புல்கன் மாகாணம்

புல்கன் (மொங்கோலியம்: Булган) என்பது மங்கோலியாவின் 21 ஐமக்குகளில் ஒன்றாகும்.

இது வடக்கு மங்கோலியாவில் உள்ளது. இதன் தலைநகரத்தின் பெயரும் புல்கன் ஆகும்.

புவியியல்

இந்த ஐமக்கிற்கு வடக்கே உருசியாவின் புர்யத்தியா மாகாணமும், வடமேற்கே மங்கோலியாவின் கோவுசுகல், தென்மேற்கே ஆர்க்கன்காய், தெற்கே ஒவர்கன்காய், தென்கிழக்கே டோவ் மற்றும்வடகிழக்கே செலங்கே ஆகியவையும் சுற்றி அமைந்துள்ளன. சிறிய ஒர்கான் ஐமக் ஆனது செலங்கேயின் எல்லையில் இந்த ஐமக்கிற்கு ஒரு இணைப்பாக உள்ளது.

இந்த ஐமக்கிற்கு வடக்கு பகுதியில் அல்பைன் காடுகள் உள்ளன. அவை படிப்படியாக மங்கோலிய உயர்நில பகுதியிலுள்ள வறண்ட புல்வெளி சமவெளிப் பகுதிகளுடன் இணைகின்றன. இங்குள்ள முக்கியமான ஆறுகள் ஒர்கான் மற்றும் செலங்கே ஆகும். இந்த இரண்டு ஆறுகளும் ஒவர்கன்காய் ஐமக்கிலிருந்து இங்கு நுழைகின்றன. இதன் காரணமாக மங்கோலியாவில் உள்ள விவசாயம் செய்யக்கூடிய சில பகுதிகளில் தெற்கு புல்கனும் ஒன்றாக உள்ளது.

போக்குவரத்து

இந்த ஐமக்கின் தலைநகரான புல்கன்னில் ஒரு வானூர்தி நிலையம் உள்ளது. இங்கிருந்து உலான் பத்தூர், கோவ்ட் மற்றும் முருன் ஆகிய இடங்களுக்கு வானூர்திகள் இயக்கப்படுகின்றன.

உசாத்துணை

Tags:

மங்கோலியாமொங்கோலியம் மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இராமலிங்க அடிகள்வால்ட் டிஸ்னிபாரத ரத்னாதேனி மக்களவைத் தொகுதிபிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்ஹஜ்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்நான்மணிக்கடிகையுகம்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிவிழுப்புரம் மக்களவைத் தொகுதிஇலட்சம்சிதம்பரம் மக்களவைத் தொகுதிமஞ்சள் காமாலைமு. க. ஸ்டாலின்அல் அக்சா பள்ளிவாசல்திதி, பஞ்சாங்கம்ஈரோடு மக்களவைத் தொகுதிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்சுடலை மாடன்ரஜினி முருகன்சஞ்சு சாம்சன்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்இராவணன்அழகர் கோவில்திருநெல்வேலிமதயானைக் கூட்டம்பண்பாடுதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021இந்து சமயம்தமிழர் நிலத்திணைகள்தட்டம்மைஇயேசுவின் உயிர்த்தெழுதல்கருக்கலைப்புஅயோத்தி தாசர்இளையராஜாமுகலாயப் பேரரசுவிண்ணைத்தாண்டி வருவாயாஔவையார் (சங்ககாலப் புலவர்)நவரத்தினங்கள்குணங்குடி மஸ்தான் சாகிபுஇந்திய அரசியலமைப்புமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்வல்லினம் மிகும் இடங்கள்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)முத்துராமலிங்கத் தேவர்பகத் சிங்தமிழ் இலக்கணம்சிவவாக்கியர்ஈ. வெ. இராமசாமிஇசுலாம்சித்தார்த்மகாபாரதம்ஏலாதிகருப்பசாமிநெல்லிரமலான்புலிமரகத நாணயம் (திரைப்படம்)கிராம ஊராட்சிதமிழ்ப் பருவப்பெயர்கள்வினோஜ் பி. செல்வம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024சிவனின் 108 திருநாமங்கள்ஜெயகாந்தன்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)பச்சைக்கிளி முத்துச்சரம்சுப்பிரமணிய பாரதிபிரபுதேவாபழமுதிர்சோலை முருகன் கோயில்இலிங்கம்இராபர்ட்டு கால்டுவெல்தென்னாப்பிரிக்காஞானபீட விருதுஅறுபது ஆண்டுகள்இந்தோனேசியாசித்த மருத்துவம்கருப்பை நார்த்திசுக் கட்டிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்🡆 More