லாவணி

இலாவணி (மராத்தி: लावणी) மத்திய இந்தியாவின் பழம்பெரும் கிராமிய இசைப் பாடல் கலை.

மகாராட்டிரம், தெற்கு மத்தியப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய பகுதிகளில் பிரபலமாக உள்ளது. அறுநூறு ஆண்டுகளுக்கு முன் கி.பி.1400-களில், தமிழகத்த்தின் தஞ்சாவூர் பகுதியை தஞ்சாவூர் மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்தபோது, அவர்களோடு தஞ்சைக்கு இக்கலையை கொண்டு வந்ததாக, நாட்டுப்புற ஆய்வுகளிலிருந்து அறியமுடிகிறது. இது ஹோலித்திருவிழாவின்போதும்,குழந்தை பிறந்த 8நாட்கள் வரையில், தீய சக்திகள் அண்டாதிருக்கவும் பாடப்படுகிறது.

லாவணி
லாவணிக் கலையில் புகழ்பெற்ற மராத்தியக் கலைஞர் சுரேக்கா புனேக்கர்

சங்ககாலத்திற்கு முன்னரே, வேறு பெயரில் இக்கலை தமிழகத்தில் வேர் ஊன்றி இருந்ததாகவும், ஒரு சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். லாவணி என்ற சொல்லுக்கு, மராட்டி மொழியில் நாற்று நடுதல் என்ற பொருள் உள்ளது. வயலில் வேளாண் பணி புரியும் பெண்கள், உழைப்பின் களைப்பு தெரியாமல் இருக்க,ஒருவருக்கு ஒருவர் கிண்டல்-கேலி செய்யும் விதமாக, இயல்பான கிராமிய இசைப் பாங்குடன் பாடத்தொடங்கியதே லாவணிக்கலையின் தொடக்கம் என ஆய்வுகள் நிறுவுகின்றன.

மராட்டியர்கள், தஞ்சையை ஆண்ட காலகட்டத்தில், இக்கலை வேகமாக தமிழகமெங்கும் பரவத்தொடங்கிற்று. இக்கலையில் மேடையில் இருவர் எதிர் எதிர் அமர்ந்து, ஒருவரை ஒருவர் ஏளனம் செய்து விவாதிப்பது போலப் பாடுவர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த, தஞ்சை நஞ்சைக் கலைக்குழு என்னும் நாட்டுப்புறவியல் நிறுவனத்துடன் இணைந்து, சென்னையைச் சேர்ந்த தமிழ்க்கூடம் கலை-இலக்கிய இயக்கம், லாவணி கலை குறித்து ஒரு விரிவான ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளது .லாவணி கலை குறித்து பத்து ஆண்டுகாலம் ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்ற, தஞ்சாவூரைச் சேர்ந்த பேராசிரியர் விவேகானந்த கோபாலனின் வரலாற்று ஆய்வுகளை பின்புலமாகக் கொண்டு, எழுத்தாளர்-இயக்குநர் எஸ்.ராஜகுமாரன் இந்த ஆவணப் படத்தை இயக்கி உள்ளார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆட்சிஆண்டுகர்நாடகம்தஞ்சாவூர் மராத்திய அரசுநாட்டுப்புறவியல்மகாராட்டிரம்மத்திய இந்தியாமத்தியப் பிரதேசம்ஹோலி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெயர்ராஜா ராணி (1956 திரைப்படம்)பகத் பாசில்உத்தரகோசமங்கைசின்ன வீடுஎங்கேயும் காதல்முக்குலத்தோர்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்நிதிச் சேவைகள்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கோயம்புத்தூர்எயிட்சுபகிர்வுஇலங்கைநான்மணிக்கடிகைகூத்தாண்டவர் திருவிழாஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசிவனின் 108 திருநாமங்கள்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)தெருக்கூத்துபோக்கிரி (திரைப்படம்)தமிழ்உரிச்சொல்மாணிக்கவாசகர்நீதி இலக்கியம்தரணிமாற்கு (நற்செய்தியாளர்)நம்ம வீட்டு பிள்ளைஷங்கர் (திரைப்பட இயக்குநர்)சுந்தர காண்டம்சிவபுராணம்உலகம் சுற்றும் வாலிபன்பிள்ளையார்மனோன்மணீயம்ஈ. வெ. இராமசாமிமறைமலை அடிகள்பெண் தமிழ்ப் பெயர்கள்ஜெயகாந்தன்அணி இலக்கணம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதேவாங்குமூவேந்தர்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்உலா (இலக்கியம்)அஸ்ஸலாமு அலைக்கும்உடுமலை நாராயணகவிகாவிரி ஆறுதிருவிளையாடல் புராணம்திருமூலர்சிவன்சுரதாரச்சித்தா மகாலட்சுமிஅத்தி (தாவரம்)மெய்யெழுத்துமட்பாண்டம்ஸ்ரீதீரன் சின்னமலைகொல்லி மலைபெருஞ்சீரகம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)திருமங்கையாழ்வார்சப்ஜா விதைபனைமதராசபட்டினம் (திரைப்படம்)சங்க இலக்கியம்புறநானூறுகுலசேகர ஆழ்வார்கோவிட்-19 பெருந்தொற்றுபஞ்சபூதத் தலங்கள்கவிதைவிளம்பரம்கருக்காலம்முகம்மது நபிதமிழக மக்களவைத் தொகுதிகள்தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்கபிலர்கடையெழு வள்ளல்கள்பிரீதி (யோகம்)🡆 More