மின்னணு இசை

மின்னணு இசை என்பது, மின்னணு இசைக்கருவிகள், மின்னணு இசைத் தொழில்நுட்பம் என்பவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் இசையைக் குறிக்கும்.

மின்பொறிமுறை மூலம் உருவாக்கப்படும் ஒலிக்கும், மின்னணுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஒலிக்கும் இடையில் வேறுபாடு உண்டு. மின்சார கிட்டார், மின்பொறிமுறை மூலம் ஒலியை உருவாக்கும் ஒரு இசைக்கருவி ஆகும். ஒலித் தொகுப்பிகளும், கணினிகளும் ஒலியை உருவாக்குவதற்கு மின்னணுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.

மின்னணு இசை ஒரு காலத்தில் மேற்கத்திய உயர்தரமான கலைத்துவ இசைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டன. ஆனால் 1960 இன் பிற்பகுதியில் மின்னணுத் தொழில்நுட்பம் இலகுவாக எல்லோருக்கும் கிடைக்கத் தக்கதாக ஆனதைத் தொடர்ந்து பொது மக்கள் இசைத்துறையிலும் மின்னணு இசை பயன்படத் தொடங்கியது.

நிகழ்த்து இசைக்கான முதல் மின்னணு சாதனங்கள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்டன மேலும் அதன் பின்னர் விரைவில் இத்தாலிய எதிர்காலவியலாளர்கள் இசையாக கருதப்படாத ஒலிகளை ஆராய்ந்தனர். 1920 மற்றும் 1930 ஆம் ஆண்டுகளின் போது, ​​மின்னணு கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு மின்னணு உபகரணங்களுக்கான முதல் பாடல்கள் உருவாக்கப்பட்டது. 1940 களில் கண்டுபிடிக்கப்பட்ட காந்த ஒலிநாடப்பதிவுகள், அவற்றின் வேகத்தைத்தையும் , திசையையும் மாற்றுவதன் மூலம் இசையமைப்பாளர்கள் ஒலிகளை பதியவும், மாற்றியமைக்கவும் அனுமதித்தது. இது 1940 களில் எகிப்து மற்றும் பிரான்சு நாடுகளில் மின்ஒலியியல் இசை வளர்ச்சிக்கு வழிகோலியது. தனித்த ஓரிசை மின்னணுவியல் மின்னியற்றியால் 1953 ல் முதன்முதலில் செருமனியில் உருவாக்கப்பட்டது. 1950 களின் துவக்கத்தில் சப்பான் மற்றும் ஐக்கிய மாகாணங்களிலும் மின்னணு இசை உருவாக்கப்பட்டது. இசையை உருவாக்க கணினிகளின் வருகை ஒரு முக்கியத்துவமான புதிய வளர்ச்சி ஆகும். கணிப்பு நெறிமுறை இசையமைப்பானது 1951 ல் ஆஸ்திரேலியாவில் முதலில் செயல்விளக்கம் செய்துகாட்டப்பட்டது.

1960 களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நேரலை மின்னணுவியல் முன்னோடியாக விளங்கியது. ஜப்பானிய மின்னணு இசைக் கருவிகள் இசை துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. ஜமைக்கன் டப் இசை பிரபலமான மின்னணு இசை வடிவமாக வெளிப்பட்டது. 1970 களின் முற்பகுதியில் ஒற்றைத்தடவொலி மினிமோக் தொகுப்பி மற்றும் ஜப்பானிய டிரம் இயந்திரங்கள் ஒருங்கிணைந்த மின்னணு இசையை பிரபலப்படுத்த உதவியது.

1970 களில் மின்னணு இசை கனிசமான தாக்கத்தை பிரபல இசை வடிவங்களின் மீது ஏற்படுத்தின. பல்லொலி தொகுப்பிகள், மின்னணு மேளங்கள், மேளக் கருவிகள் மற்றும் திருப்புமேசைக் கருவிகள் ஊடாக திசுக்கோ, கிரவுத்துராக்கு இசை அல்லது காஸ்மிக் இசை, புது அலை, சிந்திசை, ஹிப் ஹாப் மற்றும் மின்னணு ஆடலிசை (Electronic dance music- EDM) போன்ற ஆட்ட வகைகளிலும் தாக்கத்தை உண்டாக்கின. 1980 களில், மின்னணு இசை பிரபலமான இசைத்தொகுப்பிகளில் மிகவும் ஆதிக்கம் செலுத்தியது. மேலும் இவை தொகுப்பிகளின் மீது அதிக நம்பகத்தன்மையுடன் இருந்த காரணத்தால் ரோலண்ட் TR-808 போன்ற நிகழ்ச்சி மேள இயந்திரங்கள் மற்றும் TB-303 போன்ற அடித்தொனி தொகுப்பிகள் உருவாக்கப்பட்டன. 1980 களின் முற்பகுதியில், யமஹா டிஎக்ஸ் 7 போன்ற எண்முறை தொகுப்பிகள் உள்ளிட்ட எண்ம தொழில்நுட்பங்கள் பிரபலமடைந்தன, மேலும் இசைக் கலைஞர்களின் மற்றும் இசை வியாபாரிகள் குழு இசை கருவி டிஜிட்டல் இடைமுகத்தை (MIDI) உருவாக்கினர்.

