பகலொளி சேமிப்பு நேரம்

பகலொளி சேமிப்பு நேரம் அல்லது கோடை நேரம் என்பது பரவலாகப் பயன்பாட்டில் இருக்கும் சீர் நேரத்தை கோடை மாதங்களில் முன்னோக்கி நகர்த்தும் முறையாகும்.

இது பொதுவாக ஒரு மணி நேரமாகும். இது கோடை மாதங்களின் பகல் நேரத்தையும் வேலை, பாடசாலை நேரங்களையும் ஒருமுகப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்படுகிறது. "சேமிக்கப்பட்ட" பகலொளி மாலையில் உல்லாச நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இம்முறை பின்பற்றப்படாவிட்டால், காலையில் சூரிய ஒளி தூக்கத்தில் வீணடிக்கப்படும்.

உலக வரைபடம். ஐரோப்பா, ருசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் சில பகுதிகள், தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் வேறு சில நாடுகள் பகலொளி சேமிப்பு நேரத்தை நடைமுறையில் கொண்டுள்ளன.
உலகின் பல நாடுகளில் நடைமுறையில் இல்லா விட்டாலும், பகலொளி சேமிப்பு நேரம் மேற்கத்திய நாடுகளில் பொதுவாக நடைமுறையில் உள்ளது.
  பகலொளி சேமிப்பு நேரம் நடைமுறையில் உள்ளது.
  பகலொளி சேமிப்பு நேரம் இப்போது நடைமுறையில் இல்லை.
  பகலொளி சேமிப்பு நேரம் எப்பொழுதும் நடைமுறையில் இருந்தது இல்லை.

பகலொளி சேமிப்பு நேரம் (அ) கோடைக்கால நேர வலயம் என்பது சூரிய ஒளி அதிகமாக இருக்கக் கூடிய கோடைக்காலங்களில், கடிகார நேரத்தை முன்கொண்டு செல்லும் வழக்கத்தைக் குறிக்கும். இதன் மூலம் மாலை நேரங்களில் அதிக நேரம் வெளிச்சத்தையும், காலை நேரங்களில் குறைந்த நேரம் வெளிச்சத்தையும் பெறலாம்.

இளவேனிற்காலத்தின் தொடக்கத்தில் நேரத்தை ஒரு மணி நேரம் முன்கொண்டு செல்வதும், பின்பு இலையுதிர் காலத்தில் அந்த ஒரு மணி நேரத்தை பின்கொண்டு வருவதும் வழக்கம்.

பகலொளி சேமிப்புத் திட்டம் முதலில் George Vernon Hudson என்பவரால் 1895-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பின்பு 30 ஏப்ரல் 1916 அன்று இடாய்ச்சுலாந்து, ஆஸ்திரியா-ஹங்கேரி ஆகிய நாடுகளில் அமல் படுத்தப்பட்டது. 1970-களின் எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து மேலும் பல நாடுகளும் இந்தத் திட்டத்தைப் பின்பற்றத் தொடங்கின.

பகலொளி சேமிப்பு நேரம் பொதுவில் குளிர்வலய நாடுகளில், பருவ மாற்றங்களோடு காணப்படும் பெரும் பகல்-இரவு நேர வேறுபாடுகள் காரணமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

அரசுகள், சூரிய ஒளியின் பயன்பாடு அதிகரிப்பதால், இதனை பொதுவில் ஆற்றல் சேமிப்பு நடவடிக்கையாக விளக்குகின்றன. ஆனாலும் இம்முறை மூலம் மின்னாற்றல் சேமிக்கப்படுகிறதா என்பதைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஐரோப்பாவில் இது கோடை நேரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கு "கோடை" எனும் போது இளவேனில் இலையுதிர் என்ற பருவங்களின் சில வாரங்களையும் உள்ளடக்குகிறது (ஏப்ரல் முதல் அக்டோபர் வரை). மிகுதி, மழைக் காலமாக கணிக்கப்படுகிறது (நவம்பர் முதல் மார்ச் வரை). இந்நடைமுறை நேர வலயங்களுக்கு ஏற்பவும் மாறுபடக்கூடியது.

