கனடாவின் அரசியலமைப்பு

கனடாவின் அரசியல் அமைப்பு (Constitution of Canada) கனடாவின் மீயுயர் சட்டமாகும்; நாட்டின் வரையறுக்கப்பட்ட ஆளும் மன்றத்தின் இயற்றுச் சட்டங்களையும் வரையறுக்கபடாத வழமைகளையும் அரசியல் வழக்கங்களையும் ஒன்றிணைத்த அரசியலமைப்புச் சட்டம் ஆகும்.

மாக்னா கார்ட்டாவை அடித்தளமாகக் கொண்ட இதுவே உலகின் மிகவும் பழைமையான, செயற்பாட்டில் உள்ள அரசியலமைப்புச் சட்டமாகும். இந்தச் சட்டம் கனடிய அரசு, கனடாக் குடிமக்களின் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் மற்றும் கனடாவில் வாழ்வோரின் உரிமைகளை வரையறுக்கின்றது. கனடாவின் அரசியலமைப்புச் சட்டம் அரசியலமைப்பை விளக்குவதுடன் அதன் செயற்பாட்டை விவரிக்கின்றது. கனடாவின் அரசியலமைப்பு சட்டம் அதன் மத்திய மாகாண அரசுகளின் அதிகாரங்களையும் கடமைகளையும் வரயறைசெய்து, சட்ட உருவாக்க வழிமுறைகளையும் விவரிக்கின்றது. மாகாண அரசுகள் உள்ளூர் அரசுகளின் அதிகாரங்களையும் கடமைகளையும் வரையறைசெய்கின்றன. அரசுகள் தகுந்த வழிமுறைகளுக்கமைய சட்டங்களை உருவாக்கி அமுல்படுத்துகின்றன.

கனடாவின் அரசியலமைப்பு
ஒட்டாவாவில் நாடாளுமன்றக் குன்றின் மேற்கிலுள்ள கனடாவின் உச்சநீதி மன்றம்

கனடாவின் அரசியலமைப்பின் அங்கங்களை அரசியலமைப்புச் சட்டம் 1982, உபபிரிவு 52(2) விவரிக்கிறது; இதன்படி கனடாச் சட்டம், 1982, அட்டவணையிலுள்ள அனைத்துச் சட்டங்களும் குறிப்பாணைகளும் அரசியலமைப்புச் சட்டம் 1867இல் (முன்னாளைய பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம், 1867) உள்ளதும், இவற்றிற்கான ஏதேனும் திருத்தங்களும் அடங்கும். கனடாவின் உச்சநீதி மன்றம் இந்தப் பட்டியல் முழுமையானதல்ல என்றும் கூட்டமைப்பு உருவானதிற்கு முன்பிருந்த சட்டங்களும் எழுதப்படாத அங்கங்களையும் உள்ளடக்கியது என்றும் கூறியுள்ளது.

கனடாவின் நீதிமன்றயமைப்பு சட்டங்களை புரிந்து அமலாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் சட்டங்களை செல்லுபடியாகாமல் செய்யும் அதிகாரம் நீதியமைப்புக்கு உண்டு. கனடாவின் உச்ச நீதி மன்றமே சட்ட கட்டமைப்பின் அதி உயர் அதிகாரம் கொண்டது.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

அரசாங்கம்அரசியலமைப்புச் சட்டம்கனடாகுடிசார் மற்றும் அரசியல் உரிமைகள்நாடாளுமன்றச் சட்டம்மாக்னா கார்ட்டா

🔥 Trending searches on Wiki தமிழ்:

ரமலான் நோன்புசீரடி சாயி பாபாஉத்தரகோசமங்கைமண் பானைதிருட்டுப்பயலே 2மனித உரிமைமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்நன்னூல்சுற்றுலாஇந்து வாரிசுரிமைச் சட்டம், 1956ஒற்றைத் தலைவலிதட்டம்மைநவக்கிரகம்சூரியக் குடும்பம்யானைதமிழக வரலாறுதிருமணம்அத்தி (தாவரம்)சட் யிபிடிஎலுமிச்சையூடியூப்கயிறு இழுத்தல்நேர்பாலீர்ப்பு பெண்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்மீன்ஓம்காதல் கொண்டேன்கருக்கலைப்புபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுசவாய் மான்சிங் விளையாட்டரங்கம்சுந்தர காண்டம்நயன்தாராவீரமாமுனிவர்சாத்தான்குளம்திருமூலர்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகோயம்புத்தூர் மாவட்டம்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிதமிழச்சி தங்கப்பாண்டியன்தமிழர் கலைகள்நபிஅபுல் கலாம் ஆசாத்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்அலீநற்றிணைமனித மூளைஇடைச்சொல்நிதி ஆயோக்தைப்பொங்கல்தங்க தமிழ்ச்செல்வன்கந்த புராணம்சிலம்பம்இரட்சணிய யாத்திரிகம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்பாசிப் பயறுஎன்விடியாவாழைப்பழம்நெல்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)ஆறுமுக நாவலர்பித்தப்பைகடலூர் மக்களவைத் தொகுதிகொங்கு வேளாளர்மேழம் (இராசி)அக்கி அம்மைஇராமலிங்க அடிகள்கங்கைகொண்ட சோழபுரம்இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுநற்கருணைதேவேந்திரகுல வேளாளர்ஆற்றுப்படைபெரம்பலூர் மக்களவைத் தொகுதிபாடுவாய் என் நாவேசுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)உரிச்சொல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தேம்பாவணிவேதாத்திரி மகரிசிவ. உ. சிதம்பரம்பிள்ளை🡆 More