கிரீஷ் கர்னாட்

கிரீஷ் ரகுநாத் கர்னாட் (Girish Raghunath Karnad, கன்னடம்: ಗಿರೀಶ್ ರಘುನಾಥ ಕಾರ್ನಾಡ್, 19 மே 1938 - 10 சூன் 2019) என்பவர் கன்னட மொழி எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார்.

கன்னடத்திற்கான ஞானபீட விருதை இவர் பெற்றார்.

கிரீஷ் கர்னாட்
கிரீஷ் கர்னாட்
2009 இல் கர்னாட்
பிறப்புகிரீஷ் இரகுநாத் கர்னாட்
(1938-05-19)19 மே 1938
மதிரன், மும்பை மாகாணம்
இறப்பு10 சூன் 2019(2019-06-10) (அகவை 81)
பெங்களூர்
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்கர்நாடகா பல்கலைக்கழகம், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
பணிநாடகாசிரியர், திரைப்பட இயக்குநர், நடிகர்
பிள்ளைகள்ரகு கர்னாட்

கர்னாட் நாற்பது ஆண்டுகளாக நாடகங்களை இயக்கி வந்தார். இவரது நாடகங்களில் பெரும்பாலும் தற்காலத்திய பிரச்சனைகளை குறிக்க வரலாறு மற்றும் தொன்மவியலைப் பயன்படுத்துவார். இப்ராகிம் அல்காசி, பீ. வீ. கரந்த், அலிகியூ படம்சே, பிரசன்னா, அரவிந்த் கவூர், சத்யதேவ் துபே, விஜயா மேத்தா, ஷியாமானந்த் ஜலன் மற்றும் அமல் அலானா போன்ற புகழ்பெற்ற இயக்குனர்களால் அவரது நாடகங்கள் இயக்கப்பட்டன. ஒரு நடிகராக, இயக்குநராக, திரைக்கதை எழுத்தாளராக இந்தியத் திரைப்பட உலகில் அவர் நிலைத்து நின்றார், இதனால் ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். அவருக்கு இந்திய அரசாங்கத்தினால் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

கிரிஷ் கர்னாட், மகாராட்டிராவின் மாத்தெரானில், கொங்கனி பேசும் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவரது துவக்கப் பள்ளிப்படிப்பானது, மராத்தியில் இருந்தது. கர்னாட் இளைஞராக இருந்த காலத்தில், அவரது கிராமத்தில் நடத்தப்படும் யாக்ஷகானா என்னும் நாட்டுப்புற கலையின் தீவிரமான ஆர்வலராக இருந்தார்.

1958 இல், தார்வார், கர்நாடக கல்லூரியில், இளங்கலைப் பட்டம் பெற்ற கர்னாடுக்கு, ஆக்ஸ்போர்டில் மேற்படிப்புக்கு நல்கை கிடைத்தது. இதனால் பட்டப்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார், (1960-63) ஆக்ஸ்போர்டில் உள்ள லிங்கன் மற்றும் மக்டாலின் கல்லூரிகளில் கல்வி பயின்று, தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னையில் ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பதிப்பகத்தில் ஏழு ஆண்டுகள் (1963-70) பணிபுரிந்த பிறகு, அந்தப் பணியை விடுத்தார். புனே திரைப்படக் கல்லூரியியில் (1974-1975) இயக்குனராகவும், தேசிய அகாடமியான சங்கீத நாடக அகாடெமியின் நிர்வாகத் தலைவராகவும் (1988-93) அவர் பணியாற்றினார். மேலும் 1976-1978 வரை, கர்நாடக நாடக அகாடமியின் தலைவராக பணியாற்றினார். 1987-88 ஆம் ஆண்டுகளின் போது, சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியராகவும், பல்பிரைட் நாடக ஆசிரியராக தற்காலிக கெளரவப் பேராசிரியராகவும் இருந்தார். மிகவும் அண்மையில், இந்தியன் ஹை கமிசன், லண்டனில் (2000-03) நேரு மையத்தின் இயக்குனராகவும், கலாச்சார அமைச்சராகவும் பணியாற்றினார்.