வரலாறு

பகலொளி சேமிப்பு நேரம் 
அக்டோபர் 2011இன் படி கலொளி சேமிப்பு நேரத்தினைப் பயன்படுத்தும் நாடுகள்
  வடக்கு அரைக்கோள கோடை
  தெற்கு அரைக்கோள கோடை

பாரிஸ் இதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில், பகலொளி சேமிப்பு நேரம் பற்றி பெஞ்சமின் பிராங்க்லின் தெரிவித்துள்ளார். இருப்பினும், இக்கட்டுரையில் காணப்படும் நகைச்சுவைத் தொனி காரணமாக இதை அவர் உண்மையாகவே பிரெஞ்சு அரசுக்கு முன்மொழிந்தாரா அல்லது மக்கள் முன்னெழுந்து முன் உறங்கச் செல்ல வேண்டும் என கருதினாரா என்பது தெரியவில்லை.

பகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக ஒரு திட்டமாக வில்லியம் வில்லெட் என்பவரால் 1905 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது. பெருமளவிலான கையூட்டுகளைக் கொடுத்த போதிலும் பிரித்தானிய அரசு இதனை ஏற்கவில்லை.

பகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக ஜெர்மன் அரசால் முதலாவது உலக போரின் போது 1916 இன் ஏப்ரல் 30 க்கும் அக்டோபர் 1க்கும் இடையில் பயன்படுத்தப்பட்டது. உடனே ஐக்கிய இராச்சியமும் 1916 மே 21க்கும் அக்டோபர் 1க்கும் இடையில் பயன்படுத்தியது.

செயல்முறை

பகலொளி சேமிப்பு நேரம் துவங்கும் பொழுது கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னோக்கி நகர்த்தப்படும். இப்படத்தில் காட்டப்பட்டுள்ளாது போல 2.00 மணியிலிருந்து 3.00 மணிக்கு மாற்றப்படும்.
பகலொளி சேமிப்பு நேரம் முடிவடையும்போது கடிகாரம் பழையபடியே ஒரு மணிநேரம் பின்னோக்கி நகர்த்தப்படும். அதாவது 3.00 மணியிலிருந்து 2.00 மணிக்கு மாற்றப்படும். வெவ்வேறு பகுதிகளில் இது வெவ்வேறு நேரங்களில் நடைபெறும்.

பகலொளி சேமிப்பு செய்ய அமெரிக்க வழக்கப்படி, வசந்த காலத்தில் கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னோக்கி நகர்த்தப்படும். 2.00 மணி உள்ளூர் நேரத்தில் இருந்து 3.00 மணிக்கு மாற்றப்படும். அப்பொது கடிகாரங்கள் 01:59 லிருந்து முன்னோக்கி தாவி 3.0 மணிக்கு வந்து விடும். மேலும் அந்த நாள் 23 மணி நேரம் கொண்டதாக கணக்கில் கொள்ளப்படும். அதேபோல் இலையுதிர் காலத்தில் கடிகாரம் ஒரு மணிநேரம் பின்னோக்கி நகர்த்தப்படும். அதாவது 3.00 மணியிலிருந்து 2.00 மணிக்கு மாற்றப்படும். மேலும் அந்த நாள் 25 மணி நேரம் கொண்டதாக கணக்கில் கொள்ளப்படும்.

வாரநாள் அட்டவணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க பொதுவாக கடிகாரம் மாற்றங்கள் ஒரு வார நள்ளிரவில் திட்டமிடப்படும். சில பகுதிகளில் இருபது நிமிட மற்றும் இரண்டு மணி நேர மாற்றங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

வட அமெரிக்காவில் ஒரு மணி நேர மாற்றம் 02:00 மணிக்கு நடைபெறும் - இளவேனிற்காலத்தில் 01:59 மணிக்கான அடுத்த நிமிடத்தில் நேரம் 03:00 DST-ஆக மாற்றப் படும். அன்றைய நாளுக்கு 23 மணி நேரங்களே இருக்கும். அது போல இலையுதிர்காலத்தில் 01:59 DST-ல் நேரம் 01:00 மணியாக மாற்றப் படும். அன்றைய நாளுக்கு 25 மணி நேரம் உண்டு. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் மாற்றம் 01:00 UTC-ல் நடப்பதால், இலையுதிர்கால மாற்றம் இளவேனிற்கால மாற்றத்திற்கு 1-மணி நேரம் தாமதமாக நடக்கும்.

