லூயிசு சுவாரெசு

லூயிசு ஆல்பெர்ட்டோ சுவாரெசு டியாசு (Luis Alberto Suárez Díaz, பிறப்பு 24 சனவரி 1987) உருகுவையின் காற்பந்தாட்ட வீரர் ஆவார்.

இவர் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் லிவர்பூல் கழகத்திற்காகவும் உருகுவையின் தேசிய அணிக்காகவும் விளையாடுகிறார். ஆட்டத்தில் முன்னணி வரிசை வீரர்களில் ஒருவராக விளையாடுகிறார்.

லூயிசு சுவாரெசு
லூயிசு சுவாரெசு
2011 உருகுவை ஒலிம்பிக் கால்பந்து அணிக்கு சுவாரெசு ஆடுயபோது
சுய தகவல்கள்
முழுப் பெயர்லூயிசு ஆல்பெர்ட்டோ சுவாரெசு டியாசு
பிறந்த நாள்24 சனவரி 1987 (1987-01-24) (அகவை 37)
பிறந்த இடம்சால்ட்டோ, உருகுவை
உயரம்1.81 m (5 அடி 11 அங்) (5 அடி 11 அங்)
ஆடும் நிலை(கள்)முன்னணி வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
லிவர்பூல்
எண்7
இளநிலை வாழ்வழி
2003–2005நேசியோனல்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2005–2006நேசியோனல்27(10)
2006–2007குரோனிங்கென் கா. க29(10)
2007–2011அசாக்சு110(81)
2011–லிவர்பூல்110(69)
பன்னாட்டு வாழ்வழி
2006–2007உருகுவை U204(2)
2007–உருகுவை78(40)
2012ஒலிம்பிக் அணி3(3)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 12 மே 2014 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 19 சூன் 2014 அன்று சேகரிக்கப்பட்டது.

ஆட்ட வாழ்வு

கழகக் காற்பந்து

2003இல் கிளப் நேசியோனல் டி புட்பால் கழகத்திற்காக விளையாடத் தொடங்கிய சுவாரெசு 2006இல் நெதர்லாந்தின் எரெடிவிசியில் குரோனிங்கென் கா. கழகத்திற்காக ஆடினார். 2007இல் அசாக்சு கழகத்திற்கு மாறினார். 2008-09 பருவத்தில் இவர் ஆண்டின் சிறந்த அசாக்சு ஆட்டக்காரராக விருது பெற்றார். அடுத்த ஆண்டில், 2009, அக்கழகத்தின் அணித்தலைவராகச் செயற்பட்டு 33 ஆட்டங்களில் 35 கோல்கள் அடித்தார். பல்வேறு போட்டிகளில் அசாக்சின் சார்பாக விளையாடி 2010-11 பருவத்தில் அசாக்சிற்காக 100ஆவது கோலை அடித்து இச்சாதனை புரிந்த யோகன் கிரையொஃப், மார்கோ வான் பாசுத்தென், டென்னிசு பெர்குகாம்ப் போன்றோரின் பட்டியலில் இணைந்தார்.

சனவரி 2011இல் சுவாரெசு லிவர்பூல் கழகத்திற்கு €26.5 மில்லியன் (£22.8 மில்லியன்) மாறுகைப் பணம் பெற்று மாறினார். அந்த ஆண்டில் 12ஆவது நிலையிலிருந்த லிவர்பூல் ஆறாவது இடத்தை அடைய உதவினார். பெப்ரவரி 2012இல் லிவர்பூல் கால்பந்து கூட்டிணைவுக் கோப்பையைக் கைபற்ற உதவினார். 22 மார்ச் 2014 அன்று அக்கழகத்திற்காக ஆறாவது முறை ஓராட்டத்தில் மூன்று கோல்களிடும் சாதனையை நிகழ்த்தினார். இதனால் பிரீமியர் லீக் வரலாற்றில் மிகக் கூடுதலான மூன்று கோல்கள் இட்ட ஆட்டக்காரராக ஆனார். 27 ஏப்ரல் 2014 அன்று ஆண்டின் சிறந்த பிஎஃப்ஏ ஆட்டக்காரர் என்ற விருதைப் பெற்றார்; ஐரோப்பியரல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவது இதுவே முதல் முறையாகும். பிரீமியர் லீக்கின் மிக உயர்ந்த கோலடித்தவராக 31 கோல்கள் அடித்த சுவாரெசிற்குத் தங்கக் காலணி விருது வழங்கப்பட்டது. ஐரோப்பாவின் தங்கக் காலணி விருதையும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் பகிர்ந்து கொண்டார்.

