பெனைன்சு மலைத்தொடர்

பெனைன்சு (Pennines) என்பது இங்கிலாந்தில் உள்ள ஓர் மலைத்தொடர்.

பீக் மாவட்டத்திலிருந்து யோர்க்சையர் டேல்சு, பெரும் மான்செஸ்டர், இலங்காசையரின் மேற்கு பெனைன் மேட்டுப்பகுதிகள், கும்பிரியா ஃபெல்கள் வழியாக இசுக்காட்லாந்து எல்லையில் உள்ள செவியட் குன்றுகள் வரை இடைவெளியின்றி அமைந்துள்ள இம்மலைத்தொடர் பல நேரங்களில் "இங்கிலாந்தின் முதுகெலும்பு" எனக் குறிக்கப்படுகிறது . இந்த மலைத்தொடர் ஏறத்தாழ 250 mi (402 km) நீளமுள்ளது.

பெனைன்சு மலைத்தொடர்
வடக்கு இங்கிலாந்தின் பெனைன்சு மலைத்தொடர்

பெனைன்சின் பகுதிகள் பீக் தேசியப் பூங்கா, யார்க்சையர் தேசியப் பூங்கா மற்றும் நார்த்தம்பர்லாந்து தேசியப் பூங்காக்களின் அங்கமாக உள்ளன. பிரித்தானியாவின் முதல் தொலைதூர நடைபாதை, பெனைன் வழி (Pennine Way), பெனைன்சு மலைத்தொடர் வழியாக 429 kilometres (268 mi) தொலைவிற்குச் செல்கிறது.

பெயர்க்காரணம்

பெனைன்சு மலைத்தொடர் 
பெனைன்சின் காட்சிகளுக்கு ஓர் காட்டாக.

பெனைன்சு என்ற பெயர் "குன்று" எனப்பொருள்படும் பென்னியோரோசெசு எனும் செல்திக்கு மொழிச் சொல்லிலிருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இருப்பினும் இந்த மலைத்தொடரை இப்பெயரில் குறிப்பிடப்படும் முதல் குறிப்புகள் 18வது நூற்றாண்டிலிருந்தே காணப்படுகின்றன.

உயரமும் அளவும்

இந்த மலைகள் பெரிய உயரங்களை எட்டுவதில்லை; பெரும்பாலும் குன்றுகள் என்றே அழைக்கப்படுகின்றன. கிழக்கு கும்பிரியாவில் 893 m (2,930 அடி) உயரமுள்ள கிராஸ் ஃபெல்லே மிகவும் உயரிய சிகரமாகும். மற்ற மலைச்சிகரங்கள் மிக்கெல் ஃபெல் 788 m (2,585 அடி), வெர்ன்சைடு 736 m (2,415 அடி), இங்கில்பரோ 723 m (2,372 அடி), பென்-யி- கென்ட் 693 m (2,274 அடி), மற்றும் கிண்டர் இசுகவுட்டு 636 m (2,087 அடி) ஆகும்..

பெனைன்சின் பெரும்பாலான நிலக்காட்சிகள் மேட்டுப்புற புதர்வெளிகளாகும். இது இங்கிலாந்தின் ஆறுகளை நாட்டின் கிழக்குப் பகுதிக்கும் மேற்குப் பகுதிக்குமாகப் பிரிக்கிறது. ஈடன் ஆறு, ரிப்பிள் ஆறு, மெர்சி ஆறு என்பன மேற்கு நோக்கி ஓடி ஐரியக் கடலில் கலக்கும் ஆறுகளாவன; டைன் ஆறு, டீசு ஆறு, இசுவேல் ஆறு கால்டர் ஆறு, அயர் ஆறு, டான் ஆறு, டிரென்ட் ஆறு என்பன கிழக்கு நோக்கி ஓடி வடகடலில் கலக்கும் ஆறுகளாவன.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

பெனைன்சு மலைத்தொடர் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பெனைன்சு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

பெனைன்சு மலைத்தொடர் பெயர்க்காரணம்பெனைன்சு மலைத்தொடர் உயரமும் அளவும்பெனைன்சு மலைத்தொடர் மேற்சான்றுகள்பெனைன்சு மலைத்தொடர் வெளி இணைப்புகள்பெனைன்சு மலைத்தொடர்இங்கிலாந்துஇசுக்காட்லாந்துகிலோமீட்டர்மைல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

குறிஞ்சி (திணை)பத்துப்பாட்டுமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்இராமலிங்க அடிகள்முதலாம் இராஜராஜ சோழன்வசுதைவ குடும்பகம்மாமல்லபுரம்கடையெழு வள்ளல்கள்ஆகு பெயர்நக்கீரர், சங்கப்புலவர்பகவத் கீதைமுகலாயப் பேரரசுதிணை விளக்கம்மங்காத்தா (திரைப்படம்)இன்குலாப்முதற் பக்கம்தேவாரம்புதன் (கோள்)ஜவகர்லால் நேருதேவிகாதொல்காப்பியம்இளையராஜாவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)தமிழ் இலக்கணம்கரிகால் சோழன்கட்டுவிரியன்இளங்கோவடிகள்மேகக் கணிமைதிருப்பாவைவிஜய் (நடிகர்)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்கருப்பைபெயர்நுரையீரல்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுசுற்றுச்சூழல் மாசுபாடுஇனியவை நாற்பதுதமிழில் சிற்றிலக்கியங்கள்வைதேகி காத்திருந்தாள்தமிழ்த் தேசியம்குண்டலகேசிஎல் நீனோ-தெற்கத்திய அலைவுதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புவேளாண்மையானையின் தமிழ்ப்பெயர்கள்ர. பிரக்ஞானந்தாவெ. இறையன்புமட்பாண்டம்திருநாவுக்கரசு நாயனார்பெருமாள் திருமொழிகண்ணனின் 108 பெயர் பட்டியல்போக்குவரத்துபூலித்தேவன்தமிழர் பண்பாடுமகேந்திரசிங் தோனிஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370இலங்கைமுருகன்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)திருப்பதிமனித உரிமைஅறம்இந்திய நாடாளுமன்றம்பரிபாடல்அடல் ஓய்வூதியத் திட்டம்பெரியபுராணம்சூரியக் குடும்பம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்திருமந்திரம்கௌதம புத்தர்மாணிக்கவாசகர்சைவத் திருமணச் சடங்குதேர்தல்மக்களவை (இந்தியா)இந்தியன் (1996 திரைப்படம்)ஆதிமந்தி🡆 More