பணவீக்கம்

பொருளாதாரத்தில் பண வீக்கம் (Inflation) என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயர்வால், அந்த நாட்டின் நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன் (அல்லது சந்தை மதிப்பு) உள்நாட்டுச் சந்தையில் குறைந்து போவதை குறிக்கும்.

பணவீக்கம்
2019 இல் உலகளவில் பணவீக்க வீதம்.
பணவீக்கம்
ஜி8 நாடுகளின் முக்கிய ஐந்து உறுப்பினர்களின் பண வீக்க விகிதங்கள் (1950-1994). ரோஜா வண்ணம் = பிரான்ஸ், பச்சை = ஜெர்மனி, சாம்பல் = ஜப்பான், சிகப்பு = ஐ.இ, நீலம் = US.

விலை அதிகரிக்கும் போது ஒரு நாணயத்தைப் பயன்படுத்தி வாங்கப்படும் பொருள்கள் மற்றும் சேவையின் அளவும் குறைகிறது, ஆகவே பணவீக்கம் என்பதை, பணத்தின் வாங்கும் திறனின் வீழ்ச்சி என்றும் கூறலாம் - இதை அகப் பரிவர்த்தனச் சாதனம் மற்றும் பொருளாதாரத்தின் மதிப்பீட்டு அளவின் மதிப்பில் ஏற்படும் இழப்பு என்றும் கொள்ளலாம். விலை வீக்கத்தின் முக்கிய அளவீடு பணவீக்க வீதம் ஆகும். பணவீக்க வீதம் என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவில் பொது விலைப் பட்டியலில் (வழக்கமாக நுகர்வோர் விலைப் பட்டியலில்) ஏற்படும் சதவீத மாற்றத்தின் ஓராண்டுக்கான மதிப்பாகும். அதிக பட்ச பணம் குறைந்த பட்ச பொருட்களை துரத்தி செல்வது பணவீக்கம் என்கிறார் வாக்கர். அதாவது அதிக தேவை குறைந்த அளிப்பு எனும் நிலைப்பாடு காரணமாக பணத்தின் பெறுமதி குறைவடைவது என்பதை இது குறிக்கிறது.

எனவே பருவ கால விலையேற்றங்கள் இதில் வருவதில்லை அல்லது எதிர் காலத்தில் விலையேரும் என்று எண்ணி பொருட்களை ஊக வியாபாரத்திற்காக பதுக்கி வைப்பதால் ஏற்படும் விலையேற்றத்தை இது குறிப்பதில்லை. விலைவாசியானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதை பணவீக்கம் என்று கூறலாம்

தேவை விதியின்படி விலை உயர்ந்தால் தேவை குறையும் ஆனால் பணவீக்க காலத்தில் அடிப்படையான பொருட்களின் விலையர்ந்தாலும் தேவை உயரும். அதன் காரணம் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் பணம் அதிகமாக சேர்வதால் அவர்களின் தேவை(demand) அளிப்பைவிட(supply) அதிகரிக்கிறது. குறுகிய காலத்தில் அளிப்பை அதிகரிக்க முடியாத காரணத்தால் விலை உயருகிறது.

பணவீக்கத்தினால் ஏற்படும் பொருளாதாரத்தின் மீதான பாதிப்புகளில் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகள் ஆகிய இரண்டும் உண்டு. பணவீக்கத்தின் எதிர்மறை விளைவுகளில் பின்வருவன அடங்கும்: குறிப்பிட்ட காலத்திற்கு பணம் மற்றும் பணம் சார்ந்த பிற உருப்படிகளின் அசல் மதிப்பின் நிலைத் தன்மை இழப்பு; எதிர்கால பணவீக்கத்தைப் பற்றி உறுதியாகக் கணிக்க முடியாததால் முதலீடு மற்றும் சேமிப்புகளுக்கான ஊக்கம் குறைதல், மேலும் உயர் பணவீக்கத்தின் போது எதிர்காலத்தில் விலை ஏறும் என்று கருதி நுகர்வோர் பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபடும்பட்சத்தில் சரக்குகள் பற்றாக்குறை ஏற்படும். பொருளாதாரப் பின்னிறக்கங்கள் மட்டுப்படுத்தல், மற்றும் கடனின் அசல் அளவைக் குறைப்பதன் மூலம் வழங்கப்படும் கடன் தள்ளுபடி ஆகியவை அதன் நேர்மறை விளைவுகளில் அடங்கும்.

மொத்தப் பண அளவின் அதீத வளர்ச்சியே பணவீக்க வீதங்களுக்கும் கட்டற்ற பணவீக்கத்திற்கும் காரணமாகின்றன எனப் பொருளியலாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். எத்தகைய காரணிகள் பணவீக்க வீதங்களை, குறைவு முதல் மிதமான அளவுவில் கட்டுப்படுத்தி வைக்கும் என்பது பற்றிய கருத்துகளில் மிகுந்த வேறுபாடு காணப்படுகிறது. குறைவான அல்லது மிதமான பணவீக்கம் என்பது, பொருள்கள் மற்றும் சேவைகளின் அசல் தேவையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு அல்லது பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலைகளில் கிடைக்கக்கூடிய அளிப்பில் ஏற்படும் மாற்றங்கள், மேலும் மொத்தப் பண அளவின் வளர்ச்சி ஆகியவற்றையே சார்ந்துள்ளது. இருப்பினும், பொருளாதார வளர்ச்சி வீதத்தை விட அதிக வேகத்தில் பண இருப்பு அதிகரிப்பதே தொடர்ச்சியான நீண்ட கால பணவீக்கத்திற்குக் காரணம் என்பதே பெருவாரியாக ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்தாகும்.

இன்று, பெரும்பாலான மரபு வழி பொருளியலாளர்கள் குறைவான நிலையான பணவீக்க வீதத்தையே ஆதரிக்கின்றனர். (பூச்சிய அல்லது எதிர்மறை பணவீக்கத்திற்கு மாறாக) குறைவான பணவீக்கமானது, ஒரு மோசமான வணிகச் சூழ்நிலையில் பணியாளர் சந்தையை தக்கவாறு சரி செய்வதன் மூலம் பொருளாதாரப் பின்னிறக்கங்களின் தீவிரத்தைக் குறைக்கிறது, மேலும் பணக்கொள்கையானது பொருளாதாரத்தைச் சீரமைப்பதை ஒரு நீர்மை செயலறு நிலை தடுக்கின்ற ஆபத்தையும் குறைக்கிறது. பணவீக்க வீதத்தை, குறைவானதும் மற்றும் நிலையானதுமாகக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் பொறுப்பு வழக்கமாக பண ஆணையங்களிடம் வழங்கப்படுகிறது. பொதுவாக, இந்தப் பண ஆணையங்கள் என்பவை மத்திய வங்கிகளே ஆகும். அவை வட்டி வீதங்கள், திறந்த நிலைச் சந்தை செயல்பாடுகள் மற்றும் வங்கியியல் ரீதியான தேவையான ஒதுக்கீடுகளை அமைத்தல் ஆகிய வழிகளின் மூலம் மொத்தப் பண அளவைக் கட்டுப்படுத்துகின்றன.

முழு அல்லது பகுதி பணவீக்கம்

பணவீக்க காலத்தில் எல்லா விலையுவர்களும் பனவீக்க விலை ஏற்றம் அல்ல. உதாரணமாக ஒரு நாடு முழு வேலை வாய்ப்பு அடையாத நிலையில் ஒவ்வொறு செலவும் வேலை வாய்ப்பை முழு நிலைக்கு கொண்டு செல்லபயன்படுகிறது. எனவே செலவுகள் எல்லாம் வேலை வாய்ப்பை அதிகரித்தல் உற்பத்தியை பெருக்குதல் போண்றவற்றில் செலவிடப்படுவதால் இந்த விலைவாசி ஏற்றம் பொருளாதாரத்தை பாதிப்பதில்லை. இதை பகுதி பணவீக்கம் என்று கூறலாம்.

ஆனால் ஒரு நாடு முழு வேலை வாய்ப்பு நிலை அடைந்த பிறகு ஒவ்வொரு செலவும் விலைவாசியை உயர்த்த ஆரம்பிக்கும் ஏனென்றால் இந்த செலவு ஆனது வேலை வாய்ப்பு போன்றவற்றை உருவாக்க முடியாது. இந்த பணவீக்கத்தை முழு பணவீக்கம் என்று கூறலாம்.

பணவீக்க சுழற்சியின் பண்புகள்

பொதுவாக பணவீக்க காலத்தில் பணத்தின் வாங்கும் சக்தி குறைகிறது எனவே இதை சரி கட்ட பணத்தின் அளவினை அதிகரித்தல் சரியான ஒன்றாகும். இந்த பண சுழற்சி அதிகரிப்பதால் தேவை அதிகரித்து பொருட்களின் உற்பத்தியை தூண்டுகிறது. தொழிற்சாலைகள் தங்கள் பொருட்களுக்கு தேவை அதிகரிப்பதால் அவை உற்பத்தி அதிகரிக்க அதனால் வேலை வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே இவ்விலைவாசி உயர்வு பொருளாதாரத்திற்கு தேவையான ஒன்று ஆனால் நாடு முழு வேலை வாய்ப்பை அடைந்த பின்பு பண சுழற்சி அதிகரிப்பு முழுதும் விலைவாசி மேல் விழுகிறது. இத்தகைய சுழற்சி ஆரம்பித்துவிட்டால் அது தொடர்ந்து இயங்கி விலைவாசியை வெகு வேகமாக உயர செய்கிறது. இக்காலத்தில் சேமிப்பு செய்பவர்கள் கூட செலவு செய்கின்றனர் அவ்வாறெ வியாபாரிகள் பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்த்து செலவு செய்கின்றணர். இந்த இரண்டு பக்க அழுத்தம் பணவீக்க சுழற்சியை அதிகரிக்க செய்து நாடு முழு வேலை அடைந்த நிலையில் பணவீக்க சுழற்சியை அதிகரிக்க செய்கிறது

பண வீக்க வகைகள்

பணவீக்க விகிதங்களை விலைவாசி உயரும் அளவு அதன் வேகம் பொருத்து பிரிக்கும்பொழுது தவழும் பணவீக்கம் இந்த நிலையில் விலைவாசியானது மெதுவாக உயர்ந்துகொண்டுருக்கும் இதை பல பொருளாதார நிபுணர்கள் வரவேற்கிறார்கள். இது பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்கிறார்கள் இதிலுள்ள சிறிய விலைவாசி உயர்வு பொருளாதாரத்தை தேக்க நிலையிலிருந்து மீட்கும். ஆனால் சில பொருளாதார நிபுணர்கள் இந்த தவழும் பணவீக்கம் பின்பு நடக்கும் பணவீக்கம் ஓடும் பணவீக்கம் பறக்கும் பணவீக்கமாக மாறும் அபாயமுள்ளது என்கின்றனர். ஆனால் இத்தகைய பணவீக்கத்திலே இருக்கவேன்டும் என்று ஜெர்மனி போன்ற நாடுகள் 1956 இலிருந்து முயற்சி செய்கிறார்கள்

விலைவாசி உயர்வும் வேகத்தை பொருத்து அடுத்த கட்டம், நடக்கும் பணவீக்கம் இதில் விலைவாசி தவழும் பணவீக்கத்தை விட அதிகமாக இருக்கும் இது ஒரு சிகப்பு விளக்கு அறிகுறி இதை கட்டுப்படுத்த தவறினால் அது ஓடும் பணவீக்கத்தைய்ம் பின்பு பறக்கும் அல்லது தாவும் பணவீக்கத்தை அடைய வாய்ப்புகளுண்டு என்பதை இது காட்டுகிறது. ஓடும் பணவீக்கம் தாவும் பணவீக்கம் போன்றவற்றில் விலை வாசி உயர்வு கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் இது பொருளாதாரத்தை சீர்குலைக்க செய்யும்.

பணவீக்கங்களின் வகைகளை பிரிப்பதே விலை வாசி எவ்வளவு வேகமாக உயர்கிறது என்பதை அடிப்படியாக வைத்துதான். தவழும் பணவீக்கத்தில் விலைவாசி இரட்டிப்பாக ஒரு தலைமுறைக்கு பின்பு உயரும் நடக்கும் பணவீக்கத்தில் 5 வருடத்தில் உயரும். ஓடும் பணவீக்கத்தில் 1வருடத்தில் தாவும் பணவீக்கத்தில் ஒரு வருடத்திற்கும் குறைவாக என்று விலைவாசி உயரும்.

பணவீக்கம் தோன்றும் முறைகள்

  • பற்றக்குறை திட்டத்தால் தூண்டிவிடப்படும் பணவீக்கம்

அரசானது தன்னுடைய வரவுகளுக்கு மேல் செலவு செய்யும்பொழுது

  • ஊதிய அதிகரிப்பால் ஏற்படும் பணவீக்கம்

தொழிலாலர்கள் தங்களுடைய திறமை அதிகரிப்பால் அவர்களுக்கு தரும் ஊதியத்தால் ஏற்படும் பணவீக்கம்..