நேர மாற்றங்கள் பெரும்பாலாக வாரக் கடைசியின் நள்ளிரவிலேயே நடைபெறும். இதன் மூலம் வேலை நாட்களில் இடையூறுகள் தவிர்க்கப்படும்.

தொடக்க மற்றும் முடிவுத் தேதிகள் நாடு மற்றும் ஆண்டைக் கொண்டு மாறு படுகின்றன. 1996-ம் ஆண்டு முதலாக ஐரோப்பிய ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் மார்ச் மாத கடைசி ஞாயிறு முதல் அக்டோபர் மாத கடைசி ஞாயிறு வரை கடை பிடிக்கப் படுகின்றது. இதற்கு முன்னர் ஐரோப்பாவில் இந்த ஒற்றுமை இல்லை. 2007-ம் ஆண்டு முதலாக வட அமெரிக்கா மற்றும் கனடாவில் பகலொளி சேமிப்பு நேரம் மார்ச் மாத இரண்டாவது ஞாயிறு முதல் நவம்பர் மாத முதல் ஞாயிறு வரை கடை பிடிக்கப் படுகின்றது.

தென் துருவத்தில் சுமாராக இந்த நடைமுறை நேர்மாறாக கடை பிடிக்கப் படுகின்றது. உதாரணமாக Chile நாட்டில் இந்த நடைமுறை அக்டோபர் மாத இரண்டாவது சனி முதல் மார்ச் மாத இரண்டாவது சனி வரை கடை பிடிக்கப் படுகின்றது. இதனால் பிரித்தானிய நாட்டுக்கும் Chile நாட்டுக்கும் இடையே வேறுபாடு - வட துருவ கோடையில் 5 மணி நேரமாகவும், வட துருவ குளிரில் 3 மணி நேரமாகவும், இடைப்பட்ட குறுகிய காலத்தில் 4 மணி நேரமாகவும் இருக்கும்.

பகலொளி சேமிப்புத் திட்டம் பொதுவாக பூமத்திய ரேகைக்குப் பக்கத்தில் கடை பிடிக்கப் படுவதில்லை. சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரங்கள் வெகுவாக மாறு படாமல் இருப்பதே இதற்குக் காரணம். சில நாடுகள் இந்தத் திட்டத்தை சில பகுதிகளில் கடை பிடிக்கின்றன; உதாரணமாக Brazil நாட்டில் இது தெற்கில் மட்டும் கடை பிடிக்கப் படுகின்றது. ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் பெரும்பாலாக கடை பிடிக்கப் படாததால் இந்தத் திட்டம் உலகின் சிறிதளவு மக்களாலேயே பயன் படுத்தப் படுகின்றது.

நன்மைகள் மற்றும் குறைபாடுகள் மீதான கருத்துவேறுபாடு

  • ப.சே.நே. ஆதரவாளர்கள் பொதுவாக சக்தி சேமிக்கப்படுவதாகவும் மாலை வெளிப்புற ஓய்வு நடவடிக்கை ஊக்குவிக்கப்படுவதால் உடல் மற்றும் உளவியல் சுகாதார நன்மை பேணப்படுவதாகவும், இதன் காரணமாக போக்குவரத்து விபத்துகள் மற்றும் குற்றம் குறைக்கிறது என்று வாதிடுகின்றனர்.
  • எதிர்ப்பாளர்கள் ஆற்றல் சேமிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு இருக்காது எனவும், ப.சே.நே. காலை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யும் எனவும் குற்றம்சாட்டுகின்றனர். இதனை எதிர்க்கும் குழுக்கள் பெரும்பாலும் விவசாயிகள், போக்குவரத்து நிறுவனங்கள், மற்றும் உட்புற (அல்லது இருட்டு சார்ந்த) பொழுதுபோக்கு வர்த்தகங்கள்.