மலிவு இசை தொழில்நுட்பத்தின் வருகை காரணமாக 1990 களில் மின்னணு முறையில் உருவாக்கப்பட்ட இசை பிரபலமான களமாக விளங்கியது. தற்காலிக மின்னணு இசையில், சோதனைக் கலை இலக்கியத்தில் இருந்து பல வகைகள் மற்றும் வரம்புகள் மின்னணு நடனம் இசை போன்ற பிரபலமான வடிவங்களை உள்ளடக்கியது. இன்று, பாப் மின்னணு இசையானது அதன் 4/4 வடிவத்தில் மிகப் பிரபலமானதாக இருக்கிறது, மேலும் அதன் முக்கியத்துவம் வாய்ந்த நிக்கி சந்தையின் முந்தைய வடிவங்களை எதிர்த்து நிற்கும் முக்கிய கலாச்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

வரலாறு

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை

மின்னணு இசை 
Telharmonium, Thaddeus Cahill, 1897.

ஒலிகளைப் பதிவு செய்யவதற்கான வல்லமை மின்னணு இசையுடன் தொடர்பு உடையதாகக் கருதப்பட்டு வந்திருப்பினும், இது கட்டாயம் அல்ல. நாம் அறிந்த மிக முந்திய ஒலிப்பதிவுக் கருவி, போனாட்டோகிராப் எனப்படும் கருவியாகும். இதற்கான உரிமம் 1857 ஆம் ஆண்டில் எட்வார்ட்-லியொன் ஸ்காட் டி மார்ட்டின்வில்லி என்பவருக்கு வழங்கப்பட்டது. இது பார்க்கக்கூடிய வடிவில் ஒலிகளைப் பதிவு செய்யக்கூடியதே அன்றி அவ்வொலிகளை மீண்டும் உருவாக்கும் வல்லமை கொண்டதல்ல. 1878 ஆம் ஆண்டில் தாமஸ் ஆல்வா எடிசன் போனோகிராப் என்னும் கருவியொன்றுக்கு உரிமம் பெற்றார். இக் கருவியிலும் ஸ்காட்டின் கருவியிலிருந்தது போலவே உருளை ஒன்று பயன்படுத்தப்பட்டது. இவ்வாறான உருளைகளே சிலகாலம் தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்தன. 1887 ல், எமில் பெர்லினர் என்பவர் தட்டைப் பயன்படுத்தும் போனோகிராப் ஒன்றை உருவாக்கினார்.

மின்னணு இசைத்துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கிய கண்டுபிடிப்பு லீ டி பாரெஸ்ட் என்பவர் உருவாக்கிய மும்முனைய ஆடியன் (audion) ஆகும். 1906 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இதுவே முதலாவது வெற்றிடக் குழாய் ஆகும். இவ்வெற்றிடக் குழாய்களே மின் சமிக்ஞைகளைப் மிகைப்படுத்தல், வானொலி ஒலிபரப்பு, கணிப்பொறி ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுவதற்கான கருவிகளை உருவாக்கப் பயன்பட்டன.

ஆரம்பகால இசை உருவாக்கம்

வெற்றிடக்குழாய்களின் வளர்ச்சியானது மின்னணு இசைக் கருவிகளை சிறிய கையடக்க கருவியாகவும், லாகவகாமாகவும் கையாளும் வகையிலும் தயாரிக்க அடிகோலியது. 1930 களில் தொடக்கத்தில் தெரிமின், ஓண்டசு மார்டினோட் மற்றும் திராத்தோனியம் போன்ற கருவிகள் வணிக ரீதியில் தயாரிக்கப்பட்டன.

1920 களின் பிற்பகுதியில் இருந்து ஜோசப் சில்லிங்கர் போன்ற செல்வாக்கு பெற்ற இசைக்கலைஞர்கள் மின்னணு இசைக்கருவிகளை ஏற்று அவற்றின் பயன்பாட்டை அதிகரித்தனர். அவை பொதுவாக இசைக்குழுக்களில் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் பெரும்பாலான இசையமைப்பாளர்கள், தந்திக்கருவிகளுக்கு மாற்றாக தெரமைன் இசைக்கருவிகளுக்காக இசைக்ககுறிப்புகளை எழுதினர்.