  • இலாப அதிகரிப்பால் ஏற்படும் பணவீக்கம்

தொழில் முனைவோர்கள் இலாபததை அதிகரிப்பதற்காக ஏற்படுத்தும் பணவீக்கம்

  • இவை எல்லாம் சேர்ந்து செலவு உந்தும் பணவீக்கத்தை உருவாகுகிறது.
  • மூன்றாவது வகையானது போர்கால பணவீக்கம்

அரசானது போருக்காக செலவிடும் பணமானது எந்த விதமான உற்பத்தியும் இல்லாத்தால் ஏற்படும் பணவீக்கம்

  • போருக்கு பின் ஏற்படும் பணவீக்கம்

அரசானது போருக்கு பின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தாத நிலையில் ஏற்படும் பணவீக்கம் உதாரணம் இரண்டாம் உலக் யுத்ததின் பின் ஜெர்மனியில் ஏற்பட்ட பறக்கும் பணவீக்கம்

மூலங்கள்

பணவீக்கம் என்பது உண்மையில் நாணயத்தின் மதிப்பிறக்கத்தையே குறிக்கும். தங்கமானது நாணயமாகப் பயன்படுத்தப்படும் போது, அரசாங்கம் தங்க நாணயங்களைச் சேகரித்து, உருக்கி பின்னர் வெள்ளி, தாமிரம் அல்லது ஈயம் போன்ற பிற உலோகங்களுடன் கலந்து அதே பண மதிப்பில் வெளியிடுகிறது. தங்கத்துடன் பிற உலோகங்களைக் கலந்து செறிவைக் குறைப்பதன் மூலம், நாணயங்களைத் தயாரிக்கத் தேவைப்படும் தங்கத்தின் அளவை அதிகரிக்காமல், வெளியிடப்படும் மொத்த நாணயங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கத்தால் முடிகிறது. இவ்விதமாக ஒரு நாணயத்திற்கான செலவு குறைக்கப்படுவதால், உரிமை வரி அதிகரிப்பால் அரசாங்கம் இலாபமடைகிறது. இந்த உத்தியினால் பண இருப்பு அதிகரிக்கப்படுகிறது, அதே நேரத்தில் ஒவ்வொரு நாணயத்தின் ஒப்பீட்டு மதிப்பும் குறைக்கப்படுகிறது. இந்த ஒப்பீட்டு மதிப்பு குறைவதால் நுகர்வோருக்கு, அதே மதிப்புள்ள பொருள் மற்றும் சேவைக்கு அதிக அளவு நாணயங்கள் தேவைப்படும். ஒவ்வொரு நாணயத்தின் மதிப்பும் குறையும் போது, இந்தப் பொருள்களும் சேவைகளும் விலையேற்றத்திற்குட்படும்.

19 ஆம் நூற்றாண்டில், பொருள்களின் விலை ஏற்றத்திற்கும் வீழ்ச்சிக்கும் காரணாமாக விளங்கும் மூன்று தனித்தனிக் காரணிகளை பொருளியலாளர்கள் வகைப்படுத்தினர்: பொருள்களின் மதிப்பு அல்லது வளங்கள் விலைகளில் ஏற்படும் மாற்றம், பின்னாளில் நாணயத்தில் உள்ள உலோக உள்ளடக்கத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கமான பணத்தின் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் நாணயத்திற்குச் சமமான பரிமாற்றப்படக்கூடிய உலோகத்தின் அளவை விட ஒப்பீட்டில் அதிகமாகிவிடும் மொத்தப் பணத்தின் அளவின் அதிகரிப்பினால் ஏற்படும் நாணயத் தேய்மானம் ஆகியவையாகும். அமெரிக்க உள்நாட்டுப் போர் நடைபெற்ற போது அச்சிடப்பட்ட தனியார் வங்கி நாணயத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து, "பணவீக்கம்" என்ற சொல், பரிமாற்றக்கூடிய நாணயத்தின் அளவானது அந்தப் பரிமாற்றத்துக்குத் தேவையான உலோகத்தின் அளவை விட அதிகமாவதால் ஏற்படும் விளைவான நாணயத் தேய்மானத்தை நேரடியாகக் குறிப்பதானது. பின்னர் பணவீக்கம் என்ற இந்தச் சொல், பொருள்களின் விலையேற்றத்தைக் குறிக்காமல் நாணயத்தின் மதிப்பின் வீழ்ச்சியையே குறித்தது.

வங்கி நோட்டுகளின் அதிக இருப்புக்கும் அவற்றின் மதிப்புக் குறைவதற்கும் உள்ள தொடர்பை டேவிட் ஹியூம் மற்றும் டேவிட் ரிக்கார்டோ போன்ற மரபார்ந்த பொருளியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர், அவர்கள் பொருள்களின் விலையில் இந்த நாணய மதிப்புக் குறைவு (பின்னாளில் பணம் சார்ந்த பணவீக்கம் என்றழைக்கப்பட்டது) என்ன விளைவை (பின்னாளில் விலை சார்ந்த பணவீக்கம் என்றும் பின்னர் பணவீக்கம் என்றும் அழைக்கப்பட்டது) ஏற்படுத்தும் என்பது குறித்து ஆராய்ந்தும் விவாதித்தும் வந்தனர்.

தொடர்புடைய வரையறைகள்

"பணவீக்கம்" என்ற சொல், வழக்கமாக பொருளாதாரத்தில் பொருள்கள் மற்றும் சேவைகளின் ஒட்டுமொத்த விலைகளைக் குறிக்கும் விலைக் குறியீட்டில் ஏற்பட்ட அதிகரிப்பின் அளவையே குறிக்கிறது. நுகர்வோர் விலைக் குறியீடு (CPI), தனிப்பட்ட நுகர்வு செலவினங்கள் விலைக் குறியீடு (PCEPI) மற்றும் GDP பணவாட்டக் காரணி ஆகியவை பெரிய விலைக் குறியீடுகளுக்கான எடுத்துக்காட்டுகளாகும். பணவீக்கம் என்ற சொல், பொருளாதாரத்தின் பொருள்கள் அல்லது சேவைகளின் குறிப்பிட்ட குறுகிய தொகுப்புக்கு மட்டும் ஏற்படும் விலையேற்றத்தை விவரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. சரக்குகள் (இதில் உணவுப் பொருள்கள், எரிபொருள், உலோகங்கள் ஆகியவை அடங்கும்), நிதி சொத்துகள் (பங்குகள், பத்திரங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துகள் ஆகியவை இதில் அடங்கும்) மற்றும் சேவைகள் (பொழுதுபோக்கு மற்றும் உடல்நலம் போன்றவை இதில் அடங்கும்) ஆகியவை இந்தத் தொகுப்புகளில் அடங்கும். ரியாச்சர்ஸ்-CRB பட்டியல் (CCI), உற்பத்தியாளர் விலைக் குறியீடு மற்றும் பணிச் செலவுக் குறியீடு (ECI) ஆகியவை பொருளாதாரத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் விலைப் பணவீக்கத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் குறுகிய விலைக் குறியீடுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். சொத்து விலைப் பணவீக்கம் என்பது, சரக்குகள் சேவைகளுக்கு மாறாக, சொத்துகளின் விலையில் ஏற்படும் விலையேற்றமாகும். மையப் பணவீக்கம் என்பது உணவு மற்றும் ஆற்றல் விலைகள் நீங்கலாக, பரவலான விலைக் குறியீடுகளின் துணைத் தொகுப்பில் ஏற்படும் விலையின் ஏற்றத்தாழ்வுகளின் அளவீடாகும். பெடரல் ரிசர்வ் மன்றமானது, பொதுவான பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய நீண்டகால பணவீக்கப் போக்கின் மதிப்பீட்டின் துல்லியத்தைப் பாதிக்கும் குறுகிய கால விலை ஏற்றத் தாழ்வைச் சமாளிக்க, உணவு மற்றும் ஆற்றல் விலைகளை விடுத்து, ஒட்டுமொத்தப் பணவீக்கத்தை அளவிட மையப் பணவீக்க வீதத்தைப் பயன்படுத்துகிறது.

இதனுடன் தொடர்புடைய பிற பொருளாதார கருத்துகள்: பணவாட்டம் – பொது விலையேற்றத்தின் அளவில் ஏற்படும் வீழ்ச்சி; பணவீக்க வீழ்ச்சி – பணவீக்க வீதத்தில் ஏற்படும் வீழ்ச்சி; கட்டற்ற பணவீக்கம் – கட்டுப்பாடற்ற பணவீக்க சுழற்சி; தேக்கநிலை – பணவீக்கம், மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக வேலையின்மை ஆகியவை ஒருங்கே சேர்ந்தது; மற்றும் மறுவீக்கம் – பணவாட்ட அழுத்தங்களைச் சமாளிக்கும் விதமாக பொதுவான விலைகளின் அளவினை உயர்த்த மேற்கொள்ளப்படும் முயற்சி.

அளவீடுகள்

பணவீக்கம் 
1666 முதல் 2019 வரை அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நிலவிய ஆண்டு பணவீக்க வீதங்கள்.

வழக்கமாக விலைக் குறியீட்டின் பணவீக்க வீதத்தைக் கணக்கிடுவதன் மூலமே பணவீக்கமானது மதிப்பிடப்படுகிறது, குறிப்பாக நுகர்வோர் விலைக் குறியீடே இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு "சராசரி நுகர்வோர்" வாங்கக்கூடிய பொருள்கள் மற்றும் சேவைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் விலைகளை நுகர்வோர் விலைக் குறியீடு அளவிடுகிறது. பணவீக்க வீதம் என்பது குறிப்பிட்ட கால அளவில் ஒரு விலைக் குறியீட்டின் மாற்றத்தின் சதவீத வீதமாகும்.

எடுத்துக்காட்டுக்கு, 2007 ஆம் ஆண்டு ஜனவரியில், அமெரிக்க ஒன்றியத்தின் நுகர்வோர் விலைக் குறியீடு 202.416 என்ற அளவிலும் அதுவே 2008 ஆம் ஆண்டு ஜனவரியில் 211.080 என்ற அளவிலும் இருந்தது. 2007 ஆம் ஆண்டின், CPI மதிப்பில் ஏற்பட்ட பணவீக்க சதவீத வீதத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரம் பின்வருமாறு:

    பணவீக்கம் 

இந்த ஓராண்டு காலத்திலான CPI க்கான விளைவு பணவீக்க வீதம் 4.28% ஆகும், அதாவது 2007 இல் சராசரி அமெரிக்க நுகர்வோர் வாங்கும் பொருள்களின் பொதுவான விலைகள் சராசரியாக நான்கு சதவீதம் உயர்ந்துள்ளது.

விலைப் பணவீக்கத்தைக் கணக்கிடுவதற்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் விலைக் குறியீடுகளில் பின்வருவனவும் அடங்கும்:

  • அடிப்படை வாழ்க்கைச் செலவுக் குறியீடுகள் (COLI) என்பன CPI போன்றனவே, இந்த விலைக் குறியீடுகள் நிலையான மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான வருவாய்களின் மெய் மதிப்பைப் பராமரிப்பதற்காக, அவற்றைச் சரி செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
  • உற்பத்தியாளர் விலைக் குறியீடுகள் (PPIகள்) என்பன உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்பட்ட, விலைகளில் ஏற்பட்ட சராசரி மாற்றங்களை அளவிடப் பயன்படும் குறியீடுகளாகும். விலைத் தள்ளுபடி, இலாபங்கள் மற்றும் வரிகள் ஆகியவற்றின் காரணமாக நுகர்வோர் அளிக்கும் தொகையிலிருந்து வேறுபட்ட தொகையையே உற்பத்தியாளர் பெறும்படி செய்யக்கூடும் என்ற விதத்தில் இது CPI இலிருந்து வேறுபடுகிறது. பொதுவாக PPI இல் ஏற்படும் ஓர் உயர்வினைத் தொடர்ந்து CPI இல் உயர்வு ஏற்பட சிறிது தாமதமும் ஆகிறது. உற்பத்தியாளர் விலைக் குறியீடானது மூலப் பொருள்களின் விலைகளால் உற்பத்தியாளர்களுக்கு உருவாகும் அழுத்தங்களை அளவிடுகிறது. இவ்விளைவு நுகர்வோரின் பொறுப்பில் "சுமத்தப்படலாம்" அல்லது இலாபத்தால் சரிசெய்யப்படலாம், அல்லது உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலம் ஈடுசெய்யப்படலாம். இந்தியாவிலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் PPI இன் முந்தைய வடிவமானது மொத்த விற்பனை விலைக் குறியீடு என அழைக்கப்பட்டது.
  • சரக்கு விலைக் குறியீடுகள் , தேர்ந்தெடுக்கப்பட்ட சரக்குகளின் விலையை அளவிடுகின்றன. தற்காலத்தில் சரக்கு விலைக் குறியீடுகள், ஒரு பணியாளரின் "இறுதி அடிமட்ட" செலவிற்கான கூறுகளின் ஒப்புமை முக்கியத்துவத்தைக் கொண்டு அளவிடப்படுகின்றன.
  • மைய விலைக் குறியீடுகள் : உணவு மற்றும் எண்ணெய் சந்தையில் நிலவும் அளிப்பு மற்றும் தேவை நிலைகளின் மாற்றங்களால் உணவு மற்றும் எண்ணெய் விலைகள் விரைவாக மாறக்கூடும் என்பதால், இந்த விலைகளைக் கருத்தில் கொண்டு நீண்டகால விலை நிலைகளின் போக்குகளைக் கண்டறிவது கடினம். ஆகவே, பெரும்பாலான புள்ளியியல் ஏஜென்ஸிகளும் CPI போன்ற பரவலான விலைக் குறியீடுகளில் மிகவும் எளிதில் மாறக்கூடிய (உணவு மற்றும் எண்ணெய் போன்ற) கூறுகளைக் கருத்திக் கொள்ளாமல் கணக்கிடப்படும் 'மையப் பணவீக்கத்தையே' அறிக்கையிடுகின்றன. ஏனெனில் மையப் பணவீக்கமே குறிப்பிட்ட சந்தைகளில் நிலவும் குறுகிய கால அளிப்பு மற்றும் தேவை நிலைகளால் குறைவாக பாதிக்கப்படுகிறது, இதனால் மத்திய வங்கிகள் தற்கால பணக்கொள்கையின் பணவீக்கப் பாதிப்புகளைச் சிறப்பாக அளவிட அதையே நம்புகின்றன.

