சூப்பர் சென்டாய் சிரீஸ்スーパー戦隊シリーズ (Sūpā Sentai Shirīzu, スーパー戦隊シリーズ?) என்பது 1975இல் இருந்து ஜப்பானில் நீண்டகாலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு சூப்பர் ஹீரோ தொடர் ஆகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இதை டோய் கம்பெனி, டோய் ஏஜென்சி மற்றும் பான்டாய் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இயக்குகின்றனர். இது நிகான் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 07.30 முதல் 08.00 மணி வரை ஒளிபரப்பாகிறது. இப்போது இது 2000 எபிசோடுகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. சூப்பர் சென்டாய் மற்றும் காமன் ரைடர் ஆகிய இரு தொடர்களும் ஒளிபரப்பாகும் நேரம் சூப்பர் ஹீரோ டைம் என்று அழைக்கப்படுகிறது. சென்டாய் என்றால் போராடும் படை என்று பொருள். இத்தொடர் குழந்தைகளுக்காக இயக்கப்படும் டொக்குசாட்சு வகையைச் சேர்ந்தது. பிற்காலத்தில் இத்தொடரைத் தழுவி அமெரிக்காவில் பவர் ரேஞ்சர்ஸ் என்ற தொடர் இயக்கப்பட்டது.
பொதுவாக அனைத்து சூப்பர் சென்டாய் தொடர்களிலும் ஒரு சூப்பர் ஹீரோ அணி இருக்கும். அவர்களது உடை சிவப்பு, நீலம், மஞ்சள் போன்ற பல வண்ணங்களில் இருக்கும். அவர்கள் தீய அணியிடம் இருந்து உலகைக் காக்க போராடுவர். ஒவ்வொரு எபிசோடுகளிலும் ஒரு மான்ஸ்டர் (அரக்கன்) இருப்பர். அவர்களை சூப்பர் ஹீரோக்கள் அழித்துவிடுவர். பிறகு அந்த மான்ஸ்டர் வளர்ந்து மிகப்பெரிய உருவினை அடையும். அப்போது சூப்பர் ஹீரோக்கள் மெச்சா எனப்படும் மிகப்பெரிய ரோபோக்களை பயன்படுத்தி அவர்களை அழிப்பர். இறுதியாக தீய அணியின் தலைவனுடனோ அல்லது வேறு வலிமை வாய்ந்த வீரனுடனோ போராடி அழிப்பர். அதனுடன் தொடர் முடிவடையும். ஒரு தொடரின் இடையே மற்ற தொடருடன் அமையும் கூட்டணி (டீம்-அப்) எபிசோடும் அந்தத் தொடரின் பிரத்யேக திரைப்படமும் ஒளிபரப்பாகும்.
This article uses material from the Wikipedia தமிழ் article சூப்பர் சென்டாய், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.