போலந்துபந்து

போலந்துபந்து (Polandball அல்லது நாட்டுப்பந்து) என்பது பயனர் உருவாக்கிய ஓர் இணையத் தொடர்வினை ஆகும்.

இது 2009ஆம் ஆண்டின் பின்பகுதியில் செருமன் படிமச்சட்டம் கிரௌட்சன்.நெட்டில் துவங்கியது. இந்தத் தொடர்வினை பல இணைய வரைகதைகளில் நாடுகளை பிழையான ஆங்கிலத்தில் பேசும் உருண்டையான நபராக உருவகித்து நாடுகளின் தேசியத் தன்மைகளையும் பன்னாட்டு உறவுகளையும் நக்கல் செய்வதாகும். இத்தகைய வரைகதை நடை போலந்துபந்து (போலந்து நாடு குறித்து இல்லாவிடினும் கூட) என்றும் நாட்டுப்பந்து (பன்மையில் நாட்டுப்பந்துகள்) என்றும் கூறப்படுகின்றன.

போலந்துபந்து
பயனர் ஒருவர் உருவாக்கிய போலண்ட்பந்தின் சார்பீடு.

பின்புலம்

டிராபால்.கொம் என்ற வலைத்தளத்தில் போலிய இணையப் பயனாளர்களுக்கும் உலகின் பிற இணையப் பயனாளர்களுக்கும் இடையே ஆகத்து 2009இல் நடந்த சண்டையே போலந்துபந்து உருவாகக் காரணமாக அமைந்தது. இந்த வலைத்தளம் இணையப் பயனாளர்கள் யாரும் தங்கள் வரையும் திறமையைக் காட்டுவதற்கு ஓர் ஓவியத்திரையாக விளங்கியது. மற்றவர்களது ஓவியங்களின் மீதும் வரையக்கூடிய வசதியைத் தந்தது. போலந்து நாட்டில் தங்களது நாட்டுக் கொடியை பந்தொன்றில் வரைய ஓர் கருத்தாக்கம் உருவானது. இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான போலந்து பயனர்கள் டிராபால்.கொமில் சிவப்பின் மீது வெள்ளை வண்ணத்தில் உள்ள பந்தின் இடையில் "POLSKA" என எழுதலாயினர். இதனை ஒருங்கிணைத்த பயனரின் பரிந்துரைப்படிபெரிய சுவசுத்திக்கா கொண்டு மறைத்தனர்.

கிரௌட்சன்.நெட் என்ற இடாய்ச்சுமொழி வரைதளத்தில் ஆங்கிலப் பயனர்கள் வருவதுண்டு. இத்தளத்தில் ஃபால்கோ என்ற பிரித்தானியர் இந்தத் தொடர்வினையைத் துவக்கியதாக நம்பப்படுகிறது. இவர் செப்டம்பர் 2009இல் பெயின்ட் கொண்டு அரசியல் இல்லாது அத்தளத்தில் பிழையான ஆங்கிலத்தில் பங்களித்துவந்த வொஜக் என்ற போலந்தியரைக் கிண்டலடிக்கும் விதமாக முதல் போலந்துபந்தை உருவாக்கினர். இதனைத் தொடர்ந்து பல உருசியர்கள் உற்சாகத்துடன் போலந்துபந்து கேலிச்சித்திரங்கள் வரையலாயினர்.

கருப்பொருள்கள்

போலந்துபந்து 
செருமனி மற்றும் லாத்வியாவின் இயல்புகளுடன் ஓர் பயனரால் உருவாக்கப்பட்ட வரைகதைச் சித்திரங்கள்.

போலந்துபந்து போலந்தின் வரலாறு, பிற நாடுகளுடனான வெளியுறவு மற்றும் ஒரே தன்மையான குணவியல்புகளை கருதுகோளாகக் கொண்டது. 2010 ஏப்ரல் 10 இல் போலந்தின் அரசுத்தலைவர் லேக் காச்சின்ஸ்கியும் அவரது மனைவியும் வேறு பல அரசு அதிகாரிகளும் உருசியாவின் சிமலியென்ஸ்க் வட்டாரத்தில் உள்ள இரகசிய வான்படைத் தளத்தில் இறங்கும்போது நேர்ந்த வானூர்தி விபத்தொன்றில் கொல்லப்பட்டதை அடுத்து பரவலாக அறியப்பட்டது. இந்த விபத்தின் ஆய்வு அறிக்கை குறித்து உருசியாவிற்கும் போலந்திற்கும் கருத்து வேறுபாடு நிலவிய நிலையில் போலந்தை கேலி செய்ய பல உருசியர்கள் இந்த ஊடகத்தை பயன்படுத்தினர். நாட்டுப் பந்துகளின் உரையாடல்கள் பிழையான ஆங்கிலத்திலும் இணைய கொச்சைமொழியிலும் இருந்தன. கேலிச்சித்திரத்தின் முடிவில், போலந்தின் தேசியக்கொடிக்கு நேர்மாறாக மேலே சிவப்பும் கீழே வெள்ளையுமாக வடிவமைப்பட்ட போலந்துபந்து அழுவதாக முடியும்.

