தேசியமயமாக்கல்

நாட்டுடைமையாக்கல் அல்லது தேசியமயமாக்கல் (Nationalization) என்பது தனியாரின் உடைமைகளை அல்லது நிறுவனங்களைப் பல்வேறு காரணங்களுக்காக ஒரு நாட்டின் அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையாகும்.

பொதுவாக மக்களுக்கு இன்றியமையாத துறைகளை அரசு தன்வசப்படுத்தி அதன் மூலம் சீராக நிர்வகிக்கப்படுகிறது. தனியார்மயமாக்கல் என்பது இதற்கு எதிரான நடவடிக்கையாகும். பொருளாதாரக் காரணிகளுக்காகவே பெரும்பாலான நடவடிக்கைகள் அமைகின்றன. 2007-09 சர்வதேச நிதிநெருக்கடியின் போது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளால் இந்தியாவின் பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது.

இந்தியா

இந்தியாவில் வங்கிகள், நிறுவனங்கள் போன்றவை பல தேசியமயமாக்கப்பட்டுள்ளன.

  • 1949 இந்திய விடுதலைக்குப் பின் (1 ஜனவரியில்) இந்திய ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்டது.
  • 1953 வான் நிறுவனங்களின் சட்டம் 1953ன் படி ஏர் இந்தியா நிறுவனம் தேசியமயமாக்கப்பட்டது.
  • 1955 இந்திய இம்பீரியல் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகள் பாரத ஸ்டேட் வங்கி என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்டன.
  • 1969 மேலும் 14 இந்திய வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.
  • 1973 நிலக்கரி தொழிலும், எண்ணெய் நிறுவனங்களும் தேசியமயமாக்கப்பட்டன.
  • 1980 மேலும் ஆறு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன
  • 1972 106 காப்பீட்டு நிறுவனங்களை நான்காக தேசியமயமாக்கப்பட்டன.

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பாடுபட்ட சான்றோர்களின் நூல்கள் பொதுவுரிமை ஆக்கப்பட்டு, தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ் நூல்கள் நாட்டுடைமையாக்கம் செய்யப்படுகிறது.

இலங்கை

  • 1958 பேருந்து போக்குவரத்து தேசியமயமாக்கப்பட்டு, சிலோன் போக்குவரத்து வாரியம் உருவாக்கப்பட்டது. மேலும் கொழும்புத் துறைமுகமும் தேசியமயமாக்கப்பட்டது
  • 1961 பெட்ரோலிய நிறுவனங்கள், காப்பீட்டு நிருவனங்கள் மற்றும் சிலோன் வங்கி ஆகியவை இவ்வாண்டில் தேசியமயமாக்கப்பட்டன.
  • 1971 கிராஃபைட்டுச் சுரங்கங்கள் தேசிய மயமாக்கப்பட்டன
  • 1972 நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் படி தேயிலை, ரப்பர் தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டன.

மேற்கோள்கள்

Tags:

தேசியமயமாக்கல் இந்தியாதேசியமயமாக்கல் இலங்கைதேசியமயமாக்கல் மேற்கோள்கள்தேசியமயமாக்கல்இந்தியாவின் பொருளாதாரம்தனியார்மயமாக்கல்பொருளாதாரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அரசழிவு முதலாளித்துவம்பிலிருபின்கொங்கு நாடுதொலைக்காட்சிமுன்னின்பம்திதி, பஞ்சாங்கம்சுதேசி இயக்கம்பிளிப்கார்ட்இரா. பிரியா (அரசியலர்)சிறுதானியம்ஈ. வெ. இராமசாமிஆய்த எழுத்து (திரைப்படம்)நுரையீரல்நீர் மாசுபாடுஐஞ்சிறு காப்பியங்கள்குதிரைபகாசுரன்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்இசுலாமிய வரலாறுஆதம் (இசுலாம்)உத்தராகண்டம்மூதுரைகும்பம் (இராசி)மலைபடுகடாம்திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்பைரவர்திருக்கோயிலூர்தமிழ் ராக்கர்ஸ்இதயம்மருத்துவம்திருமழபாடி வைத்தியநாதர் கோயில்பகவத் கீதைகுப்தப் பேரரசுகுண்டலகேசிமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்ஐம்பெருங் காப்பியங்கள்பாண்டி கோயில்புற்றுநோய்வளைகாப்புரேஷ்மா பசுபுலேட்டிபாதரசம்தமிழ் இலக்கியம்எடுத்துக்காட்டு உவமையணிதமிழரசன்சங்கத்தமிழன்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்மனித எலும்புகளின் பட்டியல்விண்ணைத்தாண்டி வருவாயாநாடார்இன்று நேற்று நாளைகர்நாடகப் போர்கள்நெல்தமிழ் மன்னர்களின் பட்டியல்ஐக்கிய நாடுகள் அவைஇராமாயணம்இதழ்தலைவி (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்தாஜ் மகால்கர்மாசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்பிள்ளைத்தமிழ்மார்பகப் புற்றுநோய்சூல்பை நீர்க்கட்டிதமிழ் எழுத்து முறைதமிழ் நீதி நூல்கள்பாண்டவர்வினைச்சொல்குருத்து ஞாயிறுஇந்தியாவில் இட ஒதுக்கீடுசங்க காலம்சங்கர் குருதமிழ்நாடு காவல்துறைதிருவள்ளுவர்பிச்சைக்காரன் (திரைப்படம்)ஹபிள் விண்வெளித் தொலைநோக்கிதொண்டைக் கட்டு🡆 More