பணவீக்கத்தின் பிற அளவீடுகள் பின்வருமாறு:

  • GDP பணவாட்டக் காரணி என்பது மொத்த உள்நாட்டுத் தயாரிப்பில் (GDP) அடங்கும் எல்லாப் பொருள்கள் மற்றும் சேவைகளின் விலையை அளவிடுவதாகும். அமெரிக்க வணிகத்துறை, அமெரிக்க GDP க்கான ஒரு பணவாட்டக் காரணி வரிசையை வெளியிடுகிறது, இது அதன் சராசரி GDP அளவீட்டை அதன் அசல் GDP அளவீட்டால் வகுப்பதால் கிடைக்கும் மதிப்பு என வரையறுக்கப்படுகிறது.
  • வட்டாரப் பணவீக்கம் தொழிலாளர்கள் புள்ளியியல் ஆணையமானது CPI-U கணக்கீடுகளை அமெரிக்க ஒன்றியத்தின் வெவ்வேறு வட்டாரங்களுக்கானதாகப் பிரிக்கிறது.
  • வரலாற்றுப் பணவீக்கம் அரசாங்கங்களுக்கான தரநிலையான இசைவுள்ள பொருளாதாரத் தரவைச் சேகரிக்கும் முன்பும் வாழ்தலின் ஒப்புமைத் தரநிலைகளைக் காட்டிலும் தனித்துவமானவற்றை ஒப்பிடுவதற்காகவும் பல்வேறு பொருளியலாளர்கள் கணிக்கப்பட்ட பணவீக்க மதிப்புகளைக் கணக்கிட்டுள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேகரிக்கப்பட்ட பணவீக்கத் தரவு, பெரும்பாலும் அந்த நேரத்தில் தொகுக்கப்பட்டதைக் காட்டிலும் பொருள்களின் அறியப்பட்ட விலைகளை அடிப்படையாகக் கொண்டே கணிக்கப்பட்டது. தொழில்நுட்பத்திற்காக அது வாழ்தலின் அசல் தரநிலையில் உள்ள வேறுபாடுகளுக்காக சரிசெய்யப்பட்டும் உள்ளது.
  • சொத்து விலைப் பணவீக்கம் என்பது பங்கு (சமப்பங்கு) மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற அசல் அல்லது நிதி சொத்துகளின் விலைகளின் ஏற்படும் கூடுதல் உயர்வாகும். பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த வகைக் குறியீடுகள் எதுவும் இல்லை, எனினும் CPI அல்லது மையப் பணவீக்கத்தை மட்டும் நிலைப்படுத்தாமல் சில சொத்து விலைகளையும் கருத்தில் கொள்ளக்கூடிய பரவலான பொது விலை நிலை பணவீக்கத்தை நிலைப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொள்வது நல்லது என சில மத்திய வங்கியியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். பங்கு விலைகள் அல்லது ரியல் எஸ்டேட் விலைகள் உயரும் போது வட்டி வீதங்களை அதிகரித்தல், இந்த சொத்துகளின் விலை குறையும் போது வட்டி வீதங்களைக் குறைத்தல் ஆகிய நடவடிக்கைகளின் மூலம் மத்திய வங்கிகள், சொத்து விலைகளில் ஏற்படும் வீக்கங்களையும் வீழ்ச்சிகளையும் தடுப்பதில் பெருமளவு வெற்றிபெறக்கூடும் என்பதே இதற்குக் காரணமாகும்.

அளவிடுதலில் உள்ள சிக்கல்கள்

ஒரு பொருளாதாரத்தில் நிலவும் பணவீக்கத்தை அளவிடுவதற்கு பொதுவான பொருள்கள் மற்றும் சேவைகளின் குறிப்பிட்ட தொகுப்பின் சராசரி விலைகளில் ஏற்படும் மாற்றங்களை வகைப்படுத்தும் நோக்கம் சார்ந்த சிறப்பான அணுகுமுறைகள் அவசியமாகும், மேலும் அளவு, தரம் அல்லது செயல்திறன் போன்ற மதிப்புகளால் விளையும் உயர்வுகளை அவற்றிலிருந்து பிரித்தறியும் திறனும் அவசியமாகும். எடுத்துக்காட்டாக, 10 அவுன்ஸ். மக்காச்சோள கேனின் விலை தரத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் ஓராண்டில் $0.90 இலிருந்து $1.00 விலைக்கு மாறுகிறது என்க, இந்த விலை வேறுபாடு பணவீக்கத்தைக் குறிக்கிறது எனலாம். எனினும் இந்த ஒரு விலையில் ஏற்படும் மாற்றம் மட்டுமே ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் பணவீக்கத்தை முழுவதும் குறிக்கிறது என்று கூற முடியாது. ஒட்டுமொத்த பணவீக்கத்தை அளவிட, முக்கியமான பொருள்கள் மற்றும் சேவைகளின் ஒரு "தொகுப்பின்" விலையில் ஏற்படும் மாற்றம் அளவிடப்படுகிறது. இதுவே விலைக் குறியீட்டின் அவசியத்தை வழங்குகிறது, இது பல பொருள்கள் மற்றும் சேவைகளின் "தொகுப்பின்" தொகுப்பு விலையைக் குறிப்பதாகும். தொகுப்பு விலை என்பது அந்தத் "தொகுப்பிலுள்ள" உருப்படிகளின் சராசரி விலைகளின் கூடுதலாகும். ஓர் உருப்படியின் விலையை ஒரு சராசரி நுகர்வோர் வாங்கக்கூடிய அந்த உருப்படியின் எண்ணிக்கையால் பெருக்குவதன் மூலம் இந்தச் சராசரி கணக்கிடப்படுகிறது. ஓர் உருப்படியின் விலையின் மாற்றத்தால் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தை அளவிடுவதற்கு இந்தச் சராசரி விலையிடுதல் முறை அவசியமானதாகிறது. நுகர்வோர் விலைக் குறியீடானது ஒரு சராசரி நுகர்வோரின் மொத்த செலவில் குறிப்பிட்ட பொருள்களுக்கும் சேவைகளுக்கும் எவ்வளவு விகிதம் செலவழிக்கப்படுகிறது என்பதைத் தீர்மானிக்க, வீடுகளில் கணக்கெடுப்பு நடத்துதல் போன்ற முறைகளைப் பயன்படுத்துகிறது, மேலும் அந்த உருப்படிகளின் சராசரி விலைகளைக் கணக்கிடுகிறது. இந்த கணக்கிடப்பட்ட சராசரி விலைகளைத் தொகுத்து ஒட்டுமொத்த விலையானது கணக்கிடப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் விலைகளில் ஏற்படும் மாற்றங்களைச் சிறப்பாக ஒப்பிட, இந்த விலைக் குறியீடுகள் ஓர் "அடிப்படை ஆண்டைக்" குறித்து, அதற்கான மதிப்பை 100 என நிர்ணயித்துக்கொள்கின்றன. அடுத்து தொடர்ச்சியான ஆண்டுகளின் குறியீட்டு விலைகள் அடிப்படை ஆண்டின் விலையைப் பொறுத்து குறிக்கப்படுகின்றன.

தொகுப்பில் கருதப்படும் பொருள்களின் ஒப்புமை எடைக்காகவோ அல்லது கடந்த காலத்தின் பொருள்கள் மற்றும் சேவைகளுடன் தற்கால பொருள்களும் சேவைகளும் எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன என்ற விதத்தினாலோ காலப்போக்கில் பணவீக்க அளவீடுகள் மாற்றம் செய்யப்படுகின்றன. 'சராசரி நுகர்வோர்' வாங்கும் பொருள்கள் மற்றும் சேவைகளின் வகைகளில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, தேர்ந்தெடுக்கப்படும் பொருள்கள் மற்றும் சேவைகளின் வகைகளில் காலப்போக்கில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்படலாம், பழையன இல்லாமல் போகலாம், இருக்கின்ற தயாரிப்புகளின் தரம் மாறலாம் மற்றும் நுகர்வோரின் முன்னுரிமைகள் மாறலாம். சந்தையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ற வகையில் பணவீக்க அளவீடுகளும் சரியாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக "தொகுப்பில்" சேர்க்கப்படும் பொருள்கள் மற்றும் சேவைகளின் வகைகளும் பணவீக்க அளவீடுகளில் பயன்படுத்தப்படும் தொகுப்பு விலைகளும் காலப்போக்கில் மாற்றம் செய்யப்படும்.

எதிர்நோக்கப்படும் சுழற்சி விலை மாற்றங்களை வகைப்படுத்த, பணவீக்க எண்கள் அவ்வப்போது காலத்திற்கேற்றபடி சரிசெய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, வெப்பமூட்டும் சாதனங்களின் விலை குளிர்கால மாதங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம், மேலும் ஆற்றல் அல்லது எரிபொருள் தேவையில் ஏற்படும் மாற்றச் சுழற்சியினை ஈடுசெய்யும் வகையில் பணவீக்கத்தை அளவிடும்போதும் இந்த காலத்திற்கேற்ற சரிசெய்தல் பயன்படுத்தப்படுகிறது. புள்ளியியல் மாற்றத்தையும் தனிப்பட்ட விலைகளின் எளிதில் மாறும் தன்மையையும் ஈடுகட்ட, பணவீக்க எண்களின் சராசரி கணக்கிடப்படலாம் அல்லது புள்ளியியல் முறைகளுக்கு உட்படுத்தப்படலாம்.

பணவீக்கப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, நிறுவனங்கள் குறிப்பிட்ட சில வகை விலைகள் அல்லது மத்திய வங்கிகள் தங்கள் பணக்கொள்கையைக் கட்டமைக்கப் பயன்படுத்தும் மையப் பணவீக்க வீதம் போன்ற சிறப்புக் குறியீடுகளில் மட்டுமே கவனம் செலுத்தலாம்.

விளைவுகள்

பொதுவானவை

பொருள்களின் விலைகளின் பொதுவான நிலை உயர்வது என்பது நாணயத்தின் வாங்குதல் திறன் குறைவதைக் குறிக்கிறது. அதாவது, பொருள்களின் விலைகளின் பொதுவான நிலை உயரும் போது ஒவ்வொரு நாணயமும் வாங்கக்கூடிய சரக்குகள் மற்றும் சேவைகளின் அளவு குறைகிறது. பணவீக்கத்தின் விளைவுகள் பரவலாக இல்லை, மேலும் வாங்குதல் திறன் குறைவதன் விளைவாக மறைமுக செலவுகள் ஒரு சிலருக்கும்; அதனால் கிடைக்கும் நன்மைகள் பிறருக்கும் சென்றடைகின்றன. எடுத்துக்காட்டுக்கு, நிலையான வட்டி வீதத்தில் கடன் வழங்கியவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் பணவீக்கத்தின் காரணமாக, வட்டி வருவாயின் வாங்குதல் திறன் குறைகிறது, மாறாக கடன் பெற்றவர்கள் பலனடைகின்றனர். ரொக்கச் சொத்து வைத்திருக்கும் தனி நபரோ அல்லது நிறுவனங்களோ தங்களிடம் உள்ள பணத்தினைச் செலவழிப்பதில் வாங்குதல் திறன் குறைவை எதிர்கொள்வர். பணவீக்கத்தின் காரணமாக பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கான ஊதிய உயர்வுகள் பின் தங்கிவிடும், குறிப்பாக நிலையான ஊதியம் வாங்குவோர் மிகவும் பாதிப்படைவர்.

விலை நிலையின் உயர்வினால் (பணவீக்கம்) பணம் (பயன்பாட்டில் உள்ள பணம்) மற்றும் பணத்தின் அடிப்படையில் விலையிடப்படும் அடிப்படைப் பணத் தன்மையுள்ள பிறவற்றின் மெய் மதிப்பு குறைகிறது (எ.கா. கடன்கள், பத்திரங்கள், நிலையான ஒய்வூதியங்கள்). எனினும், பணம் சாராத பொருள்களின் மெய் மதிப்பில் பணவீக்கத்தின் பாதிப்பு இல்லை (எ.கா. பொருள்கள் மற்றும் கார், தங்கம் போன்ற சரக்குகள் மற்றும் ரியல் எஸ்டேட்) ஏனெனில் அவற்றின் விலைகள் பணத்தை அடிப்படையாகக் கொண்டு நிலையாக நிர்ணயிக்கப்படுவதில்லை.

எதிர்மறையானவை

அதிக அல்லது கணிக்க முடியாத பணவீக்கமானது ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் தீங்காகக் கருதப்படுகிறது. அவ்வகைப் பணவீக்கங்கள் சந்தையில் செயல்திறன் இழப்பை ஏற்படுத்துகின்றன, மேலும் அவை நிலவுகையில் நிறுவனங்கள் நீண்ட காலத்திற்கான வரவு செலவு மதிப்பீட்டைச் செய்வது மிகவும் கடினமாகிறது. பணவீக்கத்தினால் நிறுவனங்கள் உற்பத்தித் திறனில் கவனம் செலுத்த முடியாது மேலும் பணவீக்கத்தின் காரணமாக இலாப நட்டத்தில் கவனம் செலுத்தும் நடவடிக்கையினால் அவர்கள் பொருள்கள் மற்றும் சேவைகளிலிருந்து பணியாளர்களை அகற்றும் நிலைக்குட்படுகிறார்கள். எதிர்கால வாங்குதல் திறனின் நிச்சயமற்ற தன்மையின் காரணமாக முதலீடு மற்றும் சேமிப்பில் ஊக்கமிழக்கப்படுகிறது. பணவீக்கத்தின் காரணமாக வரி செலுத்துபவர்கள் வருமான வரி வீதத்திற்கு உட்படுத்தப்படுவதால், பணவீக்கமானது மறைமுக வரி உயர்வுகளுக்கு வழிவகுக்கிறது.