சில போலந்துபந்தின் கருப்பொருள்கள் உருசியாவால் விண்ணில் பறக்க முடியும் என்றும் போலந்தால் விண்கலம் ஏவ இயலாது என்று கருதுகோளை அடிப்படையாகக் கொண்டு அமைந்தன. இத்தகைய வரைகதை ஒன்றில் புவியை ஓர் பெரும் விண்கல் மோதி அழிக்கவிருக்கையில் விண்வெளித் தொழில்நுட்பம் கொண்ட நாடுகள் புவியிலிருந்து தங்கள் விண்கலங்கள் மூலம் தப்பிக்க போலந்து மட்டும் "Poland cannot into space" ( இச்சொற்றொடர் மிகவும் பரவலானது) அழுதுகொண்டு இருப்பதாகக் காட்டப்பட்டிருக்கும். இதே போன்ற மற்றுமொரு வரைகதையில் போலந்துபந்து பிற நாட்டுப் பந்துகளிடம் "நாங்கள் உருசியாவை அழித்தபிறகு துருக்கியே உலகின் பெரிய நாடானது...மேலும்..." எனப் பெருமைப்பட மற்ற நாடுகள் சிரிப்பதுபோல அமைந்திருந்தது. இதனால் எரிச்சலடைந்த போலந்துபந்து குர்வா கூவி "இணையம் வேடிக்கைக்கானதல்ல" என்ற கோஷ அட்டையைக் காட்டும். இறுதியில் போலந்துபந்து வழமைப்படி அழுகையுடன் முடியும்.

பிற நாட்டுப்பந்துகள்

போலந்துபந்து 
போலந்துபந்து போலவே பயனர் ஒருவர் உருவாக்கிய இந்தியா குறித்த ஓர் நாட்டுப்பந்து

போலந்துபந்து மற்ற நாடுகளைக் கேலி செய்யவும் உருவாக்கப்படலாம்; நாட்டுப்பந்து என இவற்றைக் குறிப்பிடலாம் எனினும் இவையும் போலந்துபந்து எனவே அறியப்படுகின்றன. இணைய சஞ்சிகை லுர்க்மோரின்படி பவேரியா ஐக்கிய அமெரிக்கா, காத்தலோனியா சைபீரியா போன்ற நாடுகளுக்கு போலந்துபந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரின் போலந்துபந்து முக்கோண வடிவில் அமைந்துள்ளதால் டிரிங்கப்பூர் என அழைக்கப்படுகிறது. இசுரேலின் பந்து அவர்களது யூத இயற்பியலைப் போன்றே மிகுகன (hypercube) உருவமாக உள்ளது. கசக்ஸ்தானின் பந்து செங்கல் வடிவத்தில் உள்ளது. பிரித்தானியாவின் பந்து மேல்தொப்பி அணிந்தும் ஒற்றைக் கண்ணாடியுடனும் உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

போலந்துபந்து பின்புலம்போலந்துபந்து கருப்பொருள்கள்போலந்துபந்து பிற நாட்டுப்பந்துகள்போலந்துபந்து மேற்கோள்கள்போலந்துபந்து வெளி இணைப்புகள்போலந்துபந்துநாடுபோலந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

மொழியாழ்அகநானூறுவெள்ளியங்கிரி மலைசீறாப் புராணம்உளவியல்ஆபுத்திரன்மேலாண்மைமகேந்திரசிங் தோனிநயன்தாராஜெ. ஜெயலலிதாஇராமாயணம்திரு. வி. கலியாணசுந்தரனார்நாயக்கர்இன்னா நாற்பதுசித்ரா பௌர்ணமிதொல்லியல்பரிவர்த்தனை (திரைப்படம்)விருமாண்டிதிருமலை நாயக்கர்கிராம சபைக் கூட்டம்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்இந்தியாவில் இட ஒதுக்கீடுமுன்னின்பம்கலாநிதி மாறன்தடம் (திரைப்படம்)பிள்ளையார்கம்பராமாயணம்புணர்ச்சி (இலக்கணம்)நேர்பாலீர்ப்பு பெண்விஷ்ணுபுறநானூறுஇந்தியத் தேர்தல்கள் 2024பாரத ரத்னாகனடாபித்தப்பைவட்டாட்சியர்தமிழக மக்களவைத் தொகுதிகள்சைவ சமயம்பட்டினத்தார் (புலவர்)சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஆனந்தம் (திரைப்படம்)கேட்டை (பஞ்சாங்கம்)ஏலகிரி மலைஇந்திய நிதி ஆணையம்பரிபாடல்விபுலாநந்தர்தெலுங்கு மொழிமத கஜ ராஜாஇலங்கைதங்கம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சனீஸ்வரன்மதீச பத்திரனசமுத்திரக்கனி2024 இந்தியப் பொதுத் தேர்தல்108 வைணவத் திருத்தலங்கள்தன்னுடல் தாக்குநோய்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்நவதானியம்பாசிப் பயறுதமிழ் மாதங்கள்வெ. இறையன்புலால் சலாம் (2024 திரைப்படம்)தொல்காப்பியர்காற்றுஐங்குறுநூறுதேம்பாவணிஇரண்டாம் உலகப் போர்கீர்த்தி சுரேஷ்தமிழ் தேசம் (திரைப்படம்)மயில்பாண்டவர்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்ஆதலால் காதல் செய்வீர்🡆 More