தொழில் வாழ்க்கை

இலக்கியம்

கர்னாட், நாடக ஆசிரியராக மிகவும் புகழ்பெற்றார். கன்னடத்தில் எழுதப்பட்ட அவரது நாடகங்கள், ஆங்கிலத்தில் பரவலாக மொழிபெயர்க்கப்பட்டன, மேலும் அதே போல் அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது தாய் மொழியான கொங்கனியில் அல்லாமல் சர்வதேச இலக்கியப் புகழைப் பெறவேண்டும் என கனவுகளைக் கொண்டிருந்த கர்னாட் தன் நாடகங்களை, கன்னடத்தில் இயற்றினார். கர்னாட் கன்னடத்தில் நாடங்களை எழுதத் தொடங்கிய போது, கன்னட இலக்கியமானது, மேற்கத்திய இலக்கியத்தின் மறுமலர்ச்சி மூலமாக அளவு கடந்த தாக்கத்தைக் கொண்டிருந்தது. எழுத்தாளர்கள் தாய்மண்ணின் வெளிப்படுகைக்கு சம்பந்தம் இல்லாத பொருள்களையே தேர்ந்தெடுத்தனர்.

இதைப் போன்ற சூழ்நிலையில், இந்த தற்காலத்திய கருப்பொருள்களை சமாளிப்பதற்கு புதிய அணுகுமுறையாக வரலாற்று மற்றும் தொன்மவியல் மூலங்களை கர்னாட் உருவாக்கினார். அவரது முதல் நாடகம் "யயாதி" (1961) இல், மகாபாரத பாத்திரங்களின் வழியாக வஞ்சப்புகழ்ச்சிப் பாடுபவர்களின் வாழ்க்கை கேலி செய்யப்பட்டது, மேலும் இந்த நாடகம் உடனடி வெற்றியையும் பெற்றது. இதன் விளைவாக பல்வேறு பிற இந்திய மொழிகளிலும் விரைவாக மொழிபெயர்க்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது. அவரது சிறப்பாக போற்றப்பட்ட நாடகமான "துக்ளக்" (1964), நாட்டின் மிகவும் சிறந்த எதிர்காலமுள்ள நாடக ஆசிரியர்களில் ஒருவராக கர்னாட்டை அடையாளம் காட்டியது. கர்னாட், அவரது நாடகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவரது ஏராளமான கன்னட நாடகங்கள், டாக்டர் பார்கவி பீ. ராவ் மூலமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

திரைப்படங்கள்

வம்சவிருக்ஷா மூலமாக கர்னாட் இயக்குனராக அறிமுகமானார், இது எஸ். எல். பைரப்பாவின் கன்னடப் புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்டதாகும். இத்திரைப்படம், பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்றது. அதற்கு முன்பு, யூ. ஆர். அனந்தமூர்த்தியின் புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமான சம்ஸ்காரா வில் கர்னாட் நடித்தார், இத்திரைப்படத்தை பட்டாபிராம ரெட்டி இயக்கினார். இத்திரைப்படமானது, கன்னடத் திரைப்படத்திற்கான ஜனாதிபதியின் தங்கத் தாமரை விருதை முதன்முறையாக வென்றது. பின்னர், கன்னடம் மற்றும் இந்தியில் பல்வேறு திரைப்படங்களை கர்னாட் இயக்கினார். தப்பலியூ நீனாடு மகனே , ஆண்டாண்டு காலதல்லி , செலுவி மற்றும் காடு உள்ளிட்ட அவரது சில புகழ்பெற்ற கன்னடத் திரைப்படங்களும் அடக்கமாகும்.

உத்சவ் , காட்ஹூலி மற்றும் அண்மைய புகார் அவரது இந்தி திரைப்படங்களாகும். கர்னாட்டின் வெற்றித் திரைப்படமான கன்னூரு ஹெக்கதிதி படமானது கன்னட எழுத்தாளரான குவேம்புவின் புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்டதாகும். விப்புல் கே ராவல் மூலமாக மிகச்சிறந்த வகையில் எழுதப்பட்ட இக்பாலில் இரக்கமற்ற கிரிக்கெட் பயிற்சியாளராக கர்னாட்டின் பாத்திரமும் அவருக்கு விமர்சனரீதியாக பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. முகத்துதி பாடுபவர்களுக்கு சாதகமாக நிலைநாட்டிக்கொள்வதற்கு, வரலாற்றுக்கு உண்மையில்லாமல் இருப்பதற்காக, புகழ்பெற்ற நாவலாசிரியர் எஸ்.எல். பைரப்பா மூலமாக கர்னாட் விமர்சிக்கப்பட்டார். கர்னாட், முன்னணி நடிகர் அக்ஷய் குமாருடன் 8*10 டியாஸ்வீர் என்ற திரைப்படத்தில் நடித்தார் [1]

பிற குறிப்பிடத்தக்க பணிகள்

கரடி டேல்ஸ் என்ற குழந்தைகளுக்கான பிரபலமான ஆடியோ புத்தகத் தொடரின் பல்வேறு கதைகளுக்காக, சூட்ராதராக (நிகழ்ச்சியுரையாளர்), கரடி பாத்திரத்துக்கு கர்னாட் குரல் கொடுத்தார். சர்கா ஆடியோபுக்ஸ் உருவாக்கிய அக்கினச் சிறகுகள் என்ற கலாமின் சுயசரிதத்தின் ஒலி நூலில், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான ஏ பீ ஜே அப்துல் கலாமின் குரலாக கர்னாட் ஒலித்தார்.

