மனோகர் பாரிக்கர்: கோவா முதல்வர்

மனோகர் கோபாலக்கிருஷ்ண பிரபு பாரிக்கர் (Manohar Gopalkrishna Prabhu Parrikar, திசம்பர் 13, 1955 - மார்ச் 17, 2019) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.

இவர் கோவா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆவார். இவர் 2000 ஆம் ஆண்டு முதல் 2005 வரையிலும், பின்னர் 2012 முதல் 2014 வரையிலும், 2017 முதல் 2019 வரை கோவா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார்..

மனோகர் பாரிக்கர்
மனோகர் பாரிக்கர்: ஆரம்ப கால வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, இறப்பு
10ஆவது கோவா முதல்வர்
பதவியில்
14 மார்ச் 2017 – 17 மார்ச் 2019
ஆளுநர்மிருதுளா சின்கா
முன்னையவர்லட்சுமிகாந்த் பர்சேகர்
பதவியில்
9 மார்ச் 2012 – 8 நவம்பர் 2014
ஆளுநர்கே. சங்கரநாராயணன்
பாரத் வீர் வான்ச்சூ
மார்கரட் அல்வா
ஓம் பிரகாஷ் கோலி
மிருதுளா சின்ஹா
முன்னையவர்திகம்பர் காமத்
பின்னவர்லட்சுமிகாந்த் பர்சேகர்
பதவியில்
24 அக்டோபர் 2000 – 2 பிப்ரவரி 2005
ஆளுநர்மொகமது பாசல்
கிதார்நாத் சகானி
மொகமது பாசல்
எஸ். சி. ஜாமீர்
முன்னையவர்பிரான்சிஸ்கோ சர்டின்கா
பின்னவர்பிரதாப்சிங் ரானே
பாதுகாப்புத் துறை அமைச்சர்
பதவியில்
9 நவம்பர் 2014 – 13 மார்ச் 2017
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்அருண் ஜெட்லி
பின்னவர்அருண் ஜெட்லி
கோவா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
28 ஆகத்து 2017 – 17 மார்ச் 2019
முன்னையவர்சித்தார்த் குன்கலின்கர்
தொகுதிபானஜி
பதவியில்
1994 – 25 நவம்பர் 2014
முன்னையவர்ஜோன் பட்டிஸ்தா புளோரினோ கன்சால்வுசு
பின்னவர்சித்தார்த் குன்கலின்கர்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
26 நவம்பர் 2014 – 2 செப்டம்பர் 2017
முன்னையவர்குசும் ராய்
பின்னவர்ஹர்தீப் சிங் புரி
தொகுதிஉத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மனோகர் கோபாலக்கிருஷ்ண பிரபு பாரிக்கர்

(1955-12-13)13 திசம்பர் 1955
மப்பூசா, கோவா, போர்த்துகேய இந்தியா
(தற்போது கோவா, இந்தியா)
இறப்பு17 மார்ச்சு 2019(2019-03-17) (அகவை 63)
பானஜி, கோவா, இந்தியா
காரணம் of deathகணையப் புற்றுநோய் பாதிப்பால்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்மேதா பாரிக்கர் (இறப்பு:1999)
பிள்ளைகள்அபிஜித் பாரிக்கர்
உத்பல் பாரிக்கர்
பெற்றோர்(s)கோபாலக்கிருஷ்ண பிரபு பாரிக்கர்
ராதாபாய் பாரிக்கர்
வாழிடம்(s)பானஜி, கோவா, இந்தியா
முன்னாள் கல்லூரிஇந்திய தொழில்நுட்பக் கழகம், மும்பை

2017 கோவா சட்டமன்றத் தேர்தலில் குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி, மனோகர் பாரிக்கர் தலைமையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கோவாவில் ஆட்சி அமைத்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

பாரிக்கர் கோவா மாநிலத்தின் மப்பூசாவில் பிறந்தவர். இவர் மார்கோவாவில் உள்ள லயோலா உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். மராத்தியில் தனது இடைநிலை கல்வியை நிறைவு செய்தவர். 1978இல் பம்பாயிலுள்ள ஐஐடி யில் உலோகவியலில் பொறியியல் படித்தார். இந்திய வரலாற்றிலேயே "ஐஐடி"யில் படித்த முதல் மாநில முதல்வர் ஆவார்.[சான்று தேவை] மனோகர் பாரிக்கரும், நந்தன் நிலெக்கணியும் 1978 ஆம் ஆண்டில் ஐஐடியில் இருந்து ஒன்றாக பட்டம் பெற்றவர்கள்.

