தற்கால மொழிகள்

நவீன மொழி என்பது மனிதர் பேசும் மொழிகளில் தற்போது வழக்கில் இருக்கும் மொழியாகும்.

மொழி கற்றலில் பயன்படும் இச்சொல், மொழியின் சிறப்பினால் கற்கப்படும் அழிந்த மொழிகளான இலத்தீன்,

தமிழ் மொழி,சமசுகிருதம் ஆகிய மொழிகளில் இருந்து வழக்கில் இருக்கும் பிரெஞ்சு, செருமன் போன்ற மொழிகளை வேறுபடுத்திக் காட்டப் பயன்படுகிறது. 

உலகெங்கும் நவீன மொழிகள்

ஆசியா

சிங்கப்பூர்

சிங்கப்பூர் தவிர்த்த பிற ஆசிய நாடுகளில் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் நாட்டின் தேசிய மொழியைப் பயில்கின்றனர். ஆனால் சிங்கப்பூரில் ஆங்கிலம் முதன்மை மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் விருப்பப்படி மாண்டரின் சீனம், மலாய், தமிழ் மொழிகளில் ஒன்றைத் தாய்மொழிப் பாடமாக கற்பர். பிற நாட்டு மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன.

இந்தியா

இந்தியாவில் ஆங்கிலம் மக்களின் முதல்மொழியாய் இல்லாவிடிலும், அரசு அலுவல் மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தபடுவதால் ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. பெரும்பாலான மாணவர்கள் இந்தியையும் கற்பர். பிற இந்திய மாணவர்கள் தங்கள் மாநிலங்களில் விளங்கும் தாய்மொழிகளைக் கற்பர்.

மலேசியா

மலேசியாவில் தேசியமொழியாகிய மலாய் மொழி கட்டாயப் பாடமாகும். மலாய், ஆங்கிலத்துடன் தமிழ், மாண்டரின் ஆகிய மொழிகளும் தேசிய மாதிரிப் பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றன. தேசிய பள்ளிகளில் பாடங்கள் மலாய் மொழியில் கற்றுத் தரப்படுகின்றன. தேசிய மாதிரிப் பள்ளிகளில் பாடங்கள் அனைத்தும் தமிழிலும், சீனத்திலும் கற்பிக்கப்படுகின்றன. ஒருங்கிணைக்கப்பட்ட புதிய திட்டத்தின்படி, மலேசிய மாணவர்கள் இனவேறுபாடின்றி அனைவரும் மூன்று மொழிகளை பயிலலாம். இத்திட்டம் நடைமுறைபடுத்தப்படவில்லை.

இலங்கை

இலங்கை அரசுப் பள்ளிகளில் ஆட்சிமொழிகளான சிங்களத்திலும், தமிழிலும் பாடங்கள் கற்றுத் தப்படுகின்றன. இவ்வகையில் கற்கும் மாணவர்கள் இணைப்பு மொழியான ஆங்கிலத்தையும் கற்க வேண்டும். பாடங்களை ஆங்கில வழியிலும் கற்க முடியும். ஆங்கில வழியில் படிப்பவர்கள் தாய்மொழியாக சிங்களத்தையும், தமிழையும் கற்க வேண்டும். சிங்கள மாணவர்கள் தமிழையும், ஆங்கிலத்தையும் கற்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. .

பிற ஆசிய நாடுகள்

சீனா, யப்பான், பாக்கிஸ்த்தான், தென்கொரியா, தாய்வான் ஆகிய நாடுகளில் ஆங்கிலமே அதிகளவில் கற்கப்படும் மொழியாக இருக்கிறது. சீனாவில், மாணவர்கள் மூன்றாம் வகுப்பில் இருந்தே ஆங்கிலம் கற்கின்றனர். இருப்பினும் பெரும்பாலானவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவது இல்லை. நேபாளத்தில் நேபாளமொழி இலக்கியம் தவிர்த்து பிற பாடங்கள் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்படுகின்றன. பாகிஸ்த்தானில் ஆங்கிலம் ஆட்சிமொழியாகவும், சட்ட மொழியாகவும் இருப்பதால் அனைவரும் ஆங்கிலம் கற்கின்றனர். உருதும் மாகாண மொழிகளான பஞ்சாபி, சிந்தி, பலுச்சி, பாசுது ஆகிய மொழிகளில் ஒன்றும் கட்டாயம் கற்கப்பட வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது.