எரிபொருள் பயன்பாடு

ஆற்றல் சேமிப்பில் குடியிருப்பு பகுதிகளை ஒளியூட்டுவது முதன்மையாக வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் இதற்காக மின்சாரம் 3.5% பயன்படுத்துகிறது. சூரியன் மறையும் மற்றும் உதிக்கும் நேரம் தாமதித்தால் மாலை குடியிருப்பு பகுதிகளை ஒளியூட்டுவதற்கான செயற்கை ஒளியின் பயன்பாடு குறைக்கிறது. ஆனால் காலையில் அது அதிகரிக்கிறது. இதனால் குறிப்பிடத்தக்க அளவிற்கு எரிபொருள் சேமிப்பு இருக்காது.

பொருளாதார விளைவுகள்

சில்லறை வியாபாரிகள், விளையாட்டு பொருட்கள் தயாரிப்பாளர்கள், மற்றும் பிற வணிகர்கள் கூடுதல் பிற்பகல் சூரிய ஒளியால் பயனடைவார்கள். அது கடைவீதி சென்று பொருட்கள் வாங்குவதற்கும், வெளிப்புற விளையாட்டு பங்கேற்கவும் வாடிக்கையாளர்களை தூண்டுகிறது. ஒரு 1999 ஆய்வு, ப.சே.நே. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓய்வு துறை வருவாயை 3% அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மாறாக, விவசாயிகள் மற்றும் சூரிய ஒளியால் வேலை நேரம் நிர்ணயம் செய்யப்படும் மற்றவர்கள் பாதிப்படைவார்கள்.

குறிப்புகள்

Tags:

பகலொளி சேமிப்பு நேரம் வரலாறுபகலொளி சேமிப்பு நேரம் செயல்முறைபகலொளி சேமிப்பு நேரம் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் மீதான கருத்துவேறுபாடுபகலொளி சேமிப்பு நேரம் குறிப்புகள்பகலொளி சேமிப்பு நேரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேசிய அடையாள அட்டை (இலங்கை)வாசுகி (பாம்பு)முத்துலட்சுமி ரெட்டிதேம்பாவணிஅழகர் கோவில்வீரப்பன்கள்ளுஇந்திய வரலாறுதெலுங்கு மொழிபிரசாந்த்குறிஞ்சி (திணை)பாம்புகோயில்சூல்பை நீர்க்கட்டிதமிழர் பருவ காலங்கள்நந்திக் கலம்பகம்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்காமராசர்வினோஜ் பி. செல்வம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்காச நோய்காடுவெட்டி குருதனியார் பள்ளிவேர்க்குருவிந்துவினோத் காம்ப்ளிஇரட்சணிய யாத்திரிகம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019மீண்டும் ஒரு மரியாதைவேலூர்க் கோட்டைதமிழ்ஒளிசிப்பாய்க் கிளர்ச்சி, 1857திருத்தணி முருகன் கோயில்கருத்தரிப்புபாரதிதாசன்இலங்கையின் மாவட்டங்கள்எயிட்சுகீழடி அகழாய்வு மையம்ஜலியான்வாலா பாக் படுகொலைஇரட்டைக்கிளவிஔவையார்மருதம் (திணை)சங்க காலப் புலவர்கள்தமிழ் எழுத்து முறைபுனித ஜார்ஜ்சுற்றுச்சூழல் பிரமிடுசத்திய சாயி பாபாசஞ்சு சாம்சன்முதுமொழிக்காஞ்சி (நூல்)தமிழ் இலக்கணம்லால் சலாம் (2024 திரைப்படம்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)புதிய ஏழு உலக அதிசயங்கள்சே குவேராசிறுபஞ்சமூலம்பொது நிர்வாகம்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019செம்மொழிபதினெண் கீழ்க்கணக்குவீட்டுக்கு வீடு வாசப்படிஉரைநடைசப்ஜா விதைரயத்துவாரி நிலவரி முறைமெட்பார்மின்செயற்கை நுண்ணறிவுவயாகராமனித உரிமைஅமில மழைஇன்ஸ்ட்டாகிராம்புறப்பொருள்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)பயில்வான் ரங்கநாதன்ரவைஇஸ்ரேல்தரங்கம்பாடிசீனாநற்றிணைதமிழர் அளவை முறைகள்சீவக சிந்தாமணி🡆 More