அதிக பணவீக்கத்தினால், வாங்குதல் திறனானது ஓய்வூதியம் போன்ற நிலையான வருவாய் பெறுபவர்களிடமிருந்து, பணவீக்கத்தின் அதிகரிப்புக்கேற்ப சமாளிக்கும் விதமான வருவாய் பெறுபவர்களுக்குக் கைமாறுகிறது. சர்வதேச வர்த்தகப் பங்குதாரர்களிடையேயும் இந்த கைமாறுதல் நிகழ்வு ஏற்படும். பணவீக்கத்தின் அதிகரிப்பால் நிலையான பரிவர்த்தனை வீதங்கள் சுமத்தப்படுவதால், ஏற்றுமதிக்கான செலவுகள் அதிகரித்து, அது வர்த்தகத்தின் சமநிலையைப் பாதிக்கிறது. கணிக்க முடியாத பணவீக்கத்தினால் விளையும் நாணயப் பரிமாற்ற விலைகளில் ஏற்படும் அதிக நிலையற்ற தன்மையினால் வர்த்தகத்திற்கும் எதிர்மறைப் பாதிப்புகள் ஏற்படலாம்.

    விலை-மிகுதி பணவீக்கம்
    அதிகரிக்கும் பணவீக்கத்தினால், பணியாளர்கள் நுகர்வோர் விலைகளைச் சமாளிக்க அதிக ஊதியத்தை கேட்கும் நிலை ஏற்படலாம். ஊதிய உயர்வானது எரிபொருள் பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம். ஒட்டுமொத்தப் பேரத்தில், விலை எதிர்பார்ப்புகளின் காரணியாக ஊதியம் முன்வைக்கப்படும், பணவீக்கம் முன்னேறும் போக்கைக் கொண்டிருக்கும் காலத்தில் இது இன்னும் அதிகமாகலாம். இது கூலி சுழற்சியை உருவாக்கி விடலாம். அதாவது, பணவீக்கம் கூடுதலான பணவீக்க எதிர்பார்ப்புகளை உருவாக்கிவிடும்.
    பதுக்கல்
    பணத்தின் மதிப்பு குறையும் முன்பு அதிகமாக உள்ள பணத்தைச் செலவழிக்க வேறு வழி இல்லாத நிலையில் மக்கள், பயன்பாட்டுப் பொருள்களை சொத்துகளாக வாங்கிக் குவிக்கின்றனர், இது பொருள்களின் பற்றாக்குறையை உண்டாக்குகிறது.
    கட்டற்ற பணவீக்கம்
    பணவீக்கம் முற்றிலுமாக கட்டுப்பாடற்ற நிலையை அடைந்தால் (ஏற்றத் திசையில்), பொருளாதாரத்தின் வழங்கும் திறன் பாதிக்கப்பட்டு அது பொருளாதாரத்தின் பொதுவான செயல்பாடுகளுக்கும் குறுக்கீடாக இருக்கலாம்.
    ஒதுக்கீட்டு செயல்திறன்
    பொருள்களை வழங்குவது அல்லது அதன் தேவையில் ஏற்படும் மாற்றம் பொதுவாக அதன் விலையில் மாறுதலை உருவாக்கும், இது வாங்குபவர்களும் விற்பனையாளரும் தங்களை புது சந்தை நிலவரத்திற்கேற்ப தங்கள் வழிமுறைகளை மாற்றி கொள்வதற்கான அறிகுறி ஆகும். ஆனால் பணவீக்கத்தின் காரணமாக தொடர்ந்து சீராக விலைகள் மாறும் போது, உண்மையான விலை அறிகுறிகள் புள்ளியியல் மாற்றத்தினால் இழக்கப்படுவதால் ஏஜெண்டுகள் அவற்றைக் கருத்தில் கொள்வது குறைகிறது. இதன் விளைவாக ஒதுக்கீட்டு செயல்திறனில் இழப்பு ஏற்படுகிறது.
    சமாளிப்பு சிரத்தை
    அதிக பணவீக்கம், கையிருப்பு ரொக்கச் சமநிலையைத் தக்கவைப்பதன் வாய்ப்பிழப்பை அதிகரிக்கிறது, மேலும் மக்களை, தங்கள் சொத்துகளின் பெரும்பகுதியை வட்டி செலுத்தும் கணக்குகளில் இணைத்துக்கொள்ளத் தூண்டுகிறது. இருப்பினும், அப்போதும் பரிமாற்றங்களை மேற்கொள்ள ரொக்கம் தேவை, அதாவது பணம் எடுப்பதற்காக "வங்கிக்குச் செல்லும் பயணங்கள்" அதிகரிப்பதால் பழமொழி பாணியில் ஒவ்வொரு பயணத்திலும் "செருப்பு தேய்கிறது" என்பர்.
    மெனு செலவுகள்
    அதிக பணவீக்கத்தினால், நிறுவனங்கள் பொருளாதார மாற்றங்களுக்கேற்ப அடிக்கடி விலைகளை மாற்றுவது இன்றியமையததாகிறது. ஆனால் புதிய விலைப்பட்டியல் அச்சிடுவது போன்ற தேவைகளால், அடிக்கடி விலைகளை மாற்றுவது என்பதே அதிக செலவளிக்கும் செயலாகும் இது வெளிப்படையானதாகவோ அல்லது மறைமுகமானதாகவோ இருக்கலாம்.
    வணிக சுழற்சிகள்
    ஆஸ்திரிய வணிகச்சுழல் கோட்பாட்டின் படி, பணவீக்கம் வணிக சுழற்சியை உருவாக்குகிறது. இதனை ஆஸ்திரிய பொருளியலாளர்கள் பணவீக்கத்தின் மிகவும் சேதாரமுண்டாக்கும் விளைவாகக் குறிப்பிடுகிறார்கள். ஆஸ்திரிய கோட்பாட்டின் படி, செயற்கையான குறைந்த வட்டி வீதங்களும் அதனோடு தொடர்புடைய மொத்த பண அளவில் ஏற்படும் அதிகரிப்பும் ஆபத்தான, பாதுகாப்பற்ற கடன்களில் தள்ளும், இது தவறான முதலீடுகளுக்கு வழி வகுக்கும், பின்னர் அவை நிலையற்ற தன்மையை அடைந்துவிடும்பட்சத்தில் அவற்றைப் பரிமாற்றம் செய்ய வேண்டியிருக்கும்.

நேர்மறையானவை

    தொழிலாளர் சந்தையில் சீரமைவு
    கெயின்சியன் பொருளியலாளர்கள் பெயரளவிளான கூலி சீர்படுத்தும் வேகம் குறைவு என நம்புகின்றனர். இதனால் தொழிலாளர் சந்தையில் நீண்டகால சமநிலையின்மையும் வேலையின்மையும் நிலவ வாய்ப்புள்ளது. பெயரளவிளான கூலி நிலையானதாக இருந்தால் உண்மையான கூலியை பணவீக்கம் குறைக்கும் என்பதால், அது தொழிலாளர் சந்தைகள் விரைவில் சமநிலையடைய அது உதவுவதால் ஓரளவு பணவீக்கம் பொருளாதாரத்திற்கு நல்லது என கெயின்சியன் பொருளியலாளர்கள் வாதிடுகின்றனர்.
    கடன் தள்ளுபடி
    நிலையான பெயரளவு வட்டி வீதத்தில் கடன் பெற்றிருக்கும் கடனாளிகளுக்கு பணவீக்க வீதத்தின் உயர்வால் உண்மையான வட்டி குறைகிறது. பெயரளவு வட்டிவீதத்திலிருந்து பணவீக்க வீதத்தைக் கழித்தால் கடனுக்கான உண்மையான வட்டி கிடைக்கும். (R=n-i) எடுத்துக்காட்டாக 6% நிலையான வட்டிவீதத்தில் நீங்கள் கடன் பெற்றிருந்து, பணவீக்க வீதம் 3% எனில், அந்தக் கடனுக்கு நீங்கள் செலுத்தும் உண்மையான வட்டி வீதம் 3% மட்டுமே ஆகும். மேலும் உங்கள் நிலையான வட்டி வீதம் 6% மற்றும் பணவீக்க வீதம் 20% ஆக உயர்கிறது எனில் உங்கள் உண்மையான வட்டி வீதம் -14% ஆக இருக்கும் என்பதும் உண்மை. வங்கிகள் மற்றும் பிற கடன் கொடுப்பவர்கள், தொடக்கத்தில் குறிப்பிடும் வட்டி வீதத்தை உயர்த்தி, கொடுக்கும் பணத்தில் பணவீக்க பிரீமியத்தைச் சேர்த்தோ அல்லது மாறும் வட்டி வீதத்தைப் பயன்படுத்தியோ இந்தப் பணவீக்க சிரமத்தைச் சமாளிக்கின்றனர்.
    சமாளிக்கும் வாய்ப்பு
    வங்கிகள் மத்திய வங்கியிடமிருந்து கடன் பெறும் தொகைக்கான வீதமான தள்ளுபடி வீதத்தை அமைக்கும் திறனும் பெயரளவு வட்டிவீதத்தைப் பாதிக்கும் நோக்கத்தில் பத்திரங்களின் சந்தையில் நிகழ்த்தப்படும் மத்திய வங்கியின் குறுக்கீட்டு நடவடிக்கைகளான பகிரங்க அங்காடி நடவடிக்கைகளுமே மொத்த பண அளவைக் கட்டுப்படுத்துவதற்கான முதன்மைக் கருவிகளாகும். ஒரு பொருளாதாரம் தாழ்வான அல்லது பூச்சிய வட்டிவீதங்களவில், பின்னிறக்க நிலையில் இருக்கும்பட்சத்தில், பொருளாதாரத்தைச் சீராக வைக்க வேண்டிய காரணத்தினால், (எதிர்மறையான பெயரளவு வட்டி வீதத்ங்கள் சாத்தியமற்றவை என்பதால்) வங்கிகள் மேலும் வட்டி வீதத்தைக் குறைக்க முடியாது - இது நீர்மை செயலறு நிலை எனப்படுகிறது. மிதமான பணவீக்கமானது, பெயரளவு வட்டி வீதங்கள் பூச்சியத்திற்கு மேல் உள்ளபடி பராமரித்துக்கொள்கிறது, இதனால் தேவை ஏற்படும் போது வங்கிகளால் பெயரளவு வட்டி வீதத்தை அகற்றிக்கொள்ள முடியும்.
    டோபின் விளைவு
    மிதமான பணவீக்கத்தினால் பொருளாதாரத்திலான முதலீட்டை அதிக்கக்கூடும், மேலும் இந்த அதிகரிப்பினால் துரித வளர்ச்சியோ அல்லது குறைந்தபட்சம் வருவாயின் நிலைத்தன்மையின் உயர்வோ ஏற்படும் என நோபல் பரிசு பெற்ற பொருளியலாளர் ஜேம்ஸ் டோபின் ஒரு காலத்தில் வாதிட்டுள்ளார். பௌதிக மூலதனம் போன்ற மெய்யான சொத்துகளுடன் ஒப்பிடுகையில் பணம் சார்ந்த சொத்துகளுக்கான மீட்சியை பணவீக்கம் குறைக்கிறது என்ற உண்மையே இதற்குக் காரணமாகிறது. பணவீக்கத்தைத் தவிர்ப்பதற்கு, முதலீட்டாளர்கள் தங்கள் சொத்துக்களை பணமாக (அல்லது பணவீக்கத்தினால் பாதிக்கப்படக்கூடிய அதை ஒத்த வடிவில்) வைத்திருப்பதை விடுத்து, மெய்யான மூலதன திட்டங்களில் முதலீடு செய்வார்கள். பார்க்க டோபின் பணம் சார் மாதிரி

காரணங்கள்

பணவீக்கம் 
இங்கிலாந்து வங்கியும் இங்கிலாந்துப் பேரரசின் மத்திய வங்கியும் பணவீக்கத்தைக் கண்காணித்தும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்தும் வருகின்றன.

வரலாறில் பெரும்பாலான பொருளாதார இலக்கியங்கள், பணவீக்கம் ஏற்படுவதற்கான காரணம் என்ன மற்றும் அதன் விளைவுகள் என்ன என்பதைப் பற்றியே விவாதித்தன. பணவீக்கத்திற்கான காரணங்கள் எனக் கருதப்பட்ட பல கருத்துகள் இருந்துவந்தன. அவற்றை, பின்வரும் இரு பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம்: பணவீக்கத்தின் தரக்கோட்பாடுகள் மற்றும் பணவீக்கத்தின் அளவுக்கோட்பாடுகள். ஒரு விற்பனையாளர் தான் ஏற்றுக்கொள்ளும் பணத்தைக் கொண்டு, ஒரு வாங்குபவர் என்ற நிலையில் விரும்பும் பொருளைப் பெற அதைப் பரிமாற முடிய வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்பே பணவீக்கத்தின் தரக்கோட்பாட்டின் அடிப்படையாகும். பணவீக்கத்தின் அளவுக்கோட்பாடு என்பது, பண இருப்பு, அதன் பாய்வு வேகம் மற்றும் பெயரளவிலான பரிமாற்ற மதிப்பு ஆகியவற்றைத் தொடர்புபடுத்தும், பணத்தின் அளவுச் சமன்பாட்டையே அடிப்படையாகக் கொண்டது. ஆடம் ஸ்மித் மற்றும் டேவிட் ஹியூம் இருவரும் பணத்திற்கான பணவீக்கத்தின் அளவுக் கோட்பாட்டையும் தயாரிப்புக்கான பணவீக்கத்தின் தரக்கோட்பாட்டையும் முன்மொழிந்தனர்.

