சீனாவின் பொருளாதாரம்

சீன மக்கள் குடியரசின் சோசலிச சந்தைப் பொருளாதாரம்அனைத்துலக நாணய நிதியத்தின்படி பெயரளவு மொ.உ.உற்பத்தியின்படி உலகின் இரண்டாவது பெரும் பொருளாதாரமாகும்; கொள்வனவு ஆற்றல் சமநிலை அடிப்படையில் உலகின் மிகப் பெரிய பொருளாதாரமும் ஆகும்.

சீனாவின் தேசியப் புள்ளியியல் ஆணையம் இதனை மறுத்துள்ளது. 2015 வரை சீனா உலகின் மிக விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருந்தது; கடந்த 30 ஆண்டுகளாக சீனாவின் வளர்ச்சி வீதம் சராசரியாக 10%ஆக இருந்துள்ளது. வரலாற்று மற்றும் அரசியல் காரணங்களால் இப்பொருளாதார வளர்ச்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

சீனா பொருளாதாரம்
சீனாவின் பொருளாதாரம்
சனவரி 2014இல் சாங்காய் நகரின் புதோங் மாவட்டம்.
நாணயம்ரென்மின்பி (RMB); அலகு: யுவான் (CNY)
நிதி ஆண்டுநாட்காட்டி ஆண்டு (சனவரி, 1 முதல் திசம்பர், 31 வரை)
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள்உலக வணிக அமைப்பு, ஏபெக், ஜி-20 மற்றும் பிற
புள்ளி விவரம்
மொ.உ.உ$11,211 டிரில்லியன் (பெயரளவு; ஏப்ரல் 2015)
$18.976 டிரில்லியன் (பிபிபி; ஏப்ரல் 2015)
மொ.உ.உ வளர்ச்சி6.9% (Q3 2015)
நபர்வரி மொ.உ.உ$9,154 (பெயரளவு; 75வது; 2015)
$13,992 (பிபிபி; 89வது; 2014)
துறைவாரியாக மொ.உ.உவேளாண்மை: 9.2%, தொழிற்றுறை: 42.6%, சேவைகள்: 48.2% (2014)
பணவீக்கம் (நு.வி.கு)2.0% (2014)
கினி குறியீடு46.9 (2014)
தொழிலாளர் எண்ணிக்கை787.6 மில்லியன் (முதல்; 2012)
தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கைவேளாண்மை: 33.6%, தொழிற்றுறை: 30.3%, சேவைகள்: 36.1% (2012 மதிப்பு.)
வேலையின்மை4.1% (Q2 2014)
சராசரி மொத்த வருவாய்4695 CNY ($739) (2015)
முக்கிய தொழில்துறைசுரங்கமும் கனிமச் செயற்முறை, இரும்பு, எஃகு, அலுமினியம், பிற மாழைகள், நிலக்கரி; பொறிகள் அமைத்தல்; போர்த்தளவாடங்கள்; துணியும் உடையும்; பாறைநெய்; சிமென்ட்; வேதிப்பொருட்கள்; உரங்கள்; காலணிகள், பொம்மைகள், மின்னணுப் பொருட்கள் உள்ளிட்ட நுகர்வுப் பொருட்கள்; உணவுப் பதப்படுத்தல்; தானுந்துகள், தொடர்வண்டிப் பெட்டிகளும் தொடர்வண்டிப் பொறிகளும், கப்பல்கள், வானூர்திகள் உள்ளிட்ட போக்குவரத்துத் தளவாடங்கள்t; தொலைத்தொடர்பு பொருட்கள், வணிக விண்வெளி ஏவூர்திக் கலங்கள், செய்மதிகள்
தொழில் செய்யும் வசதிக் குறியீடு90வது (2015)
வெளிக்கூறுகள்
ஏற்றுமதி$2.34 டிரில்லியன் (2014)
ஏற்றுமதிப் பொருட்கள்தரவுச் செயற்பாடு பொறிகள், உடைகள், துணிகள், இரும்பும் எஃகும், ஒளியியல் மற்றும் மருத்துவச் சாதனங்கள் உள்ளிட்ட மின்னியல் மற்றும் பிறப் பொறிகள். தொழிற்றுறை பொருட்களின் அனைத்துப் பகுப்புகளிலும்
முக்கிய ஏற்றுமதி உறவுகள்சீனாவின் பொருளாதாரம் United States 16.9%
சீனாவின் பொருளாதாரம் Hong Kong 15.5%
சீனாவின் பொருளாதாரம் Japan 6.4%
சீனாவின் பொருளாதாரம் South Korea 4.3% (2014 est.)
இறக்குமதி$1.96 டிரில்லியன் (2014)
இறக்குமதிப் பொருட்கள்மின்னியல் மற்றும் பிறப் பொறிகள், எண்ணெய் மறும் கனிம எரிபொருட்கள், ஒளியியல் மறும் மருத்துவச் சாதனங்கள், மாழைக் கனிமங்கள், நெகிழிகள், கரிமச் சேர்மங்கள்
முக்கிய இறக்குமதி உறவுகள்சீனாவின் பொருளாதாரம் South Korea 9.7%
சீனாவின் பொருளாதாரம் Japan 8.3%
சீனாவின் பொருளாதாரம் United States 8.1%
சீனாவின் பொருளாதாரம் Taiwan 7.8%
சீனாவின் பொருளாதாரம் Germany 5.4%
சீனாவின் பொருளாதாரம் Australia 5% (2014 est.)
வெளிநாட்டு நேரடி முதலீடு$1.344 டிரில்லியன் (2012)
மொத்த வெளிக்கடன்$863.2 billion (2013)
பொது நிதிக்கூறுகள்
பொதுக் கடன்மொ.உ.உற்பத்தியில் positive decrease 14.95% (2015 மதிப்பீடு.)
வருவாய்$2.118 டிரில்லியன் (2013 மதிப்.)
செலவினங்கள்$2.292 டிரில்லியன் (2013 மதிப்.)
கடன் மதிப்பீடுAA- (உள்நாடு)
AA- (வெளிநாடு)
AA- (டி&சி மதிப்பீடு)
(இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு)
அந்நியச் செலாவணி கையிருப்புசீனாவின் பொருளாதாரம் $3.3 டிரில்லியன் (முதல்; மார்ச் 2015)
Main data source: CIA World Fact Book
'
சீனாவின் பொருளாதாரம்
2013இல் தனிநபர் மொத்த தேசிய வருமானம்:
  சீனா (6,560 $)
  சீனாவை விட கூடுதல் தனிநபர் மொ.தே.வ கொண்டவை
  சீனாவை விட குறைந்த தனிநபர் மொ.தே.வ கொண்டவை

