மின்பகுபொருள்

மின்பகுபொருள் (electrolyte) என்பது நீர் முதலான முனைவுப் பொருட்களில் கரைந்த நிலையில் தம்மூடு மின்னைக் கடத்துகின்ற பதார்த்தமாகும்.

கரைந்த நிலையில் மின்பகுபொருள் பதார்த்தத்தில் நேர் அயனிகளும் மறை அயனிகளும் சுயாதீனப்படுத்தப்படுவதால் அவை கரைசலில் சீராகப் பரவிக் காணப்படும். மின்முறையில் இவை நடுநிலையான பதார்த்தமாகும். இந்த கரைசலினும் ஒரு மின் அழுத்தம் பிரயோகிக்கப்படும் போது, கரைசலில் உள்ள கற்றயன்கள் (நேர் அயனிகள்) எதிர் மின்னி( இலத்திரன்) செறிவு கூடிய மின்வாயினை நோக்கி நகரும். அனயன்கள் (மறை அயனிகள்) மறை மின்னி பற்றாக்குறையான மின்வாயினை நோக்கி நகரும். கரைசலில் ஏற்படும் நேர் மின்னி, மறை மின்னிகளின் எதிரெதிர் நகர்வு மின்னோட்டத்திற்கு ஏற்ப அமையும். மின்பகுபொருள்களாக அதிக கரைதிறன் கொண்ட உப்புகள், காடிகள், காரங்கள் காணப்படும். ஹைதரசன் குளோரைட்டு முதலான சில வாயுக்களும் உயர் வெப்பநிலையிலும் தாழ்ந்த அழுத்தத்திலும் மின்பகு பொருளாகச் செயற்படும். ஏற்றம் பெற்ற தொழிற்பாட்டுக் கூட்டங்களைக் கொண்ட சில உயிரியல் (எ.கா: டி.என்.ஏ, பல்பெப்டைட்டு) மற்றும் தொகுப்புப் பல்பகுதியங்கள் ( எ.கா:பொலிஸ்ரைரீன்) என்பவற்றின் கரைசல்களும் மின்பகுபொருளாகத் தொழிற்படும். தம் கரைசல்களில் அயனாக்கமடையக் கூடிய பொருட்களான சோடியம், பொற்றாசியம், குளோரைட்டு, கால்சியம், மாக்னீசியம், மற்றும் பொசுபேற்று என்பன இத்தகைய மின்பகுபொருட்களாகும்.

மருத்துவத் துறையில் ஒருவர் நீண்டநாட்களாக தொடரும் வாந்தி அல்லது வயிற்றோட்டம் காரணமாக அல்லது உடலுழைப்புடனான மெய்வல்லுனர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் ஏற்படும் நீரிழப்புக்கு வாய்மூல நீரிழப்பு வைத்தியத்திற்கு மின்பகுப்பு மாற்றீடுகள் வழங்கப்படுகின்றன. வணிக ரீதியிலான மின்பகுப்புக் கரைசல்கள் நோய்வாய்ப்பட்ட சிறுவர்களுக்கு வாய்மூல நீரிழப்பு மருந்துகளும், சீரொ ஓறல்(Suero Oral) மற்றும் விளையாட்டு வீரர்கள் பருக்ககூடிய சிறப்புப் பானங்களும் காணப்படுகின்றன.

வரலாறு

மின்பகுபொருள் 
சிவன்டெ அரேனியசு

சிவன்டெ அரெனியசு 1884 இல் தனது ஆய்வறிக்கை ஒன்றில் திண்மப் பளிங்கு உப்புகள் அவை கரைக்கப்படும் போது அவற்றிலிருந்து ஏற்ற்முள்ள கூறுகளை வெளியிடும் என்பதை முன் வைத்தார். இதற்காக அவர் 1903 இல் வேதியியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றுக் கொண்டார்.

அரேனியசு இங்கு விளக்கும் கரைசல் ஆக்கப்படும் போது உப்பு வெளியிடும் ஏற்றம் கொண்ட துணிக்கைகள் என்பதை மைக்கல் பரடே பல வருடங்களுக்கு முன்னரே அயனிகள் எனப் பெயரிட்டார். பரடே மின்பகுப்பின் போது அயனிகள் வெளியிடப் படுவதாக நம்பினார். ஆனால் அரேனியசு மின்னோட்டம் இல்லாத சந்தர்பத்திலும் உப்புக் கரைசலில் அயனிகள் கானப்படுவதை முன்வைத்தார். இதன் அடிப்படையில் கரைசல் ஒன்றில் நடைபெறும் வேதியியல் தாக்கம் என்பது அதன் அயனிகளுக்கிடையில் நிகழும் தாக்கம் என் இவர் காட்டினார்.