தற்காலத்தில் பணத் தொகைக் கோட்பாடானது நீண்டகாலத்திற்கான பணவீக்கத்திற்கான துல்லியமான மாதிரியாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதன் விளைவாக பொருளியலாளர்களிடையே, நீண்டகால அளவில் பணவீக்க வீதமானது மொத்த பண அளவின் வளர்ச்சியைப் பொறுத்தது என்ற ஒரு பரவலான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், குறைந்த கால அளவில் பணவீக்கமானது பொருளாதாரத்தின் அளிப்பு மற்றும் தேவைகளில் நிலவும் அழுத்தங்களால் பாதிக்கப்படலாம், மேலும் ஊதியங்கள், விலைகள் மற்றும் வட்டிவீதங்களின் ஒப்புமை நெகிழ்ச்சியினாலும் பாதிக்கப்படலாம். குறுகிய கால விளைவுகள் நீண்ட காலத்திற்கு முக்கியமானவையாக நீடிக்குமா என்ற கேள்வியே, பணம் சார் பொருளியலாளர்களுக்கும் கெயின்சியன் பொருளியலாளர்களுக்கும் இடையேயான விவாதத்தின் மையமாக உள்ளது. பணத்துவத்தில், பொதுவான போக்கைப் பாதிப்பதில் பிற காரணிகள் வெறும் விளிம்புநிலைப் பாதிப்புகளையே ஏற்படுத்தும் வண்ணம் விலைகளும் ஊதியங்களும் தங்களைச் சரி செய்துகொள்கின்றன. கெயின்சியன் பொருளியலாளர்களின் பார்வையில், விலைகளும் ஊதியங்களும் வேறுபட்ட வீதங்களில் சரி செய்யப்படுகின்றன, மேலும் இந்த வேறுபாடுகள் ஒரு பொருளாதாரத்திலுள்ள மக்களின் பார்வையில் உண்மையான வெளியீட்டில் ஏற்படுத்தும் விளைவுகள் "நீண்ட கால" அளவிலானவையாகத் தோன்றப் போதுமானவையாகும்.

கெயின்சியன் பார்வை

மொத்த பண அளவில் ஏற்படும் மாற்றங்கள் நேரடியாக விலைகளைப் பாதிக்காது, மேலும் விலைகளாகப் பாவிக்கப்படும் பொருளாதார அழுத்தத்தினால் ஏற்படும் விளைவே நாம் காணும் பணவீக்கத்திற்குக் காரணமாகும் என கெயின்சியன் பொருளாதாரக் கொள்கை முன்மொழிகிறது. பண இருப்பு என்பது பணவீக்கத்தின் தலையாய காரணியாகும், ஆனால் அது ஒன்று மட்டுமே காரணியல்ல.

பணவீக்கத்தில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன அவற்றை "முக்கோண மாதிரி}" என ராபர்ட் ஜே கார்டன் அழைக்கிறார் அவை பின்வருமாறு:

  • தனியார் மற்றும் அரசு செலவுகள் மற்றும் பிறவற்றின் அதிகரிப்பால் ஏற்படும் மொத்தத் தேவையின் அதிகரிப்பின் விளைவாக தேவை-மிகுதி பணவீக்கம் ஏற்படுகிறது. அதிக தேவை மற்றும் சாதகமான சந்தை நிலையில் முதலீடு மற்றும் விரிவாக்கத்தினை தூண்டுகிறது என்பதால் தேவை-மிகுதி பணவீக்கம் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு நன்மை விளைவிப்பதாகும்.
  • விலை-மிகுதி பணவீக்கம் , "தேவை அதிர்வு பணவீக்கம்" என்றும் அழைக்கப்படுகிறது, இது மொத்த தேவையின் (உள்ளார்ந்த உற்பத்தி) வீழ்ச்சியால் உருவாகிறது. இது இயற்கை சீரழிவுகளாலோ, அல்லது உள்ளீடுகளின் விலை அதிகரிப்பதாலோ உருவாகலாம். எடுத்துக்காட்டுக்கு, திடீரென எண்ணெய் வழங்குதல் குறைந்தால், எண்ணெய் விலை உயரும், இது விலை-மிகுதி பணவீக்கத்திற்குக் காரணியாகலாம். எண்ணெயையும் ஒரு மூலப்பொருளாக கொண்டு பிற பொருளைத் தயாரிப்பவர்களும் விலை உயர்வதால் நுகர்வோருக்கும் விலை உயர்த்தும் நிலை ஏற்படலாம்.
  • உள்ளமைவுப் பணவீக்கம் தகவமைப்பு எதிர்பார்ப்புகளால் தூண்டப்படுகிறது, மேலும் இது பெரும்பாலும் "விலை/கூலி சுருளுடன்" தொடர்புடையதாகிறது. இது பணியாளர்கள் தங்கள் கூலியை (பணவீக்க வீதத்திற்கு அதிகமாக இருக்கும் வகையில்) அதிகமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்வது, மற்றும் நிறுவனங்கள் இந்த அதிக பணியாளர் கூலியின் அதிகரிப்பு செலவினைக் காரணம் காட்டி தங்கள் வாடிக்கையாளரிடம் விலையை உயர்த்துவது, ஆகியவற்றால் உருவாகும் 'ஒன்றுக்கொன்று தொடர்புடைய சுழற்சி' ஆகியவற்றை உள்ளடக்கியது. உள்ளமைவுப் பணவீக்கம் கடந்தகால நிகழ்வுகளின் பாதிப்பையே உணர்த்துகிறது என்பதால், அதை நீட்டிப்புப் பணவீக்கமாகக் கருதலாம்.

தேவை-மிகுதிக் கோட்பாட்டின் படி, பொருளாதாரத்தினால் உருவாக்க முடிந்த அளவை (அதன் உள்ளார்ந்த உற்பத்தி) மீறி மொத்தத் தேவை அதிகரிக்கும்போதெல்லாம் பணவீக்க வீதம் முடுக்கப்படுகிறது. ஆகவே, மொத்தத் தேவையை அதிகரிக்கும் எந்தக் காரணியும் பணவீக்கத்திற்கு காரணமாகலாம். இருப்பினும், புழக்கத்தில் உள்ள பணத்தின் அளவை பொருளாதாரத்தின் உண்மையான வளர்ச்சி வீதத்தை விட வேகமாக அதிகரிப்பதன் மூலம் மட்டுமே, மொத்தத் தேவையானது உற்பத்தித் திறனை விட அதிகரிக்கப்பட முடியும். பணத்தின் தேவையின் துரிதச் சரிவும் (பொதுவாக அரிது எனினும்) இதற்கு ஒரு காரணியாகலாம், கருப்புச் சாவின் போது ஐரோப்பாவில் ஏற்பட்ட நிகழ்வு அல்லது 1945 ஆம் ஆண்டு ஜப்பானின் தோல்விக்கு முன்பு ஜப்பான் கைப்பற்றியிருந்த மாகாணங்களில் ஏற்பட்ட நிகழ்வு ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

உள்நாட்டுப்போர் போன்ற சூழ்நிலைகளுக்காக அரசாங்கங்கள் அதிக நிதியைச் செலவழித்தல், அதிகப்படியாக பணத்தை அச்சடித்தல் போன்ற நடவடிக்கைகளால், பணவீக்கத்தில் பணத்தால் ஏற்படும் பாதிப்பு வெளிப்படையானதாகும். இது சில நேரங்களில், ஒரு மாதமோ அல்லது அதற்கும் குறைவான கால அளவிலேயே, விலைகள் இரட்டிப்பாகும் சூழ்நிலையான கட்டற்ற பணவீக்கத்திற்கு வழிவகுக்கிறது. மொத்த பண அளவானது மிதமான பணவீக்க அளவை நிர்ணயிப்பதில் எவ்வளவு முக்கியமானது என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவினாலும், அது முக்கியப்பங்கு வகிக்கிறது என்று கருதப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, இந்த தொடர்பு மிகவும் உறுதியானது என பணம் சார் பொருளியலாளர்கள் நம்புகின்றனர்; மாறாக கெயின்சியன் பொருளியலாளர்கள் பணவீக்கத்தை நிர்ணயிப்பதில் மொத்த பண அளவை விட பொருளாதாரத்தில் நிலவும் மொத்த தேவையின் பங்கே முக்கியமானது என வலியுறுத்துகின்றனர். அதாவது, மொத்தத் தேவையை நிர்ணயிக்கும் ஒரே காரணி மொத்த பண அளவே ஆகும் என்பது கெயின்சியன் பொருளியலாளர்களின் கருத்தாகும்.

சில கெயின்சியன் பொருளியலாளர்கள் மொத்த பண அளவின் கட்டுப்பாடு மத்திய வங்கியிடம் இருப்பது போன்ற கருத்தை மறுக்கின்றனர், வணிக ரீதியான வங்கிகள் வழங்கிய வங்கிக் கடனுக்கான தேவைக்கேற்ப மொத்த பண அளவானது சரி செய்யப்படுவதால் மத்திய வங்கியிடம் அதற்கான சிறிது கட்டுப்பாடு மட்டுமே உள்ளது என வாதிடுகிறார்கள். இது உள்ளார்ந்த பணக்கொள்கை எனப்படுகிறது, மேலும் இது 1960களைச் சேர்ந்த முன்பு கெயின்சினுக்குப் பிந்தைய காலத்தின் பொருளியலாளர்களால் பரிந்துரைக்கப்பட்டது. தற்போது இது டெய்லர் விதியைப் பரிந்துரைப்பவர்களின் மையக் கவன ஈர்ப்பாக உள்ளது. இது உலகளாவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை – வங்கிகள் கடன் கொடுப்பதன் மூலம் பணத்தை உருவாக்குகின்றன, ஆனால் மெய்யான வட்டி வீதங்கள் அதிகரிப்பதற்கேற்ப இந்தக் கடன்களின் மொத்த அளவு குறைகிறது. இதனால், மத்திய வங்கிகள், பணத்தின் மதிப்பைக் குறைத்து அல்லது அதிகரித்து மொத்த பண அளவைக் கட்டுப்படுத்த முடியும், இவ்வாறு தனது உற்பத்தியை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்.

பணவீக்கத்திற்கும் வேலையின்மைக்கும் இடையே உள்ள தொடர்பே பணவீக்கப் பகுப்பாய்வின் அடிப்படைக் கருத்தாகும், இது ஃபிலிப்ஸ் வளைவு எனப்படுகிறது. இந்த மாதிரியானது விலையின் நிலைத்தன்மை மற்றும் வேலைவாய்ப்பினிடையே வர்த்தகப் பரிமாற்றம் இருப்பதாக அறிவுறுத்துகிறது. இதனால், ஓரளவு பணவீக்கத்தின் மூலம் வேலையின்மையைக் குறைக்க முடியும். ஃபிலிப்ஸ் வளைவு மாதிரியானது 1960களில் அமெரிக்க ஒன்றியத்தின் அனுபவத்தை சிறப்பாக விளக்கியது, ஆனால் 1970களில் நிகழ்ந்த பணவீக்க உயர்வு மற்றும் பொருளாதார தேக்கநிலை ஆகியவற்றின் சேர்க்கையை விளக்கத் தவறியது.

இவ்வாறு, தற்கால மேக்ரோ பொருளியலாளர்கள் பணவீக்கத்தை மாறும் ஃபிலிப்ஸ் வளைவைப் பயன்படுத்தி விளக்குகின்றனர் (இதில் பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்கிடையேயான வர்த்தகப் பரிமாற்றம் மாறுகிறது), ஏனெனில் அளிப்பின் அதிர்வு மற்றும் பணவீக்கம் போன்ற சில காரணிகள் பொருளாதாரத்தின் இயல்பான செயல்பாடுகளிலேயே உருவாக்கப்படுகின்றன. முந்தையது 1970களின் எண்ணெய் அதிர்வு போன்ற நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறது, பிந்தையது விலை/கூலி சுருள் மற்றும் பணவீக்க எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைக் குறிக்கிறது, இவை "இயல்பாக" பணவீக்கத்தினால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதைக் குறிக்கின்றன. இதனால், ஃபிலிப்ஸ் வளைவானது முக்கோண மாதிரியின் தேவை மிகுதி கூறை மட்டுமே வெளிப்படுத்துகிறது.

மற்றொரு குறிப்பிடத்தகுந்த கருத்து உள்ளார்ந்த உற்பத்தி ஆகும் (இயல்பான மொத்த உள்நாட்டு உற்பத்தி என சில நேரங்களில் அழைக்கப்படுகிறது), இது நிறுவனம் சார்ந்த மற்றும் இயற்கைத் தடைகள் சுமத்தப்பட்ட நிலையில் சிறப்பான உற்பத்தியைக் கொண்டுள்ள ஒரு பொருளாதாரத்தில், GDP மதிப்பின் ஒரு நிலையாகும். (இந்த வெளியீடானது, வேலையின்மையின் முடுக்கப்படாத பணவீக்க வீதம் NAIRU அல்லது வேலையின்மையின் "இயல்பான" வீதம் அல்லது முழுமையான வேலை வாய்ப்பு வேலையின்மை வீதம் ஆகியவற்றுக்குரியது.) GDP அதன் சாத்தியக்கூறை விட அதிகரித்தால் (மற்றும் வேலையின்மை NAIRU க்குக் குறைவாக இருந்தால்), வழங்குபவர்கள் தங்கள் விலையை உயர்த்தினால் மற்றும் உள்ளமைவுப் பணவீக்கம் மோசமான நிலையைடைந்தால் பணவீக்கமானது முடுக்கப்படும் என இந்தக் கோட்பாடு கூறுகிறது. GDP அதன் சாத்தியக்கூறை விடக் குறைந்தால் (மற்றும் வேலையின்மை NAIRU க்கும் அதிகமாக இருந்தால்), வழங்குபவர்கள் விலைகளைக் குறைத்தும் உள்ளமைவுப் பணவீக்கத்தை அகற்றியும் தங்கள் அதீதத் திறனை நிரப்ப முயற்சிப்பதால், பணவீக்கம் மட்டுப்படும் .

