திருவையாறு

திருவையாறு (Thiruvaiyaru), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.

திருவையாறு
—  பேரூராட்சி  —
திருவையாறு
வரைபடம்:திருவையாறு, இந்தியா
திருவையாறு
திருவையாறு
திருவையாறு
திருவையாறு
இருப்பிடம்: திருவையாறு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°53′N 79°06′E / 10.88°N 79.1°E / 10.88; 79.1
நாடு திருவையாறு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் திருவையாறு
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், இ. ஆ. ப
பெருந்தலைவர்
சட்டமன்றத் தொகுதி திருவையாறு
சட்டமன்ற உறுப்பினர்

துரை சந்திரசேகரன் (திமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

16,164

2,912/km2 (7,542/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

5.55 சதுர கிலோமீட்டர்கள் (2.14 sq mi)

38 மீட்டர்கள் (125 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/thiruvaiyaru

அமைவிடம்

திருவையாறு பேரூராட்சியிலிருந்து கும்பகோணம் 33 கிமீ; தஞ்சாவூர் 13.5 கிமீ; அரியலூர் 30 கிமீ; திருச்சி 50 கிமீ., தொலைவிலும் உள்ளது.

புவியியல்

திருவையாறு தஞ்சாவூருக்கு வடக்கே இருந்து 11 km (6.8 mi) காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

திருவையாறு 10°53′N 79°06′E / 10.88°N 79.1°E / 10.88; 79.1 இல் அமைந்துள்ளது. இது சராசரியாக 38 மீட்டர்கள் (124 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

5.55 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)க்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,199 வீடுகளையும், 16,164 மக்கள்தொகையும் கொண்டது.

வரலாறு

பெயர்க் காரணம்

திரு+ஐந்து+ஆறு காவிரி, மற்றும் காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது.

ஐயாறப்பர் கோயில்

இங்குள்ள ஐயாறப்பர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும்.. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சேக்கிழார் அருளிய பெரியபுராணத்தின்படி அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலம் இதுவாகும்.

தியாகராஜ ஆராதனை விழா

கருநாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பதித்தவரான தியாகராஜ சுவாமிகள் நினைவாக, அவர் வாழ்ந்த ஊரான திருவையாற்றில், ஆண்டுதோறும் சனவரி மாதத்தில் தியாகராஜரின் சமாதியின் அருகில், தியாகராஜ ஆராதனை விழா என்ற இசை நிகழ்ச்சி ஐந்து நாள்கள் நடைபெற்று வருகிறது. இதனை ஒரு தனித்துமான இசைப் பெருவிழாவாக கருநாடக இசையுலகத்தினர் கருதுகிறார்கள். இதேபோல் சென்னையிலும் சென்னையில் திருவையாறு என்ற தலைப்பில் திருவையாற்றை முன்மாதிரியாகக் கொண்டு சென்னையில் ஆண்டுதோறும் இசை விழா நடைபெற்று வருகின்றது.

திருவையாறு சப்தஸ்தானம்

சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் பிற சப்தஸ்தான பல்லக்குகள் அவரவர் தலங்களுக்குத் திரும்பும். இவ்வாறான திருவிழா கும்பகோணம், கரந்தட்டாங்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற இடங்களில் நடைபெறுகிறது.

திருநல்லூர், திருநீலக்குடி, திருக்கஞ்சனூர் ஆகிய இடங்களிலும் இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது.

கல்லூரிகள்

  • அரசு கலை அறிவியல் கல்லூரி
  • அரசு இசைக் கல்லூரி

பள்ளிகள்

  • அமல்ராஜ் மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளி
  • சீனிவாசராவ் மேல்நிலைப் பள்ளி
  • தூய வளனார் உயர்நிலைப்பள்ளி
  • அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
  • சரஸ்வதி அம்மாள் நடுநிலைப் பள்ளி
  • இமாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

Tags:

திருவையாறு அமைவிடம்திருவையாறு புவியியல்திருவையாறு பேரூராட்சியின் அமைப்புதிருவையாறு மக்கள் தொகை பரம்பல்திருவையாறு வரலாறுதிருவையாறு ஐயாறப்பர் கோயில்திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாதிருவையாறு சப்தஸ்தானம்திருவையாறு கல்லூரிகள்திருவையாறு பள்ளிகள்திருவையாறு மேற்கோள்கள்திருவையாறு வெளி இணைப்புக்கள்திருவையாறுஇந்தியாஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதிருவையாறு வட்டம்பேரூராட்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கள்ளழகர் கோயில், மதுரைகுறவஞ்சிகலிங்கத்துப்பரணிஐம்பூதங்கள்மயில்விந்துவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிதிரைப்படம்விசயகாந்துசனீஸ்வரன்நிதிச் சேவைகள்மாசாணியம்மன் கோயில்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)பிள்ளையார்சோழர்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பெயர்ச்சொல்நல்லெண்ணெய்ஆத்திசூடிபுங்கைஅஜித் குமார்அம்பேத்கர்வினைச்சொல்இடமகல் கருப்பை அகப்படலம்திட்டம் இரண்டுவிநாயகர் அகவல்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021பாரிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்புதுக்கவிதைகம்பராமாயணத்தின் அமைப்புர. பிரக்ஞானந்தாதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்சின்னம்மைசிறுபாணாற்றுப்படைதேனீதிருப்பதிமாரியம்மன்வில்லிபாரதம்சுற்றுலாதைப்பொங்கல்காரைக்கால் அம்மையார்திருவருட்பாபெரியாழ்வார்பஞ்சாங்கம்வேர்க்குருவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்முகம்மது நபிஜவகர்லால் நேருவல்லினம் மிகும் இடங்கள்அனுமன்முதற் பக்கம்விளையாட்டுசின்ன வீடுவானிலைஇரசினிகாந்துதிராவிடர்பஞ்சபூதத் தலங்கள்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்வாகைத் திணைசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்வெந்து தணிந்தது காடுபாரதிய ஜனதா கட்சிஅரச மரம்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்நாயக்கர்கா. ந. அண்ணாதுரைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)நம்பி அகப்பொருள்காவிரி ஆறுகிராம சபைக் கூட்டம்பக்தி இலக்கியம்மூலம் (நோய்)மு. வரதராசன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்🡆 More