பார்பரா இசுட்டான்விக்: அமெரிக்க நடிகை(1907–1990)

பார்பரா இசுட்டான்விக் (பிறப்பு ரூபி கேத்தரின் சிடீவன்சு (Barbara Stanwyck (born Ruby Catherine Stevens ஜூலை 16, 1907 - ஜனவரி 20, 1990) ஓர் அமெரிக்க நடிகை, வடிவழகி மற்றும் நடனக் கலைஞர் ஆவார்.

மேடை நடிகையான இவர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளிலும் நடிகராக இருந்துள்ளார். சிசில் பி. டெமில், ஃபிரிட்ஸ் லாங் மற்றும் ஃபிராங்க் காப்ரா உள்ளிட்ட இயக்குநர்களின் விருப்ப நடிகையான இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு முன்பாக 38 ஆண்டுகளில் 85 திரைப்படங்களைத் தயாரித்தார்.

பார்பரா இசுட்டான்விக்
Barbara Stanwyck
பார்பரா இசுட்டான்விக்: அமெரிக்க நடிகை(1907–1990)
1939 இல் இசுட்டான்விக்
பிறப்புரூபி காத்தரீன் சிடீவன்சு
(1907-07-16)சூலை 16, 1907
புரூக்ளின், நியூயார்க்கு நகரம், அமெரிக்கா.
இறப்புசனவரி 20, 1990(1990-01-20) (அகவை 82)
சாந்தா மொனிக்கா, அமெரிக்கா.
பணிநடிகை, மாதிரி, நடனமங்கை
செயற்பாட்டுக்
காலம்
1922–1986
வாழ்க்கைத்
துணை
பிராங்க் பே (நடிகர்), இராபர்ட் டெய்லர் (நடிகர்)
பிள்ளைகள்1

1923 ஆம் ஆண்டில் 16 வயதில் பின்னனிக் குரல் நடிகையாக ஸ்டான்விக் தனது நடிப்புத் வாழ்க்கையினைத் துவங்கினார். சில ஆண்டுகளில் நாடகங்களில் நடித்தார். பின்னர் இவர் பர்லெஸ்குவில் (1927) முன்னணி கதாப் பாத்திரத்தில் நடித்தார். பிராடுவே நாடக அரங்கில் குறிப்பிடத் தகுந்த நடிகராக ஆனார். அதன்பிறகு ஸ்டான்விக் திரைப்பட வாய்ப்பினைப் பெற்றார். ஃபிராங்க் காப்ரா தனது காதல் நாடகமான லேடீஸ் ஆஃப் லீஷர் (1930) க்கு இவரைத் தேர்ந்தெடுத்தபோது இவரின் வாழ்நாளில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது. மேலும் இதன்மூலம் பல திரைப்படங்களில் வாய்ப்பு கிடைப்பதற்கு காரணமாக அமைந்தது.

1937 ஆம் ஆண்டில் இவர் ஸ்டெல்லா டல்லாஸில் முக்கிய பெண் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதன் மூலம் சிறந்த நடிகைக்கான அகாதமி விருதுக்கான முதல் பரிந்துரையைப் பெற்றார். 1941 ஆம் ஆண்டில் இவர் கேரி கூப்பருடன் இணைந்து பால் ஆஃப் ஃபயர் மற்றும் ஹென்றி ஃபோண்டாவுடன் இணைந்து தெ லேடி ஈவ் ஆகிய இரண்டு நகைச்சுவைத் திரைப்படங்களில் நடித்தார். இந்த இரு திரைப்படங்களுமே வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இதில் பால் ஆஃப் ஃபயர் திரைப்படத்தில் நடித்ததற்காக இரண்டாவது முறையாக அகாதமி விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார். மேலும் 1941 ஆம் ஆண்டில் ஸ்டான்விக் உடன் இணைந்து மீண்டும் யூ பிலாங் டூ மீ எனும் திரைப்படத்தில் நடித்தார்.

