ஆராத், இசுரேல்

ஆராத் (Arad, எபிரேயம்: עֲרָד ⓘ; அரபு மொழி: عِرَادَ‎) என்பது இசுரேலின் தென் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராகும்.

இது நெகேவ் மற்றும் யூதேயப் பாலைவனங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. இது சாக்கடலின் மேற்கில் 25 கி.மீ (15.5 மைல்) தூரத்திலும், பெர்சபாவிற்கு கிழக்கில் 45 கி.மீ (28 மைல்) தூரத்திலும் உள்ளது. இந்நகரம் சமயச் சார்பற்ற, சமயச் சார்புள்ள அஸ்கெனாசி, செப்பராடி யூதர், பெடோயின்கள், கறுப்பு எபிரேயர் உட்பட்டவர்களுக்கும், புதிதாகக் குடியேறியவர்களுக்கும் என 24,229 மக்கள் தொகையினரின் வீடாகவுள்ளது. இந்நகரம் அதன் சுத்தமான, உலர்ந்த காற்று ஆகியவற்றால் உலகளவில் ஈழை நோய்க்கு ஒரு முக்கிய தளமாகவும் இருக்கிறது.

ஆராத்
  • عِرَادَ
எபிரேயம் transcription(s)
 • ISO 259ʕarad
ஆராத்தின் காட்சி
ஆராத்தின் காட்சி
Official logo of ஆராத்
ஆராத்தின் சின்னம் – நிறம் மாறுபடும்
உருவாக்கம்21 நவம்பர் 1962
அரசு
 • வகைநகர் (1995 முதல்)
 • மேயர்டலி புலோஜ்கோவ்
பரப்பளவு
 • மொத்தம்93,140 dunams (93.14 km2 or 35.96 sq mi)
மக்கள்தொகை (2014)
 • மொத்தம்24,229
பெயரின் கருத்துடெல் ஆராத் என்பதிலிருந்து பெயர் பெற்றது
இணையதளம்http://www.arad.muni.il

1920 களில் இப்பகுதியில் குடியேற முயற்சி செய்த பின், ஆராத் இசுரேலில் முதல் திட்டமிட்ட நகராக, ஒர் இசுரேலிய வளர்ச்சி நகரமாக நவம்பர் 1962 இல் நிறுவப்பட்டது. 1990 இல் பொதுநலவாய சுதந்திர நாடுகளில் இருந்து அலியாவுடன் ஆராத் மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்து, 2002 இல் 24,500 குடியிருப்பாளர்களைக் கொண்டிருந்தது.

ஆராத்தின் சுவடுகளாக டெல் ஆராத்தின் இடிபாடுகள், ஆராத் பூங்கா, ஒரு உள்நாட்டு விமானத்தளம், இசுரேலின் முதலாவது சட்டபூர்வு பந்தயச் சுற்று ஆகியன காணப்படுகின்றன. இந்நகரம் அதன் ஆண்டு கோடை இசை விழாவான "ஆராத் விழா" மூலம் நன்கு அறியப்படுகிறது.

வரலாறு

தொல்பழங்காலம்

ஆராத் என்பதன் பெயர் டெல் ஆராத்தில் அமைந்திருந்த விவிலிய கேனான் நகர் மூலம் பெறப்பட்டது. தற்போதைய ஆராத்தின் மேற்கில் கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர்கள் (5.0 mi) தூரத்தில் அமைந்துள்ள விவிலிய தொல்பொருள் பகுதியில் பிரபல மட்பாண்ட துண்டு கண்டுபிடிக்கப்பட்டது. விவிலியம் (நீதிபதிகள் 1:16) இவ்விடம் பற்றிக் குறிப்பிடுகையில், கானானியர்களின் அரணாக விளங்கிய இவ்விடத்தில், கானானிய அரசன் இசுரேலியர்கள் நெகேவிலிருந்து யூதோய மலைகளுக்கு முன்னேறுவதைத் தடுத்தான் என்கிறது. ஆயினும் டெல் ஆராத் 1,200 வருடங்களுக்கு முன் இசுரேலியர்கள் வருவதற்கு முன்பு அழிக்கப்பட்டது. எகிப்திய அரசன் முதலாம் சொசெங்கின் தொடர் வரலாறு டெல் ஆராத்தில் குடியேற்றம் நிகழ்ந்ததாகக் காட்டுகிறது. பைசாந்தியப் பேரரசு காலத்தில், இவ்விடம் சரியாக எசேபியசுவினால் அடையாளங் காணப்பட்டதுடன், "ஆராத்" எனும் பெயர் பெடோயின் மக்களினால் காக்கப்பட்டது. பண்டைய ஆராத் கிறித்தவ மறைமாவட்டமாக இருந்தது. கத்தோலிக்க திருச்சபை தற்போது ஆராத்தை மறைந்த மறைமாவட்டமாகப் பட்டியலிட்டுள்ளது.