இருப்பினும், கொள்கை உருவாக்கும் நோக்கில் இந்தக் கோட்பாட்டில் உள்ள ஒரு சிக்கல் என்னவெனில், உள்ளார்ந்த உற்பத்தியின் சரியான நிலை (மற்றும் NAIRU இன் நிலை ஆகியவை) தெரியாது, மேலும் அது காலத்தால் மாறுவதாக உள்ளது. பணவீக்கம் சமச்சீரற்ற முறையில் செயல்படுவது, ஏனெனில் அது குறைவதை விட உயர்வதில் அதிக வேகமாக செயல்படுகிறது. கொள்கையினால் இதை மாற்ற முடியும் என்பதே மோசமானது: எடுத்துக்காட்டாக, பிரித்தானிய பிரதமர் மார்கரேட் தாட்ச்சர் ஆட்சியில் அதிகளவில் வேலையின்மை ஏற்பட்ட போது, அது NAIRU வின் உயர்வுக்கு (மேலும் சாத்தியக்கூறில் குறைந்தது) வழிகோலியது, ஏனெனில் பெரும்பாலான வேலையில்லாதோர் அமைப்பார்ந்த வேலையின்மையில் தாங்கள் இருப்பதை உணர்ந்தார்கள் (மேலும் பார்க்க வேலையின்மை), தங்கள் திறமைக்கு தகுந்த வேலையைத் தேட முடியாமல் இருந்தார்கள். அமைப்பார்ந்த வேலையின்மையின் அதிகரிப்பு, NAIRU நிலையில் குறைந்த சதவீத பணியாளர்கள் மட்டுமே வேலை பெற முடிந்தது, ஏனெனில் இந்நிலையில் பொருளாதாரமானது பணவீக்கத்தின் ஆதிக்கத்தைத் தொடக்கூடிய எல்லையைத் தாண்டுவதைத் தவிர்த்தது.

பணம் சார் பொருளியளாளர் பார்வை

கடனை எளிதாக்குவது அல்லது கடினமாக்குவது ஆகிய செயல்களின் மூலம் மொத்த பண அளவை நிர்வகிப்பதே பணவீக்கம் அல்லது பணவாட்டத்தைப் பாதிக்கும் குறிப்பிடத்தக்கக் காரணி என பணம் சார் பொருளியளாளர்கள் நம்புகிறார்கள். இவர்கள் நிதித்துறைக் கொள்கை, அல்லது அரசு செலவுகள் மற்றும் வரி விதிப்பு ஆகியவை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் செயல்திறனற்றவை எனக் கருதுகிறார்கள்.

பணம் சார் பொருளியளாளர்கள் பணம் சார்ந்த வரலாற்றின் சோதனை முறை ஆய்வுகள், பணவீக்கமானது எப்போதும் பணம் சார்ந்த நிகழ்வாகவே இருந்துவந்துள்ளதையே காட்டுகின்றன என உறுதியாகக் கூறுகிறார்கள். பணத் தொகைக் கோட்பாடானது, பொருளாதாரத்தில் செலவிடப்படும் மொத்த பணம் இருப்பில் உள்ள மொத்த பணத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என எளிதாகக் கூறுகிறது. இந்தக் கோட்பாடு சர்வ சமன்பாட்டுடன் தொடங்குகிறது:

    பணவீக்கம் 

இங்கு

    பணவீக்கம்  என்பது பொதுவான விலை நிலை;
      பணவீக்கம்  என்பது இறுதி செலவினங்களின் பணப் பாய்வு வேகம்;
        பணவீக்கம்  என்பது இறுதி செலவினங்களின் மெய் மதிப்பின் குறியீடு;
          பணவீக்கம்  என்பது பணத்தின் அளவு.

இந்த சூத்திரத்தில், பொருளாதார நடவடிக்கையின் நிலை (Q ), பணத்தின் அளவு (M ) மற்றும் பணப்பாய்வு வேகம் (V ) ஆகியவற்றால் பொதுவான விலை அளவு பாதிப்படைகிறது. இந்த சூத்திரம் சர்வ சமன்பாடு, ஏனெனில் பணப்பாய்வு வேகமானது (V ), இறுதி செலவினங்கள் (பணவீக்கம் ) மற்றும் பணத்தின் அளவு (M ) ஆகியவற்றின் விகிதமாக வரையறுக்கப்படுகிறது.

பணப்பாய்வு வேகம் பெரும்பாலும் மாறிலியாகக் கருதப்படுகிறது, மேலும் நீண்ட கால அளவில் வெளியீட்டின் மெய்மதிப்பு பொருளாதாரத்தின் உற்பத்தித்திறனால் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த கருதுகோள்களின் அடிப்படையில், பொதுவான விலை அளவின் மாற்றத்தின் முதன்மை பாதிப்புக் காரணி பணத்தின் அளவில் ஏற்படும் மாற்றங்களாகும். நிலையான பணப்பாய்வுடைய பண இருப்பானது, குறைந்த கால அளவில் (இறுதிச் செலவினத்தைச் சமன்படுத்தும்) பெயரளவு வெளியீட்டின் மதிப்பை நிர்ணயிக்கிறது. நடைமுறையில் பணப்பாய்வு வேகம் மாறிலியல்ல, மேலும் இதனை மறைமுகமாக மட்டுமே அளவிட முடியும், ஆகவே இந்த சூத்திரம் பண இருப்புக்கும் பெயரளவு வெளியீட்டிற்குமிடையே உள்ள நிலையான தொடர்பைக் குறிக்கிறது என்று கூற முடியாது. இருப்பினும் நீண்ட கால அளவில், பண இருப்பில் ஏற்படும் மாற்றங்களும் பொருளாதார நடவடிக்கையின் மாற்றங்களும் பணப்பாய்வில் ஏற்படும் மாற்றங்களைப் புறக்கணிக்கத்தக்கதாகச் செய்கின்றன. பணப்பாய்வு என்பது ஒப்பீட்டில் மாறிலி எனக் கருதினால், நீண்ட கால அளவிலான விலை உயர்வு வீதமானது (பணவீக்கம்), நீண்ட கால அளவிற்கான பண இருப்பின் வளர்ச்சி வீதம் மற்றும் நீண்ட கால அளவிற்கான உண்மையான வெளியீட்டின் வளர்ச்சி வீதம் ஆகியவற்றுக்கிடையே உள்ள வேறுபாட்டிற்குச் சமமாக இருக்கும்.

அறிவார்ந்த எதிர்பார்ப்புக் கோட்பாடு

அறிவார்ந்த எதிர்பார்ப்புக் கோட்பாடானது, பொருளாதார செயலாளர்கள், தங்கள் நலத்தை மேம்படுத்திக்கொள்ள முயலும் போது, எதிர்காலத்தை அறிவார்ந்த நோக்கில் பார்க்கிறார்கள், மேலும் உடனடி மாற்றுகளின் செலவுகள் மற்றும் அழுத்தங்களைத் தனிப்பட்ட விதத்தில் எதிர்கொள்வதில்லை எனக் கூறுகிறது. இந்தக் கோணத்தில், பணத்துவ அடிப்படையிலுள்ள போது பணவீக்கத்திற்கு எதிர்கால எதிர்பார்ப்புகளும் உத்திகளும் முக்கியமே.

பொருளியல் செயலாளர்கள் அதிக பணவீக்கத்தின் கணிப்புகளை நிறைவேற்றும் விதங்களில் செயல்பட்டு, மத்திய வங்கியின் முடிவுகளைத் தவிர்க்க முற்படுவர் என்பதே அறிவார்ந்த எதிர்பார்ப்புக் கோட்பாட்டின் அடிப்படைச் சாரமாக விளங்குகிறது. அதாவது, மத்திய வங்கிகள் பணவீக்கத்திற்கு எதிராகப் போராடுவதில் ஒரு நம்பகத்தன்மையை உருவாக்கியிருக்க வேண்டும், அல்லது மத்திய வங்கி பின்னிறக்கத்தை அனுமதிப்பதற்கு பதிலாக பண இருப்பை அதிகரிக்கும் என பொருளாதார செயலாளர்கள் நம்பி, பொருளாதாரம் விரிவாக்கப்படும் என சவால் விட வேண்டும்.

ஆஸ்திரிய கோட்பாடு

பண இருப்பினாலேயே பணவீக்கம் உயர்கிறது, ஏறும் விலைகள் வெறும் பின் விளைவுகளே ஆகும் எனவும், மேலும் இந்த பொருள் நிறைந்த வேறுபாடு பணவீக்கத்தை வரையறுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது எனவும் ஆஸ்திரியப் பள்ளி உறுதியாகக் கூறுகிறது. பணம் சார்ந்த பணவீக்கம் மற்றும் பொதுவான விலைப் பணவீக்கத்திற்கிடையில் கருத்து அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை என ஆஸ்திரிய பொருளியலாளர்கள் நம்புகிறார்கள். காலம் செல்லச் செல்ல உருவாக்கப்பட்ட, பரிமாற்றத்திற்கு உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய புதிய நாணயங்களின் வளர்ச்சியைக் கணக்கிடுவதன் மூலம், பணம் சார்ந்த பணவீக்கத்தை ஆஸ்திரிய பொருளியலாளர்கள் அளவிடுகின்றனர். மத்திய அரசு அல்லது அதன் மத்திய வங்கி ஆகியவை எடுக்கும், பண இருப்பை அதிகரிக்க இசையும் அல்லது அனுமதிக்கும் தனிப்பட்ட நடவடிக்கையே பணவீக்கமாகும் என பணவீக்கத்தின் இந்தப் புரிதல் உணர்த்துகிறது. மாநிலங்களால் உருவாக்கப்படும் பணம் சார் விரிவாக்கத்துடன் கூடுதலாக, பண இருப்பை அதிகரித்தலின் விளைவுகள் கடன் விரிவாக்கத்தால் பெரிதாகத் தோன்றுகிறது என்றும் ஆஸ்திரியப் பள்ளி கூறுகிறது, மேலும் உலகிலுள்ள பெரும்பாலான பொருளாதார மற்றும் நிதியக முறைகளில் பகுதி-ஒதுக்கீட்டு வங்கியியல் முறை பயன்படுத்தப்படுவதே இந்தக் கடன் விரிவாக்கத்திற்குக் காரணமாகும்.

மாநிலங்கள் தமது நடவடிகைகளுக்கு நிதி திரட்டும் மூன்று வழிகளில் ஒரு வழியாக (பணவீக்க வரி) பணவீக்கத்தைப் பயன்படுத்துகின்றன, என ஆஸ்திரிய பொருளியலாளர்கள் வாதிடுகின்றனர், இதில் வரி விதிப்பும் கடன் பெறுதலும் பிற இரு வழிகளாகும். இராணுவச் செலவுகளும் பெரும்பாலும் கடன் பெறுதல் மற்றும் பணவீக்கத்திற்கு வழிகோலும் நடவடிக்கைகளாகக் குறிக்கப்படுகின்றன, இந்தச் செலவினனக்கள் சந்தை ஆதாரங்களைப் பெறுவதற்கான குறுக்கு வழியாக இருக்கக்கூடும் என்பதால் வறுமையான மற்றும் கடனுள்ள அரசாங்கங்கள் இதற்கு முன்னுரிமையளிக்கின்றன.

மற்றபடி, உண்மையில் அரசாங்கம் உற்பத்தித் திறனின் கட்டமைப்பை உருக்குலைக்கக் கூடிய செயற்கை பொழிப்பு நிலைகளை உருவாக்கி, அதுவே பொருளாதார பின்னிறக்கங்கள் மற்றும் தாழ்நிலைகளை உருவாக்குகிறது என என ஆஸ்திரியர்கள் வாதிடுகிறார்கள். மொத்த பண அளவின் வளர்ச்சியை "ஊக்குவிப்பதன்" மூலம் செயற்கையான முறையில் பொருளாதாரத்தைத் "தூண்ட" முயற்சிப்பதன் மூலம், மேலும் செயற்கையான குறைந்த வட்டி வீதத்தில் கடன் பெறுதல் மூலம், பொருளாதார பின்னிறக்கங்கள் அல்லது வீழ்ச்சிகளை உண்டாக்கக்கூடிய, பரவலான கடன்சுமைகள் மற்றும் நிதிப்பற்றாக்குறை மற்றும் பின்னிறக்கங்களைத் தவிர்க்க அல்லது தள்ளிப்போட மத்திய வங்கி முயற்சிக்கலாம். அதேபோல், பெரும்பாலான ஆஸ்திரிய பொருளியலாளர்கள் மத்திய வங்கிகள் மற்றும் பகுதி-ஒதுக்கீட்டு வங்கியியல் முறை ஆகியவற்றை ஒழித்தலை ஆதரிக்கின்றனர், மேலும் 100 சதம் அல்லது பெரும்பாலும் தங்கத் தரநிலை முறைக்குத் திரும்புவதை அல்லது திறந்த நிலை வங்கியியல் போன்றவற்றை வலியுறுத்துகின்றனர். நீடித்து நிலைக்காத மற்றும் எளிதில் மாறக்கூடிய பகுதி-ஒதுக்கீட்டு வங்கியியல் நடை முறைகளைத் தடுத்து கட்டுப்பாட்டில் வைக்கும் என அவர்கள் வாதிடுகிறார்கள், மேலும் மொத்த பண அளவின் வளர்ச்சி (மற்றும் பணவீக்கம்) கட்டுப்பாட்டை மீறிய சுழற்சியாயிருக்காது என உறுதியளிக்கின்றனர்.

