சன்சத் பவன்

சன்சத் பவன் என்பது புதுதில்லியில் உள்ள இந்திய நாடாளுமன்ற வளாகம்.

நாடாளுமன்ற வளாகம்
संसद भवन
சன்சத் பவன்
சன்சத் பவன்
ராஜ்பத்தில் இருந்து காணப்படும் சன்சத் பவன்
சன்சத் பவன் is located in டெல்லி
சன்சத் பவன்
பொதுவான தகவல்கள்
நிலைமைFunctioning
நகரம்புது தில்லி
நாடுசன்சத் பவன் இந்தியா
கட்டுமான ஆரம்பம்1912
திறக்கப்பட்டது1927
உரிமையாளர்இந்திய அரசு
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேகர்

வரலாறு

புது தில்லியை வடிவமைத்த பிரித்தானிய கட்டிடக் கலை வல்லுனர்களான எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேகர் ஆகியோரால் இவ்வளாகம் வடிவமைக்கப்பட்டது. இவ்வளாகத்தின் கட்டுமானத்திற்கான அடிக்கல்லை கன்னாட்டின் கோமகன், 1921ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் நாள் நாட்டினார். ஆறு வருடங்களில், 83 இலட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இதனை, அப்போதைய வைசிராயும் இந்தியத் தலைமை ஆளுநருமான இர்வின் பிரபு, 1927ஆம் ஆண்டு சனவரி 18 அன்று திறந்து வைத்தார். ஜனவரி 19, 1927 அன்று மத்திய சட்டமன்ற அவையின் மூன்றாவது அமர்வு இவ்வளாகத்தில் கூட்டப்பட்டது.

வளாக அமைப்பு

சன்சத் பவன் 
மௌன்ட்பாட்டன் பிரபு சமஸ்தான அரங்கத்தில் 1947-இல் வைசிராயக உரை நிகழ்த்திய போது.

அசோக சக்கரத்தின் வடிவத்தை ஒட்டி இவ்வளாகம் வட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் அவை, மத்திய சட்டமன்றம், சமஸ்தான அரங்கம் என மூன்று தனி மண்டபங்கள் அமைக்கப்பட்டது.

வளாகத்தைச் சுற்றி பெரிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மணற்கல்லால் ஆன வளாகத்தின் வேலி மதில் சாஞ்சி பெரிய தூபியை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

நடுக் கூடம் / மத்திய மண்டபம்

சன்சத் பவன் 
அமெரிக்க ஜனாதிபதி திரு.பராக் ஒபாமா நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு முன் மத்திய மண்டபத்தில் இருந்து உரை வழங்கியபோது (நவ. 2010)

நாடாளுமன்றத்தின் நடுக்கூடம் வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கூடத்தின் குவிமாடம் 98 அடி விட்டம் கொண்டுள்ள காரணத்தால், உலகின் பிரம்மாண்ட குவிமாடங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கூடத்தின் வரலாற்றுச் சிறப்பினை பின்வரும் காரணங்களால் உணரலாம்:

  • 1947-இல் ஆங்கிலேய அரசு இந்திய அரசியல் அதிகாரத்தை நேரு தலைமையிலான அரசிடம் இக்கூடத்தினின்று வழங்கியது
  • 1947 முதல் 1949 வரை இக்கூடத்தில் இருந்து தான் இந்திய அரசியல் சாஸனம் வடிக்கப்பட்டது.

அரசியலமைப்பு நிர்ணய மன்றம் செயல்படுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்டு புனரமைக்கும் முன், 1946 வரை, இக்கூடம் அப்போதைய மத்திய சட்ட சபைக்கும், மாநிலங்கள் அவைக்குமான நூலகமாகப் பயன்படுத்தப்பட்டது, அரசியலமைப்பு நிர்ணய மன்றம் இக்கூடத்தில், டிசம்பர் 9, 1946 முதல் நவம்பர் 26, 1949 வரை கூடி, இந்திய அரசியலமைப்பை வரைந்தது. தற்போது நடுக்கூடம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மக்களவைத் தேர்தலுக்குப் பின் நிகழும் முதல் அமர்வின் போதும், ஒவ்வோர் ஆண்டின் முதல் அமர்வின் போதும், குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் இக்கூடத்தினின்று உரை வழங்குவார். மேலும் சிறப்பு நிகழ்ச்சிகளின் போது அயல் நாட்டுத் தலைவர்கள் இரு அவைகளுக்கும் வழங்கும் உரையும் இங்கிருந்தே வழங்கப்படும்.