பிரித்தானிய ஆணைக் காலம்

வெளியேறிய யூதப் படையணி வீரர்களை பிரித்தானிய ஆணை அரசு இப்பகுதியில் குடியேற அனுமதித்ததும், தற்காலத்தில் முதலாவது குடியேற்ற முயற்சி பாலத்தீன ஆணைக் காலப்பகுதியில் யூதர்களின் "இயிஸ்வு" எனும் அமைப்பினால் 23 பெப்ரவரி 1921 அன்று மேற்கொள்ளப்பட்டது. ஒன்பது ஆண்களும் இரண்டு பெண்களும் குடியேற முயன்றார், ஆனால் நான்கு மாதங்களில் அப்பகுதியில் தண்ணீர் இல்லாததால் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.

இசுரேலிய அரசு

ஆராத், இசுரேல் 
ஆராத்திற்காக மூலமான நகரத் திட்டம்

15 நவம்பர் 1960 இல் திட்டமிடல் பிரிவு ஒன்று இசுரேலிய அமைச்சரவையினால், வடகிழக்கு நெகேவ் பாலைவனம், ஆராத் பகுதியில் குடியேற்றத்திற்கான சாத்தியம் குறித்து ஆராய நியமனம் செய்யப்பட்டது. ஆரம்ப கட்டமாக 50,000 இசுரேலிய லிராக்கள் ஆர்யே எலியாவ் தலைமையின் கீழ் இருந்த திட்டத்திற்காக வழங்கப்பட்டது. 31 சனவரி 1961 அன்று புது நகரத்திற்கா இறுதி இடம் முடிவு செய்யப்பட்டதுடன் (தென்மேற்கு கிதோத் மலையிலிருந்து 3.5 கிலோமீட்டர்கள் (2.2 mi)), சாலை, குடிநீர் இணைப்புகள் பற்றி விவரங்களும் முடிவு செய்யப்பட்டன. மார்ச்சு 1961 ஆம் ஆண்டில், 20,000 குடியிருப்பாளர்களுக்கான ஒரு முழு நகரத் திட்டமும் அதற்கான வரைபடம் உருவாகியது. அதன் பிரதான கட்டடக்கலைஞராகவும் வடிவமைப்பாளராகவும் யோனா பிட்டெல்சன் இருந்தார்.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

ஆராத், இசுரேல் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Arad, Israel
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ஆராத், இசுரேல் வரலாறுஆராத், இசுரேல் உசாத்துணைஆராத், இசுரேல் வெளி இணைப்புகள்ஆராத், இசுரேல்அரபு மொழிஇசுரேல்ஈழை நோய்எபிரேய மொழிசாக்கடல்படிமம்:Arad.oggயூதர்யூதேயப் பாலைவனம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உணவுதிருட்டுப்பயலே 2கீர்த்தி சுரேஷ்பகத் சிங்உயிர்ப்பு ஞாயிறுவிளையாட்டுயூதர்களின் வரலாறுஇந்திய அரசியலமைப்புசைலன்ஸ் (2016 திரைப்படம்)லொள்ளு சபா சேசுகௌதம புத்தர்பால் கனகராஜ்மூதுரைஓம்பங்குனி உத்தரம்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்கல்லீரல்ஹோலிதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிசீவக சிந்தாமணிடைட்டன் (துணைக்கோள்)தேவேந்திரகுல வேளாளர்ஆண்டாள்நீக்ரோபிலிருபின்ஆதலால் காதல் செய்வீர்இராமச்சந்திரன் கோவிந்தராசுஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)உயிர்மெய் எழுத்துகள்கொன்றை வேந்தன்பிரபுதேவாதமிழ்நாடுவி.ஐ.பி (திரைப்படம்)திருமூலர்திரிகடுகம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்குமரி அனந்தன்சேக்கிழார்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்கொன்றைமருதமலைமுருகன்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிநஞ்சுக்கொடி தகர்வுநாடார்தி டோர்ஸ்தைராய்டு சுரப்புக் குறைசட் யிபிடிபச்சைக்கிளி முத்துச்சரம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019வேலு நாச்சியார்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்2014 உலகக்கோப்பை காற்பந்துவிவிலிய சிலுவைப் பாதைமூலிகைகள் பட்டியல்பங்குச்சந்தைஅறுபது ஆண்டுகள்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சிலப்பதிகாரம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கொடைக்கானல்மேற்குத் தொடர்ச்சி மலைவாய்மொழி இலக்கியம்இந்திய வரலாறுபுதுமைப்பித்தன்நாமக்கல் மக்களவைத் தொகுதிகஞ்சாவாதுமைக் கொட்டைசைவ சமயம்தேசிக விநாயகம் பிள்ளைகாடுவெட்டி குருஇங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்சூரரைப் போற்று (திரைப்படம்)சுப்பிரமணிய பாரதிமணிமேகலை (காப்பியம்)மருது பாண்டியர்🡆 More