ஒலிம்பிக் உறுதிமொழி: Vilayattu uruthimoli

ஒலிம்பிக் உறுதிமொழி (Olympic Oath) ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்கவிழாவின்போது பங்கேற்கும் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியாளர் சார்பாக ஒரு விளையாட்டாளரும், பணியாற்றும் ஒவ்வொரு நடுவர் மற்றும் போட்டி அலுவலர் சார்பாக ஒரு நடுவரும் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி ஆகும்.

போட்டியை நடத்துகின்ற நாட்டின் அணியிலிருந்து ஓர் விளையாட்டாளர் ஒலிம்பிக் கொடியின் ஓர் முனையைப் பிடித்துக்கொண்டு பின்வரும் உறுதிமொழியை எடுக்கிறார் :

    இந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களில் அந்தந்த விளையாட்டுக்களின் விதிகளை மதித்தும் கடைபிடித்தும், எவ்வித ஊக்கமருந்து அல்லது பிற மருந்துகள் இல்லாது அந்த விளையாட்டுக்களை விளையாட பொறுப்பேற்றும், நேர்மையான விளையாட்டு மனப்பாங்குடன் விளையாட்டின் சிறப்புக்காகவும் எங்கள் அணிகளின் பெருமைக்காகவும் நாங்கள் கலந்து கொள்கிறோம் என்று அனைத்து போட்டியாளர்களின் சார்பாக நான் உறுதியளிக்கிறேன்.

போட்டிகளை நடத்தும் நாட்டிலிருந்து ஓர் நடுவர் அதேபோல ஒலிம்பிக் கொடியின் முனையைப் பற்றிக்கொண்டு பின்வரும் உறுதிமொழியை எடுத்துக் கொள்கிறார்:

    இந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களில் நேர்மையான விளையாட்டு மனப்பாங்குடன் அந்தந்த விளையாட்டுக்களின் விதிமுறைகளை மதித்தும் கடைபிடித்தும் முழுமையான நடுநிலையோடு நாங்கள் பணியாற்றுவோம் என்று அனைத்து நடுவர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பாக நான் உறுதியளிக்கிறேன்.

2010 கோடைக்கால இளையோர் ஒலிம்பிக்கிலிருந்து, கூடுதலாக போட்டி நடத்தும் நாட்டிலிருந்து பயிற்றுனர் ஒருவரும் அனைத்துப் பயிற்றுனர்கள் சார்பாக உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்:

    ஒலிம்பிக் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கேற்ப நேர்மையான விளையாட்டு மனப்பாங்கு மற்றும் சமநிலை உணர்வுகளோடு விளையாடவும் கடைபிடிக்கவும் பொறுப்பேற்றுக் கொண்டு அனைத்து பயிற்றுனர்கள் மற்றும் போட்டியாளர்களுடன் வந்துள்ள பிற உறுப்பினர்கள் சார்பாக நான் உறுதியளிக்கிறேன்

பெய்ஜிங்கில் நடந்த 2008 ஒலிம்பிக்கில் சீனத்திலும் துரினில் நடந்த 2006 குளிர்கால ஒலிம்பிக்கில் இத்தாலியத்திலும் உறுதிமொழி எடுக்கப்பட்டன.

மேற்சான்றுகள்

Tags:

ஒலிம்பிக் சின்னங்கள்ஒலிம்பிக் விளையாட்டுக்கள்மெய்வல்லுனர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பத்துப்பாட்டுதமிழர் பண்பாடுபொதுவுடைமைபள்ளுதங்க மகன் (1983 திரைப்படம்)பல்லவர்சித்ரா பௌர்ணமிரத்னம் (திரைப்படம்)குப்தப் பேரரசுசிறுபாணாற்றுப்படைவெள்ளி (கோள்)அமெரிக்க ஐக்கிய நாடுகள்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்நாடார்ஆற்றுப்படைகலிங்கத்துப்பரணிஇயற்கை வளம்தமிழ் இலக்கியம்முத்துலட்சுமி ரெட்டிபகவத் கீதைகஞ்சாசெயற்கை நுண்ணறிவுஅக்பர்பெண்சைவத் திருமணச் சடங்குவெப்பம் குளிர் மழைகுற்றியலுகரம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்குருதி வகைபள்ளிக்கூடம்இந்திய மக்களவைத் தொகுதிகள்திருமலை நாயக்கர்வணிகம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்கபிலர்சிந்துவெளி நாகரிகம்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)மண் பானைமருது பாண்டியர்மண்ணீரல்பாலின விகிதம்மாணிக்கவாசகர்சூல்பை நீர்க்கட்டிகொடைக்கானல்குறை ஒன்றும் இல்லை (பாடல்)தமிழ்நாடு சட்டப் பேரவைகணையம்வைதேகி காத்திருந்தாள்விருத்தாச்சலம்விஷால்அம்மனின் பெயர்களின் பட்டியல்பெயர்பீனிக்ஸ் (பறவை)தமிழ் மாதங்கள்அரச மரம்பரணர், சங்ககாலம்முக்கூடற் பள்ளுதினகரன் (இந்தியா)சோழர்ஆறுமுக நாவலர்நிதிச் சேவைகள்சீமான் (அரசியல்வாதி)முடக்கு வாதம்திருப்பாவைஎங்கேயும் காதல்திருவள்ளுவர்சுரதாஅகத்திணைபுணர்ச்சி (இலக்கணம்)ஆய்த எழுத்துஇரைச்சல்வன்னியர்சயாம் மரண இரயில்பாதைதிருவோணம் (பஞ்சாங்கம்)வரலாறுசூரரைப் போற்று (திரைப்படம்)🡆 More