உருவாக்கம்

மின்பகுபொருள் கரைசல்கள் பொதுவாக உப்பு ஒன்றை அதன் கரைப்பானாக அமையக் கூடிய நீர் அல்லது அதன் கரைப்பான், கரையம் ஆகியவற்றுக்கு இடையில் வெப்பவியக்கவியல் ரீதியில் இடைத்தாக்கமுற்று உருவாகும் தனித்துவமான கரைசல்களுடன் எ.கா:மேசை உப்பு (சோடியம் குளோரைட்டு), NaCl, நீரில் இடப்படும் போது; பின்வரும் வகையில் பிரிகையுறும்

    NaCl(s) → Na+(aq) + Cl(aq)

இதன் மூலம் நீருடன் பதார்த்தங்கள் தாக்கமுற்று அயனாக்கம் அடையும் என்பது தெளிவாகும்.எ.கா: காபனீரொட்சைட்டு நீருடன் தாக்கமுற்று ஐதரோனியம் அயனிகளையும் காபனேற்று அயனிகளையும் கார்போனிக்கமிலம் அயனிகளையும் உருவாக்கும்.

உருகிய நிலையிலான உப்புகளும், எ.க: உருகிய கறியுப்புத் திரவம் மின்னைக் கடத்தக் கூடியது. குறிப்பாக அயனிக் கரைசல்களான உருகிய உப்புக்கள் அதாவது உருகுநிலை 100 °C க்குக் கீழே, கொண்டவை உயர் மின்கடத்தாறு கொண்ட ஒரு வகைப் பாகுநிலை குறைந்த மின்பகுபொருளாக இருப்பதால் அதிகம் எரிபொருள் கலங்களாகப் பயன்படுகின்றன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

மின்பகுபொருள் வரலாறுமின்பகுபொருள் உருவாக்கம்மின்பகுபொருள் மேற்கோள்கள்மின்பகுபொருள் வெளி இணைப்புகள்மின்பகுபொருள்உப்பு (வேதியியல்)கல்சியம்காடிகாரம் (வேதியியல்)சோடியம்டி. என். ஏ.புரதக்கூறுபொட்டாசியம்மக்னீசியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பரிவர்த்தனை (திரைப்படம்)ஆண்டு வட்டம் அட்டவணைஅழகிய தமிழ்மகன்புறநானூறுபாரத ரத்னாசிறுகதைபால கங்காதர திலகர்தேசிக விநாயகம் பிள்ளைசீனிவாச இராமானுசன்சேரர்தமிழர் பண்பாடுஅத்தி (தாவரம்)சிந்துவெளி நாகரிகம்கஞ்சாஉலக சுகாதார அமைப்புயாவரும் நலம்திருமணம்ஓ காதல் கண்மணிதிருநெல்வேலிஅனுஷம் (பஞ்சாங்கம்)வினைச்சொல்உன்னை நினைத்துகாதல் (திரைப்படம்)ம. கோ. இராமச்சந்திரன்சுபாஷ் சந்திர போஸ்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சென்னையில் போக்குவரத்துகர்மாதொல். திருமாவளவன்வெண்குருதியணுபிரப்சிம்ரன் சிங்நிலாஇரண்டாம் உலகம் (திரைப்படம்)முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்வணிகம்தேர்தல்ஆகு பெயர்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்மூவேந்தர்ம. பொ. சிவஞானம்கம்பராமாயணம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)யானைபுறாசங்க காலம்ஒன்றியப் பகுதி (இந்தியா)தமிழ் மன்னர்களின் பட்டியல்நம்ம வீட்டு பிள்ளைஇந்தியாவின் பசுமைப் புரட்சிகாதல் கொண்டேன்சுற்றுச்சூழல் மாசுபாடுமுத்தொள்ளாயிரம்இந்திரா காந்திவிடுதலை பகுதி 1பறம்பு மலைகருத்துஅறிவுசார் சொத்துரிமை நாள்தமிழர் கப்பற்கலைநீர்ப்பறவை (திரைப்படம்)வீரப்பன்மழைதிருவோணம் (பஞ்சாங்கம்)உ. வே. சாமிநாதையர்தெலுங்கு மொழிபணவீக்கம்வேதநாயகம் பிள்ளைகீர்த்தி சுரேஷ்ஐக்கிய நாடுகள் அவைபிரகாஷ் ராஜ்வாலி (கவிஞர்)திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்குண்டலகேசிஇந்திஅண்ணாமலை குப்புசாமிசிறுபஞ்சமூலம்🡆 More