இங்கொரொங்கோரோ பாதுகாப்புப் பகுதி

இங்கொரொங்கோரோ பாதுகாப்புப் பகுதி (Ngorongoro Conservation Area) (UK: /(ə)ŋˌɡɔːrəŋˈɡɔːroʊ/, US: /ɛŋˌɡɔːroʊŋˈɡɔːroʊ, əŋˌɡoʊrɔːŋˈɡoʊroʊ/}}) தான்சானியாவின் கிண்ணக்குழி உயர்நிலப் பகுதியில் உள்ள அரூசாவுக்கு மேற்கே 180 km (110 mi) தொலைவில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியும், உலக பாரம்பரியக் களமும் ஆகும்.

இந்தப் பகுதியின் பெயர்ஈந்தப் பகுதியில் இருக்கும் பெரிய எரிமலை வாயான இங்கொரொங்கோரோ கிண்ணக்குழியின் பெயரைத் தழுவியது. இந்தப் பாதுகாப்புப் பகுதியை, தான்சானிய அரசாங்கத்தின் ஒரு நிறுவனமான இங்கொரொங்கோரோ பாதுகாப்புப் பகுதி அதிகாரசபை நிர்வாகம் செய்கின்றது. இதன் எல்லைகள் அரூசா பிரதேசத்தின் இங்கொரொங்கோரோ பிரிவின் எல்லைகளோடு பொருந்துகின்றது.

இங்கொரொங்கோரோ பாதுகாப்புப் பகுதி
இங்கொரொங்கோரோ பாதுகாப்புப் பகுதி
கிண்ணக்குழியின் தோற்றம்
Map showing the location of இங்கொரொங்கோரோ பாதுகாப்புப் பகுதி
Map showing the location of இங்கொரொங்கோரோ பாதுகாப்புப் பகுதி
அமைவிடம்அருசாப் பிரதேசம், தான்சானியா
ஆள்கூறுகள்3°12′S 35°27′E / 3.200°S 35.450°E / -3.200; 35.450
பரப்பளவு8,292 km2 (3,202 sq mi)
நிறுவப்பட்டது1959
வருகையாளர்கள்Over 500,000 per year
நிருவாக அமைப்புதான்சானியா தேசியப் பூங்கா அதிகாரசபை
வகைஇயற்கை
வரன்முறை(iv)(vii)(viii)(ix)(x)
தெரியப்பட்டது1979 (3வது அமர்வு)
உசாவு எண்39
அரச தரப்புதான்சானியா
பிரதேசம்ஆப்பிரிக்கா
அழிவை எதிர்நோக்கியது1984–1989
இங்கொரொங்கோரோ பாதுகாப்புப் பகுதி
கிண்ணக்குழியின் உட்பகுதி

2009 ஆம் ஆண்டின் இங்கொரொங்கோரோ காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் இப்பகுதியில் மனித குடியிருப்புக்களுக்கும், வாழ்வாதார வேளாண்மைக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், மசாய் மேய்ப்பர்கள் இப்பகுதியில் இருந்து வேறிடம் பெயரவேண்டி ஏற்பட்டது. இவற்களிற் பலர், 1959 இல் பிரித்தானியக் குடியேற்றவாத அரசாங்கம் செரங்கெட்டி தேசியப் பூங்காவை உருவாக்கியபோது, அவர்களுடைய முன்னோர் நிலங்களிலிருந்து இங்கொரொங்கோரோவுக்கு இடம் பெயர்ந்தவர்களாவர்.

வரலாறும் புவியியலும்

இங்குள்ள கிண்ணக்குழியின் பெயர் ஒலிக்குறிப்புத் தோற்றம் கொண்டது. அப்பகுதியில் மேயும் மாடுகளின் கழுத்திலிருந்த மணிகளின் ஒலியை (இங்கோரோ இங்கோரோ) அடியொற்றி இங்கொரொங்கோரோ என்னும் பெயரை மசாய் மேய்ப்பர்கள் அப்பகுதிக்கு இட்டதாகச் சொல்கின்றனர். ஓல்டுவை கோர்கே என்னும் இடத்தில் கிடைத்த புதை படிவச் சான்றுகள் 3 மில்லியன் ஆண்டுகளாக இப்பகுதியில் ஒமொனிட் இனங்கள் வாழ்ந்ததை எடுத்துக்காட்டுகின்றன.

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வேட்டுவர்-உணவு சேகரிப்போரை அகற்றி அவ்விடத்தில் கால்நடைகளை வளர்ப்போர் குடியேறினர். 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் இம்புலுக்கள் இப்பகுதிக்கு வந்தனர். 1700 ஆளவில் தட்டூகாக்களும் இவர்களுடன் இணைந்துகொண்டனர். 1800 களில் இவ்விரு குழுக்களையும் துரத்திவிட்டு மசாய்கள் அங்கே குடியேறினர்.