நூல்விவரத் தொகுப்பு

நாடகங்கள்

  • துக்ளக் (பீ.வீ. கரந்த் மூலமாக இந்துஸ்தானியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இப்ராகிம் அல்காசி, பிரசன்னா, அரவிந்த் கவுர் மற்றும் தினேஷ் தாக்கூர் போன்ற பிரபலமான இந்திய இயக்குனர்கள் இதை அரங்கேற்றியுள்ளனர்
  • ஹயவதன (கன்னடம்: ಹಯವದನ)
  • நாகமண்டால (கன்னடம்: ನಾಗಮಂಡಲ)
  • பலி (கன்னடம்: ಬಲಿ)
  • அக்னி மட்டு மலே (கன்னடம்: ಅಗ್ನಿ ಮತ್ತು ಮಳೆ) (நெருப்பும் மழையும்), NSD அறிக்கைக்காக பிரசன்னா மூலமாக முதன்முதலில் இயக்கப்பட்டது.
  • ஓடகலு பிம்ப (கன்னடம்: ಒಡಕಲು ಬಿಂಬ)
  • யயாதி (கன்னடம்: ಯಯಾತಿ)
  • அஞ்சுமல்லிகே (கன்னடம்: ಅಂಜುಮಲ್ಲಿಗೆ)
  • மா நிஷாதா (கன்னடம்: ಮಾ ನಿಷಾಧ)
  • திப்புவின கனசுகலு (கன்னடம்: ಟಿಪ್ಪುವಿನ ಕನಸುಗಳು) (திப்பு சூல்தானின் கனவுகள்)
  • இந்தியில் ராக்ட்-கல்யாண் என அறியப்படும், தலேதாண்டா' (கன்னடம்: ತಲೆದಂಡ) NSD அறிக்கைக்காக இப்ராகிம் அல்கசிக்காக முதன் முதலில் இயக்கப்பட்டு, ராம் கோபால் பஜாஜ் மூலமாக மொழிபெயர்க்கப்பட்டது, பின்னர் புது டெல்லியின் ஆஸ்மித்தா தியேட்டர் குரூப்பிற்காக அரவிந்த் கவுரால் (1995-2008, இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது) இயக்கப்பட்டது.
  • ஹிட்டினா ஹுஞ்சா (கன்னடம்: ಹಿಟ್ಟಿನ ಹುಂಜ)
  • ஒடகலூ பிம்பா (கன்னடம்: ಒಡಕಲು ಬಿಂಬ)
  • மதுவே ஆல்பம் (கன்னடம்: ಮದುವೆ ಆಲ್ಬಮ್)