தயாரிப்புகளுக்கான உலக மையமாகவும் உலகின் மிகப்பெரிய தயாரிப்புப் பொருளாதாரமாகவும் விளங்குகின்றது; உலகில் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் மிகப்பெரும் பொருளாதாரமாகவும் விளங்குகின்றது. தவிரவும் உலகின் மிக விரைவாக வளரும் நுகர்வோர் சந்தையாகவும் இரண்டாம் நிலையிலுள்ள இறக்குமதியாளராகவும் சீனா விளங்குகின்றது. சீனா சேவைப் பொருட்களை நிகர இறக்குமதி செய்யும் நாடாகவும் உள்ளது.

சீனா உலகின் மிகப்பெரிய வணிகமாற்று நாடாகவும் உள்ளது. பன்னாட்டு வணிகத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. அண்மைய ஆண்டுகளில் வணிக அமைப்புகளிலும் உடன்பாடுகளிலும் கூடுதலாக பங்கேற்று வருகின்றது. 2001இல் உலக வணிக அமைப்பில் உறுப்பினராக சேர்ந்துள்ளது. பல நாடுகளுடன் தளையற்ற வணிக உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளது; ஆத்திரேலியா, தென்கொரியா, ஆசியான், சுவிட்சர்லாந்து மற்றும் பாக்கித்தான் நாடுகளுடன் இத்தகைய வணிக உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

அனைத்துலக நாணய நிதியம் (IMF) அறிக்கையின்படி தனி நபர் வருமானம் அடிப்படையிலான தரவரிசையில் சீனா 2014இல் பெயரளவு மொ.உ.உற்பத்தியில் 77வதாகவும் கொள்வனவு ஆற்றல் சமநிலைப்படி 89ஆகவும் உள்ளது. சீனாவின் கடலோர மாகாணங்களான செஜியங், ஜியங்சு, புஜியான் மற்றும் முக்கியமாக குவாங்டாங் மிகவும் தொழில்மயமாயுள்ளன; உள்ளகத்தில் உள்ள மாகாணங்கள் குறைந்த பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுள்ளன. சீனாவின் பொருளாதார முக்கியத்துவம் வளர்ந்துள்ள நிலையில் அதன் பொருளாதார நலன் குறித்தும் கட்டமைப்புக் குறித்தும் கவனிக்கப்படுகின்றது.

சீனாவின் சூழலியல் மாசிற்கான நீண்டநாள் சமூகப் பொருளாதாரச் செலவை தவிர்க்க வானிலை மாற்றம் மற்றும் சூழலியலுக்கான கிரந்தாம் ஆய்வுக் கழகத்தின் நிக்கோலசு இசுடெர்னும் பெர்குசு கிரீனும் சீனாவின் பொருளாதாரம் உயர்நிலைத் தொழினுட்பம் சார்ந்தும் குறைந்த கரிம வெளிப்பாட்டையும் ஆய்வு மற்றும் புதுமை சார்ந்ததுமான தேசிய மேம்பட்ட தொழில் வளர்ச்சியையும் தழுவ வேண்டும் எனவும் கனரக தொழில் மீதான சார்பை குறைக்கவும் பரிந்துரைத்துள்ளனர். இது மைய அரசின் பொருளாதார திட்ட நோக்கங்களுடன் ஒத்துள்ளது.