உண்மையான பட்டியல்கள் கொள்கை

பணத்துக்கு நாணயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கையில், பண அளவுக் கோட்பாடு மற்றும் உண்மையான பட்டியல்கள் கொள்கை (RBD) இவற்றினிடையே ஒரு முக்கிய கருத்து வேறுபாடு காணப்பட்டது. இந்தக் கருத்துப்படி, வங்கிகள் கையிருப்பில் வைக்கும் நாணயங்களுக்கு நிகராக (பொதுவாக தங்கம்) அனுமதிக்கப்பட்ட பகுதிபட்ட கணக்கிடல் ஒதுக்கீட்டு நிலையில் அளவுக் கோட்பாடு பயன்படுத்தப்படுகிறது. பொருளாதாரத்திற்கான நாணயம் மற்றும் வங்கியியல் பள்ளிகள், வணிகர்களிடமிருந்து வாங்கிய "உண்மையான பட்டியல்களான" வர்த்தகத்தின் பட்டியல்களுக்கு நாணயங்களை வழங்கும் திறனை வங்கிகள் பெற்றிருக்க வேண்டும் RBD குறித்து வாதிடுகின்றன. இந்தக் கோட்பாடு 19 ஆம் நூற்றாண்டில் பணம் சார் "வங்கியியல்" மற்றும் "நாணயப்" பள்ளிகளிடையேயான விவாதங்களிலும் பெடரல் ரிசர்வ் கூட்டமைப்பின் உருவாகத்திலும் முக்கியப் பங்கு வகித்தது. இது 1913 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய சர்வதேச தங்கத் தரநிலையின் வீழ்ச்சிக்குப் பின்னர், மற்றும் அரசாங்கத்தின் நிதியகப் பற்றாக்குறை நோக்கிய நகர்வின் போது, நாணய ஆணையங்கள் போன்ற குறிப்பிட்ட சூழல்களில் மட்டுமே ஆர்வம் காட்டப்பட்ட சிறிய விவகாரமாக RBD விளங்கியது. அது மிகவும் மதிப்புக் குறைந்ததாகக உள்ளது, பெடரல் ரிசர்வின் ஆளுநர் ஃப்ரெடெரிக் மிஷ்கின், இன்னும் ஒரு படி மேலே சென்று அது "முழுமையான மதிப்பிழந்தது" எனக் கூறுகிறார். இருப்பினும், இதை கொள்கையளவில் சில பொருளியலாளர்கள், குறிப்பாக கடனின் சில வகைகளில் உள்ள கட்டுப்பாடுகளை லெய்சஷ்-ஃபேரின் சுதந்திரவாத கொள்கைகளுடனான இணக்கமின்மையாகக் கருதுபவர்கள், ஆதரிக்கின்றனர், இருப்பினும் ஏறத்தாழ அனைத்து சுதந்திரவாத பொருளியலாளர்களும் RBD க்கு எதிராக இருக்கிறார்கள்.

19 ஆம் நூற்றாண்டில் பிரட்டனில் இருந்த, நாணயம் அல்லது அளவுக் கோட்பாடு மற்றும் வங்கியியல் பள்ளிகளிடையே நிலவிய விவாதங்கள், பணத்தின் தற்கால நம்பகத்தன்மை பற்றிய நடப்பு கேள்விகளை முன்கூட்டியே எழுப்பியிருந்தன. 19 ஆம் நூற்றாண்டில் வங்கியியல் பள்ளி அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் பிரட்டனில் கொள்கையில் பெரும் ஆதிக்கம் செலுத்தியது, ஆனால் நாணயப் பள்ளி "கண்டங்களில்" பெரும் ஆதிக்கம் செலுத்தியது, அதாவது பிரட்டனைச் சாராத நாடுகள், குறிப்பாக லத்தீன் பணம் சார் கூட்டமைப்பு மற்றும் முந்தைய ஸ்காண்டினவிய பணம் சார் கூட்டமைப்பு ஆகியவை.

பழமைக்கெதிரான அல்லது ஆதரவுக் கோட்பாடு

பண்டைய அரசியல் தொடர்பான பொருளாதாரத்தில் இருந்த மற்றொரு சிக்கல், பழமைக்கெதிரான பணக் கொள்கை அல்லது "ஆதரவுக் கோட்பாடு" ஆகும். பணத்தின் மதிப்பானது, அதை வெளியிடும் நிறுவனங்களின் சொத்துகள் மற்றும் கடன் பொறுப்புகளால் தீர்மானிக்கப்படுகிறது என ஆதரவுக் கோட்பாடு வாதிடுகிறது. பண்டைய அரசியல் தொடர்பான பொருளாதாரத்தின் பணக் கொள்கை போலில்லாமல், பணம் வெளியிடும் நிறுவனங்கள், வெளியிட்ட பணத்தின் பரிமாற்றத்துக்குப் போதுமான அளவு சொத்துகளை வைத்திருக்கும் வரை பணவீக்கமின்றி பணத்தை வெளியிட முடியும், என ஆதரவு கொள்கை வாதிடுகிறது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல்

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் பல வகையான முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பணக்கொள்கை

பணவீக்கம் 
ஐம்பது ஆண்டுகளுக்கான U.S. இன் பயனுறு பெடெரல் நிதி வீதத்தின் வரைபடம்.

தற்காலத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முதன்மையான கருவி பணக்கொள்கையாகும். பெரும்பாலான மத்திய வங்கிகள் பெடரல் நிதிகளின் கடன் வீதத்தை இயல்பாக ஆண்டுக்கு 2% முதல் 3% வரையிலான இலக்கு வீதம் என்ற குறைவான அளவில் வைத்திருக்கும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகின்றன, மேலும் ஆண்டுக்கு 2% முதல் 6% வரையிலான இலக்கு பணவீக்க வரம்பிற்குள்ளும் இருக்குமாறு கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. பணவாட்ட நிலைகள் வளமான பொருளாதாரத்திற்கு ஊறுவிளைவிப்பதாகத் தோன்றுவதால் ஒரு குறைந்த நேர்மறை பணவீக்கமே இலக்காகக் கருதப்படுகிறது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பல வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. U.S. பெடரல் ரிசர்வ் போன்ற மத்திய வங்கிகள் வட்டி வீதங்களை அமைப்பதன் மூலமாகவும் மற்ற பிற செயல்பாடுகள் மூலமாகவும் பணவீக்கத்தை குறிப்பிடத்தக்க அளவு பாதிக்க முடியும். அதிக வட்டி வீதங்கள் மற்றும் மொத்த பண அளவின் மெதுவான வளர்ச்சி ஆகியவையே பணவீக்கத்துக்கு எதிராக அல்லது அதைத் தடுக்க மத்திய வங்கிகளால் எடுக்கப்படும் வழக்கமான நடவடிக்கைகளாகும், இருப்பினும் அவை இரண்டும் வேறுபட்ட அணுகுமுறைகள் ஆகும். எடுத்துக்காட்டுக்கு, சில வங்கிகள் சமச்சீர் பணவீக்க இலக்கைக் கொண்டிருக்கின்றன, ஆனால் பிற வங்கிகள் பணவீக்கமானது குறிப்பிடப்பட்ட அல்லது உணர்த்தப்பட்ட ஓர் இலக்கை மீறும்போது மட்டுமே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன.

பணம் சார் பொருளியலாளர்கள், பணத்தின் வளர்ச்சி வீதத்தை நிலையாக வைத்திருந்து, பணவீக்கத்தக் கட்டுப்படுத்த, (வட்டி வீதங்களை அதிகரித்தல், மொத்த பண அளவின் உயர்வை மட்டுப்படுத்தல் போன்ற) பணக்கொள்கையைப் பயன்படுத்துதவதை வலியுறுத்துகின்றனர். கெயின்சியன் கொள்கையாளர்கள் பணவீக்கத்தை நிலையாக வைத்திருக்க, பொருளாதார விரிவாக்கத்தின் போது மொத்தத் தேவையைக் குறைத்தலையும் பின்னிறக்கங்களின் போது தேவையை அதிகரித்தலையும் வலியுறுத்துகின்றனர். மொத்தத் தேவையின் கட்டுப்பாட்டை, பணக்கொள்கை மற்றும் நிதித்துறைக் கொள்கை (தேவையைக் குறைக்க வரி விதிப்பை அதிகரிக்கலாம் அல்லது அரசுச் செலவினங்களைக் குறைக்கலாம்) ஆகிய இரண்டையும் பயன்படுத்தி அடைய முடியும்.

நிலையான பரிவர்த்தனை வீதங்கள்

நிலையான பரிவர்த்தனை வீத நாணய ஆட்சிமுறையின் கீழ், ஒரு நாட்டின் நாணயமானது மற்றவொரு தனிப்பட்ட நாணயம் அல்லது பிற நாணயங்களின் தொகுப்பின் மதிப்புடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது (அல்லது சில நேரங்களில் தங்கம் போன்ற பிற மதிப்பின் அளவீட்டுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது). வழக்கமாக, ஒரு நாணயத்தின் மதிப்பை அதனுடன் தொடர்புபடுத்தப்பட்ட நாணயத்திற்கு நிகராக நிலைநிறுத்த ஒரு நிலையான பரிவர்த்தனை வீதம் பயன்படுத்தப்படுகிறது. இதனைப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு வழியாகவும் பயன்படுத்த முடியும். இருப்பினும், தொடர்புபடுத்தப்படும் நாணயத்தின் மதிப்பானது ஏற்ற இறக்கத்திற்குட்படுவதால், அது அதனுடன் ஒப்பிடப்படும் நாணயத்தின் மதிப்பும் ஏற்ற இறக்கத்திற்குட்படுகிறது. நிலையான பரிவர்த்தனை வீத நாட்டின் பணவீக்க வீதமானது, அதன் நாணயம் தொடர்புபடுத்தப்படும் நாட்டின் பணவீக்க வீதத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதே இதன் பொருளாகும். மேலும், நிலையான பரிவர்த்தனை வீதமானது ஒரு அரசாங்கம் மேக்ரோ பொருளாதார நிலைத்தன்மையைப் பெறுவதற்காக உள்நாட்டுப் பணக்கொள்கையைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது.

ப்ரெட்டன் வுட்ஸ் ஒப்பந்தத்தின்படி, உலகத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளின் நாணயங்கள் அதன் நாணய மதிப்பை US டாலருக்கு நிகராக வைத்துள்ளன. இது அந்த நாடுகளில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியது, ஆனால் அவற்றை இது பாதுகாப்பற்ற பாதிப்புகளின் ஆபத்திற்கு உட்படுத்தியுள்ளன. 1970களின் தொடகத்தில் ப்ரெட்டன் வுட்ஸ் ஒப்பந்தம் கைவிடப்பட்ட பின்னர், நாடுகள் படிப்படியாக மாறும் பரிமாற்ற வீதங்களுக்குத் திரும்பின. இருப்பினும், 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சில நாடுகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக நிலையான பரிவர்த்தனை வீதத்திற்குத் திரும்பவும் சென்றன. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நிலையான பரிவர்த்தனை வீதத்தைப் பயன்படுத்தும் இந்தக் கொள்கையானது 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென் அமெரிக்காவிலுள்ள பல நாடுகளால் பயன்படுத்தப்பட்டது (எ.கா. அர்ஜென்டினா (1991-2002), பொலிவியா, பிரேசில், மற்றும் சிலி).

தங்கத் தரநிலை

பணவீக்கம் 
தங்கத் தரநிலையில், ரூபாய்த் தாள்களை முன்பே நிர்ணயிக்கப்பட்ட அளவிலான தங்கமாக மாற்ற முடியும்.

தங்கத் தரநிலை என்பது, ஒரு ஆட்சிமுறையில் பொது பரிமாற்ற ஊடகமாக, முன் நிர்ணயிக்கப்பட்ட, குறிப்பிட்ட அளவிலான தங்கத்திற்கு பரிமாறிக்கொள்ளக்கூடிய காகிதத் தாள்களைப் பயன்படுத்தும் பண முறையாகும். தரநிலையானது, தங்கத்திற்கான ஆதரவு எவ்வாறு செயலாக்கப்படுகிறது என்பதைக் குறிப்பிடுகின்றது, ஒவ்வொரு நாணயத்தின் அலகுக்குமான நாணயங்களின் அளவும் இதில் அடங்கும். நாணயம் என்பது எந்த உள்ளார்ந்த மதிப்பையும் கொண்டிருப்பதில்லை, ஆனால் அதை அதே மதிப்பிலான நாணயத்திற்கு மீட்டுகொள்ள முடியும் என்பதால் வர்த்தகர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எடுத்துகாட்டாக, U.S. வெள்ளிப் பணத்தை, அதன் அசல் மதிப்பிலான வெள்ளியாக மீட்டுகொள்ள முடியும்.

தங்கமானது அதன் கிடைக்கும் தன்மை, உறுதித்தன்மை, பகுபடும் தன்மை, பரிமாற்றத் தன்மை மற்றும் அடையாளம் காணுவதில் சிரமமின்மை ஆகியவற்றின் காரணமாக பிரதிப்பணத்தின் ஒரு பொது வடிவமாக இருந்தது. பிரதிப்பணம் மற்றும் தங்கத் தரநிலை ஆகியவை, கட்டற்ற பணவீக்கம் மற்றும் பெருமந்தம் நிலவியபோது சில நாடுகளில் காணப்பட்டது போன்ற பணக்கொள்கையின் பிற முறைகேடுகளில் இருந்து குடிமக்களைக் காப்பாற்றப் பயன்பட்டன. இருப்பினும், அவை அவற்றிலும் சிக்கல்களும் அவை குறித்த விமர்சனங்களும் இருந்தன, ஆகவே ப்ரெட்டன் உட்ஸ் முறையின் சர்வதேசத் தழுவலின் மூலம் ஒரு பகுதி கைவிடப்பட்டன. இந்த அமைப்பின்படி, மற்ற முக்கிய நாணயங்கள் அனைத்தும் டாலருக்கு நிகரான நிலையான வீதத்தில் சமநிலைப்படுத்தப்பட்டன, அது ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு $35 என்ற வீதத்தில் சமநிலைப்படுத்தியிருந்தது. 1970 ஆம் ஆண்டு பிரெட்டென் உட்ஸ் முறையானது கைவிடப்பட்டது, இதனால் பெரும்பாலான நாடுகள் அரசு நிர்ணய நாணய முறைக்கு மாறின – இதில் நாட்டின் சட்டங்களால் மட்டுமே பணத்தைத் திரும்ப்பெற முடியும். ஆஸ்திரிய பொருளியலாளர்கள் 100 சதவீத தங்கத் தரநிலைக்கு மீண்டும் திரும்புவதற்கு மிகுந்த ஆதரவளிக்கின்றனர்.