ஆப்பிரிக்கா

ஆப்பிரிக்கக் கண்டத்தில் கற்பிக்கப்படும் மொழிகள் நாட்டுக்கு நாடு வேறுபடும். அல்ஜீரியா, மொரோக்கோ, துனீசியா போன்ற நாடுகளில் அரபியும், பிரெஞ்சும் முதன்மையாகக் கற்கப்படும் மொழிகளாகும். எகிப்து , வளைகுடா நாடுகளில் (ஐக்கிய அரபு அமீரகம்) ஆங்கிலமே துணை மொழியாகும். ஈராக், பாலஸ்தீனம், சிரியா, யேமன் போன்ற நாடுகளில் அரபு மொழி மட்டுமே கற்பிக்கப்படுகிறது. செருமானிய மொழியும் அதிகம் கற்கப்படும் மொழிகளில் ஒன்றாகும்.

ஐரோப்பிய ஒன்றியம்

அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் மாணவர்கள் பள்ளிக்காலத்தில் வெளிநாட்டு மொழி ஒன்ற கற்க வேண்டும். ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், எசுப்பானியம் ஆகிய மொழிகள் அதிக மாணவர்களால் கற்கப்படும் மொழிகள்.

ஐக்கிய இராச்சியம்

ஐக்கிய ராச்சியத்தில் ஆங்கிலமும் வேல்சு மொழியும் கற்பிக்கப் படுகின்றன. மாணவர்கள் வெளிநாட்டு மொழி ஒன்றையும் பள்ளிக்காலத்தில் சில ஆண்டுகள் கற்க வேண்டும்.

ஐக்கிய அமெரிக்கா

ஐக்கிய அமெரிக்காவிற்கு ஆட்சிமொழி இல்லையெனினும் மணவர்கள் ஆங்கிலம் கற்கின்றனர். அமெரிக்காவில் அதிகம் கற்கப்பட்ட மொழிகள் எசுப்பானியம், பிரெஞ்சு ,இத்தாலி, யப்பானியம், சீனம், உருசிய மொழி, அரபி மொழிகள் ஆகும்.

Tags:

தற்கால மொழிகள் உலகெங்கும் நவீன மொழிகள்தற்கால மொழிகள் ஆசியாதற்கால மொழிகள் பிற ஆசிய நாடுகள்தற்கால மொழிகள் ஆப்பிரிக்காதற்கால மொழிகள் ஐரோப்பிய ஒன்றியம்தற்கால மொழிகள் ஐக்கிய இராச்சியம்தற்கால மொழிகள் ஐக்கிய அமெரிக்காதற்கால மொழிகள்இலத்தீன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திட்டக் குழு (இந்தியா)ரோசுமேரிசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)சித்தர்கள் பட்டியல்விளக்கெண்ணெய்இந்திரா காந்திஜி. யு. போப்நாடார்அறுசுவைதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்பிரேமம் (திரைப்படம்)கார்த்திக் (தமிழ் நடிகர்)சிதம்பரம் நடராசர் கோயில்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்மதீச பத்திரனதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்அடல் ஓய்வூதியத் திட்டம்முதல் மரியாதைபனைஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)மரபுச்சொற்கள்அம்பேத்கர்கூர்ம அவதாரம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)இந்திய மக்களவைத் தொகுதிகள்சுற்றுச்சூழல்ஆய்த எழுத்துகிராம சபைக் கூட்டம்கண்ணகிஜெயம் ரவிஇந்தியாவில் இட ஒதுக்கீடுவெள்ளியங்கிரி மலைரெட் (2002 திரைப்படம்)மாதேசுவரன் மலைபொது ஊழிதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019எட்டுத்தொகைஜன கண மனகேட்டை (பஞ்சாங்கம்)சுற்றுலாதிருநெல்வேலிதிருவரங்கக் கலம்பகம்தினமலர்தமிழ்த்தாய் வாழ்த்துமூகாம்பிகை கோயில்திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்தொல்காப்பியர்திரிகடுகம்நெல்கிழவனும் கடலும்ஈ. வெ. இராமசாமிநிணநீர்க்கணுசினைப்பை நோய்க்குறிவெண்பாகுஷி (திரைப்படம்)தைராய்டு சுரப்புக் குறைபெயரெச்சம்காம சூத்திரம்சூரியக் குடும்பம்வில்லிபாரதம்வேலைக்காரி (திரைப்படம்)புறப்பொருள்மூவேந்தர்அரவான்புதினம் (இலக்கியம்)திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்போயர்இந்தியத் தலைமை நீதிபதிமருதம் (திணை)தமிழ் விக்கிப்பீடியாராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்தொல். திருமாவளவன்ஜெ. ஜெயலலிதாபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்கணியன் பூங்குன்றனார்கம்பராமாயணம்பாண்டியர்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)🡆 More