பூ. ச. குமாரசுவாமி ராஜா

பூசாபதி சஞ்சீவி குமாரசுவாமி ராஜா (8 ஜூலை 1898 – 16 மார்ச் 1957) சென்னை மாகாணத்தின் கடைசி முதலமைச்சராகவும், சென்னை மாநில முதல் முதல்வராகவும் ஏப்ரல் 6, 1949 முதல் ஏப்ரல் 10, 1952 வரை பொறுப்பேற்றவர்..

அவர் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள இராசப்பாளையத்தில் பிறந்தவர்.

பி.எஸ்.குமாரசுவாமிராஜா
பூ. ச. குமாரசுவாமி ராஜா
சென்னை மாநில முதலமைச்சர்
பதவியில்
26 ஜனவரி 1950 – ஏப்ரல் 10, 1952
ஆளுநர்கிருஷ்ண குமாரசிங் பவசிங்
முன்னையவர்பதவி உருவாக்கபட்டது
பின்னவர்சி. இராஜகோபாலாச்சாரி
சென்னை மாகாண முதல்வர்
பதவியில்
ஏப்ரல் 6, 1949 – 26 ஜனவரி 1950
ஆளுநர்கிருஷ்ண குமாரசிங் பவசிங்
முன்னையவர்ஓ. பி. ராமசாமி ரெட்டியார்
பின்னவர்பதவி நீக்கப்பட்டது
ஒரிசா மாநில ஆளுநர்
பதவியில்
1954–1956
முன்னையவர்சையிது பாசில் அலி
பின்னவர்பீம் சென் சச்சார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1898
இராஜபாளையம், சென்னை மாகாணம் இந்தியா இந்தியா
இறப்பு1957
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசியக் காங்கிரஸ்

இளமை வாழ்வு

பூசாபதி சஞ்சீவி ராஜாவிற்கு மகனாக இராசப்பாளையத்தில் பிறந்தார். அவரது அன்னையை எட்டு நாட்களிலேயே இழந்தார். தந்தையை மூன்றாம் வயதில் இழந்தார்.உடன்பிறப்புகள் யாருமில்லாத குமாரசாமியை அவரது பாட்டியார் வளர்த்து வந்தார். பதினைந்தாம் நூற்றாண்டில் ஆந்திராவிலிருந்து இடம் பெயர்ந்த வீரர்கள் பரம்பரையைச் சேர்ந்த ராஜூக்களின் இனத்தைச் சேர்ந்தவர். தமது பள்ளிக்கல்வியை முடித்தவுடன் இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசில் இணைந்து பல்வேறு நிலைகளில் பங்காற்றி இருக்கிறார். கிராமத்தின் பஞ்சாயத்து அமைப்புகளில் நாட்டம் கொண்டு பஞ்சாயத்து மற்றும் நகரவை நிர்வாகங்களில் பங்கேற்றார்.

அரசியல் மற்றும் சமூக சேவை

அவரது இளம்வயதில் அன்னி பெசண்ட் அம்மையார் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரது வாழ்வும் எழுத்துக்களும் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருந்தன. 1919ஆம் ஆண்டு முதன்முதலாக மோகன்தாசு கரம்சந்த் காந்தி|காந்தியை சந்தித்த பிறகு அவரது வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டார்.காந்தியின் தென்னாபிரிக்கா போராட்டங்களையும் அகமதாபாத்தில் அவர் நிறுவிய ஆசிரமும் அவரது எளிமையும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது.

1932ஆம் ஆண்டு நீதியற்ற சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தில் சிறை சென்றார். 1934ஆம் ஆண்டு திருநெல்வேலி,மதுரை மற்றும் இராமநாதபுரம் அடங்கிய தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார்.

1949 முதல் 1952 வரை தமிழ்நாடு (சென்னை மாகாணம்) முதலமைச்சராகவும் 1954 முதல் 1956 வரை ஒரிசா ஆளுநராகவும் பணியாற்றினார்.அவரது பணிக்காலத்தில் மதுவிலக்கு,காதித்துணிகளுக்கு ஆதரவு மற்றும் ஆலயப்பிரவேச ஆணை ஆகியன குறிப்பிடத்தக்கன.தமது வீட்டை காந்தி கலைமன்றம் என்ற நுண்கலை அமைப்பிற்கு நன்கொடை அளித்தார்.

