நோட்ரே டேம் டி பாரிஸ்

நோட்ரே டேம் டி பாரிஸ் (Notre Dame de Paris அல்லது பாரிஸ் அன்னை) என்பது ஒரு கோதிக் பேராலயம்.

மேற்கு நோக்கிய வாயிலோடு கூடிய இப் பேராலயம் பிரான்சின் தலைநகரமான பாரிசில் உள்ளது. இதுவே பாரிஸ் உயர் மறைமாவட்டத்தின் முதன்மைப்பேராலயமும், பேராயரின் இல்லமும் ஆகும். நோட்ரே டேம் டி பாரிஸ் பிரெஞ்சு கோதிக் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டாகப் கருதப்படுகின்றது. இது பிரான்சின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞருள் ஒருவரான வயலே லெ டுச் என்பாரால் புதுப்பிக்கப்பட்டு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டது. நோட்ரே டேம் என்பது பிரெஞ்சு மொழியில் எம் அரசி என்னும் பொருள் கொண்டது, இவ்வழக்கு பொதுவாக தமிழ் மரபில் எம் அன்னை எனக்கொள்ளப்படுகின்றது. மிகப் பழைய கோதிக் பேராலயங்களுள் ஒன்றான இதன் கட்டுமான வேலைகள் கோதிக் காலம் முழுவதிலும் நடைபெற்றது.கி. பி. 1163 ஆம் ஆண்டில் இந்தக் கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

பாரிஸ் அன்னை மறைமாவட்ட முதன்மைப்பேராலயம்
நோட்ரே டேம் டி பாரிஸ்
ஆலயத்தின் தெற்கு முகப்பு
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்6 Parvis Notre-Dame, Place Jean-Paul II, 75004 Paris, France
புவியியல் ஆள்கூறுகள்48°51′11″N 2°20′59″E / 48.8530°N 2.3498°E / 48.8530; 2.3498
சமயம்கத்தோலிக்க திருச்சபை
வழிபாட்டு முறைஇலத்தீன் வழிபாட்டு முறை
மண்டலம்இல் ட பிரான்சு
மாநிலம்பிரான்சு
மாகாணம்பாரிஸ் உயர் மறைமாவட்டம்
நிலைமறைமாவட்ட முதன்மைப்பேராலயம்
செயற்பாட்டு நிலைநடப்பில் உள்ளது
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது1862
தலைமைAndré Vingt-Trois
இணையத்
தளம்
www.notredamedeparis.fr
Monument historique
Official name: Cathédrale Notre-Dame
Designated:1862
Reference No.PA00086250
Denomination:Église

இப்போதைய நிலைமை

பிரெஞ்சு நாட்டின் பழம் அரசர்களின் நினைவுச் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. சில சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. சுண்ணாம்புக் காரைகள் பெயர்ந்து தரையில் கிடக்கின்றன. 1793 இல் நடந்த பிரஞ்சு புரட்சியில் நடந்த வன்செயல்களாலும், இரண்டு உலகப் போர்களின் வன்முறையாலும், பராமரித்தல் குறைவினாலும் இந்தச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் வரலாற்றுச் சிறப்புக் கொண்ட இந்தப் பேராலாயத்தை ஆண்டுதோறும் 12 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பார்த்துச் செல்கிறார்கள். இதனை மீண்டும் சீர் செய்ய 114 மில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்றும் பணம் திரட்டும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்றும், ஐந்து ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்றும் இப்பேராலயத்தின் நிர்வாகப் பேராயர் கூறியிருக்கிறார். 1831 ஆம் ஆண்டில் பிரெஞ்சு அறிஞர் விக்டர் ஹியூகோ இந்த ஆலயத்தின் கட்டடட இடிபாடுகளைச் சுட்டிக்காட்டி தமது நூலில் எழுதியிருந்தார். அதன் பலனாக 1844 இல் புனரமைப்பு வேலைகள் நடந்தன.

உசாத்துணை

Tags:

கட்டுமானம்கோதிக் கட்டிடக்கலைபாரிஸ்பிரெஞ்சு மொழிபேராலயம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வல்லினம் மிகும் இடங்கள்கஞ்சாமட்பாண்டம்புறநானூறுசைவத் திருமுறைகள்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்தமிழ்நாடு அமைச்சரவைபிரித்விராஜ் சுகுமாரன்சுற்றுச்சூழல்அக்கி அம்மைகிருட்டிணன்ஐராவதேசுவரர் கோயில்தமிழ் இலக்கணம்பணவீக்கம்இந்திய தேசிய சின்னங்கள்சிவனின் 108 திருநாமங்கள்நிர்மலா சீதாராமன்காதல் மன்னன் (திரைப்படம்)மக்களாட்சிசிங்கப்பூர்புதுச்சேரிமலையாளம்கொல்லி மலைவி.ஐ.பி (திரைப்படம்)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்உ. வே. சாமிநாதையர்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்மொரோக்கோநாடாளுமன்ற உறுப்பினர்திருக்குறள்பதினெண் கீழ்க்கணக்குமனத்துயர் செபம்திருவிளையாடல் புராணம்கிராம ஊராட்சிஇந்திய ரூபாய்தமிழ்ஒளிஆண் தமிழ்ப் பெயர்கள்வேலூர் மக்களவைத் தொகுதிமஞ்சள் காமாலைதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்மதுராந்தகம் தொடருந்து நிலையம்ஐங்குறுநூறுமனித உரிமைதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்அண்ணாமலையார் கோயில்கொன்றை வேந்தன்பகத் சிங்கல்லீரல் இழைநார் வளர்ச்சிஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)தமிழ் இலக்கியம்பண்ணாரி மாரியம்மன் கோயில்சென்னை சூப்பர் கிங்ஸ்ஐக்கிய நாடுகள் அவைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்தமிழ்தமிழக மக்களவைத் தொகுதிகள்திரிகடுகம்பாசிசம்காற்று வெளியிடைவட சென்னை மக்களவைத் தொகுதிபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுகான்கோர்டுகரணம்விஜயநகரப் பேரரசுநற்கருணை ஆராதனைஎயிட்சுஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராபேரூராட்சிகுலுக்கல் பரிசுச் சீட்டுமறைமலை அடிகள்சுந்தர காண்டம்ஆதம் (இசுலாம்)மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்விருதுநகர் மக்களவைத் தொகுதிநெடுநல்வாடைமெய்யெழுத்துஅஜித் குமார்எனை நோக்கி பாயும் தோட்டா🡆 More