கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்

கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம் (Khalifa International Stadium) கத்தார் நாட்டின் தோகா நகரில் அமைந்துள்ளது.

இப்பல்நோக்கு விளையாட்டரங்கம் தேசிய விளையாட்டரங்கம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்
Khalifa International Stadium
கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்
தோகா கலீஃபா அரங்கில் பிரேசில் மற்றும் அர்கெந்தினா அணிகள் விளையாடிய போட்டி
அமைவிடம்தோகா, கத்தார்
ஆட்கூற்றுகள்25°15′49″N 51°26′53″E / 25.26361°N 51.44806°E / 25.26361; 51.44806
உரிமையாளர்கத்தார் கால்பந்து சங்கம்
இருக்கை எண்ணிக்கை45,416
தரைப் பரப்புபுல்
Construction
திறக்கப்பட்டது1976
சீரமைக்கப்பட்டது2005, 2014–2017
வடிவமைப்பாளர்தர் அல்-அந்தாசா
Main contractorsமிட்மேக் கட்டுமான நிறுவனம் உள்ளிட்டோர்
குடியிருப்போர்
கத்தார் தேசிய கால்பந்து அணி (1976–முதல்)
கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்
2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடக்க நாளில் வானவேடிக்கை

கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கமானது 250 எக்டேர் பரப்பளவுள்ள தோகா விளையாட்டு நகர வளாகத்தின் ஒரு பகுதியாகும். கத்தார் நாட்டு தடகள வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஆசுபையர் அகாடமி, நீச்சல் குள வளாகமான அமாத் நீரியல் மையம், 300 மீட்டர் உயரம் கொண்ட வானளாவியான ஆசுபையர் கோபுரம் போன்றவையும் தோகா விளையாட்டு நகர வளாகத்தில் இடம்பெற்றுள்ளன.

கத்தாரின் முன்னாள் அமீர் கலீஃபா பின் அமத் அல் தானியின் நினைவாக விளையாட்டரங்கம் கலீபா பெயரால் அழைக்கப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பின் ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி இங்கு நடைபெற்றது. 2017 ஆம் ஆண்டு உலகளாவிய நிலைத்தன்மை மதிப்பீட்டு அமைப்பானது கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கத்திற்கு நான்கு நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியது. உலகிலேயே முதல் முறையாக இந்த மதிப்பீட்டை அவ்வமைப்பு வழங்கியது. இவ்விளையாட்டரங்கத்தில் 30000 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

வரலாறு

1976 ஆம் ஆண்டு கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம் திறக்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டில் இங்கு 11 ஆவது வளைகுடா கோப்பையின் 15 ஆட்டங்கள் நடைபெற்றன. கத்தார் இறுதியாக முதலிடம் பிடித்து முதலாவது குழிப்பந்துக் கோப்பையை வென்றது.

2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பாக 2005 ஆம் ஆண்டு விளையாட்டரங்கம் புதுப்பிக்கப்பட்டது. இதனால் விளையாட்டரங்கின் திறனான 20,000 பார்வையாளர்கள் என்ற நிலை விரிவாக்கப்பட்டு 40,000 பார்வையாளர்கள் என்ற நிலைக்கு அதிகரித்தது. மைதானத்தின் மேற்குப் பகுதியை ஒரு கூரை மூடியிருக்கிறது. கிழக்குப் பகுதியில் ஒரு பெரிய அலங்கார வளைவு உள்ளது. 2006 ஆசிய விளையாட்டு தொடக்க விழாவின் போது வானவேடிக்கைகளை நடத்த ஒரு தளமாக இவ்வளைவு பயன்படுத்தப்பட்டது.