தங்கத் தரநிலையில், நீண்ட கால பணவீக்க (அல்லது பணவாட்ட) வீதமானது, மொத்த உற்பத்தியுடனான ஒப்பீட்டில் தங்கக் கையிருப்பின் வளர்ச்சி வீதத்தால் நிர்ணயிக்கப்படும். விமர்சகர்கள், இது பணவீக்க வீதத்தில் கட்டற்ற ஏற்ற இறக்கங்களை உருவாக்கும், மேலும் பணக்கொள்கையானது தங்கச் சுரங்கத் தொழிலால் நிர்ணயிக்கப்பட வேண்டியிருக்கும் எனவும் வாதிடுகின்றனர், அவர்களில் சிலர் அதுவே பெருமந்ததிற்கு காரணனதாகவும் நம்புகின்றனர்.

கூலி மற்றும் விலைக் கட்டுப்பாடுகள்

கூலி மற்றும் விலைக் கட்டுப்பாடுகள் ("வருமானக் கொள்கைகள்") என்பது கடந்த காலத்தில் முயற்சிக்கப்பட்ட மற்றொரு வழிமுறையாக இருந்தது. போர்க்கால சூழ்நிலைகளில், பங்கீட்டு முறைகளுடன் ஒருங்கிணைந்த கூலி மற்றும் விலைக் கட்டுப்பாடுகள் வெற்றிகரமாக இருந்துவந்துள்ளன. இருப்பினும், மற்ற சந்தர்ப்பங்களில் அவற்றின் பயன்பாடானது கலைவையாக உள்ளது. அவற்றின் பயன்பாட்டின் குறிப்பிடத்தகுந்த தோல்விகளில், 1972 ஆம் ஆண்டு ரிச்சர்டு நிக்சன் விதித்த கூலி மற்றும் விலைக் கட்டுப்பாடுகளும் உள்ளடங்கும். ஆஸ்திரேலியாவில் விலைகள் மற்றும் வருமானங்கள் ஒப்பந்தம் மற்றும் நெதர்லாந்தில் வாஸ்ஸெனார் ஒப்பந்தம் ஆகியவை வெற்றிகரமான எடுத்துக்காட்டுகளில் அடங்கும்.

பொதுவாக கூலி மற்றும் விலைக் கட்டுப்பாடுகள் தற்காலிக மற்றும் விதிவிலக்கான வழிகளாகவே கருதப்படுகின்றன, கூலி மற்றும் விலைக் கட்டுப்பாடு ஆட்சியின் போதான, நடைபெறும் போரில் வெற்றிபெறுதல் போன்ற, பணவீக்கத்தை ஏற்படுத்தும் காரணங்களைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கொள்கைகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் போது மட்டுமே செயல்திறனுள்ளவையாக இருக்கும். அவை சந்தைக்கு வழங்கும் திரிபுற்ற சமிக்ஞைகளால் அடிக்கடி முரண்பாடான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. செயற்கையான விலைக் குறைப்புகள், பங்கீடுகளையும் பற்றாக்குறையையும் உண்டாக்கி, எதிர்கால முதலீட்டுக்கான ஊக்கமிழப்பை ஏற்படுத்தும், இதன் விளைவுவாக மேலும் பற்றாக்குறை ஏற்படும். ஏதேனும் ஒரு தயாரிப்பு அல்லது சேவையின் விலை குறைக்கப்பட்டால் அது அதிகமாகப் பயன்படுத்தப்படும் என்பதே வழக்கமான பொருளாதாரச் சிந்தனை. எடுத்துக்காட்டாக, ரொட்டியின் அதிகாரப்பூர்வ விலை மிகவும் குறைவாக இருந்தால், அதிகாரப்பூர்வ விலைகளில் மிகச்சிறிய அளவிலான ரொட்டிகளே இருக்கும், மேலும் எதிர்காலத் தேவையைச் சமாளிக்க, சந்தைகளால் மிகச்சிறிய அளவிலான முதலீடே ரொட்டி தயாரிப்பில் செய்யப்படும், இதனால் சிக்கல் நீண்ட கால அளவில் இன்னும் மோசமாகிறது.

தற்காலிகக் கட்டுப்பாடுகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பின்னிறக்கத்துடன் ஒருங்கிணையலாம் : கட்டுப்பாடுகள், பணவீக்கத்தைச் சமாளிக்கும் மிகச் செயல்திறனுள்ள வழியாக பின்னிறக்கத்தை மாற்றலாம் (வேலையின்மையை அதிகரிக்க, தேவையைக் குறைத்தல்), அதே நேரத்தில் தேவை அதிகமாக இருக்கும்போது கட்டுப்பாடுகளால் ஏற்படும் உருத்திரிபுகளை, பின்னிறக்கம் தடுக்கின்றது. இருப்பினும், விலைக் கட்டுப்பாடுகளை விதிக்காமல், மாறாக இலாபமற்ற பொருளாதார நடவடிக்கைகளை பொருளாதாரம் சரிசெய்யவும் தவிர்க்கவும் செய்யும் என்ற நோக்கில் விலைகளைத் தாராளமயமாக்க வேண்டும் என்பதே பொதுவாக பொருளியலாளர்களின் அறிவுரையாகும். குறைந்தபட்ச செயல்பாடு பணவீக்கத்தை உருவாக்கும் எல்லாவற்றின் தேவைகளையும் குறைக்கும், அது தொழிலாளராகவோ அல்லது வளங்களாகவோ இருக்கலாம், மேலும் பணவீக்கமானது மொத்தப் பொருளாதார உற்பத்தியால் குறையும். இது அதிகபட்ச உற்பத்தித் திறன் மறு ஒதுக்கீடு செய்யப்படுவதாலும் அது வாழ்வியல் ஆதாரங்கள் அழிக்கப்பட்ட மக்களிடையே மிகுந்த செல்வாக்கற்றதாகவும் மாறுகிறது பெரும்பாலும் கடுமையான பின்னிறக்கத்தை உருவாக்குகின்றது, (காண்க, ஆக்கப்பூர்வ முடிவு).

வாழ்வினச் செலவுப் படி

நிலையான கட்டணங்களின் மெய் மதிப்புகளை மாறிலியாக வைத்திருக்க, அவை பணவீக்கத்திற்கு ஏற்ற வகையில் சரி செய்துகொள்ளாதபட்சத்தில், அவற்றின் உண்மையான வாங்குதல் திறனானது பணவீக்கத்தால் அரித்து அழிக்கப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில், பணியாளர் ஒப்பந்தங்கள், ஓய்வூதியச் சலுகைகள் மற்றும் அரசாங்க உரிமை வழங்கல்கள் (சமூகப் பாதுகாப்பு போன்றவை) வாழ்வினச் செலவுக் குறியீட்டுடன் இணைந்துள்ளன, இயல்பில் இவை நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் இணைந்துள்ளன. வாழ்வினச் செலவுப் படி யானது (COLA), வாழ்வினச் செலவுக் குறியீட்டில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு சம்பளங்களைச் சரிசெய்கிறது. சம்பளங்கள் பொதுவாக ஆண்டுதோறும் சரிசெய்யப்படுகின்றன. பணியாளர் பயணித்துக்கொண்டிருபவர் எனில், அவர் மாறும் புவியியல் இருப்பிடத்தைப் பொறுத்து மாறும் வாழ்வினச் செலவுக் குறியீட்டுடன் சம்பளங்கள் இணைக்கப்பட்டிருக்கலாம்.

பணியாளர் ஒப்பந்தங்களில் உள்ள வருடாந்தர அதிகரிப்பு கூற்றுகள், எந்தக் குறியீட்டுடனும் இணைக்கப்படாத பணியாளர் சம்பளத்திற்கான அதிகரிப்பின் எதிர்கால அல்லது முன்னுரைக்கப்பட்ட சதவீதம் பற்றிக் குறிப்பிடலாம். சம்பளத்திலான பேரம் செய்யப்பட்ட இந்த அதிகரிப்புகளை பேச்சு வழக்கில் வாழ்வினச் செலவு சமாளிப்புகள் அல்லது வாழ்வினச் செலவு அதிகரிப்புகள் எனக் குறிப்பிடப்படுன்றன, ஏனெனில் அவற்றின் அதிகரிப்புகளானது வெளிப்புறம் நிர்ணயிக்கப்பட்ட குறியீடுகளுக்கு ஒத்தே உள்ளன. பெரும்பாலான பொருளியலாளர்கள் மற்றும் இழப்பீட்டுப் பகுப்பாய்வாளர்கள், முன் நிர்ணயிக்கப்பட்ட எதிர்கால "வாழ்வினச் செலவு அதிகரிப்புகள்" சிந்தனையானது இரண்டு காரணங்களுக்காக தவறான வழிநடத்தலைக் கொண்டுள்ளதாகக் கருதுகின்றனர்: (1) தொழில்மயமாக்கப்பட்ட உலகின் மிகச்சமீப காலங்களில், சராசரியான கூலியானது பெருவாரியாகக் கணக்கிடப்பட்ட வாழ்வினச் செலவுக் குறியீடுகளை விட வேகமாக அதிகரித்துள்ளது, இது உற்பத்தித் திறன் அதிகரிப்பு மற்றும் பணியாளர் பேரத் திறன் ஆகியவற்றால் ஏற்பட்ட விளைவேயன்றி இயல்பான வாழ்வினச் செலவுகளால் அல்ல என உணர்த்துகின்றது, மற்றும் (2) பெரும்பாலான வாழ்வினச் செலவுக் குறியீடுகள் முன்னோக்கு சிந்தனையுடையனவாக இல்லை, மாறாக அவை தற்போதயை அல்லது வரலாற்றுத் தரவை ஒப்பிடுகின்றன.

குறிப்புகள்

புற இணைப்புகள்

Tags:

பணவீக்கம் முழு அல்லது பகுதி பணவீக்கம் பணவீக்க சுழற்சியின் பண்புகள்பணவீக்கம் பண வீக்க வகைகள்பணவீக்கம் தோன்றும் முறைகள்பணவீக்கம் மூலங்கள்பணவீக்கம் தொடர்புடைய வரையறைகள்பணவீக்கம் அளவீடுகள்பணவீக்கம் விளைவுகள்பணவீக்கம் காரணங்கள்பணவீக்கம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல்பணவீக்கம் குறிப்புகள்பணவீக்கம் புற இணைப்புகள்பணவீக்கம்சந்தைநாணயம்பொருளாதாரம்விலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவிளையாடல் புராணம்தமிழ்ப் புத்தாண்டுஜவகர்லால் நேருகுறிஞ்சிக்கலிஅணி இலக்கணம்பர்வத மலைவீரப்பன்தாவரம்மகேந்திரசிங் தோனிமேற்குத் தொடர்ச்சி மலைதிருநாவுக்கரசு நாயனார்புனித ஜார்ஜ் கோட்டைமுத்துலட்சுமி ரெட்டிநடுக்குவாதம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021மனோன்மணீயம்கம்பராமாயணம்சித்திரகுப்தர்சிறுநீர்ப்பாதைத் தொற்றுஜன கண மனசுயமரியாதை இயக்கம்சங்க காலப் புலவர்கள்பகவத் கீதைதற்கொலை முறைகள்சுபாஷ் சந்திர போஸ்முத்தொள்ளாயிரம்அறுபது ஆண்டுகள்ஔவையார்பொருநராற்றுப்படைகுணங்குடி மஸ்தான் சாகிபுமண்ணீரல்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்பட்டினப் பாலைஇராவணன்நன்னூல்தனிப்பாடல் திரட்டுநவக்கிரகம்தட்டம்மைபாம்பன் குமரகுருதாச சுவாமிகள்நிதி ஆயோக்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்இந்திய செஞ்சிலுவைச் சங்கம்அம்மனின் பெயர்களின் பட்டியல்வ. உ. சிதம்பரம்பிள்ளைஆழ்வார்கள்கொடுக்காய்ப்புளிவாசுகி (பாம்பு)மொழிபெயர்ப்புஇந்தியாவில் இட ஒதுக்கீடுசித்திரைத் திருவிழாராஜா (நடிகர்)உவமையணிதிருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்அருந்ததியர்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுவெ. இராமலிங்கம் பிள்ளைமாமல்லபுரம்மகாவீரர் ஜெயந்திவடிவேலு (நடிகர்)வேதாத்திரி மகரிசிமீண்டும் ஒரு மரியாதைசத்திய சாயி பாபாதேவநேயப் பாவாணர்உயிர்மெய் எழுத்துகள்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்தினமலர்தமிழ் இலக்கணம்மியா காலிஃபாபூக்கள் பட்டியல்ர. பிரக்ஞானந்தாதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்உலகப் புத்தக நாள்தென்னிந்தியாஎன்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்சப்ஜா விதைரயத்துவாரி நிலவரி முறைபுதிய ஏழு உலக அதிசயங்கள்வாலி (கவிஞர்)🡆 More