பி. கேசவதேவ்: மலையாள எழுத்தாளர்

பி.

கேசவப்பிள்ளை (பிறப்பு: 20 ஜூலை 1904 - 1இறப்பு: ஜூலை 1983), கேசவதேவ் (ஆங்கிலம்: P. Kesavadev) என்றப் புனைப்பெயரால் நன்கு அறியப்படும் இவர் இந்தியாவின் கேரளாவின் நாவலாசிரியரும், சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். அவரது உரைகள், சுயசரிதை, புதினங்கள், நாடகங்கள், சிறுகதைகள் மற்றும் திரைப்படங்களுக்காக அவர் நினைவு கூறப்படுகிறார். ஓடில் நின்னு, நாடி, பிரண்டலயம், அயல்கர் (மத்திய அகாடமி விருது பெற்ற புதினம்), எதிரிப்பு (சுயசரிதை) மற்றும் ஓரு சுந்தரியூட் ஆத்மகதா போன்றவை அவரது 128 இலக்கியப் படைப்புகளில் சில. கேசவதேவ், தகழி சிவசங்கர பிள்ளை மற்றும் வைக்கம் முகம்மது பஷீர் ஆகியோருடன் முற்போக்கான மலையாள இலக்கியத்தின் கோட்ட்பாட்டை ஆதரிப்பவர்களாக கருதப்படுகிறார்கள் .

பி. கேசவதேவ்: மலையாள எழுத்தாளர்
பி. கேசவதேவ்

வாழ்க்கை மற்றும் தொழில்

கேசவதேவ், கேசவ பிள்ளை, ஜூலை 21, 1904 அன்று, பின்னர் பிரித்தானிய இராச்சியமான வடக்கு பரவூருக்கு அருகிலுள்ள ஒரு சிறிய குக்கிராமமான கேடமங்கலத்தில், அப்பு பிள்ளை-கார்த்தாயணி அம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். உயர்நிலைப் பள்ளி நிலைகள் வரை மட்டுமே அவர் முறையான கல்வியைக் கொண்டிருந்தார். நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக அதைக் கைவிட்டு, சேகரிப்பு முகவர், கல்வி ஆசிரியர் மற்றும் துணி வியாபாரி போன்ற பகுதிநேர வேலைகளை மேற்கொண்டார். இந்த சமயத்தில்தான், அவர் சகோதரன் அய்யப்பனின் எண்ணங்களால் ஈர்க்கப்பட்டு, மிஸ்ர போஜனம் என்ற அய்யப்பன் ஏற்பாடு செய்த பிரமாண்ட விருந்தில் பங்கேற்றார். அங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் உட்பட சுமார் 200 பேர் ஒன்றாக சாப்பிட்டனர். பின்னர், அவர் ஆர்யா சமாஜத்தில் சேர்ந்து, தனது சாதியைக் குறிக்கும் தனது கடைசி பெயரான " பிள்ளை " யிலிருந்து விடுபட கேசவ தேவ் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் இந்திய தேசிய காங்கிரசுடனும் இந்திய பொதுவுடமைக் கட்சியுடனும் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போதைய ஆசிரியரான ஏ. கே. பிள்ளை இங்கிலாந்துக்குச் சென்றபோது இடைக்கால ஆசிரியராக சுதேசபிமானி தொடங்கி பல வெளியீடுகளில் அவர் ஈடுபட்டார். மலையாள ராஜ்யம், பஜே பாரதம், பிரதிதினம் மற்றும் தோசிலாலி ஆகியவை அவர் சம்பந்தப்பட்ட மற்ற வெளியீடுகள் ஆகும். கடைசியாக அவர் ஒரு தீவிர பொதுவுடமைவாதியாக இருந்தபோது பொதுவுடமை இயக்கத்திற்காக பிரச்சார இலக்கியங்களையும் எழுதினார். சாகித்ய பிரவர்தக சககாரண சங்கம் (சாகித்ய ப்ரவர்தகா கூட்டுறவு சங்கம்) மற்றும் கேரள சாகித்ய அகாதமி ஆகியவற்றின் தலைவராக பணியாற்றினார்.

