இந்து சமயம் இந்திரன்

இந்திரன் (ⓘ) (தேவேந்திரன் ) என்பவர் இந்து தொன்மவியல் அடிப்படையில் தேவ உலகத்தின் அரசனாவார்.

இவருடைய மனைவி இந்திராணி. இவர் வேதகால இந்து சமயத்தில், மிக முக்கியமான தேவர்களில் ஒருவராக உயர் நிலையில் வைத்து வணங்கப்பட்டவர்.

இந்திரன்
இந்து சமயம் இந்திரன்
ஐராவதம் வாகனத்தில் இந்திரன்
அதிபதிதேவர்களின்
தேவநாகரிइन्द्र
சமசுகிருதம்Indra
இடம்தேவ லோகம்
ஆயுதம்வஜ்ஜிராயுதம்
துணைஇந்திராணி

ரிக் வேதத்தில்

இந்துக்களின் மிகப்பழைய புனித நூலான ரிக் வேதத்தில் தலைமைக் கடவுளாகப் போற்றப்படுபவர் இந்திரனே. அவ்வேதத்திலுள்ள சுலோகங்களில் காற்பங்குக்கு மேற்பட்டவை இந்திரனைப் போற்றுவனவாகவே உள்ளன. இவருடைய வீர தீரச் செயல்களைப் பற்றிய ஏராளமான குறிப்புக்கள் வேதங்களிலே காணப்படுகின்றன. மனத்தின் வேகத்தையும் கடந்த வேகத்தில் செல்லக்கூடிய தேரை உடையவனாகக் கூறப்படுகின்ற இந்திரன் ஐராவதம் என்னும் வெள்ளை யானையை வாகனமாகக் கொண்டவன் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இவர் வஜ்ஜிராயுதத்தை ஆயுதமாகக் கொண்டவர். இவர் போர்க்குணம் கொண்ட கடவுளாகச் சித்தரிக்கப்படுவதன் காரணமாகப் போருக்குச் செல்லும் வீரர்கள் இந்திரனை வணங்கிச் செல்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இந்திரனுக்கு ஜெயந்தன் என்னும் பெயருடைய ஒரு மகன் உண்டு என்று கூறப்படுகிறது. அமிர்தத்தை குடித்த தேவர்களில் ஒருவர் . யாகங்களில் படைக்கப்படும் ஹவிஸை (படையலை) அக்கினி இந்திரன் முதலான தேவர்களுக்கு பகிர்ந்து தருகிறான்.

புராணங்களில்

தொடர்ந்தும் தேவர்களின் தலைவனாகவே இந்திரன் மதிக்கப்பட்டாலும், வேதகாலத்துக்குப் பின்னர் அவன் நிலை தாழ்ந்துவிட்டது.ஆரியர்களால் உருவாக்கப்பட்ட ராமாயணத்தின் ஆரம்ப காலம் (கி.மு 6ஆம் நூற்றாண்டு) தொட்டே இந்திரன் பற்றிய இழிவான பேச்சுகள் தொடங்கிவிட்டது என்பதே உண்மை. வியாசரால் எழுதப்பட்ட ஜெயம் (கி.மு 5 ஆம் நூற்றாண்டு) எனப்படும் மகாபாரதத்திலும், புராணங்களிலும் இந்திரன் பெரிய அளவில் போற்றப்படவில்லை என்றே தெரியவருகிறது. வேதங்களில்கூட மூன்று இந்திரர்கள் உள்ளனர். அவர்களுள் இரண்டு இந்திரர்கள் இந்தியத்தமிழர்கள்; ஒருவர் கிருஷ்ணர் எனப்பட்ட கரவேல், மற்றொருவர் திருமால் எனப்பட்ட செம்பியன் கரிகால்சோழன். முதல் இந்திரனே அந்நிய நாட்டவன். இவனுக்கும் ஒரு இந்தியத் தமிழ்ப்பெண்ணுக்கும் பிறந்தவனாலேயே இந்த அந்நிய இந்திரன் அடக்கி ஒடுக்கப்பட்டான். அப்படி அடக்கி ஒடுக்கியவனே செவ்வாய் எனப்பட்ட செங்குட்டுவன்.[சான்று தேவை]

பின் குறிப்பு:- இந்த ஆரியர் -தமிழர் பாகுபாடு மிகுந்த நகைப்பை வரவழைக்கும். தமிழ்சித்தர் போகர் அருளிய 'ஜெனன சாகரம்' என்ற நூலைப் படித்திருந்தால் இது புலப்படும். 'ஆதியில் நந்தியாகி, அயனும் மாலுமாகி, பிறகு இந்திரன், முருகன், ராமன், கிருஷ்ணன், நபி என்று ஜெனனம் எடுத்தபின் இன்று போகராக இருக்கிறேன்' (பா.324) என்கிறார். அப்படி என்றால் தேவேந்திரனான போகர் ஆரியரா? புராணங்களில் ஒவ்வொரு கதாபாத்திரமும் வேறொரு பாத்திரத்தை ஏற்கும். இதை ஈசன் தான் முடிவு செய்கிறார் என்று போகர் குறிப்பிடுகிறார்.