புதுக் கட்டிடத்திற்கான திட்டம்

தற்போது பயன்பாட்டில் உள்ள கட்டிடம், எண்பத்தைந்தாண்டு காலப் பழைமை வாய்ந்தது; பாரம்பரியச் சிறப்பு மிக்கதாகவும் கருதப்படுகிறது. இடப்பற்றாக்குறையையும், கட்டமைப்பு வலுவிழந்து வரும் காரணத்தையும் கருத்தில் கொண்டு புதிய வளாகம் ஒன்றை நிறுவ ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதன் பொருட்டு முன்னாள் மக்களவைத் தலைவரான திருமதி. மீரா குமாரின் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.

2001 தீவிரவாத தாக்குதல்

2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அன்று புது டெல்லியில் உள்ள இந்திய பாராளுமன்றம் கட்டிடத்தின் மீது லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர் . மற்றும் இந்த தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டது

மேற்கோள்கள்

Tags:

சன்சத் பவன் வரலாறுசன்சத் பவன் வளாக அமைப்புசன்சத் பவன் 2001 தீவிரவாத தாக்குதல்சன்சத் பவன் மேற்கோள்கள்சன்சத் பவன்இந்திய நாடாளுமன்றம்புது தில்லி

🔥 Trending searches on Wiki தமிழ்:

அரச மரம்சமந்தா ருத் பிரபுஇந்திய நிதி ஆணையம்மலையாளம்என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைமுதலாம் உலகப் போர்வேலைக்காரி (திரைப்படம்)தொல்காப்பியம்தமிழ் மன்னர்களின் பட்டியல்காதல் கோட்டைபர்வத மலைபத்துப்பாட்டுபரிதிமாற் கலைஞர்இராசேந்திர சோழன்நீர்ர. பிரக்ஞானந்தாபாண்டி கோயில்அறுசுவைவிவிலியத்தில் இறைவனின் பெயர்கள்திருப்பதிபஞ்சாயத்து ராஜ் சட்டம்பாரிசேமிப்புக் கணக்குமாதவிடாய்கல்விஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)இந்தியக் குடியரசுத் தலைவர்ஆழ்வார்கள்அறிவுசார் சொத்துரிமை நாள்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019கல்லணைஅடல் ஓய்வூதியத் திட்டம்ஐம்பூதங்கள்அகத்திணைதன்யா இரவிச்சந்திரன்மழைநீர் சேகரிப்புவிளையாட்டுஇந்து சமயம்சீனாபணவீக்கம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்விருமாண்டிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்ஜெயகாந்தன்நெடுநல்வாடைஇன்று நேற்று நாளைவட்டாட்சியர்ஆத்திசூடிஉலக சுகாதார அமைப்புநிலக்கடலைதிருநாவுக்கரசு நாயனார்கரிகால் சோழன்விடுதலை பகுதி 1புற்றுநோய்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தாவரம்பெண்தமிழ் இலக்கியப் பட்டியல்வே. செந்தில்பாலாஜிசார்பெழுத்துஜன்னிய இராகம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)சா. ஜே. வே. செல்வநாயகம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தொழிலாளர் தினம்மருது பாண்டியர்பெண் தமிழ்ப் பெயர்கள்தூது (பாட்டியல்)ஆனந்தம் (திரைப்படம்)தமிழர் பருவ காலங்கள்மஞ்சள் காமாலைசங்க இலக்கியம்காமராசர்புணர்ச்சி (இலக்கணம்)பெண்களின் உரிமைகள்சிவாஜி கணேசன்சுந்தர காண்டம்🡆 More