அறிவியல் தகவல் நிறுவனம்

அறிவியல் தகவல் நிறுவனம் (Institute for Scientific Information)( ஐ.எஸ்.ஐ ) 1956இல் பிலடெல்பியாவில் யூஜின் கார்பீல்ட் என்பவரால் நிறுவப்பட்ட கல்வி வெளியீட்டுச் சேவையாகும்.

ஐ.எஸ்.ஐ அறிவியல் மற்றும் நூலியல் தரவுத்தள சேவைகளை வழங்குகிறது. கார்பீல்ட் முன்னோடியாக மேற்கோள் சுட்டெண் அட்டவணைப்படுத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் இதன் சிறப்பாகும்.

சேவைகள்

அறிவியல் தகவல் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஆய்விதழ்களை உள்ளடக்கிய மேற்கோள் தரவுத்தளங்களை பராமரித்தது, அதன் நீண்டகால அச்சு அடிப்படையிலான குறியீட்டுச் சேவையான அறிவியல் மேற்கோள் சுட்டெண் (எஸ்.சி.ஐ), சமூக அறிவியல் மேற்கோள் சுட்டெண் (எஸ்.எஸ்.சி.ஐ) மற்றும் கலை மற்றும் மனிதநேய மேற்கோள் சுட்டெண் (ஏ.எச்.சி.ஐ) வழங்கிவருகிறது. இவை அனைத்தும் அ த நி வலை அறிவு தரவுத்தள சேவை வழியாகடக் கிடைத்தன. இந்த தரவுத்தளம் ஆராய்ச்சியாளர் ஒருவர் எந்த கட்டுரை அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, யார் மேற்கோள் காட்டியது என்பதை அடையாளம் காண அனுமதிக்கிறது. இந்த தரவுத்தளத்தில் அட்டவணையிடப்பட்ட ஆய்விதழின் கட்டுரைகளின் தாக்கத்தின் அளவை வழங்குகிறது. இத்தாக்கச் சுட்டெண் மூலம் மேலும் கட்டுரையின் தாக்கத்தை அதிகரிக்க வழிசெய்கிறது. இந்த தரவுத்தளத்தில் தோன்றும் கட்டுரையின் மேற்கோள்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கக்கூடும் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இந்நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பு நடப்பு பொருளடக்கம் ஆகும். இது சமீபத்திய கல்வி ஆய்விதழ்களுக்கான உள்ளடக்க அட்டவணையின் சேகரிப்பாகும்.

இத்தகவல் நிறுவனம் ஆண்டுதோறும் ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகளையும் வெளியிடுகிறது. இதில் இதனுடைன அட்டவணைப்படுத்தப்பட்ட அனைத்துப் பத்திரிகைகளுக்கும் தாக்கக் காரணியை பட்டியலிடுகிறது. விஞ்ஞான சமூகத்திற்குள், விஞ்ஞானியின் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி பதிவில் இணைக்கப்பட்டுள்ள பெருமைகளைத் தீர்மானிப்பதில் ஆய்விதழ் தாக்கக் காரணிகள் தொடர்ந்து முக்கியப் பங்கு வகித்த போதிலும், சர்ச்சைக்குரியதாகவும் உள்ளது.

14,000க்கும் மேற்பட்ட ஆய்விதழின் பட்டியல் அறிவியல் தகவல் நிறுவனம் கொண்டுள்ளது. இந்த பட்டியலில் சுமார் 1,100 கலை மற்றும் மனிதநேய இதழ்கள் மற்றும் அறிவியல் ஆய்விதழ்கள் உள்ளன. பட்டியல்கள் வெளியிடப்பட்ட தேர்வு அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இது ஆய்விதழின் தரம் மற்றும் தாக்கத்தின் சுட்டெண்ணாகும்.

