ஆல்பிரட் வெர்னெர்

ஆல்பிரட் வெர்னெர் (Alfred Werner) (12 திசம்பர் 1866 – 15 நவம்பர் 1919) என்பவர் சுவிட்சர்லாந்து நாட்டின் வேதியியலாளர் ஆவார்.

இவர் சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக்கின் மாணவரும், சூரிக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் ஆவார். இவர் இடைநிலை உலோக அணைவுச் சேர்மங்களில் எண்முகி மூலக்கூறு வடிவினை முன்மொழிந்தமைக்காக 1913 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசினை வென்றார். வெர்னர் நவீன அணைவு வேதியியலுக்கான அடிப்படைக் கோட்பாடுகளை உருவாக்கினார். இவரே நோபல் பரிசினை வென்ற முதல் கனிம வேதியியலாளர் ஆவார். அவர் 1973 ஆம் ஆண்டிற்கு முன்னதாகப்பெற்ற ஒரே நபர் ஆவார்.

ஆல்பிரட் வெர்னெர்
ஆல்பிரட் வெர்னெர்
பிறப்பு12 திசம்பர் 1866
மல்ஹவுஸ், ஆவ்ட்-ரின், அல்சாசே, பிரான்சு
இறப்பு15 நவம்பர் 1919(1919-11-15) (அகவை 52)
சூரிக்கு, சுவிட்சர்லாந்து
தேசியம்சுவிட்சர்லாந்து
துறைகனிம வேதியியல்
பணியிடங்கள்சூரிக் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்சூரிக் பல்கலைக்கழகம்
சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக்
அறியப்படுவதுஇடைநிலை உலோகங்களின் அணைவுச் சேர்மங்களின் அமைப்பு
விருதுகள்வேதியியலுக்கான நோபல் பரிசு (1913)

வாழ்க்கை வரலாறு

வெர்னர் பிரான்சு நாட்டில் அல்சாசில் உள்ள மல்ஹவுசில் 1866 ஆம் ஆண்டில் பிறந்தார். இந்தப் பகுதி 1871 ஆம் ஆண்டில் செருமனியுடன் இணைக்கப்பட்டது, இவர் கத்தோலிக்க திருச்சபையினைச் சார்ந்தவராக இருந்தார். இவர் வேதியியலை, சூரிக், சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயின்றார். இதே நிறுவனத்தில் ஆராய்ச்சியில் முனைவர் பட்டத்தைப் பெற்றார். பாரீசு நகரில் முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆய்வினை முடித்த பிறகு 1892 ஆம் ஆண்டில் சூரிக்கிற்குத் திரும்பினார். 1893 ஆம் ஆண்டில் சூரிக் பல்கலைக்ழகத்திற்குச் சென்ற இவர் 1895 ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தின் பேராசிரியரானார். அதே ஆண்டில் அவர் சுவிட்சர்லாந்துக் குடியுரிமையைப் பெற்றார்.

ஆய்வு

அணைவு வேதியியல்

1893 ஆம் ஆண்டில் அணைவு அயனிகளைக் கொண்ட அணைவுச் சேர்மத்திற்கான சரியான அமைப்பினை முதன் முதலில் முன்மொழிந்தவர் ஆவார். அந்தச் சேர்மத்தில் மைய உலோக அணுவானது, நடுநிலையான அல்லது எதிர்மின் ஈனிகளால் சூழப்பட்டதாக இருந்தது.

மேற்கோள்கள்

Tags:

ஆல்பிரட் வெர்னெர் வாழ்க்கை வரலாறுஆல்பிரட் வெர்னெர் ஆய்வுஆல்பிரட் வெர்னெர் மேற்கோள்கள்ஆல்பிரட் வெர்னெர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அன்னை தெரேசாதமிழ்விடு தூதுவிலங்குசிவம் துபேஆனைக்கொய்யாதமிழ் தேசம் (திரைப்படம்)ஸ்ரீலீலாதிருக்குறள்வெள்ளியங்கிரி மலையூதர்களின் வரலாறுஆதம் (இசுலாம்)சுலைமான் நபிஉமறுப் புலவர்நயினார் நாகேந்திரன்நெல்உயிர்மெய் எழுத்துகள்மொழியியல்வெ. இறையன்புஊராட்சி ஒன்றியம்அஸ்ஸலாமு அலைக்கும்விபுலாநந்தர்நாயக்கர்பாண்டியர்கார்லசு புச்திமோன்குமரிக்கண்டம்முக்குலத்தோர்திருமணம்இந்தியாஇணையம்பெண்ணியம்மயங்கொலிச் சொற்கள்கங்கைகொண்ட சோழபுரம்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)108 வைணவத் திருத்தலங்கள்பெரியாழ்வார்மதுரைமக்களவை (இந்தியா)உவமைத்தொகைவெ. இராமலிங்கம் பிள்ளைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பாசிசம்தமிழ் விக்கிப்பீடியாநீர் மாசுபாடுமுதலாம் இராஜராஜ சோழன்தாராபாரதிபதினெண்மேற்கணக்குஅரவிந்த் கெஜ்ரிவால்குருதி வகைதமிழ் எழுத்து முறைஅழகிய தமிழ்மகன்குடமுழுக்குலியோனல் மெசிவசுதைவ குடும்பகம்மரபுச்சொற்கள்கூகுள்இலட்சம்பூலித்தேவன்மொழிபாரதிய ஜனதா கட்சிமலையாளம்திரு. வி. கலியாணசுந்தரனார்சரண்யா துராடி சுந்தர்ராஜ்பனைஅம்பேத்கர்நிதி ஆயோக்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019சிதம்பரம் நடராசர் கோயில்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்குறுந்தொகைசிறுபாணாற்றுப்படைகோயில்சிதம்பரம் மக்களவைத் தொகுதிதமிழ்நாடு சட்டப் பேரவைஅழகர் கோவில்அயோத்தி தாசர்சினைப்பை நோய்க்குறிநாம் தமிழர் கட்சியூடியூப்ஆத்திசூடி🡆 More