பலராம தாசன்: 15 ஆம் நூற்றாண்டு ஒடியா கவிஞர்

பலராம தாசன் (Balarama Dasa) (1474-1522) பலராம் தாஸ் என்றும் உச்சரிக்கப்படும் இவர் ஓர் ஒடியா கவிஞரும் எழுத்தாளரும் ஆவார்.

இவர் பக்தி இலக்கியத்தின் காலத்தில் ஒடியா இலக்கியமான பஞ்சசகாவின் ஐந்து சிறந்த கவிஞர்களில் ஒருவராக இருந்தார். இவர் பஞ்ச சகாவின் மூத்தவராக இருந்தார். இவர் தண்டி இராமாயணம் என்றும் அழைக்கப்படும் ஜகமோகன இராமாயணத்தை எழுதினார்.

கிருபாசித்த மாட்டா

பலராம தாசன்
பலராம தாசன்: 15 ஆம் நூற்றாண்டு ஒடியா கவிஞர்
இயற்பெயர்
ବଳରାମ ଦାସ
பிறப்பு1472கள்
புரி
இறப்பு1556கள்
தொழில்கவிஞர், துறவி
மொழிஒடியா
வகைபுராணம், மெய்யியல், யோகா
ஒடிய இசை
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஜகமோகன இராமாயணம், இலட்சுமி புராணம்

சொந்த வாழ்க்கை

இவரது ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இவரது தந்தை சோமநாத் மொகாபத்ரா, ஒடிசாவின் மூன்றாவது கஜபதி பேரரசர் பிரதாபருத்ர தேவனின் அரசவையில் பணிபுரிந்தார். ஓர் கல்வியாளரான இவர் சமசுகிருதத்தை நன்கு அறிந்திருந்தார். இவர் ஜெகன்நாதரின் பக்தரானார். இவரது நடுத்தர வயதில் சைதன்யருடன் தொடர்பிலிருந்தார். மேலும் அவரால் வைணவ சமயத்தில் சேர்ந்தார் என்று கூறப்படுகிறது. புரிக்கு யாத்திரை சென்றபோது கோனார்க் அருகே உள்ள அமிண்டியா கிராமத்தில் இவர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த கிராமத்திற்கு அருகில் இவருக்கு ஒரு நினைவுச்சின்னம் உள்ளது.

இலக்கியப் படைப்புகள்

பலராம தாசன்: 15 ஆம் நூற்றாண்டு ஒடியா கவிஞர் 
கவிஞர் வழிபட்ட ஜெகன்னாதரின் மூலவர், எரபங்கா, ஒடிசா

தாச ராமாயணத்தை ஒடியாவுக்கு மொழிபெயர்த்தார். இது ஜகமோகன ராமாயணம் அல்லது தண்டி ராமாயணம் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு மொழிபெயர்ப்பாக இருந்தாலும், பலவற்றில் அசலிலிருந்து மாறுபடுகிறது. சில பகுதிகளில் இவர் அசல் உரைக்கு எதிராக செல்கிறார். மேலும் சில பகுதிகளில் அசல் உரையை நெருக்கமாக பின்பற்றுகிறார். இன்னும் சில பகுதிகளில் இவர் முற்றிலும் புதிய கதைகளை உருவாக்குகிறார்.

இவர் பகபத் கீதையை ஒடியாவில் மொழிபெயர்த்ததன் மூலம் புதிய அடிப்படைகளை உடைத்தார். இதற்கு முன் மெய்யியல், இறையியல் நூல்கள் ஒடியாவில் மொழிபெயர்க்கப்படவில்லை. சரளா தாசரின் ஒடிய மகாபாரதத்தில் கூட, பகவத்கீதையை உள்ளடக்கிய பகுதி ஆசிரியரால் தவிர்க்கப்பட்டது. பலராம தாசர் பகவத்கீதையின் மொழிபெயர்ப்பிற்காக அர்ச்சகர்களால் துன்புறுத்தப்பட்டார்.

மேற்கோள்கள்

Tags:

பக்தி இயக்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆயுள் தண்டனைஅய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்ஆங்கிலம்மாதவிடாய்மூலம் (நோய்)சினேகாகலித்தொகைநவக்கிரகம்விளம்பரம்கட்டுரைமுகம்மது நபிசைவ சமயம்கிருட்டிணன்தொல்காப்பியம்மறைமலை அடிகள்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்யுகம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்பாட்டாளி மக்கள் கட்சிஇரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)மண் பானைமத கஜ ராஜாமூவேந்தர்ரயத்துவாரி நிலவரி முறைதிருவோணம் (பஞ்சாங்கம்)பெண் தமிழ்ப் பெயர்கள்சே குவேராபொன்னுக்கு வீங்கிவிநாயகர் அகவல்பிரேமலுசெக் மொழிதமிழ்மாதேசுவரன் மலைபிலிருபின்குறிஞ்சிப் பாட்டுமுக்கூடற் பள்ளுஉடன்கட்டை ஏறல்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சிவனின் 108 திருநாமங்கள்திருமூலர்கருக்காலம்குடலிறக்கம்கௌதம புத்தர்காம சூத்திரம்யோனிதர்மா (1998 திரைப்படம்)சரத்குமார்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்கடையெழு வள்ளல்கள்வரலாறுமரங்களின் பட்டியல்தமிழ்ஒளிமகேந்திரசிங் தோனிநுரையீரல்இணையத்தின் வரலாறுஐக்கிய நாடுகள் அவைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்கணையம்நாற்கவிஎச்.ஐ.விதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)தமிழ் இலக்கியம்தினமலர்தலைவி (திரைப்படம்)பிரசாந்த்குருதி வகைவடிவேலு (நடிகர்)கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)மென்பொருள்சினைப்பை நோய்க்குறிதேம்பாவணிஇந்தியாஆய்த எழுத்து (திரைப்படம்)சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)ராஜேஸ் தாஸ்ஜலியான்வாலா பாக் படுகொலைபால கங்காதர திலகர்முடியரசன்🡆 More