அரசியல் வாழ்க்கை

பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினரான பாரிக்கர் அக்கட்சியின் முதல் கோவா முதல்வர் ஆவார். பாரிக்கர் முதலில் 1994 ஆம் ஆண்டு கோவா மாநிலத்தின் இரண்டாவது சட்டமன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஜூன் 1999 முதல் நவம்பர் 1999 வரை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். பாரிக்கர் அக்டோபர் 24, 2000 ஆம் ஆண்டில் முதல் முறையாக கோவாவின் முதல்வர் ஆனார். ஆனால் அவரது பதவிக்காலம் பிப்ரவரி 27, 2002 வரை மட்டுமே நீடித்தது. பின்பு ஜூன் 5, 2002இல் இவர் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 29 ஜனவரி 2005இல், நான்கு பா.ஜ.க உறுப்பினர்கள் பதவி விலகியதன் காரணமாக இவரது அரசாங்கம் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. எனினும் பிப்ரவரி 2005இல் பெரும்பான்மையை நிரூபித்தார். 2007 ஆம் ஆண்டில், பாரிக்கர் தலைமையிலான பா.ஜ.க அரசை, திகம்பர் காமத் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கோவா மாநில தேர்தலில் தோற்கடித்தது. மீண்டும் பா.ஜ.க மார்ச் 2012 இல் நடைபெற்ற கோவா சட்டசபை தேர்தலில் 24 இடங்களை வென்று மீண்டும் வெற்றி பெற்றது.

2014 ஆம் ஆண்டின் இந்தியப் பொதுத் தேர்தலில், கோவாவின் இரு மக்களவைத் தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்றது. பாரிக்கர், உத்திரப் பிரதேசத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நரேந்திர மோதியின் அமைச்சரவையின் முதல் விரிவாக்கத்தின் போது பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

பின்னர் மார்சு 14, 2017 ஆம் ஆண்டு மீண்டும் கோவா மாநில முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி ஏற்றார்.

இறப்பு

கணையப் புற்றுநோய் பாதிப்பால், சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி மார்ச் 17, 2019 அன்று காலமானார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

மனோகர் பாரிக்கர் ஆரம்ப கால வாழ்க்கைமனோகர் பாரிக்கர் அரசியல் வாழ்க்கைமனோகர் பாரிக்கர் இறப்புமனோகர் பாரிக்கர் இதனையும் காண்கமனோகர் பாரிக்கர் மேற்கோள்கள்மனோகர் பாரிக்கர்19552019அரசியல்வாதிகோவா (மாநிலம்)திசம்பர் 13மார்ச் 17

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுபாஷ் சந்திர போஸ்நீரிழிவு நோய்வ. உ. சிதம்பரம்பிள்ளைநெடுநல்வாடை (திரைப்படம்)இந்திய நாடாளுமன்றம்சிதம்பரம் நடராசர் கோயில்விஜய் (நடிகர்)அன்புமணி ராமதாஸ்சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்இந்திய உச்ச நீதிமன்றம்பசுபதி பாண்டியன்வாழைப்பழம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்ஆண்டாள்பாரதிதாசன்ஆறுமுக நாவலர்சித்தர்முக்குலத்தோர்நீலகிரி மக்களவைத் தொகுதிஇலங்கைதவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)யுகம்குமரி அனந்தன்சினைப்பை நோய்க்குறிகாப்பியம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்நானும் ரௌடி தான் (திரைப்படம்)தமிழ்நாடு அமைச்சரவைராசாத்தி அம்மாள்தமிழ்இயேசுவின் சாவுஇரச்சின் இரவீந்திராசோழர்சங்க இலக்கியம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கோத்திரம்சுப்பிரமணிய பாரதிஇராமச்சந்திரன் கோவிந்தராசுசிலுவைநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்விளம்பரம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்உப்புச் சத்தியாகிரகம்இந்தியத் தேர்தல் ஆணையம்நெடுநல்வாடைவிழுப்புரம் மக்களவைத் தொகுதிரமலான் நோன்புவிலங்குஉருசியாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பெண்பாண்டவர்அமலாக்க இயக்குனரகம்திருமணம்தமிழ்நாடுதிருமுருகாற்றுப்படைஓ. பன்னீர்செல்வம்மோசேமாமல்லபுரம்மார்ச்சு 29இளையராஜாசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்அறுபடைவீடுகள்முகலாயப் பேரரசுசங்க காலம்மதயானைக் கூட்டம்நீலகிரி மாவட்டம்பழனி முருகன் கோவில்இராவண காவியம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019திருவாசகம்மதராசபட்டினம் (திரைப்படம்)பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிபோயர்கண்டம்இந்திய ரூபாய்🡆 More