லிச்சாவிகள்

லிச்சாவிகள் (Licchavis) ஆண்ட லிச்சாவி நாடு, பதினாறு மகாஜனபத நாடுகளில் ஒன்றாகும்.

லிச்சாவிகளின் தலைநகரமாக வைசாலி இருந்தது.

லிச்சாவிகள்
கிமு 600ல் வஜ்ஜி, மல்லம், காசி மற்றும் மகதம் போன்ற மகாஜனபத நாடுகளைக் காட்டும் வரைபடம்
லிச்சாவிகள்
புத்தரின் எரியூட்டப்பட்ட சாம்பல் மீது கட்டப்பட்ட தூபி, வைசாலி
லிச்சாவிகள்
வைசாலியில் பேரரசர் அசோகர் நிறுவிய ஆனந்த தூபி

லிச்சாவி நாட்டவர்களின் அருகில் வஜ்ஜி நாடு, மல்ல நாடு, சாக்கிய நாடு, கோலிய நாடுகள் போன்ற குறுநில மன்னர்கள் ஆண்டனர்.

பிற்காலத்தில் மகதப் பேரரசர் அஜாதசத்ரு வஜ்ஜி நாட்டை மகதப் பேரரசுடன் இணைத்துக் கொண்டார்.

லிச்சாவி குல கூட்டமைப்பினர், குடியரசு முறையில் லிச்சாவி நாட்டை ஆண்டதாகவும், லிச்சாவிகளின் தலைவன் ராஜா என்ற பட்டத்துடன் விளங்கியதாக, கௌடில்யர் தனது அர்த்தசாஸ்திரம் எனும் நூலின் 11வது அத்தியாத்தில் தெரிவிக்கிறார். பௌத்த சாத்திரமான மகாபரிநிர்வாண சூத்திரத்தில், லிச்சாவிகள், சூரிய குல சத்திரியர்கள் என்றும், கௌதம புத்தர், லிச்சாவிகளில் ஒரு பிரிவினரான சாக்கியர் என்றும் தெரிவிக்கிறது.

திக்க நிக்காய எனும் பௌத்த சாத்திரத்தில் லிச்சாவிகள் வசிஷ்ட கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிப்பிடுகிறது.

மனுதரும சாத்திரத்தில் அத்தியாயம் பத்து, சுலோகம் 22ன் படி, லிச்சாவிகள் விராத்திய சத்திரியப் பிரிவினர் என்று புக்லர் எனும் வரலாற்று ஆய்வாளர் கருதுகிறார்.

லிச்சாவிகளின் பூர்வீகம் தற்கால வாரணாசி என்பர். தற்கால நேபாளத்தின் தெற்கிலும், வடக்கு பிகார் எல்லையில் அமைந்த தராய் சமவெளியில், லிச்சாவிகள் தங்களது லிச்சாவி நாட்டை நிறுவினர். லிச்சாவிகள், மகத நாட்டிற்கு கட்டுப்பட்ட குறுநில மன்னர்கள் ஆவார்.

மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் காலத்திற்கு முன்னரே, லிச்சாவிகள் வேளாண்மைத் தொழிலை நன்கு செய்து வாழ்ந்தனர். சமண அறிஞர் பத்திரபாகு எழுதிய கல்பசூத்திரம் எனும் நூலில், மல்லர்கள், வஜ்ஜ்ஜிகள், மல்லர்கள், காசிகள் மற்றும் கோசலர்கள், சாக்கியர்கள், கோலியர்கள் போன்ற மகாஜனபதங்களை இணைந்து ஒரு கூட்டமைப்பை நிறுவி, மகத நாட்டை எதிர்கொண்டனர் என குறிப்பிடுகிறார். மேலும் கூட்டமைப்பின் தலைவராக கோசல மன்னர் சோதகர் இருந்ததாகவும், அவரது தங்கை திரிசலா, மகாவீரரின் தாய் என்றும் குறிப்பிடுகிறார்.

லிச்சாவிகளும் குப்தர்களும்

லிச்சாவிகள் 
சமுத்திரகுப்தர் வெளியிட்ட தங்க நாணயத்தின் ஒரு பக்கத்தில் லிச்சாவி இளவரசியும், தனது தாயுமான குமாரதேவி-மற்றும் முதலாம் சந்திரகுப்தரின் உருவம் பொறிக்கப்பட்டுள்லது, கிபி 350 - 380

மகத நாட்டின் குப்தப் பேரரசர் முதலாம் சந்திரகுப்தர், நேபாள லிச்சாவிகளின் இளவரசி குமாரதேவியை மணந்தவர்.

சமுத்திரகுப்தர் வெளியிட்ட தங்க நாணயத்தில் ஒரு பக்கத்தில் இலக்குமியின் உருவமும், மறுபுறத்தில் முதலாம் சந்திரகுப்தர்-குமாரதேவியின் உருவமும் பதியப்பட்டிருக்கும். பேரரசர் அசோகர் நிறுவிய அலகாபாத் தூண்களில், சமுத்திரகுப்தர் தன்னை லிச்சாவிகளின் பேரன் எனக் குறித்துள்ளார்.

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

Tags:

மகாஜனபதம்லிச்சாவி நாடுவைசாலி, பண்டைய நகரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெண் தமிழ்ப் பெயர்கள்சைவத் திருமுறைகள்மூதுரைஆலங்கட்டி மழைவிருத்தாச்சலம்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்பொறியாளன் (திரைப்படம்)கொல்லி மலைதூது (பாட்டியல்)தீரன் சின்னமலைமழைபத்து தலவாழைவைரமுத்துஇதயம்இளையான்குடி மாறநாயனார்பனைவன்னியர்சுபாஷ் சந்திர போஸ்சுடலை மாடன்புவிஏலகிரி மலைபாரதிதாசன்கினோவாபகவத் கீதைவீட்டுக்கு வீடு வாசப்படிஇளம்போதியார்பூஞ்சைகாவிரிப்பூம்பட்டினம்மாமன் மகள் (1995 திரைப்படம்)நற்றிணைஇரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடுதிருமுருகாற்றுப்படைசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005அரண்மனை 3மூலிகைகள் பட்டியல்விசயகாந்துபரணி (இலக்கியம்)இன்று நேற்று நாளைநான் அவனில்லை (2007 திரைப்படம்)கல்லீரல்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்மு. கருணாநிதிசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்நீதி நெறி விளக்கம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நேர்பாலீர்ப்பு பெண்பயில்வான் ரங்கநாதன்நீலகேசிகாதல் தேசம்திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)இராகுல் காந்திவெப்பம் குளிர் மழைஓவியக் கலைமேற்கு வங்காளம்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்புறநானூறுதிருப்பாவைஆவாரம் பூ (திரைப்படம்)அரண்மனைபாண்டியர்குற்றாலம்அக்கி அம்மைகங்கைகொண்ட சோழபுரம்காரைக்கால் அம்மையார்நன்னூல்மே நாள்விபுலாநந்தர்தமிழர் அணிகலன்கள்உலகநீதிஇங்கிலீஷ் பிரீமியர் லீக்பிரேமலுகாஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்திரைப்படம்மாமல்லபுரம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்🡆 More