1892 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஐரோப்பியர் எவரும் இங்கொரொங்கோரோ கிண்ணக்குழிப் பகுதியில் கால் பதித்திருக்கவில்லை. அந்த ஆண்டிலேயே ஆசுக்கார் பௌமன் (Oscar Baumann) இப்பகுதிக்கு வந்தார். இங்கே இருந்த நிலப்பகுதி ஒன்றை செருமன் கிழக்காப்பிரிக்க நிர்வாகத்திடம் இருந்து குத்தகைக்குப் பெற்ற இரண்டு செருமன் சகோதரர்களான அடோல்ஃப் சீடென்டொப்பும், பிரட்ரிக் சீடென்டொப்பும் முதலாம் உலகப்போர்க் காலம் வரை இப்பகுதியில் வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர். தங்கள் நண்பர்களின் மகிழ்ச்சிக்காக இவர்கள் அடிக்கடி வேட்டைகளையும் ஒழுங்கு செய்தனர். காட்டு விலங்குகளையும் கிண்ணக்குழிப் பகுதியில் இருந்து துரத்திவிட அவர்கள் முயற்சி செய்தனர்.

1921 இல் முதல் வேட்டை விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் முதன் முதலாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், தான்சானியா முழுவதும் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே வேட்டையாட முடிந்தது. 1928 ஆம் ஆண்டில், முன்னைய சீடென்டொப் பண்ணைப்பகுதியைத் தவிர்த்து, கிண்ணக்குழியின் விளிம்புகளுக்குள் அடங்கிய ஏனைய பகுதிகளில் வேட்டையாடுவது முற்றாகத் தடைசெய்யப்பட்டது. 1948 இன் தேசியப் பூங்காச் சட்டத்தின்கீழ் செரென்கெட்டி தேசியப் பூங்கா உருவானது. இது அங்கிருந்த மசாய் மக்களுக்கும் பிற பழங்குடிகளுக்கும் பிரச்சினையை ஏற்படுத்தியது. இதன் விளைவாக இங்கோரொங்கோரோ பாதுகாப்பு பகுதிச் சட்டத்தை (1959) நிறைவேற்றி, அப்பாதுகாப்புப் பகுதியை தேசியப் பூங்காப் பகுதியில் இருந்து தனியாக்கினர். மசாய் மக்களைத் திட்டமிட்டுப் படிப்படியாக தேசியப் பூங்காப் பகுதியில் இருந்து அகற்றி இங்கோரொங்கோரோ பகுதிக்கு அனுப்பினர். இதனால் மசாய் மக்கள் தொகையும், கால்நடைகளின் எண்ணிக்கையும் கிண்ணக்குழிப் பகுதியில் அதிகரித்தது. 1976 ஆம் ஆண்டின் வேட்டை விலங்குப் பூங்கா சட்டங்கள் (நானாவிதத் திருத்தங்கள்) சட்டத்தின் கீழ் இங்கோரொங்கோரோ பாதுகாப்புப் பகுதி அதிகாரசபை உருவானது. கிண்ணக்குழிப் பகுதி உட்பட இங்கோரொங்கோரோ பாதுகாப்புப் பகுதிக்கு உட்பட்ட பெரும்பாலான நிலங்கள் இந்த அதிகாரசபைக்குச் சொந்தமானவை. இப்பகுதி 1979 இல் யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம் ஆனது.

மேற்கோள்கள்

Tags:

அமெரிக்க ஆங்கிலம்உதவி:IPA/Englishபிரித்தானிய ஆங்கிலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருமந்திரம்மருது பாண்டியர்வெள்ளியங்கிரி மலைதமிழ்நாடு காவல்துறைபால் கனகராஜ்பரிபாடல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)மதீனாமனத்துயர் செபம்மதுரைக் காஞ்சிசீவக சிந்தாமணிகுறிஞ்சி (திணை)சிவகங்கை மக்களவைத் தொகுதிவே. செந்தில்பாலாஜிசிவவாக்கியர்ஔவையார்தமிழ்ப் பருவப்பெயர்கள்சிலப்பதிகாரம்சிதம்பரம் நடராசர் கோயில்நிர்மலா சீதாராமன்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)வால்ட் டிஸ்னிதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்சிலிக்கான் கார்பைடுபரிவர்த்தனை (திரைப்படம்)இந்திய தேசிய காங்கிரசுபச்சைக்கிளி முத்துச்சரம்திருப்போரூர் கந்தசாமி கோயில்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வைப்புத்தொகை (தேர்தல்)யானைநேர்பாலீர்ப்பு பெண்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்குருவானிலைஜோதிமணிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைசெண்டிமீட்டர்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தேம்பாவணிதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்இன்னா நாற்பதுஅல் அக்சா பள்ளிவாசல்வட சென்னை மக்களவைத் தொகுதிமதராசபட்டினம் (திரைப்படம்)வெந்தயம்தயாநிதி மாறன்பிரீதி (யோகம்)தருமபுரி மக்களவைத் தொகுதிதிருட்டுப்பயலே 2இந்திய உச்ச நீதிமன்றம்ஓம்கணையம்மூவேந்தர்மலக்குகள்கண்ணாடி விரியன்சைவத் திருமுறைகள்மொரோக்கோவிசயகாந்துதமிழ்வைரமுத்துஇரசினிகாந்துதமிழ்நாடு சட்டப் பேரவைசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)கன்னியாகுமரி மாவட்டம்வேற்றுமையுருபுபெருங்கடல்இயேசு காவியம்நாடார்வரலாறுதட்டம்மைசிங்கம்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்சீரடி சாயி பாபாவேதநாயகம் பிள்ளைசிலுவைப் பாதைவிந்துஇந்திய அரசியல் கட்சிகள்🡆 More