2005 ஆம் ஆண்டு அரங்கம் புதுப்பிக்கப்படுவதற்கு முன்பு பெரும்பாலும் கால்பந்து சங்கங்களின் கால்பந்து போட்டிகள் மட்டுமே இங்கு நடைபேற்றன. ஆனால் இங்கு பல விதமான விளையாட்டுகளுக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 1997 ஆம் ஆண்டு முதல் அரங்கத்தில் தடகளப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. கத்தார் நாட்டின் தேசிய கால்பந்து அணிக்கு இது சொந்த மைதானமாகும். 2011 ஆம் ஆண்டு பான் அரபு விளையாட்டுகளின் 6 ஆட்டங்கள் இங்கு நடைபெற்றன. குழுநிலையில் கத்தார் தேசிய அணியின் அனைத்து போட்டிகள், போட்டியின் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் இங்கு நடத்தப்பட்டன.

மற்றொரு மறுவடிவமைப்புக்குப் பிறகு, அரங்கம் 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடைபெற்ற உலக தடகள வெற்றியாளர் போட்டிகளின் தளமாக கலிஃபா விளையாட்டு அரங்கம் திகழ்ந்தது.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 அன்று, இங்கு முக்கியமான இரண்டு 2019 பிபா சங்க உலகக் கோப்பை போட்டிகளுக்கான இடமாகத் திட்டமிடப்பட்டது: ஐந்தாவது இடத்திற்கான போட்டியும் தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பின் ஓர் அரையிறுதிப் போட்டிகள் இங்கு நடைபெற்றன. 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் கத்தாரில் நடத்த முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து விளையாட்டரங்கத்தின் பார்வையாளர்கள் அமரும் திறன் 68,000 பேராக உயர்த்த திட்டமிடப்பட்டது.

2022 உலகக் கோப்பை போட்டிக்கான விளையாட்டரங்குகள் கட்டுமானம்

பன்னாட்டுக் கால்பந்தாட்டக் கழகங்கள் கூட்டமைப்பின் உலகக் கோப்பை போட்டிகள் கத்தாரில் 2022 ஆம் ஆண்டில் நடைபெற உள்ளன. இதற்காக எட்டு விளையாட்டரங்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் கலிஃபா பன்னாட்டு விளையாட்டரங்கும் ஒன்றாகும். போட்டிகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் முதலாவதாக கட்டி முடிக்கப்பட்டதும் கலிஃபா அரங்கமேயாகும்.

நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகள்

  • 17 ஆவது அராபியக் குழிப்பந்து கோப்பை போட்டிகள்
  • 2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
  • ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு போட்ட்டிகளின் சில போட்டிகள்
  • 2011 பான் அராபிய விளையாட்டுகள்
  • 2019 உலக தடகளப் போட்டிகள்
  • 24 ஆவது அராபியக் குழிப்பந்து கோப்பை போட்டிகள்
  • 2019 பிஃபா வின் ஐந்து போட்டிகள்
  • 2021 பிஃபா அராபியக் கோப்பைப் போட்டிகள்
  • 2022 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள்

சமீபத்திய போட்டி முடிவுகள்

2011 ஆசியக் கூட்டமைப்பு ஆசியக் கோப்பை

நாள் நேரம்(கத்தார்) அணி #1 முடிவு அணி #2 சுற்று
7 சனவரி 2011 19:15 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  கத்தார் 0–2 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  உஸ்பெகிஸ்தான் 2011 ஆசியக் கோப்பை குழு ஆட்டங்கள்
12 சனவரி 2011 19:15 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  சீனா 0–2 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  கத்தார்
16 சனவரி 2011 19:15 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  கத்தார் 3–0 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  குவைத்
21 சனவரி 2011 19:25 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  உஸ்பெகிஸ்தான் 2–1 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  யோர்தான் 2011 ஆசியக் கோப்பை காலிறுதியாட்டம்
25 சனவரி 2011 19:25 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  உஸ்பெகிஸ்தான் 0–6 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  ஆத்திரேலியா 2011 ஆசியக் கோப்பை அரை-இறுதியாட்டம்
29 சனவரி 2011 18:00 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  ஆத்திரேலியா 0–1 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  சப்பான் 2011 ஆசியக் கோப்பை இறுதியாட்டம்

