ஜேம்சு தீவார்

சர் ஜேம்சு தீவார் {Sir James Dewar) (20 செப்டம்பர் 1842 – 27 மார்ச் 1923) என்பவர் ஒரு இசுகாட்லாந்து வேதியியலாளர் மற்றும் இயற்பியலறிஞர் ஆவார்.

இவர் வெப்பப்படுத்துவதற்கான வெப்பக்குடுைவயை கண்டுபிடித்தமைக்காக பெயர் பெற்றவர் ஆவார். இந்தக் கண்டுபிடிப்பு வாயுக்களை திரவமாக்கும் ஆய்வோடு தொடர்புைடயது. இவர் அணு மற்றும் மூலக்கூறு நிறமாலையியல் சார்ந்த ஆய்வுகளிலும் ஈடுபட்டார். இந்தக் களங்களில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பணிபுரிந்திருக்கிறார்.

சர் ஜேம்சு தீவார்
ஜேம்சு தீவார்
சர் ஜேம்ஸ் தீவார் எஃப் ஆர் எஸ்
பிறப்பு(1842-09-20)20 செப்டம்பர் 1842
கிண்கார்டின், இசுக்கொட்லாந்து
இறப்பு27 மார்ச்சு 1923(1923-03-27) (அகவை 80)
இலண்டன், இங்கிலாந்து
தேசியம்ஐக்கிய இராச்சியம்
துறைஇயற்பியல்
வேதியியல்
பணியிடங்கள்இராயல் நிறுவனம்
பீட்டர்ஹவுஸ், கேம்பிரிச்சு
கல்வி கற்ற இடங்கள்எடின்பரோ பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்லியோன் ப்ளேபேர், முதலாம் பாரோன் ப்ளேபேர்
அறியப்படுவதுதிரவ ஆக்சிசன்
திரவ ஐதரசன்
விருதுகள்ஆட்கின்சு தங்கப்பதக்கம், (சிமித்சோனிய நிறுவனம்)
இலவாய்சியர் பதக்கம், பிரெஞ்சு அறிவியல் கழகம்)
ஆல்பர்ட் பதக்கம்,(கலைக்கான இராயல் சங்கம்)
ரம்போர்ட் பதக்கம் (1894)
ப்ராங்க்ளின் பதக்கம் (1919)

தொடக்க கால வாழ்க்கை

ஜேம்ஸ் தீவார் 1842 ஆம் ஆண்டு பெர்த்சைரில் உள்ள கிண்கார்டின் என்ற இடத்தில் ஆன் தீவார் மற்றும் தாமஸ் தீவார் ஆகியோருக்குப் பிறந்த ஆறு மகன்களில் இளையவராகப் பிறந்தார். அவர் கிண்கார்டின் பாரிஸ் பள்ளியிலும் பின்ன டாலர் அகாதெமியிலும் கல்வி பயின்றார். இவர் 15 வயதாக இருக்கும் போது இவரது பெற்றோர்கள் இறந்தனர். இவர் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் வேதியியலை லியோன் பிளேபேரின் கீழ் பயின்றார். பின்னர் இவர் பிளேபேரின் நேர்முக உதவியாளராக ஆனார். தீவார் கென்ட் பல்கலைக்கழகத்தில் பிரெடரிக் அகஸ்ட் கெகுலேயின் கீழும் பயின்றுள்ளார்.

தொழில் வாழ்க்கை

1875 ஆம் ஆண்டு, தீவார் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் இயற்கை பரிசோதனையியல் தத்துவப் பிரிவில் ஜேக்சோனியன் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் இராயல் சங்கத்தின் உறுப்பினரானார். 1877 ஆம் ஆண்டில், முனைவர் ஜான் ஆல் கிளாட்ஸ்டோன் என்பவருக்குப் பதிலாக வேதியியல் துறையின் பேராசிரியராக ஆனார். 1897 ஆம் ஆண்டில் வேதியியல் சங்கத்தின் தலைவராகவும், 1902 ஆம் ஆண்டில் அறிவியல் மேம்பாட்டிற்கான பிரித்தானிய சங்கத்தின் தலைவராகவும் ஆனார். இத்தோடு கூடவே, இவர் இலண்டனின் நீர் பகிர்மானத்தைக் கண்காணிப்பதற்கான இராயல் ஆணையத்திற்கும், 1893 முதல் 1894 வரை வெடிபொருள்களுக்கான குழுவிற்கும் தலைவராக பணிபுரிந்தார்.வெடிபொருள்களுக்கான குழுவில் இருந்த போது இவரும் சர் பிரெடெரிக் அகஸ்டஸ் அபெல்லும் சேர்ந்து கார்டைட் என்ற புகையில்லா வெடிமருந்து மாற்று ஒன்றை உருாக்கினர்.