அறிவியல் தகவல் நிறுவனம் சயின்ஸ் வாட்ச் (அறிவியல் பார்வை) என்ற செய்தி மடலையும் வெளியிடுகிறது. இது முந்தைய இரண்டு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அதி தாக்கம் கொண்ட ஆய்வுக் கட்டுரைகளை 22 துறைகளில் (உ.ம். கணிதம் (புள்ளியியல் உட்பட), பொறியியல், உயிரியல், வேதியியல், மற்றும் இயற்பியல்)[சான்று தேவை] கொண்டுள்ளது. மேற்கோள்களின் எண்ணிக்கை, புதுப்பிப்பிலிருந்து மிகப்பெரிய அதிகரிப்பையும் அடிப்படையாகக் கொண்டிருந்தன. ஆவணங்களைப் பற்றிய கட்டுரைகளில் பெரும்பாலும் ஆசிரியர்களின் கருத்துகள் இருந்தன.

ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட உலக பல்கலைக்கழகங்களின் கல்வி தரவரிசையில் சேர்க்கப்பட்ட காரணிகளில் ஒன்றான "அறிவியல் தகவல் நிறுவனத்தால் அதிக மேற்கோள் காட்டப்பட்ட ஆராய்ச்சியாளர்கள்" பட்டியலையும் அறிவியல் தகவல் நிறுவனம் வெளியிட்டது. இது கிளாரிவேட்டின் கீழ் தொடர்கிறது.

வரலாறு

ஆரம்பத்தில், நிறுவனத்திற்கு தரகு படுத்துதல் என்று பெயரிடப்பட்டது. 1992ஆம் ஆண்டில், அறிவியல் தகவல் நிறுவனம் தாம்சன் சயின்டிஃபிக் & ஹெல்த்கேர் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. தாம்சன் அறிவியல் தகவல் நிறுவனம் என அறியப்பட்டது. இது 2016ஆம் ஆண்டு வரை தாம்சன் ராய்ட்டர்ஸின் அறிவுசார் சொத்து மற்றும் அறிவியல் வணிகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் ஐபி & அறிவியல் வணிகம் விற்கப்பட்டு, கிளாரிவேட் அனலிட்டிக்ஸ் ஆனது. பிப்ரவரி 2018இல், கிளாரிவேட் தனது அறிவியல் மற்றும் கல்வி ஆராய்ச்சி குழுவின் ஒரு பகுதியாக அறிவியல் தகவல் நிறுவனத்தினை மீண்டும் நிறுவப்போவதாக அறிவித்தது. இது நவம்பர் 2018 நிலவரப்படி கிளாரிவேட்டிற்குள் ஒரு குழுவாக உள்ளது.

த அ நி மிகவும் மேற்கோள் காட்டப்பட்டது

"தகவல் அறிவியல் நிறுவனத்தின் மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் என்பது, அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் கடந்த பத்தாண்டில் வெளியான ஆய்வு வெளியீடுகளின் முக்கியத் தரவுத்தளமாகும். அறிவியல் தகவல் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இத்தகவல் முக்கியமானதாக உள்ளது. இந்த பட்டியலில் சேர்வது கல்வியாளர்களின் மதிப்பின் ஒரு முக்கிய நடவடிக்கையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உலக பல்கலைக்கழகங்களின் கல்வி தரவரிசையிலும் இது பயன்படுத்தப்படுகிறது. இது அறிவியல் தகவல் நிறுவனத்தால் நிறுவப்பட்டு 2018ஆம் ஆண்டு வரை கிளாரிவேட் பெயரில் தொடர்ந்தது.

இத்தரவைப்பகத்தில் சேர்வதற்கான வழிமுறையானது, விஞ்ஞான மேற்கோள் தரவுத்தளங்களில் குறியிடப்பட்ட மற்றும் ஒரே, நிலையான ஆண்டில் வெளியிடப்பட்ட அனைத்து கட்டுரைகளின் மேற்கோள் ஆதாரங்களின் ஆவணங்களைப் பரிசீலிப்பதாகும். வெளியிடப்பட்ட ஆண்டைப் பொறுத்து மேல் முதல் சதவிகிதத்தில் உள்ள ஆவணங்கள் மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட ஆவணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆய்வுக்கட்டுரை வெளியிட்ட ஆய்விதழின் அறிவியல் தகவல் நிறுவனத்தின் வகைப்பாட்டின் அடிப்படையில் தரவுகளில் உள்ள ஒவ்வொரு ஆய்வுக் கட்டுரையும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட 21 வகைகளுள் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு துறையிலும், 10 ஆண்டுகளில், அதிக தடவை மேற்கோள் காட்டப்பட்ட ஆவணங்களைக் கொண்ட ஆராய்ச்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பட்டியல் தொகுக்கப்படுகிறது. மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை புலத்திலிருந்து புலம் மாறுபடுகிறது. இது துறை ஒன்றில் பங்களிக்கும் மொத்த ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது.