பன்னாட்டுப் போட்டிகள்

நட்புக்கானவை

நாள் நேரம்(கத்தார்) அணி #1 முடிவு. அணி #2
2009-11-14 19:15 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  பிரேசில் 1–0 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  இங்கிலாந்து
2010-11-17 19:15 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  பிரேசில் 0–1 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  அர்கெந்தீனா
2010-11-18 18:00 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  கத்தார் 0–1 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  எயிட்டி
2010-12-16 18:00 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  கத்தார் 2–1 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  எகிப்து
2010-12-22 16:00 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  கத்தார் 2–0 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  எசுத்தோனியா
2010-12-28 19:15 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  கத்தார் 0–0 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  ஈரான்
2013-02-06 21:00 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  எசுப்பானியா 3–1 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  உருகுவை
2018-09-07 19:00 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  கத்தார் 1–0 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  சீனா
2018-09-11 19:00 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  கத்தார் 3–0 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  பலத்தீன்
2018-12-31 20:00 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  கத்தார் 1–2 கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்  ஈரான்

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Tags:

கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம் வரலாறுகலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம் 2022 உலகக் கோப்பை போட்டிக்கான விளையாட்டரங்குகள் கட்டுமானம்கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகள்கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம் சமீபத்திய போட்டி முடிவுகள்கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம் பன்னாட்டுப் போட்டிகள்கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம் மேற்கோள்கள்கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம் புற இணைப்புகள்கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்கத்தார்தோகா

🔥 Trending searches on Wiki தமிழ்:

தன்வினை / பிறவினை வாக்கியங்கள்பாளையத்து அம்மன்பதிற்றுப்பத்துசெஞ்சிக் கோட்டைபெண்சிவபெருமானின் பெயர் பட்டியல்மருது பாண்டியர்இந்தியத் தேர்தல் ஆணையம்இந்திய தேசிய காங்கிரசுசமுத்திரக்கனிபுலிமுருகன்திருமூலர்ஆய்த எழுத்து (திரைப்படம்)இந்திய தேசியக் கொடிஊராட்சி ஒன்றியம்கினோவாமொழிபெயர்ப்புசுந்தரமூர்த்தி நாயனார்தொல். திருமாவளவன்குடும்பம்இந்தியாவின் பசுமைப் புரட்சிபெரும்பாணாற்றுப்படைஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)அழகர் கோவில்சிவனின் 108 திருநாமங்கள்மீன் வகைகள் பட்டியல்அனுமன்மழைபுவிமாசாணியம்மன் கோயில்பூப்புனித நீராட்டு விழாஉத்தரகோசமங்கைசெயற்கை நுண்ணறிவுகுணங்குடி மஸ்தான் சாகிபுஆந்திரப் பிரதேசம்உன்னை நினைத்துபெருஞ்சீரகம்வானிலைநவக்கிரகம்ஏலகிரி மலைசெங்குந்தர்கர்மாகஞ்சாசித்திரைத் திருவிழாதினமலர்முலாம் பழம்கரிகால் சோழன்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்கருக்காலம்வாகைத் திணைநிலாதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்நம்பி அகப்பொருள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)நெல்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்முகலாயப் பேரரசுஏப்ரல் 26விஜய் (நடிகர்)சேலம்எட்டுத்தொகைதிதி, பஞ்சாங்கம்அடல் ஓய்வூதியத் திட்டம்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)திராவிட இயக்கம்நஞ்சுக்கொடி தகர்வுபகவத் கீதைவிசயகாந்துமறவர் (இனக் குழுமம்)புங்கைசுடலை மாடன்சுபாஷ் சந்திர போஸ்காரைக்கால் அம்மையார்ஹரி (இயக்குநர்)🡆 More