தேசியப் பணி

சுவாரெசு உருகுவையின் 20 அகவைக்கு குறைந்தோரின் அணியில் 2007ஆம் ஆண்டில் அவ்வயதினருக்கான உலகக்கோப்பையில் கலந்து கொண்டார். 2010 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின்போது மூன்று கோல்கள் அடித்தும், கானாவுடனான காலிறுதி ஆட்டத்தில் கூடுதல் நேரத்தில் கோலைநோக்கி தலையால் அடிக்கப்பட்டிருந்த பந்தை தமது கைகளால் தடுத்தும் உருகுவை நான்காமிடம் எட்ட முக்கியப் பங்காற்றினார். 2011 கோபா அமெரிக்காவில் சுவாரெசு நான்கு கோல்கள் அடித்து பதினைந்தாவது முறையாக உருகுவை கோபா அமெரிக்காவை கைப்பற்றக் காரணமாக இருந்தார். அந்தப் போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக அறிவிக்கப்பட்டார். 23 சூன் 2013 அன்று தேசிய அணிக்காக தமது 35வது கோலை அடித்து எப்போதிற்கும் மிக உயர்ந்த கோலடித்தவராக சாதனை புரிந்தார்.

சர்ச்சைகள்

தமது ஆட்ட வாழ்வு முழுமையிலுமே சர்ச்சைகளுக்குள்ளானவர் சுவாரெசு. 2011இல் பாட்ரிசு எவ்ராவை இனவெறுப்புடன் இழிவாகத் தூற்றியதாக கால்பந்துச் சங்கம் குற்றம் சாட்டியது. இதனை சுவாரெசு மறுத்துள்ளார். சுவாரெசு மூன்று எதிராளிகளைக் கடித்துள்ளார். இவர் வேண்டுமென்றே கீழே விழுந்து நடிப்பதாகப் பரவலாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன; இதனை சுவாரெசும் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் 2010 உலகக்கோப்பை ஆட்டத்தில் கோல்கோட்டில் கைகளால் பந்தைத் தடுத்ததற்காகப் பலராலும் தூற்றப்படுகிறார்.

மேற்சான்றுகள்

Tags:

லூயிசு சுவாரெசு ஆட்ட வாழ்வுலூயிசு சுவாரெசு சர்ச்சைகள்லூயிசு சுவாரெசு மேற்சான்றுகள்லூயிசு சுவாரெசுஇங்கிலீஷ் பிரீமியர் லீக்உருகுவைஉருகுவை தேசிய காற்பந்து அணிசங்கக் கால்பந்துலிவர்பூல் கால்பந்துக் கழகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கடையெழு வள்ளல்கள்நம்மாழ்வார் (ஆழ்வார்)திரைப்படம்டெலிகிராம், மென்பொருள்கன்னத்தில் முத்தமிட்டால்காமராசர்வேற்றுமையுருபுபோயர்தேவாரம்மயங்கொலிச் சொற்கள்நந்திக் கலம்பகம்இந்திரா (தமிழ்த் திரைப்படம்)ஆதி திராவிடர்மதுரைக் காஞ்சிநிதியறிக்கைவிளம்பரம்இந்தியக் குடியரசுத் தலைவர்நாடார்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்முல்லை (திணை)இந்தியாவில் இட ஒதுக்கீடுஅனைத்துலக நாட்கள்சிறுபஞ்சமூலம்மக்காசோழிய வெள்ளாளர்மருந்துப்போலிமக்களவை (இந்தியா)பண்பாடுதமிழிசை சௌந்தரராஜன்தமிழ் நீதி நூல்கள்மனோன்மணீயம்முதலாம் கர்நாடகப் போர்தற்கொலை முறைகள்இமயமலைவிருந்தோம்பல்சத்ய ஞான சபைகீழடி அகழாய்வு மையம்ஷபானா ஷாஜஹான்பரதநாட்டியம்இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்திரௌபதி முர்முஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)இளங்கோவடிகள்கதீஜாஅகநானூறுஉஹத் யுத்தம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்ஆய்த எழுத்துபௌத்தம்கணிதம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்ஆண்டு வட்டம் அட்டவணைகே. அண்ணாமலைபாதரசம்தமிழர் நிலத்திணைகள்தமிழ்நாட்டின் அடையாளங்கள்ஸஹீஹ் முஸ்லிம் (நூல்)திருநாவுக்கரசு நாயனார்மலையாளம்கபிலர் (சங்ககாலம்)ரேஷ்மா பசுபுலேட்டிதமிழர் பண்பாடுஇந்திய தேசிய காங்கிரசுமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பால் (இலக்கணம்)ஜிமெயில்தேங்காய் சீனிவாசன்லக்ன பொருத்தம்தமிழ்நாடுஏக்கர்இசுலாமிய வரலாறுசிங்கப்பூர்எடுத்துக்காட்டு உவமையணிகொங்கு நாடுஇயேசு காவியம்மேகாலயாதமிழ்நாடு அமைச்சரவைபட்டினப் பாலைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்🡆 More