கடவுளின் இருப்பு

கடவுளின் இருப்பு அல்லது கடவுளின் இருத்தல் (Existence of God) என்பதற்கெதிரான விவாதங்கள் மெய்யியலாளர்கள், இறையியலாளர்கள், அறிவியலாளர்கள் மற்றும் ஏனையவர்களால் ஆயிரம் ஆண்டுகளாக முன்மொழியப்பட்டு வந்துள்ளது.

மெய்யியல் வரையறையில், இவ்விவாதம் அறிவாய்வியல் (இயற்கை, அறிவின் நோக்கம்) ஒழுங்குமுறைகள், உள்ளியம் (இருப்பின் இயற்கை, இருப்பு, உண்மை) என்பவற்றுடன் முதன்மையாக ஈடுபட்டதுடன், பெறுமதிக் கொள்கை, பூரணத்துவக் கருத்துக்கள் கடவுளின் கற்பிதங்களுடன் தொடர்புபட்டது. விவாத இருப்பின் பரந்த வகைகள் மீவியற்பியல், ஏரணம், அனுபவ அறிவு, உள்ளுணர்வுச் சார்பு என வகைப்படுத்தலாம். கடவுளின் இருப்பு மெய்யியல் உற்சாகமாக விவாதத்தில், சமய மெய்யியலில், பரவலர் பண்பாட்டில் விடயப் பொருளாகவுள்ளது.

மேற்கத்தைய மரபு மெய்யியலின் கடவுளின் இருப்பு பற்றிய உரையாடல் பிளேட்டோ, அரிசுட்டாட்டில் ஆகியோரினால் ஆரம்பமாகியது. இவர்கள் ஆரம்பித்த விவாதமானது தற்போது அண்டவியல் தொடர்பானதாக பகுப்பிடப்பட்டுள்ளது. கடவுளின் இருப்பு பற்றிய ஏனைய விவாதங்கள் முதலாவது உள்ளியம் பற்றிய விவாதத்தை உருவாக்கியவரான புனித அன்ஸ்லம், அண்டவியல் விவாதம் பற்றி (முறையே கலாம் விவாதம் மற்றும் முதலாவது வழி) தங்கள் சொந்த வெளியீட்டை அறிமுகப்படுத்திய இப்னு றுஷ்து மற்றும் தாமஸ் அக்குவைனஸ், அர்த்தமுடைய புலனுணர்வின் அத்தாட்சிக்கு இரக்கமுள்ள கடவுளின் இருப்பு ஏரணத்தின்படி தேவையாகும் என்ற ரெனே டேக்கார்ட், நல்லதின் இருப்பிலிருந்து கடவுளின் இருப்பினைப் பகுத்தறியலாம் என்ற இம்மானுவேல் கண்ட் ஆகியோரால் முன்வைக்கப்பட்டது. கடவுளின் இருப்புக்கு மாற்றுக் கருத்து வைத்த சிநதனையாளர்களாக டேவிட் கியூம், இம்மானுவேல் கண்ட், பிரீட்ரிக் நீட்சே, பெர்ட்ரண்டு ரசல் ஆகியோரைக் குறிப்பிடலாம். தற்கால பண்பாட்டில், கடவுளின் இருப்பு பற்றிய கேள்வி அறிவியலாளர்களான ஸ்டீபன் ஹோக்கிங், பிரான்சிஸ் கொலின்ஸ், ரிச்சர்ட் டாக்கின்சு, ஜோன் லெனொக்ஸ் ஆகியோராலும் மெய்யியலாளர்களான ரிச்சட் சுவின்புரூன், அல்வின் பிளான்டிங்கா, வில்லியம் லான் கிரேக், டானியல் டெனற், எட்வட் பெசர், டேவிட் பென்ட்லி காட் ஆகியோராலும் உரையாடப்பட்டுள்ளது.

உசாத்துணை

வெளி இணைப்புக்கள்

Tags:

அறிவாய்வியல்உள்ளியம் (மெய்யியல்)ஏரணம்சமய மெய்யியல்பரவலர் பண்பாடுமீவியற்பியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சோழர்யானையின் தமிழ்ப்பெயர்கள்சிங்கம் (திரைப்படம்)நாளந்தா பல்கலைக்கழகம்சேரன் (திரைப்பட இயக்குநர்)பொன்னுக்கு வீங்கிபுறநானூறுகாற்றுநீர்மருதமலைஇலக்கியம்மஞ்சும்மல் பாய்ஸ்இந்திய ரிசர்வ் வங்கிமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்லிங்டின்இரசினிகாந்துகொடைக்கானல்வேற்றுமைத்தொகைஇன்ஸ்ட்டாகிராம்தமிழர் உலோகத் தொழில்நுட்பம்தேசிக விநாயகம் பிள்ளைசெவ்வாய் (கோள்)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்கலிங்கத்துப்பரணிபாரிமலைபடுகடாம்இந்திய வரலாறுமுத்தரையர்ஏப்ரல் 25சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)ஆளுமைநிதிச் சேவைகள்புறப்பொருள் வெண்பாமாலைஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்ஒன்றியப் பகுதி (இந்தியா)சுபாஷ் சந்திர போஸ்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)பெயர்ச்சொல்திருக்குர்ஆன்யாவரும் நலம்தூது (பாட்டியல்)ஐங்குறுநூறுதிரு. வி. கலியாணசுந்தரனார்அறுபடைவீடுகள்கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாதவர்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)தமிழர் விளையாட்டுகள்அஜித் குமார்கருப்பசாமிபதினெண்மேற்கணக்குகுறிஞ்சிப் பாட்டுதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019மே நாள்கலிப்பாஅகத்தியர்முதலாம் இராஜராஜ சோழன்விளம்பரம்நுரையீரல்குறவஞ்சிவல்லினம் மிகும் இடங்கள்தமிழர் கட்டிடக்கலைஅகரவரிசைசிவபெருமானின் பெயர் பட்டியல்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்ரயத்துவாரி நிலவரி முறைவிஷால்அகத்திணைஉலக மலேரியா நாள்இமயமலைநரேந்திர மோதிநான் அவனில்லை (2007 திரைப்படம்)திராவிட முன்னேற்றக் கழகம்நவக்கிரகம்பலாதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்மங்காத்தா (திரைப்படம்)சமுத்திரக்கனி🡆 More