இந்தியாவின் நீதியாண்மை அமைப்பு அதன் உச்ச நீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்டதாகும்.
இக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) உயர் நீதிமன்றம் கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக) |
இதன்படி அமைக்கப்பட்ட 25 இந்திய உயர் நீதிமன்றங்கள்' தத்தம் வரம்பிற்குட்பட்ட மாநிலங்களில் நீதிமுறைப் பணிகளை செலுத்துகின்றன. இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பகுதிகள் இவற்றின் நீதியாண்மையின்கீழ் வருகின்றன.
வரையறை
உயர்நீதிமன்றங்களுக்கு கீழ் உரிமையியல் (சமூக நலன்) நீதிமன்றங்கள் (சிவில்), குடும்ப நல நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்கள் (கிரிமினல்) மற்றும் இதர மாவட்ட நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.
தண்டனை அதிகாரம்
உயர்நீதிமன்றங்களின் மூல நீதிமுறைமையின் முதன்மையானது மாநிலத்தின் உரிமை இயல் (சமூக நலன்) நீதிமன்றங்களை உள்ளடக்கியது ஆகும். மற்றும் தண்டிக்கப்படக்கூடிய குற்றங்கள், மரண தண்டணை விதிக்கக்கூடிய குற்றங்களை விசாரிப்பதும் அகும்.
விசாரணை அதிகாரம்
கீழ் நீதிமன்றங்களால் வழங்கப்படும் மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் (writ-ரிட்) அழைப்பாணை மனுக்கள் போன்ற வழக்குகளை இந்திய அரசியல் சட்ட விதி 224-இன்படி விசாரணை செய்யும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம்
உயர்நீதிமன்றங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி 4, அத்தியாயம் 5, விதி 214-இன்படி நிறுவப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாநிலங்களும் அதன் மாவட்டங்களை நீதிபரிபாலணைக்கு ஏற்ப பிரிக்கப்படும். இவை மாவட்ட அமர்வு நீதிபதியால் (தொடர் விசாரணை நீதிபதி-அமர்வு நீதிபதி) அல்லது மாவட்ட நீதிபதியால், நீதிமன்றங்களில் விசாரணை மேற்கொள்ளப்படும்.
உரிமை இயல்(சமூக நல) வழக்குகள் மாவட்ட நீதிபதியால் மேற்கொள்ளப்படும் . குற்றவியல் வழக்குகளை அமர்வு நீதிபதி மேற்கொள்வார். அமர்வு நீதிபதியே உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு அடுத்தபடியாக அதிக அதிகாரத்தில் உள்ள நீதிபதியாவார்.
உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், இந்தியக் குடியரசுத் தலைவரின் பெயரால், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர்.
உயர் நீதிமன்றங்கள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையில் இயங்குகின்றன. இவர்களின் பதவிப்படி நிலை மாநிலத்திற்குள்ளே #14 என்றும் மாநிலத்திற்கு #17 என்றும் வழங்கப்பெற்று அழைக்கப்படுகின்றனர்.
நீதிபதிகளின் எண்ணிக்கை
இதர நீதிபதிகளின் எண்ணிக்கை அந்தந்த மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த வழக்குகளின் எண்ணிக்கையைக் கொண்டு, தேசிய சராசரி சதவிகிதம் கணக்கிட்டு அதன்படி நீதிபதிகளின் எண்ணிக்கைக் கூட்டவோக் குறைக்கவோப் படுகின்றது.
பழமையானது
இந்திய உயர் நீதி மன்றத்தில் மிகவும் பழமையானது கொல்கத்தா உயர் நீதிமன்றமே. இது நிர்மானிக்கப்பட்டது 1862.
சுற்று அமர்வு
அமர்வு நீதிமன்றங்களும் மாநில, வழக்குகளின் தன்மைக்கு ஏற்றவாறு செயல்படுகின்றன. சிறிய மாநிலங்களில் சுழற்சி அ சுற்று அமர்வு நீதிமன்றங்களாக செயல்படுகின்றன. இவை சுழற்சி அ சுற்று நீதிமன்றங்கள் எனப்படுகின்றது.