திரைப்பட விவரங்கள்

திரைப்படங்கள்

  • கோமரம் புலி (2010) தெலுங்குத் திரைப்படம்
  • லைப் கோஸ் ஆன் (2009) (தயாரிப்புக்கு பிந்தைய பணிகளில் உள்ளது) சஞ்சய்யாக நடிக்கிறார்
  • ஆஷாயேன் (2009) (முழுமையடைந்து விட்டது) பார்த்தசாரதியாக நடித்துள்ளார்
  • அனில் ஷர்மாவாக 8 x 10 தஸ்வீர் (2009)
  • கிரிஷ் நாயக்காக ஆ தினகலூ கன்னடம் (2007)
  • ரந்தீர் சிங்காக தோர் (2006)
  • குருஜியாக இக்பால் (2005)
  • சத்ய பிரசாத்தாக ஷங்கர் தாதா MBBS (தெலுங்கு) (2004)
  • உப்பிலி ஐயங்காராக ஹேராம் (தமிழ்) (2000)
  • மிஸ்டர் ராஜ்வனிஷாக புக்கர் (2000)
  • ராஜ்வனஷ் ஷாஸ்திரியாக ஆக்ரோஷ் : ஸய்க்லோன் ஆஃப் ஆங்கர் (1998)
  • வனக்காவலர் சுந்தர் ராஜனாக சைனா கேட் (1998)
  • அமல் ராஜாக மின்சாரக்கனவு (தமிழ்) (1997)
  • ஸ்ரீராமாக ரட்சகன் (தமிழ்) (1997)
  • விஷ்வனாத்தாக த பிரின்ஸ் (1996/II)
  • இன்ஸ்பெக்டர் கானாக ஆடான்க் (1996)
  • மன நோய் மருத்துவராக ஆஹாத்தா (கன்னடம்) (1994)
  • காகர்லாவாக காதலன் (தமிழ்) (1994)
  • பிரான டாட்டா (1993)
  • கிராமத் தலைவராக செலுவி (1992)
  • குனா (1991)
  • ஆண்டர்நாட் (1991)
  • பிரம்மா (1991)
  • நேரு : தி ஜெவேல் ஆஃப் இந்தியா (1990)
  • கோவிந்தபாத்தாக சாந்தா ஷிஷுன்ந்தலா ஷரீஃப் (கன்னடம்) (1990)
  • மில் கயே மன்ஜில் முஜ்ஹே (1989)
  • அகர்ஷான் (1988)
  • ஜமீந்தாராக சூத்ரதார் (1987)
  • மேஜர் ஹரிச்சந்திர பிரசாத்தாக சட்நாயா (1986)
  • அப்பு மேனனாக நிலகுரின்ஹி பூத்தப்பூல் (மலையாளம்) (1986)
  • பண்டிட் ஷிவஷங்கர் ஷாஸ்திரியாக சர் சங்கம் (1985)
  • தீபக் வெர்மாவாக மெரி ஜங் (1985)
  • சதீஷ் குமாராக ஸமனா (1985)
  • நீ தாண்டா கனிகே (தெலுங்கு) (1985)
  • நாராயண சர்மாவாக ஆனந்த பைரவி (1984)
  • ஜெயந்த் ஓஸ்வலாக டிவோர்ஸ் (1984)
  • தினேஷாக தரங் (1984)
  • தின் தாயலாக ஏக் பார் சலே ஆவோ (1983)
  • ராகேஷாக தேரே கசம் (1982)
  • அபரூபா (அஸாமீஸ்) (1982)
  • வழக்கறிஞர் சுபாஷ் மஹாஜனாக உம்பார்த்தா (மராத்தி) (1982)
  • நவாப் யூசுப் கானாக ஷாமா (1981)
  • ஹரீஷாக ஆப்னே பரேயே (1980)
  • காஷிநாத்தாக மன் பசந்த் (1980)
  • தீபக்காக ஆஷா (1980)
  • ஆன்வெஷானே (கன்னடம்) (1980)
  • டாக்டர் ஆனந்த் பட்நாகராக பீகுவாசூர் (1980)
  • ரட்னதீப் (1979)
  • ஹீராவாக சம்பார்க் (1979)
  • அமர்ஜீத்தாக ஜீவன் முக்த் (1977)
  • கான்ஷியாமாக சுவாமி (1977)
  • டாக்டர் ராவாக மந்தன் (1976)
  • ஸ்கூல்மாஸ்டராக நிஷாந்த் (1975)
  • ஜாதூ கா ஷான்க் (1974)
  • வம்ஷ விரிக்ஷா (1971)
  • பிரானேஷாசாரியாவாக சம்ஸ்காரா (1970)

கிரிஷ் கர்னாட் இயக்கிய திரைப்படங்கள்

  • கன்னடத்தில் ஆண்டாண்டு காலதல்லி
  • கன்னடத்தில் கன்னூரு ஹெக்கதத்தி
  • கன்னடத்தில் காடு
  • கன்னடத்தில் செலுவி
  • மஹெந்தாராக துர்கா
  • இந்தியில் உத்சவ்
  • கிர்டிநாத் கருடாகோட்டியின் கன்னட நாடகமான ஆ மணி யைத் தழுவி வோ கர்

விருதுகள் மற்றும் கெளரவங்கள்

இலக்கிய நூல்களுக்காக

  • சன்கீத நட்டாக அகாடமி விருது - 1972
  • பத்மஸ்ரீ - 1974
  • பத்ம பூஷன் - 1992
  • கன்னட சாகித்ய அகாடமி விருது - 1992
  • சாகித்ய அகாடமி விருது - 1994
  • ஞானபீட விருது - 1998
  • ராஜ்யோத்சவா விருது

