அலெப்போ தற்கொலை வாகனத் தாக்குதல் 2017

சிரியா நாட்டின் அலெப்போ நகரில் 15 ஆப்ரல் 2017 அன்று தற்கொலை வாகனத் தாக்குதல் நடத்தப்பட்டது.

பேருந்து மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டபோது பொதுமக்கள் 126 பேர் கொல்லப்பட்டனர். இதில் 70 பேர் குழந்தைகளாவர். சண்டைப்பகுதியில் உள்ள பொதுமக்களை உடன்படிக்கையின்படி பேருந்து மூலம் வெளியேற்றும்போது இத்தாக்குதல் நடத்தப்பட்டது. ரஷிதீன் மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி 15:30 மணிக்கு, காயமடைந்த அகதிகளை வெளியேற்றும் பேருந்தானது சோதனைச் சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது மகிழுந்து ஒன்றைத் தற்கொலை வாகனமாகப் பயன்படுத்தி பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதல் காரணமாக பொதுமக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர் 19 ஏப்ரல் 2017 அன்று பலத்த பாதுகாப்பினூடே மீண்டும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியது. தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை இத்தாக்குதல் போர்க் குற்றம் என கண்டனம் தெரிவித்தது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்தது. இத்தாக்குதலுக்கு எவரும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் நடத்தப்பட்டப் பகுதி மக்கள் ஆக்கிரமிப்பு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்காமல் அரசுக்கு ஆதரவளிப்பவர்களாக இருந்தபடியால் இத்தாக்குதலைக் கிளர்ச்சியாளர்கள் நடத்தியிருக்கலாம் என சிரியாவின் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன. ஆனால் அஹ்ரார்- அல் ஷாம் இதை மறுத்துள்ளது, மேலும் எதிர்க்கட்சிகள், சிரியா அரசு கான் ஷேய்குன் இரசாயனத் தாக்குதல் நிகழ்விலிருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்பும் பொருட்டு இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனக் கருத்து தெரிவித்தன.

அலெப்போ தற்கொலை வாகனத் தாக்குதல் 2017
அலெப்போ தற்கொலை வாகனத் தாக்குதல் 2017
இடம்ரஷிதீன் மாவட்டம், மேற்கு அலெப்போ, சிரியா
ஆள்கூறுகள்36°10′10″N 37°03′24″E / 36.16944°N 37.05667°E / 36.16944; 37.05667
நாள்15 ஏப்ரல் 2017
ஆயுதம்வாகன வெடிகுண்டு
இறப்பு(கள்)126+
காயமடைந்தோர்55+
தாக்கியோர்தெரியவில்லை

மேற்கோள்கள்

Tags:

அலெப்போஐக்கிய நாடுகள் அவைகான் ஷேய்குன் இரசாயனத் தாக்குதல் 2017சிரியாமகிழுந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

அறிவியல்சீனாஜிமெயில்யுகம்எட்டுத்தொகை தொகுப்புஸ்ரீலீலாகுறுந்தொகைஇந்தியத் தேர்தல் ஆணையம்இலிங்கம்நீதி இலக்கியம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்மஞ்சும்மல் பாய்ஸ்மு. க. ஸ்டாலின்குடும்பம்கபிலர்பரிதிமாற் கலைஞர்வௌவால்மார்க்கோனிமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)உலகம் சுற்றும் வாலிபன்ஆசாரக்கோவைகம்பராமாயணம்அகத்திணைமனித உரிமைசாகித்திய அகாதமி விருதுபஞ்சாயத்து ராஜ் சட்டம்புதன் (கோள்)வாட்சப்பாரிமுடிஉடுமலை நாராயணகவிகுண்டூர் காரம்அகமுடையார்சுற்றுச்சூழல்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்பதினெண் கீழ்க்கணக்குபெயர்ச்சொல்பாண்டியர்ஆந்திரப் பிரதேசம்மாநிலங்களவைஇந்தியன் பிரீமியர் லீக்விடுதலை பகுதி 1விருமாண்டிதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019ஐக்கிய நாடுகள் அவைபல்லவர்சீவக சிந்தாமணிசயாம் மரண இரயில்பாதைவெட்சித் திணைகருக்காலம்ஐராவதேசுவரர் கோயில்இமயமலைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிபெண் தமிழ்ப் பெயர்கள்சென்னைதலைவி (திரைப்படம்)அம்மனின் பெயர்களின் பட்டியல்கபிலர் (சங்ககாலம்)அன்னை தெரேசாகலிப்பாபெயர்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்புதுமைப்பித்தன்சுடலை மாடன்இளங்கோவடிகள்உவமையணிஇட்லர்வெள்ளி (கோள்)பாரதிதாசன்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்சின்ன வீடுபுணர்ச்சி (இலக்கணம்)தமிழக மக்களவைத் தொகுதிகள்ஆப்பிள்திருநங்கைசமரச சுத்த சன்மார்க்க சங்கம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்முடியரசன்நோய்🡆 More