நினைவுச் சின்னங்கள்

இவரது நினைவைப் போற்றும் வகையில் இந்திய நடுவணரசு இவர் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது. புதியதாக உருவாக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும், அதைச் சுற்றி ஏற்படுத்தப்பட்ட நகருக்கும் இவர் பெயரைச் சூட்டியுள்ளனர்.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

முன்னர்
ஓ. பி. ராமசாமி ரெட்டியார்
சென்னை மாகாண முதலமைச்சர்கள்
6 ஏப்ரல் 1949– 26 ஜனவரி 1950
பின்னர்
பி. எஸ். குமாரசுவாமிராஜா
முன்னர்
புதிய பதவி
சென்னை மாகாண முதலமைச்சர்கள்
26 ஜனவரி 1950– 10 ஏப்ரல் 1952
பின்னர்
சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி

Tags:

பூ. ச. குமாரசுவாமி ராஜா இளமை வாழ்வுபூ. ச. குமாரசுவாமி ராஜா அரசியல் மற்றும் சமூக சேவைபூ. ச. குமாரசுவாமி ராஜா நினைவுச் சின்னங்கள்பூ. ச. குமாரசுவாமி ராஜா மேலும் பார்க்கபூ. ச. குமாரசுவாமி ராஜா மேற்கோள்கள்பூ. ச. குமாரசுவாமி ராஜா வெளியிணைப்புகள்பூ. ச. குமாரசுவாமி ராஜாஇராஜபாளையம்சென்னை மாகாணம்சென்னை மாநிலம்தமிழ்நாடுமுதலமைச்சர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பச்சைக்கிளி முத்துச்சரம்இலக்கியம்தனுசு (சோதிடம்)அண்ணாதுரை (திரைப்படம்)சிவாஜி கணேசன்கிரிமியா தன்னாட்சிக் குடியரசுகேரளம்மலக்குகள்அருந்ததியர்லியோநன்னூல்சிறுநீர்ப்பாதைத் தொற்றுதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்சிந்துவெளி நாகரிகம்தாய்ப்பாலூட்டல்சுரதாநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சஞ்சு சாம்சன்புகாரி (நூல்)மதுரை மக்களவைத் தொகுதிஆத்திசூடிஇயேசுவின் சாவுவேலு நாச்சியார்அபுல் கலாம் ஆசாத்புவிவெப்பச் சக்திமணிமேகலை (காப்பியம்)பெரிய வியாழன்திராவிசு கெட்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்நான்மணிக்கடிகைவெண்பாசின்னம்மைகே. மணிகண்டன்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிபோயர்வரிகண்ணனின் 108 பெயர் பட்டியல்இந்தியாசிதம்பரம் நடராசர் கோயில்வெந்து தணிந்தது காடுயாவரும் நலம்பஞ்சபூதத் தலங்கள்பழமொழி நானூறுநிர்மலா சீதாராமன்குற்றாலக் குறவஞ்சிதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிமனித மூளைஆசிரியர்பந்தலூர் வட்டம்சுபாஷ் சந்திர போஸ்ரோபோ சங்கர்கயிறுசூர்யா (நடிகர்)நோட்டா (இந்தியா)திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்கனிமொழி கருணாநிதிரோசுமேரிபிரீதி (யோகம்)கொன்றைமுப்பத்தாறு தத்துவங்கள்இடலை எண்ணெய்வியாழன் (கோள்)பாண்டவர்இயேசுவின் உயிர்த்தெழுதல்காதல் மன்னன் (திரைப்படம்)கிறித்தோபர் கொலம்பசுசிங்கம்தைப்பொங்கல்கிறிஸ்தவம்கொங்கு வேளாளர்முன்னின்பம்முதுமொழிக்காஞ்சி (நூல்)அளபெடைகண்டம்பல்லவர்வால்ட் டிஸ்னிகுரு🡆 More