புதுமுயற்சி இசையமைப்பாளர்கள் மிக அதிகமாக மின்னணு இசைக்கருவிகளைப் பயன்படுத்தியதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். அக்கருவிகள் அடிநாத வளங்களை விரிவாக்க முக்கியமாக திகழ்ந்தன. நுண்ணிசை கலைஞர்களான சார்லஸ் ஐவ்ஸ், டிமிட்ரியோஸ் லெவிடிஸ், ஆலிவர் மெசியான் மற்றும் எட்ஜார்ட் வார்ஸ் போன்றவர்கள் ஏற்கனவே இவற்றைில் நிபுனத்துவம் பெற்றவர்களாக இருந்தனர். மேலும், பெர்சி க்ரேங்கர் தெரமைன் கருவியை குறிப்பிட்ட சுருதிவகையை உருவாக்கப் பயன்படுத்தினார். ரஷ்ய இசையமைப்பாளர்களான காவிரிப் போபொவ் அதை வேறு விதமாக சத்த ஆதாரமாகக் கருதினார் (ஒலிப்பு இரைச்சலிசை).

பதிவு அனுபவங்கள்

ஆரம்பகால பதிவு தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் மின்னணு உபகரணங்களோடு இணையாகவே செய்யப்பட்டு வந்திருக்கின்றன. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயந்திர ஒலிவரைவி கொண்டு ஒலிகளை உருவாக்கி அதனை பதிவு செய்றும் நடைமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஒலிப்பதிவுக் கருவிகள் பொதுவான வீட்டுச் சாதனமாக மாறத்துவங்கி 1920 களில் இசையமைப்பாளர்கள் அவர்களின் சிறு அளவிலான செயல்திற இசை வடிவங்களை பதிவு செய்ய இக்கருவிகளைப் பயன்படுத்தினர்.

1925 ஆம் ஆண்டில் மின்னியல் ரீதியிலான இசைப் பதிவுகள் அறிமுகப்பட்டதைத் தொடர்ந்து அதிகமான பதிவுப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். 1930 இல் பால் ஹின்மெயித் மற்றும் எர்ன்ஸ்ட் டச் ஆகியோர் பல இசைத் துண்டுகளை குரலிசையை பல்வேறு வேகங்களில் பதிவு செய்தனர். இத்தகைய முறைகளின் ஆதிக்கம் காரணமாக 1939 ல் ஜான் கேஜ் கற்பனை நிலக்காட்சி எண். 1 (Imaginary Landscape No. 1) என்ற இசைத்தொகுப்பை வெளியிட்டார். இதில் பதிவு செய்யப்பட்ட தொணியிசையின் வேகத்தை மாற்றியமைத்திருந்தார்.

ஒரே நேரத்தில், இசையமைப்பாளர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட ஒளிப்படத்தில்-ஒலி தொழில்நுட்பத்துடன் முயற்சிக்கத் தொடங்கினர். டிரிஸ்டன் சாரா, குர்த் ஷ்விட்டர்ஸ், பிலிப்போ டோமாசோ மரினெட்டி, வால்டர் ரட்மான் மற்றும் சிக்கா வெர்டோவ் போன்ற நிகழ்துக்கலை பாடகர்களால் பாடப்பட்ட ஒலி தொகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒட்டொலிகளாக பதியப்பட்டன. இத்தொழிநுட்பம் மேலும் வளர்ந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த தொழில்நுட்பம் செருமனி மற்றும் உருசியாவில் திரைப்பட ஒளி நாடாக்களுடன் ஒலி சேர்க்கப்பட்டது. அமெரிக்காவில் டாக்டர். ஜெக்கில் மற்றும் ஹைட் ஆகியோரால் இவை செய்யப்பட்டன. 1930 களின் பிற்பகுதியில் இருந்து நோர்மன் மெக்லாரனால் வரைகலை ஒலித்திறன் பரிசோதனைகள் தொடர்ந்தன.

