செவ்வியல் பழக்கமுறுத்தல்

செவ்வியல் பழக்கமுறுத்தல் (Classical conditioning also respondent conditioning and Pavlovian conditioning) என்பது பழக்கத்தினால் ஏற்படும் செயல் ஆகும்.

இதில் உயிரியல் ரீதியாக உடலியல் தூண்டுதலானது (எ.கா. உணவு) பொதுவான தூண்டலுடன் (எ.கா. மணி ஒலி) இணைக்கப்படுகிறது. இதில் பொதுவான தூண்டுதலினால் உடலியல் தூண்டுதல் (எ.கா. உமிழ்நீர் சுரத்தல்) ஏற்படுகிறது.

உருசிய உடலியங்கியல் நிபுணரான இவான் பாவ்லோவ், நாய்களிடம் நடத்திய விரிவான பரிசோதனைகள் மூலம் செவ்வியல் பழக்கமுறுத்தல் பற்றி ஆய்வு செய்தார். பின்னர் 1897 இல் தன் ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். செரிமானம் பற்றிய ஆய்வில், நாய்களின் வாயிலிருந்து வெளிப்படும் உமிழ்நீரை அளக்கும் ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். வாயில் உணவு இருக்கும்பொழுது உமிழ்நீர் வருவது இயற்கை. அனால் உணவைப் பார்க்கும்பொழுதே நாயின் வாயில் உயிழ் நீர் வருவதைப் பால்லோவ் கவனித்தார். அதுமட்டுமல்ல, உணவு கொண்டுவரப்படும் பத்திரத்தைப் பார்த்தாலும், அல்லது உணவு கொடுக்கும் வேலையாளைப் பார்த்தாலும், அல்லது அவன் காலடி ஓசையைக் கேட்டாலும் உமிழ்நீர் நாயின் வாயில் ஊறியது. இது பழக்கத்தினால் ஏற்பட்ட செயல் என்பது நிச்சயம்.

பால்லோவ் இதன் தத்துவத்தை ஆராய்வதில் ஈடுபட்டார். ஒரு மணியை அடித்ததும் நாய்க்கு உணவு அளிக்கப்பட்டது. இவ்விதம் பழகிய பின் ஒருநாள் மணியடித்துச் சிறிது நேரம் பொறுத்து உணவு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விதம் சில நாள் சென்றபின், மணியடித்ததும் உணவு கொண்டு வராமலிருந்தாலும் நாயின் வாயில் உமிழ்நீர் ஊறியது. இதன் முடிவில் அறிந்தோ அறியாமலோ இவ்வித செவ்வியல் பழக்குதல்கள் விலங்குகள், மனிதர்கள் வாழ்வில் இடம் பெற்று பாதக்கப்பட்டவர்களின் நடத்தையில் பலவீத மாறுதல்களை உண்டுபண்ணுகிறது என்பது கண்டறியப்பட்டது.

செயல்முறைப் பழக்கமுறுத்தலுடன் சேர்ந்து, செவ்வியல் பழக்கமுறுத்தல் நடத்தையியலின் அடித்தளமாக மாறியது. இது 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய உளவியல் துறையாகும். மேலும் உளச்சிகிச்சையின் நடைமுறையிலும் விலங்குகளின் நடத்தை பற்றிய ஆய்விலும் இன்னும் இது முக்கிய செல்வாக்கு செலுத்துவதாக உள்ளது. செவ்வியல் பழக்கமுறுத்தல் என்பது மனநல மருந்துகளுக்கு உடலின் எதிர்வினை, பசியைக் கட்டுப்படுத்துதல், கற்றல், நினைவாற்றலின் நரம்பியல் அடிப்படையிலான ஆய்வு போன்ற விசயங்களில் செல்வாக்கு செலுத்துகிறது.

குறிப்புகள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

நுரையீரல்செவ்வாய் (கோள்)செப்புகண்ணாடி விரியன்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)தாய்ப்பாலூட்டல்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்தினகரன் (இந்தியா)விபுலாநந்தர்மாணிக்கவாசகர்ருதுராஜ் கெயிக்வாட்பெரியாழ்வார்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்முன்னின்பம்பெண் தமிழ்ப் பெயர்கள்முலாம் பழம்தமிழில் சிற்றிலக்கியங்கள்விவேகானந்தர்பறையர்ஈரோடு தமிழன்பன்அண்ணாமலை குப்புசாமிஏப்ரல் 26ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)பாலின விகிதம்தசாவதாரம் (இந்து சமயம்)முடிமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்வெள்ளியங்கிரி மலைதேர்தல்கள்ளர் (இனக் குழுமம்)ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)இராமர்வீரமாமுனிவர்பரணர், சங்ககாலம்திரிசாகருத்துநீதி இலக்கியம்சினேகாரத்னம் (திரைப்படம்)நாயன்மார் பட்டியல்மொழிபெயர்ப்புமுல்லைப் பெரியாறு அணைஇயேசுசங்ககால மலர்கள்தமிழ் எண்கள்வட்டாட்சியர்நற்கருணைகுலசேகர ஆழ்வார்தனுசு (சோதிடம்)சித்த மருத்துவம்முல்லைப்பாட்டுஇரசினிகாந்துஇந்திய அரசியல் கட்சிகள்இந்திய மக்களவைத் தொகுதிகள்முக்கூடற் பள்ளுவேற்றுமைத்தொகைபெண்களுக்கு எதிரான வன்முறைதிராவிட இயக்கம்முத்துராஜாஐங்குறுநூறு - மருதம்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்கட்டுவிரியன்உயர் இரத்த அழுத்தம்தாஜ் மகால்திருமுருகாற்றுப்படைபால் (இலக்கணம்)தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005இராமாயணம்தேவயானி (நடிகை)எங்கேயும் காதல்ஏலகிரி மலைஎஸ். பி. பாலசுப்பிரமணியம்யுகம்கார்லசு புச்திமோன்மறைமலை அடிகள்தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்பட்டினப் பாலைஇந்தியன் (1996 திரைப்படம்)அயோத்தி இராமர் கோயில்🡆 More