1867 ஆம் ஆண்டில தீவார் பென்சீனிற்கு பல்வேறு வேதி வாய்ப்பாடுகளைக் குறிப்பிட்டார். அத்தகைய வாய்ப்பாடுகளில் ஒன்று பென்சீனை சரியாகக் குறிப்பிடாத ஒன்று இன்று வரை சில நேரங்களில் தீவார் பென்சீன என அழைக்கப்படுகிறது. 1869 ஆம் ஆண்டில் இவர் எடின்பர்க் இராயல் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை முன்மொழிந்தவர் இவரது வழிகாட்டியான லியோன் ப்ளேபேர் ஆவார்.

இவரது அறிவியல் பணிகள் ஒரு பெரிய எல்லையைக் கொண்டதாகும். – இவரது தொடக்க கால ஆராய்ச்சிகள் கரிம வேதியியல், நீரியம் மற்றும் அதன் இயற்பியல் மாறிலிகள், உயர்-வெப்பநிலை ஆய்வு, சூரியன் மற்றும் ஒரு மின் பொறியின் வெப்பநிலை, நிறப்பிரிகை சார்ந்த ஒளி அளவீடு, ஒரு மின் பொறியின் வேதியியல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

தீவார் தனிச்சுழி வெப்பநிலையை நோக்கிய நகர்வின் போது நிலையான வாயுக்களை திரவமாக்கும் ஆய்வு தொடர்பான ஆய்விற்காக நன்கறியப்பட்டவர் ஆவார். இயற்பியல் மற்றும் வேதியியல் தொடர்பான அவரது நாட்டமானது 1874 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது எனக் கூறலாம். பிரித்தானிய சங்கத்தின் முன்னர் திரவ வாயுக்களின் உள்ளுறை வெப்பம் தொடர்பாக உரையாற்றியதிலிருந்து இது தொடங்கியது. 1878 இல், லூயி பால் கையேட்டே மற்றும் ரவுல் பிக்டே ஆகியோரின் அப்போதைய சமீபத்திய பணி தொடர்பாக இராயல் நிறுவனத்தில் ஒரு வெள்ளிக்கிழமை மாலை உரையாற்றினார்.

மேற்கோள்கள்

Tags:

இயற்பியலறிஞர்நிறமாலையியல்வெப்பக்குடுவைவேதியியலாளர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கார்த்திக் (தமிழ் நடிகர்)சன்ரைசர்ஸ் ஐதராபாத்முகலாயப் பேரரசுகாம சூத்திரம்திருப்பூர் குமரன்பாலை (திணை)ஆறுமுக நாவலர்உடுமலை நாராயணகவிகள்ளர் (இனக் குழுமம்)கார்லசு புச்திமோன்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019எட்டுத்தொகை தொகுப்புவே. செந்தில்பாலாஜிதசாவதாரம் (இந்து சமயம்)இடிமழைசப்ஜா விதைகுகேஷ்புதுக்கவிதைவேளாண்மைஞானபீட விருதுதாயுமானவர்குமரகுருபரர்வ. உ. சிதம்பரம்பிள்ளைகற்றாழைகாரைக்கால் அம்மையார்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்சீவக சிந்தாமணிஅடல் ஓய்வூதியத் திட்டம்அத்தி (தாவரம்)மனித மூளைஅஸ்ஸலாமு அலைக்கும்நவதானியம்பெண்களுக்கு எதிரான வன்முறைவெண்குருதியணுயாதவர்செண்டிமீட்டர்எட்டுத்தொகைபெரியபுராணம்ஆங்கிலம்முல்லைக்கலிதிருநாவுக்கரசு நாயனார்அளபெடைஏலாதிவௌவால்நாளந்தா பல்கலைக்கழகம்பெண்களின் உரிமைகள்பீப்பாய்மண்ணீரல்சடுகுடுசங்கம் (முச்சங்கம்)புதினம் (இலக்கியம்)தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புதிணைவேதாத்திரி மகரிசிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்நிலாஅக்பர்கௌதம புத்தர்ஆதிமந்திசிதம்பரம் நடராசர் கோயில்பாம்புமருதநாயகம்வெண்பாபட்டினப் பாலைதொல்காப்பியம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்சங்க இலக்கியம்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்தொழிலாளர் தினம்கருக்காலம்திருநெல்வேலிதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005கருத்தடை உறைதாய்ப்பாலூட்டல்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)திருமங்கையாழ்வார்சுந்தரமூர்த்தி நாயனார்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)🡆 More