தாமஸ் ஹார்டி

தாமஸ் ஹார்டி.

(Thomas Hardy, ஜூன் 2, 1840ஜனவரி 11, 1928) ஒரு ஐக்கிய இராச்சியப் புதின எழுத்தாளர் மற்றும் கவிஞர். ஆங்கில புதின இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர்.

இங்கிலாந்திலுள்ள டார்செஸ்டர் எனும் நகரில் 02-06-1840 ஆம் ஆண்டு பிறந்த இவர் பள்ளிப்படிப்பு மட்டுமே படித்தார். ஜான்ஹிக்சு எனும் கட்டிடக்கலை அறிஞரிடம் ஆறு வருடங்கள் பணியாற்றினார். கட்டிடக் கலையைக் கற்றுக் கொள்ளும் போதே இலத்தீன், பிரெஞ்ச் மற்றும் ஆங்கில இலக்கியங்களைப் படித்து அவர் அறிவை வளர்த்துக் கொண்டார். 1865 ஆம் ஆண்டில் கவிதை எழுதத் தொடங்கிய இவர் முதன் முதலாக “த புவர்மேன் அண்ட் த லேடி” எனும் நாவலை எழுதி பதிப்பகத்திற்கு அனுப்பினார். அந்த நாவல் பிரசுரிக்க ஏற்றதல்ல என்று திருப்பி அனுப்பப்பட்டது. அதன் பிறகு 1871 ஆம் ஆண்டில் “டெஸ்பரேட் ரெமிடீஸ்” எனும் நாவலை எழுதி சொந்தமாக பதிப்பித்து வெளியிட்டார். இதைத் தொடர்ந்து புத்தகங்கள் எழுதும் பணியில் முழுமையாக ஈடுபட்டார்.

“த உட்லாண்டர்ஸ்”, “ஏ சேஞ்சிடுமேன்”, “ஃபார் ஃபிரம் த மாட்னிங் கிரௌட்”, “டேஸ் ஆஃப் த அம்பர்வில்லி”, “த டைனாஸ்ட்”, “ஏ பேர் ஆஃப் புளூ ஐஸ்”, “மொமண்ட்ஸ் ஆஃப் விஷன்” எனும் நாவல்கள் மிகவும் புகழ்பெற்றவை. இவருக்கு பல்வேறு பல்கலைக்கழகங்கள் சிறப்புப் பட்டங்களை அளித்துள்ளது. 1910 ஆம் ஆண்டு “ஆர்டர் ஆஃப் மெரிட்” பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார். இவர் 11-01-1928 ஆம் நாள் மரணமடைந்தார்.

Tags:

18401928ஐக்கிய இராச்சியம்ஜனவரி 11ஜூன் 2

🔥 Trending searches on Wiki தமிழ்:

தரணிபகவத் கீதைகட்டுவிரியன்காற்றுவைதேகி காத்திருந்தாள்ஜோதிகாதீரன் சின்னமலைகருக்காலம்சேரன் (திரைப்பட இயக்குநர்)அகத்தியர்புதுமைப்பித்தன்தனிப்பாடல் திரட்டுஇயற்கைமூவேந்தர்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்அயோத்தி இராமர் கோயில்புனித யோசேப்புபுலிதலைவி (திரைப்படம்)வணிகம்சச்சின் டெண்டுல்கர்கொடைக்கானல்விசாகம் (பஞ்சாங்கம்)சயாம் மரண இரயில்பாதைமுன்னின்பம்கரணம்தேஜஸ்வி சூர்யாசடுகுடுராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370தண்டியலங்காரம்சிறுத்தைசிறுபாணாற்றுப்படைநீர் மாசுபாடுஆல்சீவக சிந்தாமணிஅஸ்ஸலாமு அலைக்கும்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்மதராசபட்டினம் (திரைப்படம்)தமிழர்அக்கினி நட்சத்திரம்முல்லைக்கலிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)திருவண்ணாமலைகரிகால் சோழன்கல்விவிருமாண்டிஇசைபகத் பாசில்ஜோக்கர்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)காதல் தேசம்புற்றுநோய்மணிமேகலை (காப்பியம்)சேமிப்புமொழிதேசிக விநாயகம் பிள்ளைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)ஆளுமைமு. வரதராசன்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்விஜய் வர்மாசிறுதானியம்பஞ்சபூதத் தலங்கள்மீனா (நடிகை)தஞ்சைப் பெருவுடையார் கோயில்திருக்குர்ஆன்கண் (உடல் உறுப்பு)தமிழச்சி தங்கப்பாண்டியன்தமிழ்விடு தூதுகங்கைகொண்ட சோழபுரம்ஜெயகாந்தன்பதினெண்மேற்கணக்குதமன்னா பாட்டியாஆயுள் தண்டனைஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்தமிழ்நாடு அமைச்சரவை🡆 More