நிலை அலைவு

வானியலில், நிலை அலைவுகள் (libration) சுற்றிவரும் வான்பொருட்களுக்கிடையே ஒன்றிலிருந்து மற்றதைக் காணும்போது உணரப்படுகின்ற ஊசலாடும் நகர்வினைக் குறிக்கின்றது.

குறிப்பாக புவியிலிருந்து நிலவின் நகர்வு, அல்லது கோள்களிலிருந்து டிரோஜன் விண்கற்கள் போன்றவற்றைக் குறிக்க இக்கலைச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. நிலை அலைவு என்பது புவியிலிருந்து நிலவின் அளவில் ஏற்படும் சிறு மாற்றங்களைக் குறித்ததல்ல. இதுவும் அலையோட்டமாகக் காணப்பட்டாலும் இது புவிக்கும் நிலவுக்கும் உள்ள தொலைவின் வேறுபாட்டால், நீள்வட்டப்பாதையில் சுற்றுவதால், எழுவதாகும்.

2013க்கில் ஒவ்வொரு மணிக்குமான நிலவின் கலைகளும் அலைவும், இசையுடனும் தலைப்புக்களுடனும் கூடிய வரைகலையுடன்.
Over one lunar month more than half of the Moon's surface can be seen from the surface of the Earth.
நிலநேர்கோட்டிலும் நிலநிரைக்கோட்டிலும் நிலை அலைவுகளை காட்டும் ஒரு மாத கால நிலவை ஒப்புருவாக்கிய தோற்றம். மேலும் நிலவின் பல்வேறு கலைகளையும் புவியிலிருந்து வேறுபடும் தொலைவு காரணமாக ஏற்படும் காட்சியளவு வேறுபாடுகளையும் காட்டுகின்றது.
நிலை அலைவு
வின்கெல் டிரைபெல் வீழற்படத்தில் கண்ணுக்கு புலனாகும் நிலவுப் பரப்பின் கருதுகோள் வீச்சு

நிலவின் நிலை அலைவு

ஒத்தியங்கு சுழற்சியால் நிலவின் ஒரு அரைக்கோளமே புவியை நோக்கி உள்ளது. இதன்படி மனிதர்களால் 50% நிலவுப் பரப்பை மட்டுமே காணவியலும். 1960களில் நிலவுத் தேடல் திட்டங்களுக்குப் பின்னரே நிலவின் பின்பகுதியின் காட்சிகள் மனிதருக்குக் காணக் கிடைத்தன; இக்கூற்று பகுதியாகவே உண்மையாகும். ஏனெனில் காலவோட்டத்தில் நிலவின் நிலை அலைவுகளால் சற்றேக் கூடுதலாக 59% நிலவின் பரப்பைக் காண முடிந்துள்ளது.

புவியிலிருந்து பார்க்கும்போது நிலா முன்னும் பின்னும் செல்வது போன்ற அசைவாக நிலை அலைவைக் காணலாம். இதனால் சற்றே வெவ்வேறான அரைக்கோளப் பரப்புகளை வெவ்வேறு காலங்களில் காணலாம்.

மூன்று வகையான நிலவு அலைவுகள் உள்ளன:

  • நிலநிரைக்கோட்டில் அலைவு - இது புவியைச் சுற்றி நிலாச் செல்லும் சுற்றுப்பாதையின் வட்டவிலகலால்; நிலவின் சுற்றுதல் சுற்றுப்பாதை நிலையிலிருந்து சிலநேரங்களில் முன்னதாகவும் சில நேரங்களில் பிந்தியும் இருக்கின்றது.
  • நிலநேர்க்கோட்டில் அலைவு - இது புவியைச் சுற்றும் சுற்றுப்பாதையின் தளத்திற்கு செங்குத்தும் சுழலச்சும் சற்றே சாய்ந்திருப்பதால் ஏற்படுகின்றது. இது புவி சூரியனைச் சுற்றும்போது எவ்வாறு பருவகாலங்கள் ஏற்படுகின்றனவோ அவ்வாறானது.
  • பகலிரவு அலைவு என்பது புவியின் சுழற்சியால் ஒவ்வொரு நாளும் ஏற்படும் சிறு அலைவாகும்; காண்பவரை புவியையும் நிலவையும் இணைக்கின்ற நேர்கோட்டிற்கு முதலில் ஒருபுறமும் பின்னர் வேறு புறமும் கொண்டு செல்கின்றது. இதனால் புவியின் மையத்தில் இல்லாத காரணத்தால் காண்பவருக்கு முதலில் நிலவின் ஒருபக்கமும் பின்னர் மற்ற பக்கமும் காணக் கிடைக்கின்றது.

