பிளாக்பர்ன் ரோவர்ஸ் கால்பந்துக் கழகம்

பிளாக்பர்ன் ரோவர்ஸ் கால்பந்துக் கழகம் (Blackburn Rovers F.C.) என்பது இங்கிலாந்தின் பிளாக்பர்ன், லங்காஷைர், நகரில் அமைந்துள்ள தொழில்முறை கால்பந்துக் கழகமாகும்.

இக்கழகம் 1875-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2011-12-ஆம் பருவத்தில் பிரீமியர் லீக்கிலிருந்து தரக்குறைப்பு செய்யப்பட்ட பிறகு, இங்கிலாந்தின் இரண்டாம் நிலை கால்பந்துக் கூட்டிணைவுத் தொடரான "சாம்பியன்ஷிப்"பில் ஆடிவருகிறது.

பிளாக்பர்ன் ரோவர்ஸ்
முழுப்பெயர்பிளாக்பர்ன் ரோவர்ஸ் கால்பந்துக் கழகம்
அடைபெயர்(கள்)Rovers
The Blue and Whites
The Riversiders
தோற்றம்1875; 149 ஆண்டுகளுக்கு முன்னர் (1875)
ஆட்டக்களம்எவுட் பார்க், பிளாக்பர்ன்,
லங்காஷைர்
ஆட்டக்கள கொள்ளளவு31,367
உரிமையாளர்Venky's London Ltd. (99.9%)
DirectorMike Cheston
மேலாளர்ஓவன் காய்ல் (Owen Coyle)
கூட்டமைப்புFootball League Championship
2015–16 Football League Championshipசாம்பியன்ஷிப், 15-ஆம் இடம்
இணையதளம்கழக முகப்புப் பக்கம்
பிளாக்பர்ன் ரோவர்ஸ் கால்பந்துக் கழகம் Current season

1888-இல் இங்கிலாந்து கால்பந்துக் கூட்டிணைவுத் தொடர் தொடங்கப்பட்டபோது அதன் நிறுவன-உறுப்பினராகவிருந்தது; மேலும், இங்கிலாந்தின் கால்பந்துக் கூட்டிணைவு மற்றும் பிரீமியர் லீக் ஆகிய இரண்டிலும் நிறுவன-உறுப்பினராகவிருந்த மூன்று கால்பந்துக் கழகங்களுள் இதுவும் ஒன்றாகும்; மற்ற இரண்டு கழகங்கள் - அஸ்டன் வில்லா மற்றும் எவர்டன்.

பிளாக்பர்ன் நகரில் அமைந்திருக்கும் "எவுட் பார்க்" மைதானத்தில் 1890-ஆம் ஆண்டிலிருந்து தமது அமைவிடப் போட்டிகளை ஆடிவருகிறது. இக்கழகம் 3 கூட்டிணைவுத் தொடர் வாகைப் பட்டங்களையும் (இரண்டு முதல்நிலை கூட்டிணைவுத் தொடர் வாகையர் மற்றும் ஒரு பிரீமியர் லீக் வாகையர் பட்டம்), 6 எஃப் ஏ கோப்பைகளையும், 1 கால்பந்து கூட்டிணைவுக் கோப்பையையும் வென்றுள்ளது. மேலும், எஃப் ஏ கோப்பையை மூன்று முறை தொடர்ச்சியாக வென்ற ஒரே கால்பந்துக் கழகம் பிளாக்பர்ன் ரோவர்சே ஆகும்.

பிரீமியர் லீக் வாகைப் பட்டம் சூடிய ஆறு கால்பந்துக் கழகங்களுள் பிளாக்பர்ன் ரோவர்சும் ஒன்றாகும். மற்றையவை: மான்செஸ்டர் யுனைடெட் (13), செல்சீ (4), ஆர்சனல் (3), மான்செஸ்டர் சிட்டி (2) மற்றும் லெஸ்டர் சிட்டி (1).

உசாத்துணைகள்

வெளியிணைப்புகள்

Tags:

இங்கிலாந்துசங்கக் கால்பந்துபிரீமியர் லீக்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திவ்யா துரைசாமிநீக்ரோபுறநானூறுகாயத்ரி மந்திரம்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)மரகத நாணயம் (திரைப்படம்)ஆப்பிள்கண்ணதாசன்மாதம்பட்டி ரங்கராஜ்தேவயானி (நடிகை)கஜினி (திரைப்படம்)உடன்கட்டை ஏறல்மக்களவை (இந்தியா)தேர்தல்ரெட் (2002 திரைப்படம்)ஆர். சுதர்சனம்புலிஉத்தரப் பிரதேசம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021நாயன்மார்அன்புமணி ராமதாஸ்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்ஜோதிகாபழமொழி நானூறுமணிமேகலை (காப்பியம்)பி. காளியம்மாள்ரச்சித்தா மகாலட்சுமிஇளையராஜாதிருவண்ணாமலைஇலங்கை தேசிய காங்கிரஸ்தமன்னா பாட்டியாதிருவையாறுமுத்துராஜாபுவிதமிழ்பிள்ளைத்தமிழ்இயற்கை வளம்இன்று நேற்று நாளைசெயற்கை நுண்ணறிவுநம்பி அகப்பொருள்வேதாத்திரி மகரிசிபறவைசுரதாதேஜஸ்வி சூர்யாநெடுநல்வாடைம. கோ. இராமச்சந்திரன்கண்ணகிஇந்தியன் (1996 திரைப்படம்)காதலுக்கு மரியாதை (திரைப்படம்)தீரன் சின்னமலைபகவத் கீதையாழ்தமிழர் விளையாட்டுகள்குறிஞ்சி (திணை)இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)தண்டியலங்காரம்திருத்தணி முருகன் கோயில்தேவாங்குசத்திமுத்தப் புலவர்இந்தியாவட்டாட்சியர்அகத்திணைசே குவேராசிறுநீரகம்இந்திய தேசிய காங்கிரசுகோயம்புத்தூர்உயர் இரத்த அழுத்தம்எங்கேயும் காதல்கல்விஅணி இலக்கணம்ஐம்பெருங் காப்பியங்கள்மியா காலிஃபாதனுசு (சோதிடம்)வேதம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)ஜெயம் ரவிதேசிக விநாயகம் பிள்ளை🡆 More