முக்கியப் பிரிவுகள் பின்வருமாறு:

ஆய்வாளர்கள் வழங்கிய வெளியீட்டுப் பட்டியல் மற்றும் வாழ்க்கை வரலாற்று விவரங்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. இருப்பினும் அ த நி மேற்கோள் தரவுத்தளத்திற்கான பொதுவான அணுகல் சந்தா மூலம் கிடைக்கின்றது.

மேலும் காண்க

  • கிளாரிவேட் மேற்கோள் பரிசு பெற்றவர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அறிவியல் தகவல் நிறுவனம் சேவைகள்அறிவியல் தகவல் நிறுவனம் வரலாறுஅறிவியல் தகவல் நிறுவனம் த அ நி மிகவும் மேற்கோள் காட்டப்பட்டதுஅறிவியல் தகவல் நிறுவனம் மேலும் காண்கஅறிவியல் தகவல் நிறுவனம் மேற்கோள்கள்அறிவியல் தகவல் நிறுவனம் வெளி இணைப்புகள்அறிவியல் தகவல் நிறுவனம்பிலடெல்பியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஔரங்கசீப்கண்ணாடி விரியன்இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்நொய்யல் ஆறுகாதல் (திரைப்படம்)அண்ணாமலையார் கோயில்கில்லி (திரைப்படம்)வெ. இராமலிங்கம் பிள்ளைகுணங்குடி மஸ்தான் சாகிபுஇராவண காவியம்நவக்கிரகக் கோயில்கள்திருவிளையாடல் ஆரம்பம்சுவாதி (பஞ்சாங்கம்)உழைப்பாளர் சிலைகாந்தலூர்புணர்ச்சி (இலக்கணம்)நவக்கிரகம்குக்கு வித் கோமாளிதிவ்யா துரைசாமிவசபன்கர்ணன் (மகாபாரதம்)பத்ம பூசண்ஈரோடு தமிழன்பன்பிரமிள்அகரவரிசைமண்ணீரல்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்விஜய் (நடிகர்)அவுன்சுஐராவதேசுவரர் கோயில்காச நோய்என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைமதீச பத்திரனபொன்னியின் செல்வன்கார்த்திக் (தமிழ் நடிகர்)குறவஞ்சிசித்தர்மொழிஅவுரி (தாவரம்)அத்தி (தாவரம்)பைரவர்குடும்பம்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)மோகன்தாசு கரம்சந்த் காந்திபூலித்தேவன்ருதுராஜ் கெயிக்வாட்சுரதாதட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)கண்டி மணிக்கூட்டுக் கோபுரம்கடவுள்மருதமலை முருகன் கோயில்தமிழ்விடு தூதுகாற்றுஏற்காடுஇலங்கையின் வரலாறுகாமராசர்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024கருச்சிதைவுபரணி (இலக்கியம்)விசயகாந்துகாதல் தேசம்அரச மரம்ஐஞ்சிறு காப்பியங்கள்இதயத்தை திருடாதேகுண்டிபரிதிமாற் கலைஞர்பணம்சிலப்பதிகாரம்வானிலைகுதிரைமலைதமிழ்நாட்டின் நகராட்சிகள்திருவோணம் (பஞ்சாங்கம்)முருகா (திரைப்படம்)பூப்புனித நீராட்டு விழாகாப்பியம்திருநங்கை69 (பாலியல் நிலை)சுவர்ணலதாஅருந்ததியர்🡆 More