அரட்டை இயலி பார்ட்

பார்ட் (Bard) என்பது பெரிய மொழி மாதிரிகளின் LaMDA குடும்பத்தின் அடிப்படையில் கூகுள் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு அரட்டை இயலி ஆகும்.

இது ஓபின்ஏஐ இன் சட் யிபிடியின் எழுச்சியின் பிரதிபலிப்பாக உருவாக்கப்பட்டது, மே 2023 இல் ஏனைய நாடுகளில் வெளியிடுவதற்கு முன், மார்ச் 2023 இல் வரையறுக்கப்பட்ட திறனில் வெளியிடப்பட்டது. கூகுள் 180 நாடுகளில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் மே 10இல் பார்டை வெளியிட்டது.

பின்னணி

நவம்பர் 2022 இல், ஓபின்ஏஐ ஆனது சட் யிபிடி ஐ அறிமுகப்படுத்தியது, இது பெரிய மொழி மாதிரிகளின் (LLM) யிபிடி-3 குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டது. சட் யிபிடி வெளியாகி உலகளாவிய கவனத்தைப் பெற்றது, இது பம்பல் இணைய உணர்வாக மாறியது. இதனால் கூகுள் தேடலுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதனால் கூகுள் நிர்வாகிகள் " சிவப்பு குறியீடு " எச்சரிக்கையை வெளியிட்டனர், நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) முயற்சிகளில் உதவ பல குழுக்களை மீண்டும் நியமித்தனர். இதற்கு முன்பு இல்லாத வகையில், 2019 ஆம் ஆண்டில் தாய் நிறுவனமான ஆல்பாபெற்றின் இணைத் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகிய கூகுள் இணை நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோர், சேட்யிபிடி போட்டி தொடர்பாக விவாதிக்க, நிறுவன நிர்வாகிகளுடன் அவசர சந்திப்புகளுக்கு அழைக்கப்பட்டனர். அந்த ஆண்டின் தொடக்கத்தில், நிறுவனம் எல்எல்எம் என்ற முன்மாதிரியான LaMDA ஐ வெளியிட்டது, ஆனால் அதை பொதுமக்களுக்கு வெளியிடவில்லை.

வரலாறு

அறிவிப்பு

பிப்ரவரி 6இல் கூகுள், பார்டை அறிவித்தது, இது LaMDA ஆல் இயக்கப்படும் செயற்கை நுண்ணறிவு அரட்டை இயலி. அந்த மாத இறுதியில் பரந்த அளவில் வெளியிடுவதற்கு முன்னதாக முதலில் 10,000 "நம்பகமான சோதனையாளர்கள்" கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவில் பரிசோதனை செய்வதற்காக வெளியிடப்பட்டது.இதன் முன்னணி மேற்பார்வையாளரான ஜாக் கிராவ்சிக், இது ஒரு சாதாரண வலை தேடு பொறியாக மட்டுமல்லாது "ஒருங்கிணைந்த செயற்கை நுண்ணறிவுச் சேவையாக" இருக்கும் என்று கூறினார், அதே நேரத்தில் பார்ட் கூகுள் தேடலில் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படும் என்பதை பிச்சை விவரித்தார். கூகுள் தேடலில் சேட் யிபிடி போன்ற அம்சங்களைச் சேர்ப்பது 2024 ஆம் ஆண்டிற்குள் அந்த நிறுவனத்திற்கு $6 பில்லியன் கூடுதல் செலவாகும் என்று ராய்ட்டர்ஸ் கணக்கிட்டது.அதே நேரத்தில் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான செமி அனாலிசிஸ் கூகுளுக்கு $3 பில்லியன் செலவாகும் என்று கணக்கிட்டது.

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

அரட்டை இயலி பார்ட் பின்னணிஅரட்டை இயலி பார்ட் வரலாறுஅரட்டை இயலி பார்ட் சான்றுகள்அரட்டை இயலி பார்ட் வெளி இணைப்புகள்அரட்டை இயலி பார்ட்அரட்டை இயலி (மென்பொருள்)ஓபின்ஏஐகூகுள்சட் யிபிடி

🔥 Trending searches on Wiki தமிழ்:

போயர்பீனிக்ஸ் (பறவை)கருக்கலைப்புவியாழன் (கோள்)திராவிட முன்னேற்றக் கழகம்அங்குலம்பெண்வளைகாப்புபதினெண்மேற்கணக்குகாளை (திரைப்படம்)முத்தரையர்கரணம்மத கஜ ராஜாபனைவினைச்சொல்போக்குவரத்துதமிழ்ஒளிநயினார் நாகேந்திரன்தமிழ் எண்கள்தொல்லியல்மதுரை நாயக்கர்கரிசலாங்கண்ணிகுணங்குடி மஸ்தான் சாகிபுநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்திரிகடுகம்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)புதுக்கவிதைஅரச மரம்சாகித்திய அகாதமி விருதுமாத்திரை (தமிழ் இலக்கணம்)ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்நக்கீரர், சங்கப்புலவர்நாயன்மார் பட்டியல்மார்க்கோனிஐந்திணைகளும் உரிப்பொருளும்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019திராவிட இயக்கம்அக்கிநற்கருணைநான்மணிக்கடிகைபூப்புனித நீராட்டு விழாநஞ்சுக்கொடி தகர்வுதிரவ நைட்ரஜன்தற்கொலை முறைகள்பூரான்முடிசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)பெண்களின் உரிமைகள்புனித ஜார்ஜ் கோட்டைதேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்எலுமிச்சைஇரண்டாம் உலகப் போர்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)தினகரன் (இந்தியா)தண்டியலங்காரம்தமிழக மக்களவைத் தொகுதிகள்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்மனோன்மணீயம்செஞ்சிக் கோட்டைஆத்திசூடிஅட்சய திருதியையானையின் தமிழ்ப்பெயர்கள்நவதானியம்அண்ணாமலையார் கோயில்இனியவை நாற்பதுவிளம்பரம்ஆயுள் தண்டனைவிலங்குரஜினி முருகன்பிள்ளையார்பொருளாதாரம்ஏலகிரி மலைதிருச்சிராப்பள்ளிமாதம்பட்டி ரங்கராஜ்முடியரசன்பிரசாந்த்விருத்தாச்சலம்மங்கலதேவி கண்ணகி கோவில்🡆 More