சீ சின்பிங்கின் சீனக் கனவு "இரண்டு 100களை" சாதிக்க திட்டமிட்டுள்ளது: சீனப் பொதுவுடமைக் கட்சியின் நூற்றாண்டு விழா ஆண்டான 2021இல் தேவைகளில் நிறைவேற்றுவதில் "கூடியளவில் நல்லநிலையிலுள்ள சமூகமாக" முன்னேற்றுவது; மக்கள் குடியரசை நிறுவிய நூற்றாண்டு விழா ஆண்டான 2049இல் நவீனமயமாக்கலில் முழுமையும் வளர்ச்சியடைந்த நாடாக முன்னேறுவது.

சீனப் பொருளாதாரத்தின் உலகமயமாக்கலால் 2005ஆம் ஆண்டு அலுவல்முறையாக வெளியிடப்பட்ட சீரான பொருளாதார முன்னறிவிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. 2010களின் துவக்கத்தில் சீனா தே.உ.உ (கொ.ஆ.ச) $10-டிரில்லியனை எட்டிய முதல் ஆசிய நாடானது; ஐக்கிய அமெரிக்காவுடனும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் சமநிலை எட்டியது. As China's economy grows, so does China's ரென்மின்பி, which undergoes the process needed for its internationalization. 2015இல் சீனப் பொருளாதாரம் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை துவக்கியுள்ளது.

மேற்கத்திய ஊடகங்களால் சீனா முறையற்ற வணிக செயற்முறைகளைப் பின்பற்றுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது; செயற்கையான நாணயமாற்று வீத குறைப்பு, அறிவுசார் சொத்துத் திருட்டு, பாதுகாப்புவாதம், உள்ளூர் சார்பு பற்று குறித்தும் சீனப் பொதுவுடமைக் கட்சி முற்றுரிமை, சீனப் பண்பாட்டுடனான சோசலிசம் குறித்தும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

2015இல் சீனப் பொருளாதாரம் "மந்தப்படுத்தப் படுவதாகவும்" ஆனால் இது பொருளாதார வளர்ச்சி வீதத்தை மட்டுப்படுத்துவதன்றி எந்தப் பொருளியல் பின்னடைவையும் குறிக்கவில்லை என விளக்கப்பட்டுள்ளது. அடிப்படை எஃகு, சிமென்ட் தொழிற்சாலைகளின் கூடுதல் திறனளவைக் குறைக்கவும், விற்பனை குறைகின்ற தானுந்துகிளன் தயாரிப்பைக் குறைக்கவும் இவ்வாறு மட்டுப்படுத்தப்படுகின்றது.

மேற்சான்றுகள்

குறிப்புகள்

வெளி இணைப்புகளும் மேற் படிப்பிற்கும்

Tags:

அனைத்துலக நாணய நிதியம்சீன மக்கள் குடியரசுமொத்த உள்நாட்டு உற்பத்தி (கொள்வனவு ஆற்றல் சமநிலை) அடிப்படையில் நாடுகளின் பட்டியல்மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகித அடிப்படையில் நாடுகள் பட்டியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கருட புராணம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்ஏக்கர்வேலைக்காரி (திரைப்படம்)பழமுதிர்சோலை முருகன் கோயில்தளபதி (திரைப்படம்)சினைப்பை நோய்க்குறிமண் பானைதிவ்யா துரைசாமிகுருதிச்சோகைசங்கம் (முச்சங்கம்)சீர் (யாப்பிலக்கணம்)மகேந்திரசிங் தோனிமன்னர் மானியம் (இந்தியா)நெய்தல் (திணை)வெள்ளியங்கிரி மலைநாடகம்இயற்கைஇந்தியாஅந்தாதிதிருட்டுப்பயலே 2இமயமலைதமிழர் இசைக்கருவிகள் பட்டியல்யாவரும் நலம்சிலம்பரசன்நயன்தாராவடிவேலு (நடிகர்)அனைத்துலக நாட்கள்முதற் பக்கம்திராவிடர்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்அறம்நம்பி அகப்பொருள்ஆண்டு வட்டம் அட்டவணைஇரசினிகாந்துவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்சங்ககால மலர்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)தமிழ்த்தாய் வாழ்த்துதிருப்பாவைமட்பாண்டம்அயோத்தி இராமர் கோயில்யூடியூப்சாதிவெப்பம் குளிர் மழைசேரன் செங்குட்டுவன்உலக மனித உரிமைகள் சாற்றுரைஏறுதழுவல்நெல்லிவினையெச்சம்மனித வள மேலாண்மைபால கங்காதர திலகர்இணையம்வீரப்பன்தரணிஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)பக்கவாதம்சீமான் (அரசியல்வாதி)முதலாம் உலகப் போர்விசயகாந்துஇட்லர்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைகாம சூத்திரம்கருப்பைபண்பாடுபெரும்பாணாற்றுப்படைஇராமர்ந. பிச்சமூர்த்திகொடிவேரி அணைக்கட்டுஆகு பெயர்பாரத ரத்னாகொன்றைஇராவண காவியம்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)தாவரம்சிறுபாணாற்றுப்படைகாதல் கொண்டேன்மயில்விந்திய மலைத்தொடர்🡆 More