கருப்பையா வேலாயுதம்

கருப்பையா வேலாயுதம் (Karuppaiah Velayudam, 6 ஏப்ரல் 1950 - 13 அக்டோபர் 2015) இலங்கைத் தொழிற்சங்கத் தலைவரும், அரசியல்வாதியும், முன்னாள் இராசாங்க அமைச்சரும் ஆவார்.

கே, வேலாயுதம்
K. Velayudam
பெருந்தோட்டத் தொழிற்துறை இராசாங்க அமைச்சர்
பதவியில்
2015–2015
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2001–2004
பதவியில்
2014–2015
முன்னையவர்ஹரின் பெர்னாண்டோ
பதுளை மாவட்டத்துக்கான ஊவா மாகாணசபை உறுப்பினர்
பதவியில்
1988–2001
பதவியில்
2004–2014
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1950-04-06)6 ஏப்ரல் 1950
இறப்பு13 அக்டோபர் 2015(2015-10-13) (அகவை 65)
சென்னை, இந்தியா
தேசியம்இலங்கை மலையகத் தமிழர்
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி
பெற்றோர்(s)கருப்பையா தேவர், ஆவத்தாள்
வேலைதொழிற்சங்கவாதி

இளமைக் காலம்

வேலாயுதம் கருப்பையா தேவர், ஆவத்தாள் ஆகியோரின் 11 பிள்ளைகளில் ஏழாவதாக உடப்புசல்லாவை கேர்கில்சு தோட்டத்தில் 1950 ஏப்ரல் 6 இல் பிறந்தார். தந்தை மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியாக இருந்தவர். பதுளை ஊவா கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த பின்னர் பத்திரிகையாளராகப் பணியாற்றினார். தனலெட்சுமி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரதீபராஜா, உருத்திரதீபன், தினேஷ்குமார், நிமலரூபன் என்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

பணி

வேலாயுதம் தனது தொழிற்சங்க நடவடிக்கைகளை இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் அமைப்பாளராக ஆரம்பித்தார். இத்தொழிற்சங்கம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயல்பட்டது. இவர் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பல பதவிகளில் இருந்து பணியாற்றிய பின்னர் 1982 ஆம் ஆண்டில் அச்சங்கத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டில் அதன் பொதுச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார். 2005 இல் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் உறுப்பினராக இருந்த தேசிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார். 2008 இல் கூட்டமைப்பின் இடைக்காலத் தலைவராக இருந்து பணியாற்றிய பின்னர் அக்டோபர் 2011 இல் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

வேலாயுதம் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக 1988 ஊவா மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவு செய்யப்பட்டார். பேர்சி சமரவீரவின் இறப்பை அடுத்து 1999 மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

2001 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

வேலாயுதம் 2004 மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2009 மாகாணசபத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு கட்சி வேட்பாளர்களில் மூன்றாவதாக வந்து தெரிவாகவில்லை. ஆனாலும், ஹரின் பெர்னாண்டோ தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்ததை அடுத்து 2014 ஆகத்து 8 இல் வேலாயுதம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2015 அரசுத் தலைவர் தேர்தலை அடுத்து புதிதாக அமைக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் இவர் பெருந்தோட்டத் தொழிற்துறை இராசாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

வேலாயுதம் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியல் வேட்பாளராகச் சேர்க்கப்பட்டார். ஆனாலும், தேர்தலுக்குப் பின்னர் இவர் உறுப்பினராக நியமிக்கப்படவில்லை.

மறைவு

வேலாயுதம், சென்னையிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2015 அக்டோபர் 13 அன்று காலமானார்.

தேர்தல் வரலாறு

தேர்தல் மாவட்டம் கட்சி வாக்குகள் முடிவு
1988 மாகாணசபை பதுளை மாவட்டம் ஐதேக தெரிவு
1993 மாகாணசபை பதுளை மாவட்டம் ஐதேக தெரிவு
1999 மாகாணசபை பதுளை மாவட்டம் ஐதேக தெரிவு
2001 நாடாளுமன்றம் பதுளை மாவட்டம் ஐதேமு 40,753 தெரிவு
2004 நாடாளுமன்றம் பதுளை மாவட்டம் ஐதேமு 36,328 தெரிவு செய்யப்படவில்லை
2004 மாகாணசபை பதுளை மாவட்டம் ஐதேக 15,423 தெரிவு
2009 மாகாணசபை பதுளை மாவட்டம் ஐதேக 14,870 தெரிவு
2010 நாடாளுமன்றம் பதுளை மாவட்டம் ஐதேமு 25,056 தெரிவு செய்யப்படவில்லை

மேற்கோள்கள்

Tags:

கருப்பையா வேலாயுதம் இளமைக் காலம்கருப்பையா வேலாயுதம் பணிகருப்பையா வேலாயுதம் மறைவுகருப்பையா வேலாயுதம் தேர்தல் வரலாறுகருப்பையா வேலாயுதம் மேற்கோள்கள்கருப்பையா வேலாயுதம்இலங்கை

🔥 Trending searches on Wiki தமிழ்:

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்கமல்ஹாசன்அத்தி (தாவரம்)எஸ். சத்தியமூர்த்திகொடைக்கானல்ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்மதுரை மக்களவைத் தொகுதிவேலூர் மக்களவைத் தொகுதிஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)சட் யிபிடிபரிதிமாற் கலைஞர்அக்பர்கர்ணன் (மகாபாரதம்)திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிவேலுப்பிள்ளை பிரபாகரன்சேரர்பொதுவாக எம்மனசு தங்கம்அணி இலக்கணம்மக்காஅயோத்தி இராமர் கோயில்முன்னின்பம்திருவள்ளுவர்கங்கைகொண்ட சோழபுரம்தயாநிதி மாறன்மனித உரிமையூதர்களின் வரலாறுகரிகால் சோழன்குறை ஒன்றும் இல்லை (பாடல்)உத்தரகோசமங்கைஐராவதேசுவரர் கோயில்வைரமுத்துசங்க காலப் பெண்பாற் புலவர்கள்போயர்நாயன்மார்வேதம்மதுரைஓ. பன்னீர்செல்வம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சித்த மருத்துவம்தமிழ் தேசம் (திரைப்படம்)புரோஜெஸ்டிரோன்மயங்கொலிச் சொற்கள்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024பெண்நாயன்மார் பட்டியல்பச்சைக்கிளி முத்துச்சரம்ஸ்ரீலீலாசிவவாக்கியர்பதினெண்மேற்கணக்குஅஸ்ஸலாமு அலைக்கும்திருச்சிராப்பள்ளிலோகேஷ் கனகராஜ்உன்னாலே உன்னாலேமீன்மாணிக்கம் தாகூர்வெண்குருதியணுபோக்குவரத்துகாயத்ரி மந்திரம்பாரி2014 உலகக்கோப்பை காற்பந்துகலித்தொகைநற்றிணைகொங்கு வேளாளர்இந்திய தேசிய சின்னங்கள்முல்லை (திணை)முப்பத்தாறு தத்துவங்கள்இயேசுவின் சாவுதுரை வையாபுரிதென்காசி மக்களவைத் தொகுதிபிள்ளையார்அதிதி ராவ் ஹைதாரிகிராம ஊராட்சிஇராமச்சந்திரன் கோவிந்தராசுபாசிப் பயறுகுமரி அனந்தன்ஆசாரக்கோவை🡆 More