வளர்ச்சி 1940கள் முதல் 1950கள் வரை

மின்ஒலியியல் ஒலிப்பதிவு இசை

முதல் நடைமுறை ஒலிப்பதிவுக் கருவி 1935 இல் வெளிவந்தது. மாறுதிசை மின் தொழிநுட்பத்தின் வளர்ச்சியால் திரிபு மாறா ஒலிப்பதிவு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது. 1942 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பிரியோசை அல்லது பிரிப்பிசை (stereo) சோதனைப் பதிவு செய்யப்பட்டது. இந்த வளர்ச்சிகள் தொடக்கவாலத்தில் செருமனியில் மட்டுமே இருந்த போதிலும் இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஒலிப்பதிவுக் கருவிகளும் ஒலி நாடாக்களும் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டன. 1948 இல் முதல் வர்த்தக ரீதியாக தயாரிக்கப்பட்ட ஒலிப்பதிவுக்கருவிகளுக்கு இதுவே அடிப்படையாக இருந்தது.

1944 ஆம் ஆண்டில், காந்தவியல் ஒலிநாடாவை பயன்படுத்துவதற்கு முன்னதாக, எகிப்திய இசையமைப்பாளர் ஹாலிம் எல்-டாப், கெய்ரோவில் மாணவராக இருந்தபோது ​​ஒரு பழங்கால ஜார் விழாவினை சிக்கலான கம்பி ஒலிப்பதிவுக்கருவியின் மூலம் ஒலிகளை பதிவு செய்தார். மத்திய கிழக்கு வானொலி படப்பிடிப்பு நிலையமான எல்-டப் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட ஒலிகளின் பொருளை, எதிரொலி, மின்னழுத்த கட்டுப்பாடுகள் மற்றும் மீண்டும் பதிவுசெய்தல் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒலிபரப்புகள் செய்யப்பட்டன. இவையே துவக்க கால வானொலி இசை அமைப்பாக நம்பப்படுகிறது. இதன் விளைவாக, தி எக்ஸ்பிரஷன் ஆஃப் சார் என்ற தலைப்பில் 1944 ஆம் ஆண்டில் கெய்ரோவில் ஒரு கலைக்கூட நிகழ்வில் நடத்தப்பட்டது. பதிவு-அடிப்படையிலான ஆரம்ப இசையமைப்புச் சோதனைகளில் எகிப்திற்கு வெளியே பரவலாக அறியப்படவில்லை என்றாலும், 1950 களின் பிற்பகுதியில் கொலம்பியா-பிரின்ஸ்டன் மின்னணு இசை மையத்தில் பணிபுரிந்ததன் காரணடாக எல்-தப் பின்னாளில் நன்கு அறியப்பட்டார்.

மேற்கோள்கள்

Tags:

மின்னணு இசை வரலாறுமின்னணு இசை வளர்ச்சி 1940கள் முதல் 1950கள் வரைமின்னணு இசை மேற்கோள்கள்மின்னணு இசைஇசைக்கருவிகணினி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சீனிவாச இராமானுசன்ஜெ. ஜெயலலிதாபிரகாஷ் ராஜ்கலிங்கத்துப்பரணிமூகாம்பிகை கோயில்முருகன்கல்விதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்திரைப்படம்இன்று நேற்று நாளைஆசிரியர்கொங்கு வேளாளர்சூரைகுறிஞ்சிப் பாட்டுபாரத ரத்னாஇயேசுசெம்மொழிஇராமாயணம்தேர்தல்மருதமலை முருகன் கோயில்முக்கூடற் பள்ளுநான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)கிராம ஊராட்சிதிருமணம்கண்ணப்ப நாயனார்கள்ளர் (இனக் குழுமம்)நாலடியார்இளையராஜாபகத் பாசில்கருக்காலம்எட்டுத்தொகைதினமலர்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பதினெண்மேற்கணக்குசிலம்பரசன்கட்டுவிரியன்இலங்கைகூகுள்ஆர். சுதர்சனம்தமிழர் பருவ காலங்கள்தமிழ் இலக்கியம்தமிழ் விக்கிப்பீடியாகுறை ஒன்றும் இல்லை (பாடல்)அமெரிக்க ஐக்கிய நாடுகள்சித்ரா பௌர்ணமிகாற்றுமுல்லைப்பாட்டுபுணர்ச்சி (இலக்கணம்)இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பெண்பள்ளுசங்க காலப் பெண்பாற் புலவர்கள்கம்பர்அங்குலம்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)காயத்ரி மந்திரம்ஸ்ரீலீலாகாமராசர்சிவபெருமானின் பெயர் பட்டியல்தமிழ்செண்டிமீட்டர்விளையாட்டுபாரதி பாஸ்கர்ஒன்றியப் பகுதி (இந்தியா)சித்த மருத்துவம்கருமுட்டை வெளிப்பாடுகஞ்சாபழமொழி நானூறுஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்பிரீதி (யோகம்)விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்தன்னுடல் தாக்குநோய்சார்பெழுத்துமு. க. முத்துஉயிர்ச்சத்து டி🡆 More