பட்டாம்பூச்சிக்குடும்பம் அழகிகள்

இக்குடும்பத்தில் 31 பேரினங்களும் சுமார் 600 சிற்றினங்களும் உள்ளன.

அழகிகள்
பட்டாம்பூச்சிக்குடும்பம் அழகிகள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Lepidoptera
துணைவரிசை:
Ditrysia
பெருங்குடும்பம்:
Papilionoidea
குடும்பம்:
அழகிகள்

Latreille, [1802]
மாதிரி இனம்
Papilio machaon
இனங்கள்

தகைவிலான் பறவையைப்போன்ற வால்களையுடைய அழகிய, பெரிய வண்ணத்துப்பூச்சிகளை அழகிகள் (Swallowtail) என வகைப்படுத்துவர். இக்குடும்பத்தின்கீழ் 550-உக்கும் மேலான பட்டாம்பூச்சியினங்கள் உள்ளன. பெரும்பாலானவை வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்பட்டாலும் இவை அண்டார்ட்டிக்கா நீங்கலான அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சிகளான பறவைச்சிறகிப்பேரினத்துப்பூச்சிகள் இக்குடும்பத்தைச் சேர்ந்தவையே. இவற்றுள் இந்தியாவின் மிகப்பெரிய பட்டாம்பூச்சியான தென் அழகி என்பவையும் அடங்கும்.

புறத்தோற்றம்

இக்குடும்பத்தைச்சேர்ந்த பட்டாம்பூச்சிகள் பெரிதாகவும் பளிச்சென்ற நிறங்களிலும் காணப்படும். ஒரேமாதிரியான உடலமைப்பையும், மெல்லிய நீண்ட கால்களையும், உருண்டையான தலையையும், கறுப்பான கண்களையும் கொண்டிருக்கும். நெஞ்சுப்பகுதியும் பின்னுடற்பகுதியும் நீண்டிருக்கும். உடலில் மெல்லிய கோடுகளையும் காணலாம். முன்னிறகுகள் நீண்டோ, குறுகியோ, அகலமாகவோ இருக்கக்கூடுமெனினும் பின்னிறக்கைகள் அகலமாகவே இருக்கும். பால்வேறுபாடு தோற்றத்தில் தென்படாவிட்டாலும் பெண் பூச்சிகள் பெரிதாக இருக்கும்.

பெரிய அழகிப்பட்டாம்பூச்சியின் வளர்ச்சிநிலைகள்:

வாழிடங்கள்

இவை இந்தியாவில் மேற்குத்தொடர்ச்சிமலைக் காடுகள், பிற பசுமைக்காடுகள், இலையுதிர்காடுகள், வறண்ட காடுகள், பூங்காக்கள் போன்ற பலதரப்பட்ட இடங்களில் காணப்படுகின்றன.

நடத்தை

ஆண்பூச்சிகள் சில மணிச்சத்துத் தேவைகளுக்காக ஈரமண், விலங்குகளின் சிறுநீர், கண்ணீர், பறவைகளின் எச்சம் போன்றவற்றில் அமர்ந்து உறிஞ்சும். அவ்வமயம் இறக்கைகளைப் படபடவென்று அடித்துக்கொண்டிருக்கும். கறுப்பழகி, பெரிய மயில் அழகி போன்றவை இறக்கையை விரித்து வெயில்காயும். சிவப்புடல் அழகி போன்றவை கூட்டமாக வலசை போகும்.

இவற்றுள் சில இனங்கள் பிற உண்ணத்தகாத பட்டாம்பூச்சிகளையொத்த பேட்ஃசின் போலியொப்புருவாகத் திகழ்கின்றன. ஆனால் புலிவரியழகி (Papilio glaucus) போன்றவற்றில் பெண்பூச்சிகள்மட்டுமே இவ்வகை தோற்றம் பெறுகின்றன.

அழிவாய்ப்பு

இப்பட்டாம்பூச்சிகளின் எழிலான வண்ணத்தோற்றத்துக்காக இவற்றை வேட்டையாடி அழகுப்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். இவற்றின் வாழிடங்களும் அருகிவருவதால் இவை அழியும் வாய்ப்புள்ளது.

குறிப்புகள்

மேற்கோள்கள்

பட்டாம்பூச்சிக்குடும்பம் அழகிகள் 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
பட்டாம்பூச்சிக்குடும்பம் அழகிகள் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Papilionidae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

பட்டாம்பூச்சிக்குடும்பம் அழகிகள் புறத்தோற்றம்பட்டாம்பூச்சிக்குடும்பம் அழகிகள் வாழிடங்கள்பட்டாம்பூச்சிக்குடும்பம் அழகிகள் நடத்தைபட்டாம்பூச்சிக்குடும்பம் அழகிகள் அழிவாய்ப்புபட்டாம்பூச்சிக்குடும்பம் அழகிகள் குறிப்புகள்பட்டாம்பூச்சிக்குடும்பம் அழகிகள் மேற்கோள்கள்பட்டாம்பூச்சிக்குடும்பம் அழகிகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நுரையீரல்மகேந்திரசிங் தோனிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தண்டியலங்காரம்இந்தியக் குடிமைப் பணிவிளையாட்டுசுரைக்காய்மார்பகப் புற்றுநோய்இந்தியக் குடியரசுத் தலைவர்தமிழ்நாடு அமைச்சரவைவிஜயநகரப் பேரரசுசுபாஷ் சந்திர போஸ்பறவைதினமலர்சுடலை மாடன்பொறியாளன் (திரைப்படம்)ஆல்பாம்பாட்டி சித்தர்இதயம்குகன்நிதி ஆயோக்ஒட்டக்கூத்தர்பௌத்தம்தனுஷ்கோடி108 வைணவத் திருத்தலங்கள்சிற்றிலக்கிய வகைவாட்சப்தாயுமானவர்சூரைதிருப்பதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்முதுமொழிக்காஞ்சி (நூல்)மொன்ட்டானாபுலிமுருகன்அகநானூறுஅளபெடைஇலங்கையின் மாவட்டங்கள்ரேபரலிதற்குறிப்பேற்ற அணிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஐஞ்சிறு காப்பியங்கள்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019மாசாணியம்மன் கோயில்திரைப்படம்இந்தியாவின் பொருளாதாரம்உடற் பயிற்சிஉதகமண்டலம்இந்தியாவில் இட ஒதுக்கீடுபஞ்சதந்திரம் (திரைப்படம்)திருவிழாராகவா லாரன்ஸ்இளங்கோவடிகள்இந்திய தேசிய சின்னங்கள்பன்னாட்டு வணிகம்சூல்பை நீர்க்கட்டிகுருதிச்சோகைஎட்டுத்தொகை தொகுப்புசிப்பாய்க் கிளர்ச்சி, 1857சுந்தர காண்டம்தங்கராசு நடராசன்நீர் மாசுபாடுகாதல் கொண்டேன்கம்பராமாயணத்தின் அமைப்புசுந்தர் சி.இந்தியாவின் பசுமைப் புரட்சிமே நாள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்வெங்கடேஷ் ஐயர்சீரடி சாயி பாபாநீக்ரோசன்ரைசர்ஸ் ஐதராபாத்வெள்ளி (கோள்)மருதமலைரத்னம் (திரைப்படம்)சதயம் (பஞ்சாங்கம்)தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்🡆 More