாலிசு மற்றும் எட்வர்ட் நாசி அனுதாபிகள் என்று அரசாங்கத்தாலும் சமூகத்திலும் பலரால் சந்தேகிக்கப்பட்டனர். 1937 இல், அரசாங்க அனுமதியின்றி, இவர்கள் ஜெர்மனிக்குச் சென்று இட்லரை சந்தித்தனர். 1940 ஆம் ஆண்டில், எட்வர்ட் பகாமாசின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1950கள் மற்றும் 1960களில், இவர்கள் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சமூகப் பிரபலங்களாக வாழ்ந்தனர். பின்னர் இவர்கள் திருமணம் டிசம்பர் 10, 1927 அன்று விவாகரத்தில் முடிவடைந்தது.

1972 இல் எட்வர்டின் மரணத்திற்குப் பிறகு, வாலிசு தனிமையில் வாழ்ந்தார். பொதுவெளியில் அரிதாகவே காணப்பட்டார். இவரது தனிப்பட்ட வாழ்க்கை பல ஊகங்களுக்கு ஒரு ஆதாரமாக உள்ளது. மேலும் இவர் பிரித்தானிய வரலாற்றில் ஒரு சர்ச்சைக்குரிய நபராக இருக்கிறார்.

இறுதி காலம்

1980ல் வாலிஸ் பேசும் திறனை இழந்தார். இறுதியில், இவர் படுத்த படுக்கையாக இருந்தார். இவளுடைய மருத்துவர் மற்றும் செவிலியர்களைத் தவிர வேறு எவரும் இவரைக் காண வரவில்லை.

இறப்பு

வாலிசு ஏப்ரல் 24, 1986 அன்று பாரிஸில் உள்ள தனது வீட்டில் 89 வயதில் மூச்சுக்குழாய் நிமோனியாவால் இறந்தார். இவரது இறுதிச் சடங்கு ஏப்ரல் 29 அன்று விண்ட்சர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெற்றது. அதில் இளவரசர் பிலிப், இளவரசி டயானா, ஐக்கிய இராச்சியத்தின் ராணி எலிசபெத் உட்பட பல அரச குடும்பத்தின் பிற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ராணி அழுவதை அந்த ஒரே ஒரு முறை தான் பார்த்ததாக டயானா பின்னர் கூறினார்.

குறிப்புகள்

மேற்கோள்கள்

உசாத்துணை

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Tags:

வாலிசு சிம்ப்சன் சொந்த வாழ்க்கைவாலிசு சிம்ப்சன் சர்ச்சைகள்வாலிசு சிம்ப்சன் இறுதி காலம்வாலிசு சிம்ப்சன் இறப்புவாலிசு சிம்ப்சன் குறிப்புகள்வாலிசு சிம்ப்சன் மேற்கோள்கள்வாலிசு சிம்ப்சன் உசாத்துணைவாலிசு சிம்ப்சன் மேலும் படிக்கவாலிசு சிம்ப்சன் வெளி இணைப்புகள்வாலிசு சிம்ப்சன்எட்டாம் எட்வர்டு

🔥 Trending searches on Wiki தமிழ்:

செயற்கை நுண்ணறிவுரா. பி. சேதுப்பிள்ளைதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்இந்திய உச்ச நீதிமன்றம்சார்பெழுத்துசதுரங்க விதிமுறைகள்பரணர், சங்ககாலம்கர்மாஅகத்தியம்பொருநராற்றுப்படைதமிழ்த் தேசியம்பெரியாழ்வார்இராசேந்திர சோழன்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தேவயானி (நடிகை)ஆங்கிலம்புற்றுநோய்குறிஞ்சி (திணை)தனிப்பாடல் திரட்டுமுத்துராமலிங்கத் தேவர்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுபால் (இலக்கணம்)கள்ளுபெரும்பாணாற்றுப்படைதிராவிட முன்னேற்றக் கழகம்கரிகால் சோழன்அகநானூறுகுடும்பம்வெற்றிக் கொடி கட்டுமுத்தொள்ளாயிரம்அனுஷம் (பஞ்சாங்கம்)சீறாப் புராணம்மட்பாண்டம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்திருத்தணி முருகன் கோயில்சேமிப்புசேக்கிழார்கலித்தொகைகல்விஆறுசச்சின் (திரைப்படம்)போயர்சாத்துகுடிசிலம்பம்நம்ம வீட்டு பிள்ளைவே. செந்தில்பாலாஜிமுகுந்த் வரதராஜன்சீரடி சாயி பாபாமே நாள்தற்கொலை முறைகள்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்விண்ணைத்தாண்டி வருவாயாஅவிட்டம் (பஞ்சாங்கம்)இந்தியத் தேர்தல் ஆணையம்பகவத் கீதைபாரதிய ஜனதா கட்சிவிராட் கோலிநாயன்மார் பட்டியல்ஸ்ரீலீலாதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்மாநிலங்களவைஜெ. ஜெயலலிதாஆளி (செடி)வெப்பம் குளிர் மழைகருத்தடை உறைதிருநெல்வேலிமீனம்ஐம்பூதங்கள்பீப்பாய்திருவாசகம்தங்கராசு நடராசன்அறம்திருவண்ணாமலைராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்வெந்தயம்கள்ளழகர் கோயில், மதுரைஇணையம்🡆 More