டிரோஜன் அலைவு

1772இல் ஜோசப் லூயி லாக்ராஞ்சியின் பகுப்பாய்வுகள் சிறு வான்பொருட்கள் நிலையாக ஓர் கோளுடன் அதன் சுற்றுவட்டப்பாதையைப் பகிர்ந்து கொள்ள முடியும் எனக் காட்டின. சுற்றுப்பாதையில் கோளுக்கு 60° முன்னும் பின்னும் உள்ள புள்ளிகள் லாக்ராஞ்சி புள்ளிகள் எனப்படுகின்றன; இந்தப் புள்ளிகளுக்கு அண்மித்து இயங்கும் வான்பொருட்கள் கோளின் சுற்றுப்பாதையிலேயே இயங்க முடியும். இத்தகைய டிராஜன் சிறுகோள்கள் புவி, வியாழன், செவ்வாய், மற்றும் நெப்டியூனின் சுற்றுப்பாதைகளில் இருப்பதாக வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். புவியின் டிரோஜன் சிறுகோள்களை, அவற்றின் அலைவுப்பாதைகள் பகல்நேர வானத்தில் அமைந்திருப்பதால், கட்புலனாகும் ஒளியில் காண்பது கடினமாகும். இருப்பினும் 2010இல் அகச்சிவப்புக் கதிர் அவதானிப்பு நுட்பங்களைப் பயன்படுத்தி சிறுகோள் 2010 TK7 புவியின் டிரோஜன் துணையாக கண்டறியப்பட்டுள்ளது; இது நிலைத்த சுற்றுப்பாதையில் முன்னால் செல்லும் லாக்ராஞ்சிப் புள்ளியில் அலைவுகளைக் கொண்டுள்ளது L4.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

நிலை அலைவு நிலவின் நிலை அலைவு டிரோஜன் அலைவுநிலை அலைவு மேற்சான்றுகள்நிலை அலைவு வெளி இணைப்புகள்நிலை அலைவுசுற்றுப்பாதைநிலாபுவிவானியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அரக்கோணம் மக்களவைத் தொகுதிதமிழர் பண்பாடுஇந்தியத் தேர்தல்கள்சிங்கப்பூர்தமிழக வெற்றிக் கழகம்மாதம்பட்டி ரங்கராஜ்அறுபது ஆண்டுகள்கலிங்கத்துப்பரணிதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019பூரான்அத்தி (தாவரம்)தங்கம் தென்னரசுவெள்ளி (கோள்)சிவகங்கை மக்களவைத் தொகுதிலொள்ளு சபா சேசுநெல்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிடி. எம். கிருஷ்ணாதென் சென்னை மக்களவைத் தொகுதிதேம்பாவணிஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிஅபினிஉவமையணிரமலான்சனீஸ்வரன்கண்ணாடி விரியன்மருதமலைமக்களாட்சிகோத்திரம்பழமொழி நானூறுதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிஅரிப்புத் தோலழற்சிவிஜயநகரப் பேரரசுநாயக்கர்அபிசேக் சர்மாசிந்துவெளி நாகரிகம்தென்காசி மக்களவைத் தொகுதிசவ்வாது மலைகுண்டூர் காரம்குருதிச்சோகைசாகித்திய அகாதமி விருதுஎட்டுத்தொகைநாடாளுமன்ற உறுப்பினர்சீமான் (அரசியல்வாதி)எம். ஆர். கே. பன்னீர்செல்வம்தமிழ் மன்னர்களின் பட்டியல்துரை வையாபுரிசிதம்பரம் மக்களவைத் தொகுதிபோக்கிரி (திரைப்படம்)சேரர்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்கடல்சப்தகன்னியர்மோகன்தாசு கரம்சந்த் காந்திஎஸ். ஜெகத்ரட்சகன்வயாகராஅறுபடைவீடுகள்அருங்காட்சியகம்பாசிசம்அறிவியல் தமிழ்சுலைமான் நபிமலையாளம்வேலூர் மக்களவைத் தொகுதிகாம சூத்திரம்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்ஸ்ரீலீலாவிசுவாமித்திரர்விளம்பரம்அம்மனின் பெயர்களின் பட்டியல்பஞ்சதந்திரம் (திரைப்படம்)ராதாரவிஆனந்தம் விளையாடும் வீடுநிணநீர்க்கணுசிவபெருமானின் பெயர் பட்டியல்தமிழர் விளையாட்டுகள்ஆய கலைகள் அறுபத்து நான்குமத்திய சென்னை மக்களவைத் தொகுதி🡆 More