கோத் படுகொலைகள்

கோத் படுகொலைகள் (Kot massacre) (நேபாளி: कोत पर्व|kot parva) ஜங் பகதூர் ராணாவும், அவரது சகோதரர்களும், நேபாள இராச்சியத்தின் முதலமைச்சர் பதே ஜங் ஷா உள்ளிட்ட நாற்பது அரசவை முக்கியப் புள்ளிகளை, காட்மாண்டில் உள்ள கோத் எனுமிடத்திலுள்ள அரண்மனையில் வைத்து, 19 செப்டம்பர் 1846 அன்று படுகொலை செய்தனர்.

கோத் படுகொலைகள்
கோத் படுகொலைகள்
கோத் படுகொலைகள், காட்மாண்டு
நாள் 19 செப்டம்பர் 1846
இடம் கோத், காட்மாண்டு, நேபாள இராச்சியம்

கோத் படுகொலைகளால், ஷா வம்சத்தின் நேபாள மன்னர் ராஜேந்திர விக்ரம் ஷாவும், சுரேந்திர விக்ரம் ஷாவும், அவருக்குப் பின் அரியணை ஏறிய மனனர்களும், நேபாள இராச்சியத்தின் ஆட்சி நிர்வாகத்தை இழந்து பெயரளவிற்கு பொம்மை மன்னர்களாக விளங்கினார்கள்.

ராணா வம்சத்தின் ஜங் பகதூர் ராணாவும், அவரது வழித்தோன்றல்களும், 1847 முதல் 1951 முடிய நேபாள இராச்சியத்தின் சர்வாதிகாரர்களாக விளங்கினர்.

பின்னணி

நேபாள இராச்சியத்தின் அரச குடும்பத்தின் பிணக்குகள் உச்சகட்டத்தில் இருந்த போது, 1845ல் பிரதம அமைச்சர் பதே ஜங் ஷா தலைமையில் ஒரு கூட்டு அமைச்சரவைக் குழு நியமிக்கப்பட்டது. நேபாளத்தின் பத்து படையணிகளில், ஏழு படையணிகள் தலைமைப் படைத்தலைவர் ககன் சிங் பண்டாரி தலைமையில் இருந்ததால், இராச்சியத்தில் அவரது கை ஓங்கியிருந்தது.

படைத்தலைவர்களான ஜங் பகதூர் ராணா மற்றும் அபிமன் சிங் தலைமையில், மூன்று படையணிகள் வீதம் இருந்தது. தலைமைப் படைத்தலைவர் ககன் சிங் பண்டாரி, ராணி ராஜ்ஜிய லெட்சுமி தேவியுடன் தகாத உறவு கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது.

மன்னர் ராஜேந்திர விக்ரம் ஷா ஆட்சி நிர்வாகத்திலிருந்து விலகி இருந்தார். அச்சமயத்தில் நேபாள பட்டத்து ராணி சாம்ராஜ்ஜிய லெட்சுமி தேவி, மன்னரின் அரசப் பிரதிநிதியாக நாட்டை நிர்வகித்தார். சாம்ராஜ்ஜிய லெட்சுமி 1841ல் இறந்துவிட, நேபாள பிரதம அமைச்சர் பதே ஜங் ஷாவுடன் இணைந்து, இளைய ராணி ராஜ்ஜிய லெட்சுமி தேவி, மன்னரின் அரசப் பிரதிநிதியாக நேபாள இராச்சியத்தை நிர்வகித்தார்.

ராணி ராஜ்ஜிய லெட்சுமி தனது மகனும், பட்டத்து இளவரசரான சுரேந்திர விக்ரம் ஷாவை, ஜங் பகதூர் ராணா உதவியுடன் அரியணை ஏற்ற திட்டமிட்டார்.

இதனை பயன்படுத்திக் கொண்ட ராணா வம்சத்தின் ஜங் பகதூர் ராணாவும், அவரது சகோதர்களும் இணைந்து, 19 செப்டம்பர் 1846 அன்று காத்மாண்டு நகர சதுக்கத்தின் கோத் அரண்மனையில் இருந்த நேபாளப் பிரதம அமைச்சர் பதே ஜங் ஷா, மாதவர் சிங் தபா மற்றும் மன்னர் ராஜேந்திராவின் மெய்க்காவலர்கள் உள்ளிட்ட நாற்பது பேரை படுகொலை செய்தனர்.

1847 முதல் நேபாள மன்னர்களை கைப்பொம்மையாகக் கொண்டு, ராணா வம்சத்தினர், நேபாள இராச்சியம்|நேபாள இராச்சியத்தின்]] சர்வாதிகாரிகளாக, கிபி 1847 முதல் 1951 முடிய ஆட்சி செய்தனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

ne:कोत पर्वகாட்மாண்டுஜங் பகதூர் ராணாநேபாள இராச்சியம்நேபாளி மொழிபதே ஜங் ஷா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கிரியாட்டினைன்தமிழ் இணைய மாநாடுகள்மனோன்மணீயம்இந்திய உச்ச நீதிமன்றம்தமிழ் மாதங்கள்செம்மொழிபெண்ணியம்வேதம்பால் (இலக்கணம்)ஆயுள் தண்டனைதிருவாசகம்நான் வாழவைப்பேன்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்இராவண காவியம்சங்க காலப் புலவர்கள்முக்குலத்தோர்ஏலாதிசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்உலக ஆய்வக விலங்குகள் நாள்பஞ்சபூதத் தலங்கள்நெடுநல்வாடைசப்ஜா விதைதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்புதினம் (இலக்கியம்)செயங்கொண்டார்கேரளம்கோத்திரம்சமூகம்மோகன்தாசு கரம்சந்த் காந்திநவதானியம்சாகித்திய அகாதமி விருதுவீட்டுக்கு வீடு வாசப்படிவளையாபதிவிசாகம் (பஞ்சாங்கம்)தனிப்பாடல் திரட்டுதிருக்குர்ஆன்உலா (இலக்கியம்)சிலம்பம்மாமல்லபுரம்கபிலர் (சங்ககாலம்)மறவர் (இனக் குழுமம்)பொன்னியின் செல்வன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)வைரமுத்துராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்சங்க காலம்அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்பழனி முருகன் கோவில்பல்லாங்குழிகுற்றாலக் குறவஞ்சிகொன்றைகுருதி வகைபிரேமலுஅஸ்ஸலாமு அலைக்கும்கிருட்டிணன்லீலாவதிதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்செவ்வாய் (கோள்)ஆய்த எழுத்து (திரைப்படம்)குடும்பம்தொலைக்காட்சிபித்தப்பைசிலப்பதிகாரம்தமிழ்நாடு சட்டப் பேரவைதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்இந்திய தேசிய காங்கிரசுமு. வரதராசன்ஐங்குறுநூறு - மருதம்செயற்கை நுண்ணறிவுஜீரோ (2016 திரைப்படம்)தமிழ் விக்கிப்பீடியாசட் யிபிடிசின்னம்மைபுற்றுநோய்நாலடியார்சொல்அஜித் குமார்எங்கேயும் காதல்2024 இந்தியப் பொதுத் தேர்தல்🡆 More