கேசவதேவ் எதிர்பு என்ற தனது சுயசரிதையை 1959 இல் வெளியிட்டார். இது அவரது பொதுவுடமை கொள்கைகளை பிரதிபலித்தது. அவர் கேரள சாகித்ய அகாதமி பெல்லோஷிப்பைப் பெற்றவர். 1964 ஆம் ஆண்டில், சாகித்ய அகாதமி இவரது படைப்பான அயல்கரை நாவலுக்கான வருடாந்திர விருதுக்குத் தேர்ந்தெடுத்தது. சோவியத் நாட்டின் நேரு விருதையும் பெற்றவர்.

கேசவதேவின் முதல் திருமணம் கோமதி அம்மாவுடன் இருந்தது. ஆனால் திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1957 ஆம் ஆண்டில் அவர் அறுபதுகளில் இருந்தபோது அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தார். பின்னர், முப்பது வயது இளையவரான பிரபலமான நாவலாசிரியரான சீதாலட்சுமி என்பவரை இரண்டாவதாக மணந்தார். அவர்களின் மகன் ஜோதிதேவ் கேசவதேவ் ஒரு நீரிழிவு மருத்துவர் மற்றும் நீரிழிவு சிகிச்சையில் தொலை மருத்துவத்தின் முன்னோடி ஆவார்.

கேசவதேவ் 1983 சூலை 1அன்று தனது 78 வயதில் இறந்தார்.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

இந்தியாகேரளம்தகழி சிவசங்கரப் பிள்ளைமுகம்மது பஷீர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்திருப்போரூர் கந்தசாமி கோயில்யாப்பகூவாஇந்து சமயம்இசுலாத்தின் புனித நூல்கள்போயர்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)தமிழக வரலாறுகார்லசு புச்திமோன்டொயோட்டாஇனியவை நாற்பதுநாச்சியார் திருமொழிஓரங்க நாடகம்குறிஞ்சிப் பாட்டுவேலைகொள்வோர்கும்பம் (இராசி)கம்பராமாயணம்தொண்டைக் கட்டுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்மணிமேகலை (காப்பியம்)ஹரிஹரன் (பாடகர்)புதிய ஏழு உலக அதிசயங்கள்எஸ். ஜானகிஆண் தமிழ்ப் பெயர்கள்தமிழிசை சௌந்தரராஜன்மயில்பேரிடர் மேலாண்மைஇந்திய அரசியலமைப்புஇருட்டு அறையில் முரட்டு குத்துஉரைநடைதுணிவு (2023 திரைப்படம்)உத்தராகண்டம்புறாஉமறுப் புலவர்இரண்டாம் உலகப் போர்விஸ்வகர்மா (சாதி)பச்சைக்கிளி முத்துச்சரம்இந்திய தேசிய காங்கிரசுபகத் சிங்குணங்குடி மஸ்தான் சாகிபுமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைவெ. இறையன்புகாடுவெட்டி குருபாக்யராஜ்சிறுபாணாற்றுப்படைதேவேந்திரகுல வேளாளர்தமிழ் படம் (திரைப்படம்)ஜீனடின் ஜிதேன்விபுலாநந்தர்திரிகடுகம்பாத்திமாவாழைப்பழம்குடும்பம்பழமொழி நானூறுயானைவினைச்சொல்அக்பர்இராமர்ஒரு காதலன் ஒரு காதலிகாயத்ரி மந்திரம்ஆண்குறிமுகம்மது நபிநம்மாழ்வார் (ஆழ்வார்)தாவரம்திராவிட மொழிக் குடும்பம்பூலித்தேவன்வாதுமைக் கொட்டைமுதலாம் உலகப் போர்சித்த மருத்துவம்பழமுதிர்சோலைதிருப்பூர் குமரன்முக்கூடற் பள்ளுபனைதிருக்குறள்நடுக்குவாதம்சுந்தர காண்டம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்🡆 More