ஆரம்பகால வாழ்க்கை

பார்பரா ஸ்டான்விக் ரூபி கேத்தரின் ஸ்டீவன்ஸ் ஜூலை 16, 1907 அன்று நியூயார்க்கின் புரூக்ளினில் பிறந்தார். இவர் ஆங்கிலம் மற்றும் ஸ்காட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். இவரது பெற்றோருக்கு இவர் ஐந்தாவது மற்றும் கடைசிக் குழந்தை ஆவார். இவரின் தாய் கேத்தரின் ஆன் (நீ மெக்பீ) (1870-1911) மற்றும் தந்தை பைரன் ஈ. ஸ்டீவன்ஸ் (1872-1954) ஆவர். இவரது தந்தை மாசசூசெட்ஸின் லேன்ஸ்வில்லேவைச் சேர்ந்தவர்.இவரது தாயார் சிட்னி, நோவா ஸ்கொட்டியாவிலிருந்து குடியேறியவர். ரூபி நான்கு வயதாக இருந்தபோது, குடிபோதையில் இருந்த ஒருவர் தற்செயலாக நகரும் மகிழுந்து தட்டிவிட்டதனால் இவரது தாய்க்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அதனால் அவரது தாய் இறந்தார். இறுதிச் சடங்கிற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவரது தந்தை பைரன் ஸ்டீவன்ஸ், பனாமா கால்வாயைத் தோண்டி எடுக்கும் பணிக்குழுவில் சேர்ந்தார்.அதன் பிறகு இவரைக் காணவில்லை. இவருக்கு மால்கம் பைரன் (பின்னர் "பை" என்று அழைக்கப்பட்டனர்) ஸ்டீவன்ஸ் எனும் மூத்த சகோதரரும், லாரா மில்ட்ரெட் (பின்னர் மில்ட்ரெட் ஸ்மித்) (1886-1931) எனும் மூத்த சகோதரியும் இருந்தனர். இவர் 45 ஆம் வயதில் மாரடைப்பால் இறந்தார்.

சான்றுகள்

புற இணைப்புகள்

Tags:

பிராங்க் காப்ராபிரிட்ஸ் லாங்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஔவையார்திருநாவுக்கரசு நாயனார்இன்ஸ்ட்டாகிராம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழச்சி தங்கப்பாண்டியன்ஏலாதிஷங்கர் (திரைப்பட இயக்குநர்)வணிகம்அருந்ததியர்மதராசபட்டினம் (திரைப்படம்)முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்திருவள்ளுவர் ஆண்டுகண்ணனின் 108 பெயர் பட்டியல்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)செம்மொழிசினைப்பை நோய்க்குறிகாடுவெட்டி குருநற்றிணைமோகன்தாசு கரம்சந்த் காந்திதமிழ்நாடு அமைச்சரவைமெய்ப்பொருள் நாயனார்தமிழ்ப் புத்தாண்டுபுவிதாயுமானவர்அரவான்தமிழ்நாட்டின் அடையாளங்கள்தினகரன் (இந்தியா)வெள்ளியங்கிரி மலைஆண்டு வட்டம் அட்டவணைமண் பானைஆனந்தம் (திரைப்படம்)இந்தியாவின் பசுமைப் புரட்சிகினோவாநாயன்மார்ஔவையார் (சங்ககாலப் புலவர்)பதினெண்மேற்கணக்குமுத்துலட்சுமி ரெட்டிதீரன் சின்னமலைவிளையாட்டுசித்திரைத் திருவிழாபெண்பாண்டியர்பாசிப் பயறுதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370சுற்றுச்சூழல் மாசுபாடுமருதமலை முருகன் கோயில்அனுமன்போக்கிரி (திரைப்படம்)செண்டிமீட்டர்கிருட்டிணன்தொழிலாளர் தினம்தடம் (திரைப்படம்)சூரரைப் போற்று (திரைப்படம்)புலிஅன்புமணி ராமதாஸ்தமிழ் மாதங்கள்ஹரி (இயக்குநர்)இலங்கை தேசிய காங்கிரஸ்கம்பராமாயணம்புறாபால கங்காதர திலகர்அவுரி (தாவரம்)நான்மணிக்கடிகைஇந்தியத் தேர்தல் ஆணையம்புறப்பொருள்ஆய கலைகள் அறுபத்து நான்குகேழ்வரகுஇந்தியப் பிரதமர்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிமகேந்திரசிங் தோனிவாற்கோதுமைதிருப்பாவைவிராட் கோலிமாணிக்கவாசகர்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்நீக்ரோ🡆 More