கங்கைகொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரம் (Gangaikonda Cholapuram) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் ஆகும்.

இவ்வூர் சோழர்களின் பெருமரசை நிறுவிய முதலாம் இராஜராஜ சோழன் மகனான இராசேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு 250 ஆண்டுகள் பிற்கால சோழ பேரரசின் தலைநகரமாக விளங்கியது. இங்கு இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவாலயம் இன்றும் உள்ளது. அதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
கங்கைகொண்ட சோழபுரம்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
Temple Gopuram at Gangaikonda Cholapuram
இடம்அரியலூர் மாவட்டம்
வகைபண்பாடு
ஒப்பளவுii, iii
உசாத்துணை250
UNESCO regionஉலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - இந்தியா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1987 (11th தொடர்)
விரிவாக்கம்2004
கங்கைகொண்ட சோழபுரம்
கங்கைகொண்ட சோழபுரம் கோவில்
கங்கைகொண்ட சோழபுரம்
வடபுற சிற்பம்
கங்கைகொண்ட சோழபுரம்
கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் கொடி மரம்

வேறு பெயர்கள்

கங்கை கொண்ட சோழபுரத்திற்கு எண்ணற்ற பெயர்கள் உள்ளன. பண்டையப் புலவர்கள் கங்காபுரி, கங்கைமாநகர் கங்காபுரம் போன்ற பெயர்களில் இவ்வூரை குறித்தனர்.

சோழர்களின் புதிய தலைநகர்

மேலை, கீழைச் சாளுக்கிய தேசங்களிலும் ஈழம் பாண்டிய சேர தேசங்களை வெற்றிக் கொண்ட இராஜேந்திர சோழன் பொ.ஊ. 1019இல் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றியும் கண்டார். அதனால் கங்கை கொண்ட சோழன் என்ற பட்டமும் பெற்றார். அதன் நினைவாக 1023இல் கங்கை கொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை உருவாக்கினார். இங்கு சிவபெருமானுக்கு கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் எனும் மாபெரும் கோவிலை அமைத்தார்

கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழப் பேரேரி அமைக்கப்பட்டது. இதற்கு சோழகங்கம் என்றும் பெயர் உண்டு.

தொல்லியல் அகழாய்வு

கங்கைகொண்ட சோழபுரம் 
கங்கை கொண்ட சோழபுரம் அருகிலுள்ள மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி


தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை கீழடித் தொகுதி, ஆதிச்சநல்லூர் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது அகழாய்வில் ஈடுபட்டுவருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் மீன்சுருட்டி அருகில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில், சில அடி ஆழத்திலேயே செங்கற்களால் ஆன பதிமூன்று சுவர்கள் வெளிப்பட்டிருக்கின்றன. இது தவிர, சில செப்புக் காசுகள், பானை ஓடுகள், இரும்பு பொருட்கள் ஆகியவையும் இங்கிருந்து கிடைத்திருக்கின்றன. இது தவிர, சீன மட்பாண்டமும் கிடைத்திருக்கிறது. தற்போது ஐந்து குழிகள் மட்டும் தோண்டப்பட்டதில், 13 சுவர்கள் சுமார் நான்கைந்து மீட்டர் தூரத்திற்கு கிடைத்திருக்கின்றன. இன்னும் பத்துக்கும் மேற்பட்ட குழிகள் தோண்டு போது பெரிய அளவிலான சுவர்களைப் பார்க்க முடியும் என்கிறார் மாநிலத் தொல்லியல் துறையின் துணை இயக்குனர் சிவானந்தம்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

ஆதார நூல்

தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்,பண்பாட்டுச் சின்னங்களும், நூலாசிரியர், வி. கந்தசாமி, வரலாற்றுத்துறைத் துணைப் பேராசிரியர், அருள்மிகு பழனியாண்டவர் கலை,பண்பாட்டுக்கல்லூரி, பழனி

வெளி இணைப்புகள்

கங்கைகொண்ட சோழபுரம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gangaikonda Cholapuram
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


Tags:

கங்கைகொண்ட சோழபுரம் வேறு பெயர்கள்கங்கைகொண்ட சோழபுரம் சோழர்களின் புதிய தலைநகர்கங்கைகொண்ட சோழபுரம் தொல்லியல் அகழாய்வுகங்கைகொண்ட சோழபுரம் இவற்றையும் பார்க்கவும்கங்கைகொண்ட சோழபுரம் மேற்கோள்கள்கங்கைகொண்ட சோழபுரம் ஆதார நூல்கங்கைகொண்ட சோழபுரம் வெளி இணைப்புகள்கங்கைகொண்ட சோழபுரம்அரியலூர்இந்தியாஇராசேந்திர சோழன்இராஜேந்திர சோழன்தமிழ்நாடுபிற்கால சோழர்கள்முதலாம் இராஜராஜ சோழன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தஞ்சைப் பெருவுடையார் கோயில்ரோசுமேரிவசுதைவ குடும்பகம்சிறுகதைகிருட்டிணன்சங்க இலக்கியம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்இயற்கை வளம்இந்தியாவில் இட ஒதுக்கீடுதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்ஜோதிகாஇந்திய நாடாளுமன்றம்பிள்ளையார்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்கள்ளழகர் கோயில், மதுரைஅக்பர்வெள்ளி (கோள்)புதிய ஏழு உலக அதிசயங்கள்விசயகாந்துவிளம்பரம்முல்லைப்பாட்டுவிசாகம் (பஞ்சாங்கம்)பீனிக்ஸ் (பறவை)பர்வத மலைமரவள்ளிசித்திரைத் திருவிழாமதீச பத்திரனபூப்புனித நீராட்டு விழாவிருமாண்டிபுலிசிவாஜி கணேசன்திதி, பஞ்சாங்கம்மாசிபத்திரிகட்டபொம்மன்பணவீக்கம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)இந்திய அரசியலமைப்புமெய்யெழுத்துநாடார்முகம்மது நபிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்குழந்தை பிறப்புகன்னி (சோதிடம்)நாயக்கர்கருப்பை நார்த்திசுக் கட்டிவயாகராமூவேந்தர்மதுரை நாயக்கர்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஎட்டுத்தொகைவாட்சப்சிறுத்தைகருத்தடை உறைதமிழ்த்தாய் வாழ்த்துகார்த்திக் (தமிழ் நடிகர்)முள்ளம்பன்றிசங்க காலப் புலவர்கள்ஜி. யு. போப்அளபெடைகாம சூத்திரம்முதல் மரியாதைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடு108 வைணவத் திருத்தலங்கள்தூது (பாட்டியல்)தனிப்பாடல் திரட்டுமேகக் கணிமைசைவத் திருமணச் சடங்குநெடுநல்வாடைநயினார் நாகேந்திரன்பிரேமலுஇன்ஸ்ட்டாகிராம்வல்லினம் மிகும் இடங்கள்கூலி (1995 திரைப்படம்)வைதேகி காத்திருந்தாள்ஜெயகாந்தன்தமிழக மக்களவைத் தொகுதிகள்அக்கினி நட்சத்திரம்🡆 More