திரைப்படங்கள்

    தேசிய திரைப்பட விருதுகள்
  • 1970: சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது (தங்கத் தாமரை): சமஸ்காரா
  • 1972: சிறந்த இயக்கத்திற்கான தேசியத் திரைப்பட விருது: வம்ஷவருக்ஷா (பீ.வீ. கரந்துடன்)
  • 1978: சிறந்த திரைக்கதைக்கான தேசியத் திரைப்பட விருது: பூமிகா
  • 2000:கன்னடத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது: கன்னூரு ஹெக்கடத்தி
  • கனகா புரந்தரா என்ற சிறந்த பங்குபெறாத திரைப்படத்திற்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது - 1989
    பிலிம்ஃபேர் விருதுகள்
  • 1979: பிலிம்ஃபேர் சிறந்த திரைக்கதை விருது: காட்ஹுலி (பீ.வீ. கரந்துடன்)
  • 1980: பிலிம்ஃபேர் சிறந்த துணைநடிகர் விருது: ஆஷா : பரிந்துரை
  • 1982: பிலிம்ஃபேர் சிறந்த துணைநடிகர் விருது: தேரே கசம்  : பரிந்துரை
    பிற விருதுகள்
  • "சாண்டா ஷிஷன்லா ஷாரீஃப்பில்" சிறந்த துணை நடிகருக்கான கர்நாடக மாநில விருது - 1991
  • வம்ஷவருக்ஷா வில் சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த கன்னடத் திரைப்படத்திற்கான மைசூர் மாநில விருது - 1972
  • கப்பி வீரன்னா விருது


சொந்த வாழ்க்கை

கர்னாட், டாக்டர் சரஸ்வதி கணபதியைத் திருமணம் செய்து கொண்டார், அவர்களுக்கு ஷல்மலி ராதா மற்றும் ரகு அமே என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மறைவு

கிரிஷ் கர்னாட் தமது 81வது அகவையில் உடல்நலக் குறைவால் 10 சூன் 2019 அன்று மறைந்தார்

அடிக்குறிப்புகள்

புற இணைப்புகள்

Tags:

கிரீஷ் கர்னாட் ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்விகிரீஷ் கர்னாட் தொழில் வாழ்க்கைகிரீஷ் கர்னாட் நூல்விவரத் தொகுப்புகிரீஷ் கர்னாட் திரைப்பட விவரங்கள்கிரீஷ் கர்னாட் விருதுகள் மற்றும் கெளரவங்கள்கிரீஷ் கர்னாட் சொந்த வாழ்க்கைகிரீஷ் கர்னாட் மறைவுகிரீஷ் கர்னாட் அடிக்குறிப்புகள்கிரீஷ் கர்னாட் புற இணைப்புகள்கிரீஷ் கர்னாட்கன்னட மொழிகன்னடம் மொழிநடிகர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்விடு தூதுசித்தர்கள் பட்டியல்தசாவதாரம் (இந்து சமயம்)நரேந்திர மோதிதனிப்பாடல் திரட்டுசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கேள்விபோதைப்பொருள்அய்யா வைகுண்டர்இராமாயணம்பாடாண் திணைமலைபடுகடாம்மீராபாய்கார்ல் மார்க்சுபாரத ரத்னாஏலகிரி மலைபோக்குவரத்துஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்ஓரங்க நாடகம்ஆய்வுசுற்றுலாராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்இந்திய தேசிய சின்னங்கள்மருது பாண்டியர்கலிப்பாதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்சமூகம்தமிழ் இலக்கணம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்வீரமாமுனிவர்திருப்பதிஇந்திய வரலாறுதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்நாடார்சட் யிபிடிதமிழ்த்தாய் வாழ்த்துமுடியரசன்புறநானூறுஉடுமலைப்பேட்டைகோவிட்-19 பெருந்தொற்றுஇந்தியப் பிரதமர்நயன்தாராதிராவிட மொழிக் குடும்பம்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)இலக்கியம்முதல் மரியாதைகாதல் தேசம்கண்ணாடி விரியன்இந்தியாஇயற்கைதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சீவக சிந்தாமணிரெட் (2002 திரைப்படம்)கோயில்மு. மேத்தாவாதுமைக் கொட்டைபஞ்சபூதத் தலங்கள்உமறுப் புலவர்சப்ஜா விதைஅவிட்டம் (பஞ்சாங்கம்)கூகுள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்ஆத்திசூடிதாஜ் மகால்கணையம்ஔவையார்நுரையீரல்ஐங்குறுநூறு - மருதம்எலுமிச்சைசச்சின் (திரைப்படம்)கருத்தரிப்புகாம சூத்திரம்தமிழ் நீதி நூல்கள்ஐக்கிய நாடுகள் அவைஅக்கிபகத் பாசில்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்யாவரும் நலம்🡆 More