இருபத்தினான்கு-(24) உயர்நீதிமன்றங்களின் பட்டியல் மாநிலங்களின் வரிசைப்படி பெயர்கள், ஆளுமை (தலைமை), அமர்வு மற்றும் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றங்களின் பெயர் | நிலைநாட்டப்பெற்றது | சட்டம் நிலைநாட்டப்பெற்றது | நீதிபரிபாலணம் | இருக்கை | அமர்வுகள் | நீதிபதிகள் |
---|---|---|---|---|---|---|
அலகாபாத் உயர் நீதிமன்றம் | 1866-06-11 | உயர் நீதிமன்ற சட்டம், 1861 | உத்தரப்பிரதேசம் | அலகாபாத் | லக்னோ | 95 |
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் | 1954-07-05 | ஆந்திர மாநில சட்டம், 1953 | ஆந்திர பிரதேசம், தெலுங்கானா | ஐதராபாத் | 39 | |
பம்பாய் உயர் நீதிமன்றம் | 1862-08-14 | உயர் நீதிமன்ற சட்டம், 1861 | மகாராஷ்டிரா, கோவா, தாத்ரா மற்றும் நாகர் அவேலி, தமன் மற்றும் தியூ | மும்பை | நாக்பூர், பனாஜி, அவுரங்காபாத் | 60 |
கல்கத்தா உயர் நீதிமன்றம் | 1862-07-02 | உயர் நீதிமன்ற சட்டம், 1861 | மேற்கு வங்காளம், அந்தமான் மற்றும் நிக்கோபார்த் தீவுகள் | கொல்கத்தா | போர்ட் பிளேர் (சுற்று அமர்வு) | 63 |
சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் | 2000-01-11 | மத்தியப் பிரதேசம் மறு சீரமைப்பு சட்டம், 2000 | சத்தீஸ்கர் | பிலாஸ்பூர் | 08 | |
தில்லி உயர் நீதிமன்றம் | 1966-10-31 | தில்லி உயர் நீதிமன்ற சட்டம், 1966 | தில்லி பிரதேச தேசிய தலைமையகம் | புது தில்லி | 36 | |
கௌகாத்தி உயர் நீதிமன்றம் | 1948-03-01 | இந்திய அரசு சட்டம், 1935 | அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மிசோரம் | கௌகாத்தி | கோகிமா, அஸ்வல் & இம்பால். சுற்று அமர்வு அகர்தலா & சில்லாங் | 27 |
குஜராத் உயர் நீதிமன்றம் | 1960-05-01 | பம்பாய் மறு சீரமைப்பு சட்டம், 1960 | குஜராத் | அகமதாபாத் | 42 | |
இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் | 1971 | மாநில H.P. சட்டம், 1970 | இமாச்சலப் பிரதேசம் | சிம்லா | 09 | |
ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் | 1943-08-28 | காஷ்மீர் மகாராஜாவால் வழங்கப்பட்டகாப்புரிமைப் பத்திரம் | ஜம்மு காஷ்மீர் | ஸ்ரீநகர் & ஜம்மு | 14 | |
ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் | 2000 | பீகார் மறு சீரமைப்பு சட்டம், 2000 | ஜார்க்கண்ட் | ராஞ்சி | 12 | |
கர்நாடகா உயர் நீதிமன்றம் | 1884 | மைசூர் உயர் நீதிமன்ற சட்டம், 1884 | கர்நாடகா | பெங்களூர் | சுற்று அமர்வுகள்- ஹூப்லி-தர்வாத் மற்றும் குல்பர்கா | 40 |
கேரளா உயர் நீதிமன்றம் | 1956 | மாநில மறு சீரமைப்பு சட்டம், 1956 | கேரளா, இலட்சதீபம் | கொச்சி | 40 | |
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் | 1936-01-02 | இந்திய அரசு சட்டம், 1935 | மத்தியப் பிரதேசம் | ஜபல்பூர் | குவாலியர், இந்தூர் | 42 |
மதராஸ் உயர் நீதிமன்றம் | 1862-08-15 | உயர் நீதிமன்ற சட்டம், 1861 | தமிழ் நாடு, புதுவை | சென்னை | மதுரை | 47 |
ஒரிசா உயர் நீதிமன்றம் | 1948-04-03 | ஒரிசா உயர் நீதிமன்ற ஆணை, 1948 | ஒரிசா | கட்டாக் | 27 | |
பாட்னா உயர் நீதிமன்றம் | 1916-09-02 | இந்திய அரசு சட்டம், 1915 | பீகார் | பாட்னா | 43 | |
பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் | 1947-11-08 | உயர் நீதிமன்றம் (பஞ்சாப்) ஆணை, 1947 | பஞ்சாப், அரியானா, சண்டிகார் | சண்டிகார் | 53 | |
இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் | 1949-06-21 | இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அவசர சட்டம், 1949 | இராஜஸ்தான் | ஜோத்பூர் | ஜெய்பூர் | 40 |
சிக்கிம் உயர் நீதிமன்றம் | 1975 | இந்திய அரசியல் சட்டத்தின் 38 வது திருத்தம் | சிக்கிம் | காங்டக் | 03 | |
உத்தர்காண்ட் உயர் நீதிமன்றம் | 2000 | உ.பி. மறு சீரமைப்பு சட்டம், 2000 | உத்தர்கண்ட் | நைனிடால் | 09 |
This article uses material from the Wikipedia தமிழ் article இந்திய உயர் நீதிமன்றங்கள், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.