இந்திர விழா

இந்திர விழா என்பது இந்திரனை சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும். பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாகும். இவ்விழாவைத் தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் என்று சாத்தனார் கூறுகின்றார்.

இவ்விழா புகார் என்ற நகரோடு அதிகம் தொடர்புற்றிருந்தாலும், மதுரையிலும் கொண்டாடப்பட்டது. இலக்கியங்களில் உவமை கூறும் அளவுக்கு இவ்விழா சிறப்பு பெற்றிருந்தது. தொடித்தோட் செம்பியன் எடுத்த காதல் விழாவைக் காமன் விழா என்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர். அவ்விழா, இருபத்தெட்டு நாள் 'நாளேழ் நாளினு நன்கறிந்தீர் என'க் குறிப்படுவர். அவ்விழா விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆகையால் அதனை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா என்று பொருள் கொள்ளலாம்.

இவற்றை பார்க்கவும்

இந்து சமயம் இந்திரன் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
இந்திரன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

Tags:

இந்து சமயம் இந்திரன் ரிக் வேதத்தில்இந்து சமயம் இந்திரன் புராணங்களில்இந்து சமயம் இந்திரன் இந்திர விழாஇந்து சமயம் இந்திரன் இவற்றை பார்க்கவும்இந்து சமயம் இந்திரன் மேற்கோள்கள்இந்து சமயம் இந்திரன்இந்திராணிஇந்து சமயம்இந்து தொன்மவியல்கடவுள்தேவ உலகம்படிமம்:Ta-இந்திரன்.oggவேதகாலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நண்பகல் நேரத்து மயக்கம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்எஸ். ஜானகிபாலை (திணை)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்அலீதிருவள்ளுவர் ஆண்டுசிவனின் 108 திருநாமங்கள்தெருக்கூத்துடி. எம். சௌந்தரராஜன்வினைச்சொல்பகத் சிங்சிறுகோள்கம்பர்தைப்பொங்கல்புதிய ஏழு உலக அதிசயங்கள்காதல் மன்னன் (திரைப்படம்)கணினியாதவர்திருப்போரூர் கந்தசாமி கோயில்இசுலாத்தின் புனித நூல்கள்தமிழ் படம் 2 (திரைப்படம்)இரவுக்கு ஆயிரம் கண்கள்மக்காசெஞ்சிக் கோட்டைவாட்சப்மருதமலை முருகன் கோயில்இராவணன்வேளாளர்போதைப்பொருள்கீழடி அகழாய்வு மையம்காய்ச்சல்காளமேகம்நாய்தமிழ் நீதி நூல்கள்நவக்கிரகம்திரிகடுகம்எகிப்துசிலப்பதிகாரம்சோழிய வெள்ளாளர்சங்க இலக்கியம்ஹரிஹரன் (பாடகர்)மயங்கொலிச் சொற்கள்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)சுந்தர காண்டம்ஆனைக்கொய்யாஇந்தியாவின் பண்பாடுகரிசலாங்கண்ணிமூதுரைவேலு நாச்சியார்அறுபது ஆண்டுகள்பொருநராற்றுப்படைதிருமழபாடி வைத்தியநாதர் கோயில்இந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்இரசினிகாந்துவாதுமைக் கொட்டைஅனைத்துலக நாட்கள்கொங்கு வேளாளர்புற்றுநோய்பவுனு பவுனுதான்கருத்தரிப்புநந்தி திருமண விழாகாலிஸ்தான் இயக்கம்இளங்கோவடிகள்இணைச்சொற்கள்தமிழ் இலக்கியம்டிரைகிளிசரைடுமெட்ரோனிடசோல்நேச நாயனார்பழனி முருகன் கோவில்நீதிக் கட்சிஇசுலாமிய நாட்காட்டிசுடலை மாடன்விநாயகர் அகவல்குதிரைபிச்சைக்காரன் (திரைப்படம்)ஓரங்க நாடகம்🡆 More